வியாழன், 21 மே, 2009

பாராளுமன்றத்தில் நுழைந்தது AUDF


பாராளுமன்றத்தில் தனது கணக்கை துவங்கியது AUDF. ஆம் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்று முதன் முறையாக பாராளுமன்றத்தில் நுழைந்தது. AUDF.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான அசாமில் தொடங்கப்பட்ட AUDF அசாமில் 2007 ல் நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு 10 இடங்களை கைப்பற்றி அனைவரையும் வியப்படையவைத்தது .

அதேப்போல் '2009' லோக்சபா தேர்தலிலும் அது பலமான காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்டு 2 தொகுதிகளில் மாபெரும் வெற்றிப்பெற்றது . மேலும் 4 தொகுதிகளில் அது சொர்ப்பமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது .

இவ்வெற்றியின் பின்னால் இவர்கள் அம்மாநிலத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு செய்த உதவிகளும் பணிகளுமே காரணம். தீவிரவாதம் ( உல்பா) மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இம்மக்களுக்கு இன பாகுபாடின்றி இவர்கள் செய்யும் உதவிக்கரங்கள் தான் இவர்களின் கரங்களை வலுப்படுத்தியுள்ளது .

கருத்துகள் இல்லை: