நான் மயிலாடுதுறை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். வாக்கு சேகரிப்பதற்காகவும், ஆதரவு கோரியும் தொகுதியில் உள்ள அனைத்து முக்கியப் பிரமுகர்களையும், மதத் தலைவர்களையும் சந்தித்து வருகிறேன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கிறித்தவ பாதிரியார்கள் என பலரையும் சந்தித்தது போலத்தான் திருவாடுதுறை ஆதினம் அவர்களையும் சந்தித்தேன். திருக்குர்ஆன் மொழியாக்கப் பிரதி ஒன்றை பரிசளித்துவிட்டு அவரிடம் ஆதரவு கோரினேன். அவரும் நான் தேர்தலில் வெற்றி பெற தனது ஆதரவை தெரிவித்தார்.நான் அவரது காலில் விழவும் இல்லை. கையெடுத்து வணக்கம் செய்யவும் இல்லை.
இச்செய்தியைத் ஆதினத்திடம் ஆசி பெற்றதாக அவர்களது பாணியில் தினமணி பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு அவதூறு பரப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சிலர் இச்செய்தியைத் திரித்து ஆதினத்தை நான் வணங்கியது போலவும், அருளாசி பெற்றது போலவும் சித்தரித்து அவதூறுச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.
நான் என்னுடைய மாணவப் பருவத்திலிருந்து ஏகத்துவக் கொள்கையை உயிர்மூச்சாகப் பின்பற்றி வருபவன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மட்டமான அரசியல் லாபத்திற்காக சிலர் இவ்வாறான அவதூறுப் பிரச்சாரம் செய்வது வேதனையளிக்கிறது. அவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும் என்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக