பொதுமக்களைக் காக்க வேண்டியவர்கள், பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டியவர்கள், அதற்காகவே பணியமர்த்தப்பட்டவர்கள் - அரசு ஊழியர்கள் தாம் -, பொதுமக்களுக்கு தரும் இன்னல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது। இதனைச் சமீபத்தில் நடந்த கீழ்கண்ட சம்பவங்கள் உணர்த்துகின்றன.
சம்பவம் 1: திருச்சி சிறுகாவனூர் எனும் ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி செய்து வருபவர் சரவணன்। இவர் பெண் ஒருவரை மிரட்டுவதற்காக தனது துப்பாக்கியால் சுட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது। அதனைத் தொடர்ந்து சரவணன் மீது துப்பாக்கியைத் தவறாக பயன்படுத்திய குற்றத்துக்காக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பிரிவு 308ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது।
சம்பவம் 2: நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை 9வது பட்டாலியனில் பணியாற்றி வந்தவர் பெண் காவலர் உமாமகேஸ்வரி। இவருக்கும் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றும் இசக்கியப்பன்னுக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உமாமகேஸ்வரியைக் கொலை செய்துவிட்டு நாகர்கோவில் சென்று தற்கொலை செய்து கொண்டார் இசக்கியப்பன். மருத்துவப்பரிசோதனையில் உமாமகேஸ்வரி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சம்பவம் 3: நவி மும்பை பகுதியில் இருக்கும் லோட்டஸ் மருத்துவமனையில் அக்டோபர் 17, ஞாயிறன்று அதிகாலையில் இளம் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்। தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவரை விஷால் பெனே என்ற மருத்துவர் கற்பழித்துள்ளார்। இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் காவல்துறையில் பதிவு செய்தப் புகாரின் அடிப்படையில் மருத்துவர் விஷால் பெனே கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்பட இருக்கின்றார். வேலியே பயிரை மேய்கிறது!!! - சுல்தான், குவைத்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக