காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியப் பிரதிநிதிகள் எதிர்வரும் 17 ந்தேதி சந்தித்துப் பேசவிருப்பதாக, காஞ்சி மடத்திலிருந்து பத்திரிகை களுக்குச் செய்தி தரப்பட்டு ள்ளது. 11.10.2010 தேதியிட்ட ஆங்கில, தமிழ் நாளேடுகளிலும் இச்செய்தி பிரசுரமாகியுள்ளது.
இது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரிய உறுப்பினரும், தமுமுக தலைவருமான பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் கேட்டோம். அவர் நம்மிடம்.
“காஞ்சி சங்கராச்சாரியாரை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியப் பிரதிநிதிகள் வரும் 17-&ந் தேதி சந்திக்க உள்ள தாக வெளிவந்துள்ள செய்தி குறித்து முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் துணைத் தலைவர் காகா சைய்யத் அவர் களிடம் விசாரித்தேன். முஸ்லிம் தனியார் சட்டவாரியம் சங்கராச் சாரியாரை சந்திப்பது குறித்த செய்தி பொய்யானது எனத் திட்டவட்டமாக மறுத்தார். சங்கராச்சாரியாரை சந்திக்க முஸ்லிம் தனியார் சட்டவாரியம் சம்மதிக்கவில்லை என்பதையும் அழுத்தமாக தெரிவித்தார்.
அகில இந்திய தனியார் சட்டவாரியத்தின், பாப்ரி மஸ்ஜித் குழுவின் ஒருங்கி ணைப்பாளர் ஷி.னி.ஸி. இல்யாஸ் அவர்களிடமும் பேசினேன். அவரும் இதைத் திட்டவட் டமாக மறுத்தார். காஞ்சி சங்கராச் சாரியாருடனான பேச்சு வார்த்தை 2003&ம் ஆண்டிலேயே முற்றுப் பெற்றுவிட்டது. இனி அவரிடம் பேசுவதற்கு எதுவுமில் லை என்றும் ஷி.னி.ஸி. இல்யாஸ் தெளிவு படுத்தியுள்ளார்” என்று கூறினார்.
பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு தொடர் பாக, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கேட்டதற்கு “எதிர்வரும் 16.10.2010 அன்று லக்னோவில் நடைபெற உள்ள அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆலோசித்து முடிவெடுக்க உள் ளோம். இக்கூட்டத்தில் பங்கேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கருத்துக்களையும் எடுத் துரைக்க உள்ளேன். என பேரா. எம்.ஹெச் ஜவாஹி ருல்லாஹ் தெரிவித்துள்ளார்.
ஹிந்துத்துவ தலைவர்களை ‘ஹாஷிம்‘ அன்சாரி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித் துக் கேட்டதற்கு,‘ஹாஷிம் அன்சாரி இந்துத்துவத் தலைவர்களை சந்தித்துப் பேசுவதால் வழக்கின் போக்கு மாறாது. மேலும், இவரது பேச்சு வார்த்தை முடிவுகள் வழக்கையும் பாதிக்காது. இது சுன்னத் வல் ஜமாத் வக்ஃப் வாரியத்தின் வழக்கு ஆகும்.’ என்று தெரிவித்தார்.
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
புதன், 13 அக்டோபர், 2010
சங்கராச்சாரியாருடன் சந்திப்பா? முஸ்லிம் தனியார் சட்டவாரியம் திட்டவட்ட மறுப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக