புதன், 20 மே, 2009

ராம்பூரும்..... காஜியாபாத்தும்.........

உத்தரப்பிரதேச மாநிலம் முஸ்லிம் வாக்காளர்கள் நிறைந்த மாநிலமாகும். முஸ்லிம்களின் வாக்குகளை அறுவடை செய்தே முலாயமின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து வந்தன.

இந்த இரண்டு அணிகளை நம்பிய முஸ்லிம்களும் தங்களது அரசியல் அதிகாரம் குறித்த எவ்வித அக்கறையும் இல்லாது ஓட்டு போடுவதை மட்டுமே முக்கியக் கடமையாக நினைத்துக் கொண்டே வாழ்ந்தனர். தங்களது மண் ணும், தங்களது அரசியல் பிரதிநிதித்துவ மும் வீணடிக்கப்படுவதைக் கண்டு சிறிதும் சிந்தனையின்றி வாழ்ந்து வந்ததன் விளைவாக முஸ்லிம் வாக்காளர்கள் நிறைந்த தொகுதிகளில் முஸ்லிம் அல்லா தவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பரிதாப நிலை ஏற்படுகிறது.

அதற்கு உத்தரப்பிரதேசத்தில் மட்டு மல்ல, இந்தியா முழுவதும் உதாரணங்கள் உண்டு. எனினும் உ.பி.யில் நாம் கண் முன்னால் கவனிக்கும் எடுத்துக்காட்டு களாக ராம்பூரும் காஜியாபாத்தும் அமைந்துள்ளன.

முதலில் காஜியாபாத்தைப் பார்ப்போம். நான்கரை லட்சம் முஸ்லிம் வாக்காளர் களைக் கொண்ட இந்த தொகுதியில் இருந்து பாஜகவின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

முஸ்லிம்களின் வாக்கு வலிமை குவிந்துகிடந்த போதிலும் அங்கு முஸ்லிம் வேட்பாளர்களை எந்தக் கட்சியும் நிறுத்தவில்லை. காங்கிரசும், பகுஜன் சமாஜும் கூட முஸ்லிம் வேட்பாளர் களை நிறுத்தவில்லை.

தலித்துகளின் இரண்டரை லட்சம் வாக்குகளையும், ஒரு லட்சம் பிராமணர் வாக்குகளையும் கணக்கில் கொண்டு ஒரு பிராமணரை வேட்பாளராக நிறுத்தியது பகுஜன் சமாஜ்.

நான்கரை லட்சம் முஸ்லிம் வாக்குகள் அவர்களுக்கு மிரட்டும் அம்சமாக தென்படவில்லை. இறுதியில், தான் ஜெயிப் பேன் என்பதில் நம்பிக்கை இல்லாமல் இருந்த ராஜ்நாத்சிங் வெற்றி பெற்றிருக் கிறார்.முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தவும், ஒருங்கிணைக்கவும் வழியில்லாத நிலையும் முஸ்லிம்களின் உரிமையை முன்னெடுக்க அவர்களுக்கான ஓர் அமைப்போ கட்சியோ இல்லாத நிலை யும் முஸ்லிம் வாக்காளர்களை கணிசமா கக் கொண்ட தொகுதியில் பாஜக வெற்றி பெற காரணமாக அமைந்துள்ளது.

அடுத்து, உத்தரப்பிரதேசத்தில் உள்ள மற்றொரு முஸ்லிம் மக்களவைத் தொகுதி யான ராம்பூர் தொகுதி. தலைசிறந்த மார்க்க அறிஞர்களையும், ஏராளமான மதரஸாக்களையும் கொண்ட ராம்பூரின் எம்.பி.யாக பதவி ஏற்க இருப்பவர் முன்னாள் நடிகை ஜெயப்பிரதா. மதச்சார் பற்ற அரசியல் தலைவராக தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் முலாயம் சிங் யாதவ் தனது தரகு அரசியல் நண்பரான அமர் சிங்கின் தூண்டுதலின் பேரில் ஜெயப்பிரதாவை களமிறக்கினார்.

சமாஜ்வாடி கட்சியில் இரண்டாம் இடத் தில் தற்போது அந்தக் கட்சியை விட்டு சதி செய்து விரட்டி அடிக்கப்பட்டவரான ஆஜம்கான், ஜெயப்பிரதா ராம்பூரில் போட்டியிடுவதை கடுமையாக எதிர்த்தார். சரமாரியாக வினாக் கணைகளை தொடுத் தார். அழுகுணி ஆட்டம் ஆடிய ஜெயப்பிரதா எனது ஆபாசப் படங்களை தொகுதி முழுவதும் ஆஜம்கான் பரப் பினார் என ஓலமிட்டார். ஆஜம்கான் மறுத் தார். இதற்கிடையில் தேர்தல் முடிவுகளும் வெளியானது. ஜெயப்பிரதா வெற்றி பெற்றி ருக்கிறார். ஆஜம்கான் ராஜினாமா செய்வ தாக அறிவித்திருக்கிறார். அல்ல, தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார். முஸ்லிம் பாரம் பரியமிக்க தொகுதி யில் ஒரு நடிகையை நிறுத்துவார்களாம். தட்டிக் கேட்கும் முஸ்லிமை கட்சியை விட்டு வெளியே றும் அளவுக்கு இம்சைகள் தருவார்களாம்.

முஸ்லிம்களின் நிஜமான பிரதிநிதித்துவத் தேவைகள் நிறைவேறும் இத்தகைய அரசியல் அசிங்கங்களும், அவலங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும். அதுவரை ராஜ்நாத் சிங்குகளும், ஜெயப் பிரதாக்களும் மட்டுமே எம்.பி.க்களாக உலா வந்து கொண்டிருப்பர்.
-அபுசாலிஹ்

கருத்துகள் இல்லை: