சனி, 2 அக்டோபர், 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:அரசியல் தூண்டுதல் - எஸ்.டி.பி.ஐ

திருவனந்தபுரம்,அக்.1:60 ஆண்டுகால சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு பிறகு பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முற்றிலும் நிராசையை ஏற்படுத்துவதாக சோசியல் டெமோக்ரேடிக் பார்டியின் தேசிய தலைவர் இ.எம்.அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

தங்களின் பரிசீலனையில் உள்ள பிரச்சனையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்காமல் அரசியல் தூண்டுதலின் காரணமாக தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். இது சட்டத்திற்கு புறம்பானதும், பாரபட்சமானதுமாகும்.

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் இதுவரை நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்பின் தொடர்ச்சியாகவே இதனை காண இயலும். பிரச்சனையை இந்த சூழலுக்கு தள்ளிவிட்டதின் பொறுப்பிலிருந்து பா.ஜ.க மட்டுமல்ல காங்கிரஸும் தப்பிக்கவியலாது. இவ்விவகாரத்தை சட்டரீதியாக மட்டுமே எதிர்கொள்ளவேண்டும். இவ்வாறு இ.எம்.அபூபக்கர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: