புதன், 27 மே, 2009

நாடாளுமன்றத்தில் தேவ்பந்த் அறிஞர்கள்


இந்திய விடுதலைப் போராட்டத்தில் மவ்லவி ஹிஃப்சுர் ரஹ்மான் மற்றும் மவ்லானா அபுல் கலாம் ஆசாத் போன்ற மார்க்க அறிஞர்கள் அரும்பாடு பட்டார்கள். பின்னர் அவர்களது தியாகத்திற்கு பரிசாக சட்டமன்ற உறுப்பினர் பதவியும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் அவர்களைத் தேடிவந்தன. மத்திய அமைச்சரானார் ஆசாத் அது ஆயிற்று அறுபதாண்டு காலம். மார்க்க அறிஞர்கள் அரசியலில் சிறப்பிடம் பெறுவது என்பது இனி நடக்கவே நடக்காதோ என ஏங்கி தவித்த நிலையில் புகழ்பெற்ற தேவ் பந்த் மார்க்க கல்வி சாலையிலிருந்து உருவான இரண்டு மார்க்க அறிஞர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.

அஸ்ஸாமில் மவ்லவி பத்ருதீன் அஜ்மலில் வெற்றி பெற்றார். மவ்லவி அஸ்ராருல் ஹக் காசிமி பிகார் மாநிலம் கிஸன் கஞ்ச் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்றிருக்கிறார். மவ்லவி பத்ருதீன் துப்ரி தொகுதியில் காங்கிரஸின் அன்வர் ஹுஸைனை வென்றார். மவ்லவி அஸ்ரருல் ஹக் காசிமி லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முக்கிய தலை வரான முன்னாள் மத்திய அமைச்சர் முஹம்மது தஸ்லீமுதீனை தோற்கடித்தார்.

81 ஆயிரம் வோட்டு வித்தியாசத்தில் வென்ற அஸ்ராருல் ஹக் காசிமி டெல்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் அகில இந்திய தலிமி வ மில்லி பவுண் டேஷனின் நிறுவனத் தலைவராவார். கிசன் கஞ்ச் தொகுதியைச் சேர்ந்த காசிமி தனது பகுதி குறித்து மிகுந்து கவலை கொண்டவராக விளங்கினார். கடந்த ஏழு ஆண் டுக்கு முன்பு மில்லி பெண்கள் பள்ளி கூடத்தை நிறுவினார். தனது வெற்றி கிசன் கஞ்ச் தொகுதி மக்களின் வெற்றி என்றார் மவ்லவி அஸ்ராருல் ஹக். மவ்லவி பத்ருதீன் அஜ்மல் அவர்களோ இந்திய அரசியலில் சில வருடங்களாக ஒளி வீசும் அரசியல் தலைவராக விளங்கி வருகிறார். தேவ் பந்த் மார்க்க அறிஞர்கள் மக்களவையில் தூள் கிளப்ப போகிறார்கள்.
-சர்ஜுன்

கருத்துகள் இல்லை: