ஒரிசா மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரத்தை சங்பரிவார் சக்திகள் அரசியல் ஆதாயத்திற்காக முன்னெடுத்தன. இதனைத் தொடர்ந்து நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளத்திற்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்பட்டது. சில கட்சிகள் மாநிலத்தில் ஆட்சியைக் கலைத்து விட்டு கவர்னர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தின.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் ஆளுங்கட்சியிடம் கூடுதல் இடங்களை பாஜக கேட்டது. பிஜு ஜனதா தளம் கூடுதல் இடங்களைத் தர மறுக்கவே பாஜக, பிஜு ஜனதா தளத்துடன் 11 ஆண்டுகள் கொண்டிருந்த அரசியல் உறவை முறித்துக் கொண்டது. அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது. ஆயினும் நவீன் பட்நாயக், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியை காப்பாற்றிக் கொண்டார்.
இதனிடையே மாநிலத்தில் உள்ள 21 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிட்டது. பாஜகவுக்காக, பாஜகவில் அடுத்த பிரதமர் வேட்பாளர் என கூறப்பட்ட நரேந்திர மோடி, அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத் துள்ளன. மாநிலத்தில் போட்டியிட்ட 21 வேட்பாளர்களில் ஒன்பது வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். தேர் தலுக்கு முன்பு பிஜு ஜனதா தளம் கட்சி யில் இருந்து விலகி பாஜக சார்பில் புவ னேஸ்வர் தொகுதியில் போட்டியிட்ட கேந்திரபாரா எம்.பி. அர்ச்சனா நாயக்கும் டெபாசிட் தொகையை பறிகொடுத் துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக