ஞாயிறு, 10 மே, 2009

பேரம் பேசிய தயாநிதி மாறன் கும்பல் அம்பலப் படுத்தும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்...



''தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் எழுச்சி தமிழக அரசியலில் காலகாலமாக கோலோச்சி வரும் ஏதேச்சதிகார வர்க்கத்தினரை பீதியடைய வைத்து புலம்ப வைத்தது.
பரம்பரை பரம்பரையாக மக்களின் தேவைகளை புறக்கணித்து அரசியல் அதிகாரத்தை சுவைத்து வரும் சக்திகளின் பதவி ஆசையையும், பணத்திமிரையும், ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து பேரம் பேசிய ஓர் இழி செயலை மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர் அலி தோலுரித்துக் காட்டியுள்ளார்.

07.05.2009 ஆம் தேதி வெளியாகி உள்ள நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வேட்பாளர் ஹைதர்அலியின் நேர்காணல் வெளியாகியிருந்ததது. அதில் மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் ஹைதர் அலி பேட்டியளித்திருந்தார் அதில்,

ஹைதர் அலி எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் இது குறித்து கூறும்போது ''தன்னையும் தனது சகாக்களையும் தயாநிதிமாறனின் ஆட்கள் அணுகி மத்திய சென்னையில் போட்டியிட வேண்டாம் என வற்புறுத்தியதாக தெரிவித்தார். அதோடு பெரும் தொகை தருவதாகவும் வேறு தொகுதியில் போட்டியிடுங்கள் என்றும், அவ்வாறு வேறு தொகுதியில் போட்டியிட்டால் அதற்கான அனைத்துச் செலவுகளையும் அவர்களே (தயாகும்பல்) பார்த்துக் கொள்வதாகவும், கூறியதாகவும்'' ஹைதர் அலி தெரிவித்தார். மத்திய சென்னையில் தயாநிதிமாறனின் வெற்றி வாய்ப்பை மறுத்த ம.ம.க வேட்பாளர் எங்களைப் போல் மக்களோடு அவர்களால் ஒன்றிப் பழக முடியாது. இணைந்த பணியாற்ற முடியாது. கட்சிக்காரர்களோடு கூட நெருங்கிப் பழக முடியாத ஒருவர், சாதாரண மக்களோடு எவ்வாறு நெருங்கி வருவார் என்றும் செ. ஹைதர் அலி வினா விடுத்தார்.

இதற்கு முன்பு தயாநிதிமாறன் பெற்ற வெற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பேராதரவினால் கிடைத்த வெற்றியாகும். இந்த மக்களவைத் தேர்தலின் முடிவு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை வழங்கும். மக்கள் உண்மையை உணர்ந்து விட்டார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதின் மூலம் முஸ்லிம் வாக்காளர்களை விட்டு திமுக மேலும் அந்நியப்படுத்தி விட்டது. தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததனால் இதுவரை யாருக்கு ஓட்டுப் போடுவது என முடிவெடுக்காமல் இருந்த வாக்காளர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள். நேர்மையாளர்கள் யார்? என்பதை அது தெளிவு படுத்தும்' என்றார்.

அ.தி.மு.க வேட்பாளர் முஹம்மது அலி ஜின்னாவைப் பற்றி கூறும்போது வாக்காளர்கள் திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். முஸ்லிம் வாக்காளர்கள் தி.மு.கவுக்கு எதிராக வாக்களிப்பார்கள். அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது குறித்து பரிசீலிக்கவே மாட்டார்கள். நாங்கள் மக்களுக்கு மாற்றத்தினை வழங்குவோம்' என்றார்.

கருத்துகள் இல்லை: