பாபரி மசூதி இடிக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் கொந்தளிப்பு ஏற்பட்டது. குறிப்பாக பத்திரிகைகள் நெருப்புச் சொல்லெடுத்து ஆவேசமான தலையங்கங்களை எழுதின. 'அவற்றை இப்போது நினைவூட்டுகின்றொம். இவை 1992 டிசம்பர் 6, மற்றும் 7 ஆம் தேதிகளில் வெளிவந்தவை.
இந்து - தலையங்கம்
அயோத்தியில் மதவெறி தலைவிரித்தாடி, 450 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான வெறிபிடித்த கரசேவைக்காரர்கள் மஸ்ஜிதை இடித்து விட்டார்கள்.
பாபரி மஸ்ஜித் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட செயல் காட்டுமிராண்டித்தனமானது; கொடூரமானது.
இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கைக்கும், நாட்டின் ஜனநாயகத்திற்கும் இதன்மூலம் மரண அடி கிடைத்துள்ளது.
கரசேவை வேலையை எந்த ரூபத்தில் அனுமதித்தாலும் அதனால் விபரீதமான விளைவுகள்தான் ஏற்படும் என்பதை இந்தக் கோரச் சம்பவம் நிரூபித்துவிட்டது.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள்.
வேதனை மிக்க இந்த நேரத்தில் இந்திய நாடு அடைந்துள்ள துக்கத்தை இந்துப் பத்திரிகையும் பகிர்ந்து கொள்கிறது.
உத்திரப்பிரதேச பி.ஜே.பி. அரசு, கரசேவகர்களின் கொடூரத்தன்மையோடு, கெட்ட எண்ணத்துடன் கூட்டு வைத்துக் கொண்டு செயல்பட்டதன் மூலம் நீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் ஏற்கனவே அளித்த வாக்குறுதியை மீறிவிட்டது. அரசியல் சட்ட விதிமுறைகளை பி.ஜே.பி. அரசு மீறியது வெட்கக்கேடானது. இதன்மூலம் மாநிலத்தில் ஆட்சி நடத்துகிற உரிமையை பி.ஜே.பி. இழந்துவிட்டது.
கரசேவைக் கும்பல் திரிசூல ஆயுதங்களோடு மஸ்ஜிதை முற்றுகையிட்டபோது, உ.பி. மாநில போலீசார் அந்தப் பகுதியிருந்தே ஓடிவிட்டார்கள்.
உ.பி. மாநிலப் போலீசார் செயல்படாமருந்ததும், மத்திய அரசுப் படைகளை நடவடிக்கை எடுக்க விடாமல் மாவட்ட ஆட்சியாளர் தடுத்ததும், மஸ்ஜித் இடிக்கப்பட வேண்டும் என்ற பி.ஜே.பி. அரசின் திட்டத்தை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டிவிட்டன.
கல்யாண்சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது அவரையோ, பி.ஜே.பி.யையோ இந்த இழிவான குற்றத்திருந்து எந்த வகையிலும் விடுவிக்கப் போவதில்லை; மன்னிக்கப் போவதுமில்லை.
மஸ்ஜித் இடிப்பு என்ற பயங்கரக் கொடுமையின் மூலம் பி.ஜே.பி.யும் அதன் பயங்கரவாதக் கூட்டாளிகளான ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகிய இயக்கங்களும் முகமூடி கிழிக்கப்பட்டு தங்களின் விகாரமான சுயரூபத்தோடு மக்கள் மன்றத்தில் குற்றவாளிகளாக நிற்கின்றன.
இந்த இயக்கங்களின் பாசிசக் கொள்கையும், தீமையான அழிப்புக் கொள்கையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டன.
நாட்டின் நன்மைக்குப் பாடுபடுவதாக பி.ஜே.பி. சொல்க் கொண்டிருந்தது கபடம் நிறைந்தது. பி.ஜே.பி.யின் வேடம் கலைக்கப்பட்டு சுக்குநூறாக சிதறுண்டு விட்டது.
இந்து ராஜ்ஜியம் என்ற பிரச்சாரக் கூச்சல், போத்தனமான கொள்கைகள், சிறுபான்மை மக்கள் மீதான காழ்ப்புணர்வு போக்கு லி இந்தத் தன்மைகளோடு செயல்பட்டு வந்தவர்கள் இந்திய சமூகக் கட்டமைப்பு பற்றி ஒரு பயங்கரமான பொய்த் தோற்றத்தை மக்களிடம் காட்ட முயன்றார்கள் என்பது நாட்டு மக்களுக்குப் புரிந்துவிட்டது.
பாபரி மஸ்ஜிதைப் பாதுகாக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத காரணத்திற்காக பிரதமர் நரசிம்மராவ் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாவார். 'நாட்டின் சட்டதிட்டத்தையும், நீதிமன்ற உத்தரவுகளையும் மீறமாட்டோம்' என்று பி.ஜே.பி. அரசு சொன்னதை மத்திய அரசு நம்பியது மிகப்பெரிய தவறு. இதன்மூலம் மத்திய அரசு, பாபரி மஸ்ஜித்தின் பாதுகாப்புக்கு பேராபத்தை ஏற்படுத்தி விட்டது.
'பாபரி மஸ்ஜிதைக் காப்பாற்ற நரசிம்மராவ் எடுக்கும் எல்லா நடவடிக்கைக்கும் முழு ஆதரவு தருவதாக அனைத்துக் கட்சிகளும் ஒருமனதான தீர்மானத்தின் மூலம் உறுதியளித்திருந்தன. ஆனாலும் மஸ்ஜிதை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க நரசிம்மராவ் அரசு தயங்கியதும், தவறியதும் துரதிருஷ்டவசமானது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியிருந்தும், வெளியிருந்தும் நரசிம்மராவ் அரசு மீது கடுமையான கண்டனக் கணைகள் வீசப்படும்.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக கட்டிக்காக்கப்பட்ட மதச்சார்பற்ற லி ஜனநாயகக் கொள்கை, அழிக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்திய வரலாற்றில் இது ஒரு சோதனை மிக்க காலக்கட்டம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
வேதனையும், சோதனையும் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில் அனைத்து மதச்சார்பற்ற அரசியல் சக்திகளும் ஓரணியில் அணிவகுத்து ஒற்றுமையாக நின்று, போராடி, பேராபத்திருந்து தேசத்தை மீட்டுக் காப்பாற்ற வேண்டும்.
இந்த மகத்தான பணியின் முதற்கட்டமாக, பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்பட வேண்டும்.
இதன்மூலம் தான் இந்திய நாடு மதவெறிச் செயலைக் கண்டிக்கின்ற நாடு; ஜனநாயக - மதச்சார்பற்ற கொள்கையில் தடுமாற்றம் இல்லாமல் உறுதிப்பாட்டுடன் நிற்கின்ற நாடு என்பதை நிரூபிக்க முடியும். ஆகவே, இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்பட்டே ஆகவேண்டும்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
தேசத்துக்கே அவமானம் என்ற தலைப்பில் (தலைநகரிருந்து வரும் புகழ்பெற்ற பத்திரிகை) ஹிந்துஸ்தான் டைம்ஸ் எழுதியுள்ள தலையங்கம் வருமாறு:
அயோத்தியில் நடந்த சம்பவத்துக்காக நாடே வெட்கித் தலைகுனிகிறது. கரசேவகர்கள் மஸ்ஜிதை இடித்தது. நாட்டின் மதவாதக் கொள்கைக்கும், இந்து மதத்தின் சகிப்புத்தன்மைக்கும் மாறானதாகும்.
இந்த சம்பவத்துக்காக கல்யாண்சிங் அரசைக் கலைத்தால் மட்டுமே இந்தியாவுக்கு பிரபலமான இடம் கிடைத்துவிடுமா?
வீழ்த்தப்பட்டது மஸ்ஜித் அல்ல, நாட்டின் கொள்கை. இதனால் ஏற்பட்ட பிளவு எவ்வளவு காலம் நீடிக்குமோ?
நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை கரசேவை நடத்தாவிட்டால் வானம் இடிந்துவிடாது.
இந்திய நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதற்காக அத்வானியும், பி.ஜே.பி. தலைவராக நீடிக்க வேண்டும் என்பதற்காக முரளி மனோகர் ஜோஷியும் செய்த சாகசங்களே இதற்குக் காரணம். அவர்களே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
இந்தச் செயல் தவறானது என்று கூறும் வாஜ்பாயி, அதை எதிர்க்கும் திராணியற்று இருக்கிறார். நாட்டின் நலனுக்கு முன்னால் கட்சிக் கட்டுப்பாடு முக்கியமல்ல.
நாட்டின் சரித்திரத்தில் ஒரு கறையை ஏற்படுத்தி விட்டார்கள். இந்தக் கறையை அவர்கள் வாழ்நாள் முழுவதுமே போக்க முடியாது. தேச ஒற்றுமையைச் சிதைத்து ஒரு கோவில் தேவைதானா என்று அவர்கள் கூறவேண்டும்.
காங்கிரஸ் கட்சிதான் 3 ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் விழாவுக்கு அனுமதித்து அயோத்தியின் வாசலைத் திறந்து விட்டது. அதன் விளைவுகள் என்ன ஆகும் என்று அப்போது அதற்குத் தெரியாமல் போய்விட்டது. நாட்டின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படாமல் பி.ஜே.பி. தலைவர்களும் ரதயாத்திரை நடத்தினார்கள்.
தி-பயனீர் (புதுடெல்லி)
'இருள் சூழ்ந்த நாள்' என்ற தலைப்பில் திலிபயனீர் என்ற ஏடு எழுதிய தலையங்கம் வருமாறு:
டிசம்பர் 6ம் தேதி; ஞாயிற்றுக்கிழமை; இந்திய வரலாற்றில் இருள் சூழ்ந்த நாள். அரசியல் அமைப்பும் சட்டத்தின் ஆட்சியும் யுத்த வெறிகொண்ட ஆயிரக்கணக்கான கரசேவைக்காரர்கள் அயோத்தியில் பட்டப்பகல் மீறப்பட்டிருக்கிறது. பாபரி மஸ்ஜிதை இடித்ததன் மூலம் அந்த கரசேவைக்காரர்கள் ஒவ்வொரு இந்தியக் குடிமகன் மீதும் அசிங்க சேற்றை அள்ளி வீசியிருக்கிறார்கள்.
இந்த அசிங்கம் எல்லாவற்றையும் விட மிகப்பெரியது; காரணம், அயோத்தியில் நிகழ்ந்த சம்பவம் பேடித்தனமானது மட்டுமல்ல, நம்பிக்கை துரோகமானதும் கூட. தேசத்தின் ஒருமைப்பாட்டின் மீது விழுந்த மிகப்பெரிய தாக்குதல் இது. பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் இவை மூன்றுமே இந்த பேரவமானத்திற்கு பொறுப்பு.
இந்த அநியாயமான கொடுமை ஏதோ தற்செயலாக நடந்த நாசவேலை அல்ல; திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு கிரிமினல் குற்றம் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
தி. அப்சர்வர் (புதுடெல்லி)
கறுப்புப் புள்ளி என்ற தலைப்பில் தி. அப்சர்வர் என்ற ஏடு எழுதிய தலையங்கம் வருமாறு:
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 6) இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரு அவமானகரமான நாள். அயோத்தியில் நிகழ்த்தப்பட்ட நாசவேலை இந்த தேசத்தையே அவமதிக்கும் ஒரு மோசமான செயல். மத சகிப்புத்தன்மையின் மாசு மருவற்ற சான்றாகத் திகழ்ந்த இந்திய வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி விழுந்து விட்டது.
அனைத்து மத நம்பிக்கைகளையும் மதிக்கும் இந்தியாவின் மிகச்சிறந்த கொள்கையை அந்த மதவெறியர்கள் இழைஇழையாகக் கிழித்துவிட்டனர்.
ஏராளமான புராதன தேவாலயங்களையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மஸ்ஜிதுகளையும் தன்னகத்தே கொண்டு தலைநிமிர்ந்து பெருமையுடன் விளங்கும் இந்தியாவின் நற்பெயருக்கு அந்த மதவெறியர்களின் வருந்தத்தக்க செயல் மோசமான களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.
வரலாற்றுப் பொக்கிஷமாக விளங்கிய பாபரி மஸ்ஜிதை இடித்து நாசப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம். இந்த அக்கிரமமான செயலால் பி.ஜே.பி.யும் அதன் தலைவர்களும் தங்கள் முகத்தை தொலைத்து விட்டார்கள்.
நியூயார்க் டைம்ஸ்
அமெரிக்காவிருந்து வெளிவரும் சர்வதேச புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை ''மதச்சார்பின்மைக்கு சோதனை'' என்ற தலைப்பில் எழுதிய தலையங்கம் வருமாறு:
ஐந்து மணி நேரம் நடந்த இந்த அட்டூழியத்தின் பின்விளைவுகளில் இருந்து இந்தியா மீள்வதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கும். சவடால் அரசியல்வாதிகளும், கோழைத்தனமான மத்திய அரசுமே இந்தச் சம்பவத்துக்குக் காரணம்.
பல்வேறு மதங்களைக் கொண்ட இந்தியா, கடந்த 45 ஆண்டுகாலமாக மதச்சார்பற்ற கொள்கையைப் பின்பற்றியது. ஆனால் இன்று அந்த கொள்கைக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. சில தீவிரவாதிகள் மஸ்ஜிதை இடித்தவர்களாக இருக்கலாம்; ஆனால் அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் இந்துமத வெறியர்களே.
1990லிம் ஆண்டே இதுபோன்ற முயற்சி நடந்தது. இப்போது மஸ்ஜிதே இடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சம்பவங்களுக்கும் காரணம் பி.ஜே.பி. தான்.
ஒரு விஷம் கக்கப்படும்போது அதை அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாமல் போகும்போதுதான் மதவெறி வளர்கிறது என்றும் நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளார்.
வாஷிங்டன் போஸ்ட்
அமெரிக்காவிருந்து வெளிவரும் ''வாஷிங்டன் போஸ்ட்'' என்ற பத்திரிகை தனது தலையங்கத்தில் கூறியிருந்ததாவது:
''இந்தியாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலைக்கு பிரதமர் நரசிம்மராவும் பாரதீய ஜனதா கட்சியும்தான் குற்றப் பொறுப்பை ஏற்க வேண்டும். இந்தப் பிரச்சினை வெடித்துக் கிளம்ப அனுமதித்ததன் மூலம் இந்தச் சம்பவத்தில் தனக்குரிய பங்கை நரசிம்மராவ் அரசு ஒத்துக் கொள்ள வேண்டும்.
அயோத்தியில் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியதன் மூலம் இதில் பெரும் பங்கு வலதுசாரியான பாரதீய ஜனதா கட்சியையே சாரும். தன்னுடைய அரசியல் லாபங்களுக்காக கொஞ்சமும் வெட்கமின்றி, குரோதத்துடன் சமயப் பதற்றத்தை பயன்படுத்திக் கொண்ட பாரதீய ஜனதா கட்சியின் நடவடிக்கைதான் இந்தியாவின் சமீபத்திய திருப்பத்துக்கு முக்கிய மூலதனம் ஆகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையிருந்து நிலைமையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பிரதமர் நரசிம்மராவ் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இதில் பெருமளவில் செயல்பட வேண்டியது இந்தியாவின் ஜனநாயகம்தான். அது தானாக சமுக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வழியைக் கண்டுபிடித்து சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி என்பது பதற்றத்தைத் தணிக்க உதவலாம்; ஆனால், பல வழிகளிலும் சகிப்புத்தன்மைதான் வற்புறத்தப்பட வேண்டும்.
பெரும்பான்மையான இந்துக்கள் வாழும் இந்தியா சுதந்திரமடைந்தவுடன் ஒரு ஜனநாயகத்தை உருவாக்கியது. அதற்கு மதச்சார்பின்மைதான் அடித்தளமாக அமைந்தது. அந்த மதச்சார்பின்மை இப்போதைய நிலைக்கு அவசியமானது. அதைவிட மதச்சார்பின்மை அவசியமாகக் கூடிய வேறொரு சந்தர்ப்பம் இதுவரை ஏற்பட்டதில்லை.
இவ்வாறு உலகப் பத்திரிகைகளும், இந்தியப் பத்திரிகைகளும் கண்டனம் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக