ஞாயிறு, 31 மே, 2009

மத்திய அமைச்சரவையில் இடம்கிடைக்காத மூத்த தலைவர்களுக்கு கவர்னர் பதவி?

மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் களுக்கு கவர்னர் பதவி அளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப் பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் 19 கேபினட் அமைச்சர்கள் முதலில் பதவியேற்றுக் கொண்டனர். இதில் 6 பேருக்கு இலாகா அறிவிக்கப்பட்டது. கடந்த முறை அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, கமல்நாத், ப.சிதம்பரம், கபில்சிபல் என பலருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அர்ஜுன்சிங், சைபுதீன் சோஸ், சிவராஜ் பாட்டீல், பரத்வாஜ், சிஸ்ராம் ஒலா போன்ற பல மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அமைச்சரவை யில் இடம் கிடைக்காது என்பதை அர்ஜுன்சிங், சிவராஜ் பாட்டீல் போன்ற வர்கள் ஏற்கனவே உணர்ந்திருந்தனர். ஆனால் இதை எதிர்பார்க்காத சைபுதீன் சோஸ், பரத்வாஜ், சிஸ்ராம் ஒலா ஆகியோர் அதிருப்தியில் உள்ளனர்.


சைபுதீன் சோஸ் பகிரங்கமாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எல்லோருக்கும் ஆசைகளும் கனவுகளும் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கணிசமான இடங்களில் பெற்றிபெற பாடுபட்டுள்ளேன். கடந்த முறை அமைச்சராக இருந்த போது சிறப்பாகப் பணியாற்றியுள்ளேன். இதை விட நான் என்ன செய்ய முடியும்? என வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதேபோல் முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மந்திரி பதவி கிடைக் காதது குறித்து கருத்து தெரிவித்த அர்ஜுன்சிங், ''நான் தளர்ந்து விட்டது உண்மைதான். ஆனால் அரசியலிருந்து இன்னும் ஓய்வெடுக்கவில்லை'' என்றார்.


இந்நிலையில் ஓரளவு செல்வாக்குள்ள மூத்த தலைவர்களுக்கு கவர்னர் பதவி கொடுத்து சமாதானப்படுத்த காங்கிரஸ் மே­டம் திட்டமிட்டுள்ளது.


தற்போது நாடு முழுவதும் 13 மாநிலங்களில் கவர்னர் பதவி கா­யாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: