ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்று தீர்மானிக்கவேண்டியது சம்பந்தப்பட்ட தம்பதிகள்தான். இதில் அரசுக்கோ அல்லது அடுத்தவர்களுக்கோ எந்த வேலையுமில்லை. இந்திராவின் ஆட்சியின்போது நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது, இந்திராவின் மகனான சஞ்சய்காந்தி கட்டாய குடும்பக்கட்டுபாட்டை அமுல்படுத்துமாறு உத்தரவிட்டார். அவரது வாரிசும், பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளருமான வருண்காந்தி இப்போது தந்தை வழியில் பயணிக்கிறார்.
ஒரு பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள வருன், தனது தந்தை கொண்டுவந்த கட்டாய குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை கொண்டுவர ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். வழக்கம் போல வருணின் பேச்சு அவரது சொந்த கருத்து என்று பா.ஜ.க. ஜகா வாங்கியுள்ளது. கட்டாய குடும்பக்கட்டுப்பாடு என்பது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும். தன்னுடைய குடும்பத்தை பராமரிக்கத்திறனுள்ள ஒரு ஆண்மகன் அதிக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதை தடுப்பதற்கு இந்த வருன் யார்?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, அவசரநிலை பிரகடனத்தை அமுல்படுத்த துடிக்கும் சங்பரிவார், ஆட்சிக்கு வந்தால் தம்பதிகளின் தாம்பத்தியத்திற்கு கூட தடைவிதித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக