இந்து அடிப்படைவாதக் கட்சிகளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் அயோத்தி தீர்ப்பு சரியானதே என்று கூறுகிறது.
இஸ்லாமியர்களை இந்தியாவின் இரண்டாம் தரப் பிஜைகளாகப் புறக்கணிக்கும் இத் தீர்ப்பு உலகம் முழுவதும் வாழும் ஜனநாயக முற்போகு சக்திகளின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
அயோத்தி நில வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் சிறந்தது, சரியானது என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ள திக்விஜய் சிங், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இப்போதுள்ள சூழ்நிலையில் அயோத்தி நில வழக்கில் இதைவிட சிறந்த தீர்ப்பைக் கூறி விட முடியாது.
இந்துக்கள், முஸ்லிம்களுக்கு அந்த நிலத்தில் உள்ள உரிமையை தீர்ப்பு நிலைநாட்டியுள்ளது. தீர்ப்பு மூலம் வழக்குத் தொடர்ந்த அனைவருக்கும் வெற்றி கிடைத்துள்ளது. எனவே இந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக