முன்னறிவிப்பில்லாமல் கேரளா போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பீமாப்பள்ளியைச்சார்ந்த அஹ்மத் ஸலீம்(50), பாதுஷா(35),செய்தலவி(24) மற்றும் அப்துல் ஹக்கீம்(27) ஆகியோர் சம்பவ இடத்தில் குண்டு பாய்ந்து மெளத்தானார்கள்.துப்பாக்கிச்சூட்டில் கடுமையாக காயமடைந்த 37 பேர் திருவனந்தபுரம் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அவசரசிகிட்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் தலையில் காயமடைந்த ஷபீக்(21), ஷஜீர்(22) மற்றும் அலி(34) ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.சிறியத்துறை என்ற பகுதியைச்சார்ந்த ஷிபு என்ற ரவுடி சனிக்கிழமை மாலையில் அடாவடியாக பீமாப்பள்ளியில் பணம் வசூலித்ததுதான் பிரச்சனைக்கு காரணம்.ஒருக்கடையில் டீ குடித்துவிட்டு பணம் கொடுக்காதாதால் அவ்வூரைச்சார்ந்தவர்கள் கஞ்சா வியாபாரியான ஷிபுவை அடித்ததால் பீமாப்பள்ளியை சார்ந்தவர்களின் மீன்பிடி படகுகளையும் வலைகளையும் தீயிட்டுக்கொளுத்தியதைத்தொடர்ந்து பீமாப்பள்ளியைச்சார்ந்த இளைஞர்கள் சிலர் சிறியத்துறைச்சென்று அங்குள்ளவர்கள் மீது கல்லெறி நடத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர்.கடற்கரையிலிருந்த மீன்பிடி தொழிலாளிகள் பலர் இதில் காயமடைந்தனர்.மரணித்தவர்களின் நெஞ்சிலும் கழுத்திலும்தான் குண்டு பாய்ந்திருந்தது.எந்தவொரு முன்னறிவிப்போ கலவரம் ஏற்ப்பட்டால் பேணவேண்டிய முன் நடவடிக்கைகளோ செய்யாமல் திடீரென துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டதாக சம்பவத்தை நேரடியாக பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.சம்பம் நடந்த பகுதியில் போலீஸ் எந்தவொரு தடைவுத்தரவோ அல்லது கட்டுபாடுகளோ விதித்திருக்கவில்லை.துப்பாக்கிச்சூட்டிற்கு பின்னர்தான் காவல்துறை தடைவுத்தரவு பிறப்பித்திருக்கிறது.ரவுடி ஷிபுவின் கும்பல் நடத்தும் அராஜகத்தை தடுத்து நிறுத்துமாறு மாவட்ட ஆட்சியரை பீமாப்பள்ளி ஜமாஅத் தலைவர் என்.வி.அஸீசும் வார்டு கவுன்சிலர் பீமாப்பள்ளி ரஷீதும் வேண்டியுள்ளனர் ஆனால் கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பின்னர் அந்த பகுதியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருவரும் தெரிவித்தனர்.
30 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும் கயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்காததால் காயமடைந்தவர்களின் நிலை மோசமடைந்துள்ளது.இரண்டு நபர்களின் முதுகுபகுதியில் குண்டு பாய்ந்துள்ளது இது அவர்கள் திரும்பி ஒடும்பொழுது சுட்டதை காண்பிக்கிறது.வெடியேற்று விழுந்தவர்களை காவல்துறையினர் துப்பாக்கியின் தலைப்பகுதியைக்கொண்டு தாக்கியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.குண்டடிப்பட்டவர்களை போலீஸ் ஊர்வாசிகளிடகுருந்து முதலில் மறைத்து வைத்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.போலீஸின் இந்த பயங்கரவாதத்தால் மீன் பிடித்தொழில் முடித்து வந்த அப்பாவிகள் பலியாகியுள்ளனர்.ஆனால் கலவரத்தில் ஈடுபட்ட ஷிபுவையோ அல்லது அவனைச்சார்ந்த ரவுடிக்கும்பலையோ காவல்துறை இதுவரை கைதுச்செய்யவில்லை.மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கமுயன்ற ஜமாஅத் நிறுவாகிகளை போலீஸ் காவல்நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.காவல்துறையின் இந்த பயங்கரவாத நடவடிக்கியால் முஸ்லிம்-கிறிஸ்தவ கலவரம் மூழும் சூழல் ஏற்ப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.அப்பாவிகளை படுக்கொலைச்செய்த காவல்துறைக்கெதிராக உடனடியாக கொலைக்குற்ற வழக்கு பதிவுச்செய்யவேண்டுமென்று திருவனந்தபுரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட இடது சாரி ஆளும் கட்சி வேட்பாளர் பி. ராமச்சந்திரன் நாயர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
செய்தி:தேஜஸ் 18 மே.09
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக