
அஸ்லம் புரே தனது வழக்குறைஞர் ஒ.பி. சர்மாவுடன்
பாபரி மஸ்ஜித் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அஸ்லம் புரே அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கேட்டு அதிர்ச்சி அடைந்து அக்டோபர் 2 அன்று காலை மரணமடைந்தார்.
டெல்லியைச் சேர்ந்த சைக்கிள் ரிக்ஷா விற்பனையாளர் அஸ்லம் புரே. 1991ல் உ.பி. மாநில முதல்வராக இருந்த கல்யாண் சிங் பாபரி மஸ்ஜிதை சுற்றி 2.77 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார். இந்த நிலப்பகுதியில் எவ்வித கட்டுமானப் பணியும் நடைபெறக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் இவர் போட்ட மனுவை அது நவம்பர் 1991ல் ஏற்றுக் கொண்டு உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதே போல் மத்திய அரசு கையகப்படுத்திய நிலப் பகுதியில் மீண்டும் கரசேவை செய்ய வி.ஹெச்.பி. 2002ல் முயற்சித்தப் போது அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இவர் போட்ட பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம் தடை உத்தரவு விதித்தது. பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்து விசாரித்த நீதிபதி லிபரான் விசாரணை ஆணையத்தின் முன்பும் இவர் பிரமாண வாக்குமூலம் சமர்பித்துள்ளார். அடல்பிகாரி வாஜ்பேயியை லிபரான் ஆணையம் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று ஆணையத்திடம் இவர் மனு செய்திருந்தார்.
பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கேட்டவுடன் அஸ்லம் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானர். இவர் அது குறித்து யாரிடமும் பேசாமல் தனது அறையை விட்டு வெளியே வராமல் முடங்கிப் போனார். இவரது மகன் இம்ரான் செய்தியாளர்களிடம் பேசுகையில் அயோத்தி தீர்ப்பு எனது தந்தைக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. நான் எப்படி இனி முஸ்லிம் சமூகத்தை சந்திப்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்நதார். இதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தாரியாகஞ்சில் உள்ள அவரது வீட்டிலேயே மரணம் அடைந்தார். டெல்லி கேட் அருகே உள்ள அடக்கவிடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அஸ்லம் புரேவின் ஜனாசா ஊர்வலம்
2 கருத்துகள்:
அஸ்லம் புரே இறந்தது நமக்கு தெரிந்துவிட்டது. உயிரோடு இன்னமும் நிறைய முஸ்லிம்கள் வெளியே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் செத்துக் கொண்டிருக்கிறர்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்...
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...
அன்னாரை கப்ரின் வேதனையிலிருந்தும், நரக நெருப்பிளிருந்தும் காத்து சொர்க்கம் செல்லும் நல்லடியார் கூட்டத்தில் ஒருவராய் ஆக்கி அருள எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.
இறை இல்லத்திற்கான இவ்வழக்கு விஷயத்தில் அவரின் அயராத போராட்டத்துக்கு தக்க வெகுமதியை மறுமையில் பன்மடங்காக்கி வழங்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை மீண்டும் பிரார்த்திக்கிறேன்.
கனத்த மனதுடன்..
முஹம்மது ஆஷிக்.
கருத்துரையிடுக