ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

அரசியல் தொழில் அல்ல, சேவை - ஜவாஹிருல்லாஹ்

அரசியல் என்பது ஒரு தொழில் அல்ல அது மக்களுக்கு செய்யப்படும் சேவை என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என அந்தக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

மனித நேய மக்கள் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தையில் 25.01.2011 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மனித நேய மக்கள் கட்சியில் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த 15 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிவி்த்தார்.


தங்களது கூட்டணியில் தேமுதிக இணைவது புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்ட அவர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என தெரிவித்தார்.

அரசியல் தொழில் அல்ல, சேவை - ஜவாஹிருல்லாஹ்

அரசியல் என்பது ஒரு தொழில் அல்ல அது மக்களுக்கு செய்யப்படும் சேவை என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என அந்தக் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

மனித நேய மக்கள் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தையில் 25.01.2011 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மனித நேய மக்கள் கட்சியில் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த 15 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிவி்த்தார்.


தங்களது கூட்டணியில் தேமுதிக இணைவது புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்ட அவர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என தெரிவித்தார்.

10 கிலோ இலஞ்சம் வாங்கிய நால்கோ தலைவர் மனைவியுடன் கைது-சிபிஐ காவல்!


புதுடெல்லி: 10 கிலோ இலஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட தேசிய அலுமினிய நிறுவனம் எனும் நால்கோ நிறுவனத்தின் தலைவர் ஏ.கே. ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட 4 பேருக்கு மார்ச் 4-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அலுமினிய நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீவஸ்தவா, அவரது மனைவி மற்றும் இருவர் லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதுதில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை சிபிஐ விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக மார்ச் 4-ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவையில் மனிதநேய மக்கள் கட்சியினர் சாலை மறியல் - பெண்கள் உள்பட 350 பேர் கைது ! போக்குவரத்து பாதிப்பு!


மனிதநேய மக்கள் கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடத்தி வருகிறது.

பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி மாநாடுகள் வாகன பேரணிகள் மேலும் குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் 7ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் மதுக்கடை மறியலில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான மனித நேய மக்கள் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

தற்போது கட்சியின் கோவை மாநகர சார்பாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரியும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கோவை செல்வபுரம் தெற்கு, கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதி, உக்கடம் பஸ் நிலையம், போத்தனூர் ஆட்டுத்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை (25-02-2011) அன்று மாலை 4 மணிக்கு கோவை செல்வபுரம் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையை த மு மு க. மற்றும் ம ம க. கட்சியினர், (அதுபோல்) அருகில் உள்ள பள்ளிகூட ஆசிரியர்கள், மாணவர்கள், அந்த பகுதி அனைத்து சமூக பொது மக்கள் ஆகியோர்கள் முற்றுகையிட்டார்கள்.

ஒரு மணிநேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே காவல் துறை உயர் அதிகாரிகள், மாவட்ட துனை ஆட்சியாளர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு வந்து பேச்சுவார்த்தை முலம் வருகிற 6ம் தேதி அந்த டாஸ்மாக் கடையை முழுமையாக அகற்றுகிறோம் என்று வாக்குறுதி அளித்தார்கள்.

பின்னா மறியல் செய்த அனைவரையும் கைது செய்தனர் காவல் துறை, பிறகு மாலை 8 மணிக்கு விடுதலை செய்தனர். இந்த மறியல் போராட்டத்திற்க்கு த மு மு க. மாவட்ட தலைவர் பர்கத் அலி தலைமையில் நடந்தது. இதில் மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், பொருளாளர் அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் சாகுல் ஹமீது, அப்பாஸ், சுலைமான், ஜாபர் சாதிக், ரபிக் உள்பட பெண்கள் கலந்து கொண்டார்கள்.

நன்றி : www.tmmk-ksa.com

ஜிஹாத் ஒர் இஸ்லாமிய பார்வை-புத்தக அறிமுகம்

னிதன் தான் நம்புகின்ற கொள்கை, கோட்பாட்டிற்கு எதிரான கொள்கைகளோடும் கோட்பாடுகளோடும் பொதுவாக நியாய உணர்வோடு நடந்துக் கொள்வதில்லை.

இயல்பில் சாதராணமாக காணப்படுகிற இக்குறைபாடு மதம் என்று வந்துவிட்டால் குறுகிய கண்ணோட்டமாகவும் வெறியாகவும் உருமாறிவிடுகின்றது.

ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் இன்னோரு மதத்தை விமர்சனம் செய்ய முற்படும் போது பொதுவாக அதனுடைய இருண்ட பகுதியையே தேடுகிறார்கள்.
வெளிச்சமுள்ள ஒளிரும் பகுதியை பார்க்க முயற்சிப்பதே இல்லை.அப்படியே பார்க்க நேர்ந்தாலும் தெரிந்து கொண்டே கண்களை இறுக மூடிக் கொள்கிறார்கள்.

மதங்களின் மீதான இத்தகைய விமர்சன் ஆய்வின் நோக்கம் வாய்மைக்கான தேடலாக இருப்பதில்லை. மாறாக, ஆய்வுக்கு முன்பே தன் தேர்ந்து கொண்ட ஒரு முடிவை சரியேன்று சாதிக்க நினைக்கும் வழியாகவே இருக்கிறது.

ஒரு மதத்தை மற்றவர்கள் எப்படி நோக்குகிறார்கள் என்பதைப் பார்க்கக் கூடாது. மாறாக அம்மதம் தன்னை எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதையே அறிய வேண்டும்.

இந்த வார்த்தைகள் இந்நூலின் ஆசிரியர் மற்ற மதங்களில் போரைப் பற்றி என்ன சொல்கிறது என்று ஆய்வு செய்ய போகும் முன் உதிர்த்த வார்த்தைகள்.
இந்த புத்தகம் நடுநிலையோடு மற்ற மதங்களையும் இஸ்லாத்தையும் எப்படி ஆய்வு செய்திருக்கிறது என்பதற்கு மேலேயுள்ள அவருடைய வாக்குமூலங்களே போதுமானாது.


இந்த நூலின் ஆசிரியர் டெல்லியில் இருந்தபோது

’இந்தியாவில் முஸ்லிம்களாக உள்ளோர் அனைவரும் இந்துக்களாக இருந்தவர்களே! அவர்களை மறுபடியும் இந்துக்களாக மாற்ற வேண்டும்’ என்பதைக் குறிக்கோளாய் கொண்டு ’சுத்தி இயக்கம்’ ஒன்றை அக்காலத்தில் ‘ஆரிய சமாஜம்’ நடத்தி வந்தது.

அவ்வியக்கத்தின் முக்கிய தலைவர்கள் பலரும் பொது மேடைகளில் அண்ணல் பெருமானார் அவர்களை மிகக் கேவலமாகத் திட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். 1919ம் ஆண்டு சுவாமி சுத்தானந்தா என்பவர் அவ்வண்ணம் ஒரு மேடையில் அண்ணலாரைத் திட்டுவதைக் காணச்சகிக்காத கருத்தை கருத்தால் சந்திக்க திராணியற்ற கோழையான ஒர் இஸ்லாமிய இளைஞன் அவரைக் குத்திக் கொன்றுவிட்டான்.

இஸ்லாம் என்பதே வன்முறையின் மறுபெயர். எடுத்தற்கெல்லாம் கத்தியைத் தூக்குவதே இவர்களின் வழக்கம் என்று காந்தி போன்ற தலைவர்கள் உட்பட ஒருத்தர் விடாமல் அனைவரும் பேச ஆரம்பித்தனர்.

டெல்லி ஜும்மா மஸ்ஜிதில் வெள்ளியுரை நிகழ்த்திய மெளலானா முஹம்மது அலி ஜெளஹர் என்பவர். ’இஸ்லாமைப் பற்றியும் இஸ்லாமிய ஜிஹாதைப் பற்றியும் ஆளுக்கு ஆள் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டுள்ளார்கள் இங்கே அமர்ந்திருக்கும் இளைஞர்களில் யாரேனும் ஒருவர் இதைப் பற்றி அலசி ஆராய்ந்து இஸ்லாமிய ஜிஹாதைக் குறித்து முழுமையான நூல் ஒன்றை வெளியிடக் கூடாதா என்று எனக்கு ஏக்கமாக இருக்கின்றது’ என அவர் தனது உரையில் ஆதங்க்கத்தோடு குறிப்பிட்டார்.

எதேச்சையாக அவ்வுரையை அபுல் அஃலா மெளதூதி கேட்டுக் கொண்டிருந்தார். மெளலானாவின் வேண்டு கோளை மானசீகமாக ஏற்றுக் கொண்ட அவர் அதற்காக உழைக்கத் தொடங்கினார். 1927 ம் ஆண்டில் புத்தகமாக இந்நூல் வெளிவந்தபோது இவருடைய வயது 23 .


472 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்திற்காக இந்த நூலின் மூல ஆசிரியர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நாட்கள் 2190.

இவர் இந்நூலை ஆறு அத்தியாயங்களாக தொகுத்திருக்கிறார்

1.இஸ்லாமிய ஜிஹாதின் நிலை

2.தற்காப்புப் போர்

3.சீர்திருத்தப் போர்

4.இஸ்லாமியப் பரவலும், வாளும்

5.போர் சமாதானம் பற்றிய இஸ்லாமிய சட்டங்கள்

6. வேற்று மதங்களில் போர்

ஒவ்வோரு தலைப்பிலும் ஆசிரியரின் உழைப்பும் ஆய்வும் நமக்கு மலைப்பை ஏற்ப்படுத்துபவை.

இஸ்லாத்தைப் பற்றியும் இஸ்லாமிய ஜிஹாதை பற்றியும் தவறான எண்ணங்கொண்ட மற்று மத சகோதரர்களும் இஸ்லாமிய சகோதரர்களும் படிக்க வேண்டிய மிக முக்கியமான நூல்.

ஆசிரியர்
சையத் அபுல் அஃலா மெளதூதி
தமிழக்கம்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
வெளியீடு
திண்ணை தோழர்கள் பதிப்பகம்
10/57, அரசு குடியிருப்பு பின்புறம்
ராயபுரம் முதன்மைச் சாலை
திருப்பூர் 641601,

டிஸ்கி: ‘ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாத வரை அவர் வேறு; இவர் வேறு”- பாரசீகக் கவிதை. knowledge is the shortest distance between two communities.அறிவு (பரஸ்பர அறிமுகம்) இரு சமூகங்களுக்கிடையில் உள்ள இடைவெளியைக் குறைக்கிறது.
நமக்குள் நல்ல புரிதலும் பரஸ்பர ஒற்றுமையும் வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நூல் அறிமுகம்.

நன்றி :
சகோ. ஹைதர் அலி

மூலம் : http://valaiyukam.blogspot.com/

சனி, 26 பிப்ரவரி, 2011

ஹிந்துத்துவா பெண் சாமியாரும்!!ஹிந்துத்துவா பெண் முதல்வரும்!! சந்திப்பு.

போபால்: மலேகான் குண்டு வெடிப்பு வழக்கி்ல் போபால் ‌ஜெயிலில் உள்ள முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா சாத்வி பிரக்யா சிங் தாகூரை , மத்திய பிரதேச மாஜி முதல்வர் ஹிந்துத்துவா உமாபாரதி சந்தித்து பேசினார். கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இது தொடர்பான வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாதி பெண் சாமியார் சாத்விபிரக்யாசிங் தாகூர் என்பவர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது போபால் சிறையில் உள்ளர். இந்நிலையில் மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனசக்தி கட்சித் தலைவருமான உமாபாரதி அவரை சிறையில் சென்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பிற்கு பின், உமாபாரதி கூறுகையில், பிரக்யாசிங் தாகூர் ஒரு அப்பாவி பெண் மகாராஜ் அவ்தேசஷ் ஆன்ந்த என்பவரின் அமைதி தியானத்தை பின்பற்றுபவர். அவரை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அவருக்கு எந்த தொடர்பு இருக்காது இவ்வாறு அவர் கூறினார். இந்த உமாபாரதி ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர். இவர் பார்மசூதி இடிப்பில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிட தக்கது. ஒரு முன்னாள் முதல்வர் ஒரு பயங்கரவாத இயக்கத்தின் சாமியாருக்கு வெளிப்படையாக ஆதரித்து கருத்து சொல்லி இருப்பது பேரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனித உரிமையா? கிலோ எவ்வளவு? கேட்க்கும் குஜராத்!!


புதுடெல்லி,பிப்.25: 'இன்ஸ்டிடியூட் ஆஃப் அப்ஜெக்டிவ் ஸ்டடீஸ்' என்ற அமைப்பின் சார்பாக "குஜராத்தின் நிலைமை குறித்து ஆராயப்பட்டு கொடுக்கப்பட்ட அறிக்கை என்னவென்றால்.

(1) வருமான அளவீட்டில் பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிராவைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் இருக்கும் குஜராத், இன்னும் மனித மேம்பாட்டுக் குறியீட்டில் (Human Development Index) கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகாவை விட பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. மேலும், மிகவும் பின்தங்கிய மாநிலமான ஒரிஸா கூட தற்போது தங்களின் நிலமையை மனித மேம்பாட்டுக் குறியீட்டிலும், ஏழ்மையிலிருந்து ஏழ்மையற்ற நிலைக்கு தன்னை முன்னேற்றி வருவதில் முனைந்து செயல்பட்டு வருகிறது.

ஆனால் வருமானத்தில் நான்காம் இடத்தில் இருக்கும் குஜராத் பசி, பட்டினி அதிகம் உள்ளோர் மாநிலப் பட்டியலில் முதலில் பதிவாகி இருப்பது அதிர்ச்சி தரக் கூடியது. வருமானம் அதிகம் உள்ள ஒரு மாநிலத்தில் பசி, பட்டினி இருப்பது மிகவும் வியக்கத்தக்க ஒன்று என்று தெரிவித்தார். இதைச் சற்று கூர்ந்து கவனிக்கும்பொழுது, குஜராத்தில் முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் மட்டுமே வறுமையிலும், வருமானத்தில் சமமற்ற நிலையிலும் வேரூன்றி இருப்பதை உணர முடிகிறது. அதிகமான முஸ்லிம்களே ஏழ்மையான நிலையில் வலுக்கட்டாயமாக வாழ வைக்கப்பட்டுள்ளனர்.

(2) கல்வி ரீதியிலும், முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்ட நிலையில் உரிமை பறிக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம் குழந்தைகள் தொடக்க நிலைப் பள்ளியில் 75 சதவிகிதம் சேர்ந்தாலும், வெறும் 26 சதவிகிதம் மட்டுமே உயர்நிலைப் படிப்புக்குச் செல்கின்றனர்.

(3) இந்த அறிவிப்பின் மூலம், நாம் அறியக்கூடிய மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால் குஜராத்தில் மட்டுமே 2 சதவிகித முஸ்லிம்கள் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். 11 சதவிகித மக்கள் அடிப்படைத் தேவைகளான வீட்டு உபயோகப் பொருட்கள் எதுவுமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். தேசிய அளவில், 13 சதவிகித முஸ்லிம்கள் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள் என்பது மற்றொரு தகவல்.

(4) நகர்ப்புறங்களில் முஸ்லிம் பெண்களின் நிலையைக் கவனிக்கும் பொழுது, அதிக அளவில் தொந்தரவுக்கு உட்படுத்த படுபவர்களில் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கையே அதிகம். 11 சதவிகிதம் மட்டுமே உள்ள மக்கள் தொகையில், 17 சதவிகித வழக்குகள் பதிவாகியுள்ளது மிகவும் வருத்தத்தில் ஆழ்த்துகிறது.

(5) இன்னும் மிகக் குறைந்த அளவில் பணிபுரிபவர்களும், அதிக அளவில் படிப்பறி வற்றவர்களும் முஸ்லிம்களில் உள்ளனர். மரபு ரீதியாக பார்க்கையில் முஸ்லிம்கள் கலை, இயந்திரம் மற்றும் கருவிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் ஆட்சியில் இருந்த போது மற்ற மக்களை விட வைர வியாபாரத்திலும், கைத்தறி வியாபாரத்திலும் அதிக அளவில் இருந்தனர். ஆனால், இன்றைய முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாகி விட்டது. பொருட்கள் உற்பத்தி செய்யும் பணிகளுக்கும், நிர்வாகப் பகுதியில் உள்ள வேலைகளுக்கும் இன்று அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஹெலிகாப்டரில் வலம்வரும் புதிய சாமியார்!!!


புதுடெல்லி,பிப்.24:யோகா என்றாலே பலருக்கு அலாதி பிரியம் உருவாகிவிட்டது. வாழுங்கலை' இன்னும் பல்வேறு பெயர்களில் சில மெஸ்மரிஸ கலைகளையும் கற்றுவிட்டு கோடி கோடியாக சம்பாதிக் கின்றார்கள் பல சாமியார்கள். 'கதவைத்திற காற்று உள்ளே வரட்டும்' என கட்டுரை எழுதிய ஒரு சாமியார் 'கதவை மூடமறந்ததால்' சர்ச்சையில் சிக்கி சீரழிந்தார். இந்நிலையில் பல்வேறு சாமியார்களின் கதைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்த பொழுதிலும் பலருக்கு யோகா மற்றும் சுவாமிகள் மீதான பற்று விட்டப்பாடில்லை.

இப்பொழுது புதியதொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அவர்தாம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற யோகா சாமியார் ராம்தேவ். கடந்த 10 ஆண்டுகளில் அவர் சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்த சொத்துக்களைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தக் கோரப்பட்டுள்ளது. இந்தியாவின் பல இடங்களிலும் சொத்துக்களை குவித்துள்ள சுவாமிஜிக்கு கோயில்கள் நிறைந்த ஹரித்துவாரில் மட்டும் 1000 கோடிக்கான சொத்துக்கள் உள்ளனவாம்.பத்து ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் சஞ்சரித்த சுவாமி ராம்தேவ் இன்று ஹெலிகாப்டருக்கு சொந்தக்காரர்.

தனக்கு சொந்தமான சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட வக்கில்லாத ராம்தேவின் நம்பமுடியாத வளர்ச்சியின் பின்னணியைக் குறித்து சி.பி.ஐ விசாரித்து உண்மையை வெளிக்கொணர கோரியது நாத்திகர்கள் அல்லர். மாறாக அகில பாரதீய அகாரா பரிஷத்தின் செய்தித் தொடர்பாளர் பாபா ஹட்யோகிதான். இதேக் கோரிக்கையை முன்வைத்து பலரும் முன்வந்துள்ளனர். வட இந்தியர்களுக்கு மத்தியில் ஆஷ்தா தொலைக்காட்சி சேனல் மற்றும் இதர சேனல்கள் வாயிலாக அதிகாலைகளில் யோகா பயிற்சியை துவங்கிய ராம்தேவின் வளர்ச்சி திடீரென உருவானதாகும். ராம்தேவால் உருவாக்கப்பட்டதுதான் உடல் நலனுக்கான பயிற்சியான யோகா கலை என பல மக்களும் தவறாகவே விளங்கி தொலைக்காட்சிக்கு முன்பாக உட்கார்ந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். சுவாமி என்ற நிலையில் கட்சி பேதமற்ற அனைவரும் பாபா ராம்தேவின் ஆதரவை பெறுவதில் மும்முரமாக ஈடுபட்டனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்தை சார்ந்த சங்கர்தேவ் என்ற சன்னியாசி சந்தேகமான நிலையில் காணாமல் போனார். அதனைத் தொடர்ந்து ராம்தேவின் ஆசிரமத்தின் செயல்பாடுகளில் மர்மம் நீடிக்கிறது என ஹட்யோகி கூறுகிறார். ராம்தேவின் ஆசிரமத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளில் மோசடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில மருந்துகளில் அஸ்திகள் இருப்பதாக சுட்டிக்காட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.எம் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரட் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார். இந்நிலையில் ராம்தேவை ஆதரித்து பாசிச பா.ஜ.க களமிறங்கியுள்ளது. சாமியார்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாதல்லவா?

மருந்தால் வந்த விபரீதம்: 12 கர்ப்பிணிகள் பலி

இராஜஸ்தான் மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் குளுக்கோஸ் மருந்து ஏற்றப்பட்ட கர்ப்பிணிகள் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் உமைத் என்ற அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் சிலருக்கு சத்துக்காக குளுக்கோஸ் மருந்து ஏற்றப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களிலேயே, அவர்களுக்கு அளவுக்கு அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டது.அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தாலும், 12 பேர் பரிதாபமாக இறந்து போயினர். மேலும், நான்கு பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் ,"கடந்த 23ம் தேதி வரை, அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதால், ஒன்பது பேர் இறந்தனர். அடுத்த சில நாட்களிலேயே, பலி எண்ணிக்கை 12 ஐ தொட்டதால், குளுக்கோஸ் மருந்தில் தான் கோளாறு இருப்பதாக நினைத்து, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அதைச் செலுத்துவதை நிறுத்தினோம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 கர்ப்பிணிகள் இறந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'என்றனர்.

இதையடுத்து, மருத்துவ உயரதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு நடத்தினர். இதில், கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ், கெட்டுப்போனது என்பது தெரியவந்தது. இதை செலுத்தியதால் தான், அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது என்பதும் முதல் கட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

சம்பந்தபட்ட குளுக்கோஸ் திரவம், இந்தூரைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.இந்த நிறுவனத்தின் மீதும், இதை விற்பனை செய்த உள்ளூர் மருந்து விற்பனை மையம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.மருந்து விற்பனையாளர் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் மருந்து விற்பனையாளர் சங்கப் பிரதிநிதிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ஜோத்பூர் காவல் ஆணையர் பூபேந்திர குமார் இதுபற்றி கூறுகையில் இராஜஸ்தான் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, விசாரணையை துவக்கியுள்ளோம். 5,000 பாட்டில் குளுக்கோஸ், இந்த நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை விற்பனை செய்யப்படாத குளுக்கோஸ் பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளோம். அவற்றை ஆய்வகச் சோதனைக்கும் பரிந்துரை செய்துள்ளோம். சோதனை முடிவுகள் வெளியான பின், உண்மையான காரணம் என்ன என்பது தெரிய வரும்.
என்று கூறினார்.

உமைத் மருத்துவமனை கண்காணிப்பாளர் நரேந்திர சங்கானி கூறுகையில்,"எங்கள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், சம்பந்தபட்ட மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர் ஆகியோருக்கு எதிராகப் புகார் கொடுத்துள்ளோம்'என்றார்.

இதற்கிடையே, உமைத் மருத்துவமனைக்கு வந்த, மாநில மருத்துவ அதிகாரிகள், அந்த மருத்துவமனையின் பிரசவ அறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மையத்தை தற்காலிகமாக மூடும்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

தி.மு.க. ஆட்சியில் உருவான புதிய கல்வித் தந்தைகள்!

''தி.மு.க. இம்முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கல்லூரி நடத்தியது எ.வ.வேலு மட்டும்தான். ஆனால், இன்று பெரும்பாலான அமைச்சர்கள் கல்லூரிகள் ஆரம்பித்துவிட்டார்கள். இது கட்சிக்கு நல்லதல்ல. அனைவரும் அதைக் கட்சிக்கு எழுதிவைத்துவிடுங்கள்!'' என்று ஒரு நாள் அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி சீறினார். அவரே அதிர்ச்சியடையும் அளவுக்கு தமிழக அமைச்சரவையில் இப்போது கல்வித் தந்தைகள் அதிகம்!

ஜெகத்ரட்சகன், ஜேப்பியார், ஏ.சி.சண்முகம், வேலூர் விஸ்வநாதன் போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் கடைக்கண் பார்வையால் கல்வி நிறுவனங்களை அமைத்து வளர்ந்தவர்கள் என்றால், கருணாநிதியின் ஆசீர்வாதம் காரணமாக... வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் பரிணமித்து இருக்கிறார்கள். சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர், கடலூர், கோவை நகர்ப் பகுதியில் வலம் வந்தால், இவர்களது பிரமாண்டமான கல்லூரிக் கட்டடங்களைத் தரிசிக்கலாம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டையில் பிரமாண்டமாக உருவாகிறது தயா இன்ஜினீயரிங் கல்லூரி. மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான இந்த கல்லூரி அடுத்த கல்வி ஆண்டில் இருந்து செயல்படத் துவங்குமாம்.

''அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மற்றும் நேருவின் மனைவி சாந்தா ஆகியோர் இணைந்து நாராயணா அறக்கட்டளை வைத்துள்ளனர். அதன் சார்பாக ஒரு கல்லூரி நடத்துகின்றனர். அந்தக் கல்லூரிக்காக ஏழை, எளிய விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு 100 ஏக்கர் நிலத்தை அபகரித்து உள்ளனர். தேசிய நெடுஞ்சாலைக்காக இந்த நிலங்கள் முன்பு தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிலங்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக, இப்போது புங்கனூரில் இருக்கும் ஏரியை வளைத்து தேசிய நெடுஞ்சாலைக்குப் பாதை அமைத்து வருகின்றனர். இது என்ன தர்மம்?'' என்று கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திருச்சியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா முழங்கினார்.


ஜெயலலிதா குறிப்பட்டது திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாயனூர் கிராமத்தில் இயங்கி வரும் கேர் இன்ஜினீயரிங் கல்லூரி பற்றித்தான். அந்தக் கல்லூரியின் சேர்மனாக இருப்பவர் நேருவின் தம்பி ராமஜெயம். நேருவின் அக்காள் மகனும், மாப்பிள்ளையுமான செந்தில் இதன் நிர்வாக அதிகாரி. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இன்ஜினீயரிங் கல்லூரி, நேருவின் தந்தை பெயரில் இயங்கி வரும் நாராயணா எஜுகேஷனல் டிரஸ்ட் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா குறிப்பிட்டதுபோல, நேருவின் மனைவி சாந்தாவும் சகோதரர் ரவிச்சந்திரனும் டிரஸ்ட்டை நடத்த, குடும்ப உறுப்பினர்கள் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஊரகத் தொழில் மற்றும் கால்நடைத் துறை அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமான கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, கோவை அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரி, விஜயலட்சுமி பழனிச்சாமி சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக நடத்தப்படுகிறது. தங்களுக்கு சொந்தமான நிலத்தில் இந்தக் கல்லூரியைக் கட்டி இருக்கிறாராம் பழனிச்சாமி. இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை அமைச்சரின் மகளும், நிர்வாக அறங்காவலருமான வித்யா கோகுல் கவனித்து வருகிறார்.

''கருணாநிதிக்கு மிக நெருங்கிய வட்டத்தில் இருந்துகொண்டு, அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி வரும் அமைச்சர்கள் யாரும், நன்றிக் கடனாகக்கூட கருணாநிதியின் பெயரை வைக்கவில்லை. ஆனால், பொங்கலூரார்தான் தலை​வரின் பெயரைச் சூட்டி தன்னுடைய நன்றி உணர்ச்சி​யைக் காட்டி இருக்கிறார்...'' என்று பொங்கலூராரின் கோஷ்டி பெருமை அடித்துக்கொள்கிறது.

'கனிமொழிக்கு சொந்தமானது இந்தக் கல்லூரி. பொங்கலூர் பழனிச்சாமியின் பெயரை இதற்குப் பயன்படுத்திக்கொண்டார்கள்!’ என்று சொல்பவர்களும் உண்டு. நீலகிரி தொகுதியின் எம்.பி-யாக ஆ.ராசா வந்து உட்கார்ந்த சில காலங்களிலே, இந்தக் கல்லூரி அவரது பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டது என்ற லெவலுக்குக்கூட லோக்கல் தி.மு.க-வுக்குள் புகைந்தது. ஆனால், பொங்கலூரார் தரப்போ... எல்லாவற்றையும் அடியோடு மறுத்துச் சிரிக்கிறது.

வேளாண் துறை அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சொந்தமாக உத்தம சோழபுரத்தில் வி.எஸ்.ஏ. குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் (இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ.) இருக்கிறது. வி.எஸ்.ஏ. என்றால் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் என்று அர்த்தம். அமைச்சரின் மகனான எம்.எல்.ஏ.ராஜா இதன் சேர்மன். இந்தக் கல்லூரியைக் கட்டுவதற்காக அருகில் இருந்த கஞ்ச மலையை சேதம் செய்தார்கள் என்றொரு புகார் எழுந்து அடங்கியது. இந்தக் கல்லூரி தவிர ஆட்டையாம்பட்டியில் பழைய ஸ்கூல் ஒன்றை சில மாதங்களுக்கு முன் விலைக்கு வாங்கி, வி.எஸ்.ஏ. மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் என்ற பெயரில் நடத்தி வருகிறார்கள்.


தி.மு.க-வின் கடலூர் மாவட்டச் செயலாளராகவும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருக்கிறார் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். அவருடைய சித்தப்பா தெய்வ​சிகாமணி, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஸ்டோர் கீப்பராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது 2008-ல் காட்டுமன்னார்கோவிலில், சந்திரவதனம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மற்றும் சந்திரவதனம் ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரே சேர்மனாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

2008-ம் ஆண்டு மேல​பழஞ்சநல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுமார் மூன்று ஏக்கரிலும், 2009-ம் ஆண்டு வீராணம் நல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே இன்ஜினீயரிங் கல்லூரி ஒன்றை சுமார் 20 ஏக்கரிலும் நடத்தி வருகிறார். இதை பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் நிர்வகித்து வருகிறார். கதிரவன்தான் சேர்மன். நாட்டார்மங்கலம் கிராமத்தில் கல்வி நிறுவனத்துக்காக கட்டடம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எம்.ஆர்.கே. கல்வி அறக்கட்டளைக்கு பன்னீர்செல்வத்தின் சித்தப்பா தெய்வசிகாமணி சேர்மனாக இருக்கிறார்.

சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன், தனது மகன் கதிர்ஆனந்த் பெயரில் கிங்ஸ்டன் கலை மற்றும் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார். காட்பாடியில் இருந்து சித்தூர் போகும் வழியில் சுமார் 6 கி.மீ தொலைவில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கல்வி நிறுவனம் நடந்து வருகிறது. இந்தக் கல்லூரிக்கு அருகில்தான் அரசின் வெடி மருந்துத் தொழிற்சாலை நடந்து வருகிறது. இதன் அருகில் எந்தவொரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தக் கூடாது என்பது அரசு விதி. அதையும் மீறி இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதனால், 'அரசு வெடி மருந்துத் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றலாமா...’ என்ற அளவுக்கு ஆலோசனைகள் நடக்கிறது.

விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலா​ளரும், அமைச்சருமான பொன்முடி, சிகா என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி இருக்கிறார். அதன் மூலம், சிகா மேலாண்​மைக் கல்லூரி, மற்றும் சிகா டீச்சர் டிரெயினிங் கல்லூரி ஆகிய​வற்றை கப்பியாம்புலியூர் என்ற இடத்தில் நான்கு ஆண்டு காலமாக நடத்தி வருகிறார். மேலும் விக்கிரவாண்டி அருகே சூர்யா பொறியியல் கல்லூரி ஒன்றையும் மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சூர்யா பொறியியல் கல்லூரி பொன்முடியின் மகன்களான பொன்.கௌதமசிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோர் பெயரில் நடத்தப்படுகிறது.


முன்னரே சொன்னது மாதிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, கம்பன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் ஐ.டி.ஐ., ஜீவா வேலு உறைவிடப் பள்ளி ஆகியவற்றை வேலு நடத்தி வருகிறார்.


ஆக மொத்தம், தமிழக அமைச்சரையில் நான்கில் ஒரு பங்கு மந்திரிகள் கல்வித் தந்தையராக வளர்ந்திருக்​கிறார்கள்.

''இது பொற்கால ஆட்சி!'' என்று சமீபத்தில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னார். அதற்கு பதில் அளித்த கருணாநிதி, ''பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு என்று மாத்திரம் இல்லாமல், ஏழை எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ, என்றைக்கும் அந்த நற்காலம் நீடிக்கிற நிலைமை ஏற்படுகிறதோ, அதுதான் பொற்காலமாகும்!'' என்று சொன்னார்.

இந்தக் கட்டடங்களை எல்லாம் பார்த்தால் யாருக்குப் பொற்காலம் என்பது சொல்லாமலே புரிகிறது!

- நன்றி : ஜூனியர்விகடன் - 27-02-2011

நன்றி : உண்மைத்தமிழன்

கருணாநிதி அரசின் முஸ்லிம் விரோத போக்கு!!!

சென்னை,பிப்.23: கோவை வெடிக்குண்டு நாடக நாயகன் ரத்தின சபாபதிக்கு அரசு பதவி, உயர்வு அளித்தது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி பின்வருமாறு: 'கடந்த 22.06.2007அன்று கோவையை தகர்க்க சதி என தமிழகத்தையே பீதிக்குள்ளாக்கியவர் ரத்தின சபாபதி. இவர் அப்போதைய உளவுத்துறை உதவி ஆணையாளராக பதவி வகித்தவர். சில பொருள்களை கைப்பற்றியதாகக் கூறி சில முஸ்லிம் இளைஞர்களையும் கைதுச் செய்து அவர்கள் மனித நீதிப் பாசறையைச் சார்ந்தவர்கள் என்று அறிக்கையும் விடுத்தார்.

இவ்வழக்கில் உள்ள போலித் தன்மையை உணர்ந்துக் கொண்ட பொதுமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோரிடையே எழுந்த நீதிக்கான குரல்கள் எழுந்தன. இதன் விளைவாக அரசு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஆர்.பாலன் அவர்களுடைய தலைமையில் சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்த உத்தரவிட்டது.

சுமார் ஒருவருடமாக இவ்வழக்கை விசாரித்த எஸ்.ஐ.டி கடந்த 2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், "இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட வெடிக்குண்டுகள் காவல் துறையினராலேயே பொய்யாக புனையப்பட்டு இவ்வழக்கில் சேர்க்கப்பட்டவை. மேலும் இவ்வழக்கின் ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு புனையப்பட்டுள்ளன. எனவே இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கூறி இவ்வழக்கை முடிக்கின்றோம்" என எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் அரசு ரத்தினசபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக அவருக்கு கோவை மாநகரிலேயே காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இத்தகைய அரசின் கண்மூடித்தனமான போக்கை கண்டித்தும், ரத்தினசபாபதி மீது வழக்குப்பதிவுச் செய்து தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், பொய்வழக்கு புனையப்பட்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், பிரச்சாரங்கள், கையெழுத்து இயக்கங்களின் வாயிலாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடி வருகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்தின சபாபதி மீது வழக்கும் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலும், ரத்தின சபாபதிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதவி அளிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அரசின் இந்த நடவடிக்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கை தெளிவாக உணர்த்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரையிலும், அரசின் இந்த கண்மூடித்தனமான போக்கை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து மக்களை திரட்டி போராடும்.' என அவர் தெரிவித்துள்ளார்.

சிந்திக்கவும்; இது போல்தான் கோவை கலவரத்திற்கு காரணமாக அமைத்த போலீஸ் கயவர்களுக்கு பதவி உயர்வு அளித்து மகிழ்ந்தார் இந்த கருணாநிதி. கோவையில் ட்ராபிக் போலீஸ்காரர் விசமிகளால் கொல்லபட்டார். இதில் சம்மந்த பட்டவர்கள் மேல் வழக்கு தொடுக்காமல் போலீஸ் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளோடு கூட்டு சேர்ந்து திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது கலவரத்தை நடத்தி 19 முஸ்லிம்கள் கொல்லபட்டார்கள். இதற்க்கு முழுக்க முழுக்க காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு கருணாநிதி பதக்கம் அணிவித்து பதவி உயர்வு கொடுத்தார். இந்த கருணாநிதி எம்.ஜி.ஆர். இடம் தொடர்ந்து 14 வருடங்கள் தோற்று வனவாசம் இருந்த பொது முஸ்லிம் ஒட்டு வங்கி இல்லை என்றால் இவரது கட்சியே இருந்திருக்காது. இந்த காலகட்டத்தில் முஸ்லிம்களின் 99 சதவிதம் ஓட்டை பெற்றே இவர் தமிழகத்தில் கட்சி நடத்தினார். அப்போது முழுக்க திராவிட சிந்தனை உள்ளவர் போல் காட்டி கொண்டு முஸ்லிம்கள் வாக்குகளை பெற்றார். என்று ஆட்சிக்கு வந்தாரோ அதோடு தோளில் மஞ்சள் துண்டு ஏறிவிட்டது. அதில் இருந்து இதுவரை நோன்பு கஞ்சி குடித்து தொப்பி போட்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றி வருகிறார்.

அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அப்பாவிகளை விடுதலை செய் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை சிறையிலிடு

SDPI-ன் தேசிய அளவிலான பிரச்சாரம் பிப்ரவரி 20 முதல் மார்ச் 27 2011 பிரச்சார துவக்கவிழா கருத்தரங்கம் 20 பிப்ரவரி 2011.
கடந்த பல வருடங்களாக நம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் சவாலாக இருந்து வந்த தீவிரவாத தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள் போன்றவற்றிற்கு ஆர். எஸ். எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் தான் காரணம் என்பதனை சமீபத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு விசாரணைகளின் மூலம் புலனாய்வு அமைப்புகள் அம்பலப்படுத்தியது. இது ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சூழலில் நாட்டின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த ஆபத்தான தீவிரவாத சக்திகளை தடுப்பது இன்றியமையாததாகும். குண்டுவெடிப்புகளின் பின்ணனியில் உள்ள உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் கூட, தவறுதலாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களை விடுதலை செய்யாமலும், இன்னும் ஒரு படி மேலே போய் அவர்களின் ஜாமின் மனுக்களை காங்கிரஸ் மற்றும் மாநில அரசுகள் நிராகரித்து வருகிறது.


இதனை முன்னிறுத்தி எவ்வித ஆதாரமுமின்றி, அடிப்படையுமின்றி குண்டுவெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு இன்றும் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அப்பாவிகளை விடுதலை செய்யக் கோரியும், அதே சமயம் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் என புலனாய்வு அமைப்புகளால் கண்டறியப்பட்ட ஃபாஸிஸ பயங்கரவாதிகளை சிறையிலடைக்கக்கோரியும் 2011 ஆண்டின் பிப்ரவரி 20 முதல் மார்ச் 27 வரை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசிய அளவிலான பிரச்சாரம் நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது.

தேசிய அளவிலான இப்பிரச்சாரத்தின் துவக்கமாக 20, பிப்ரவரி, 2011 அன்று சென்னையில் அமைந்துள்ள தமிழக புதிய சட்டமன்றம் அருகில் உள்ள அண்ணா ஆடிட்டோரியத்தில் பிரச்சார துவக்கவிழா கருத்தரங்கம் எஸ் டி பி ஐ சார்பாக நடத்தப்பட்டது.

சரியாக காலை 10.30 மணிக்கு தொடங்கிய இக்கருத்தரங்கத்திற்கு SDPIன் அகில இந்திய தலைவர் இ. அபுபக்கர் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக SDPIன் அகில இந்தியத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஷாஹித் ஹீஸைன் சித்தீகி , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா, NCHRO-ன் மாநில தலைவர் வழக்கறிஞர் ப. பா. மோகன், PUHR தலைவர் பேரா. அ. மார்க்ஸ், SDPIன் தமிழ்நாடு மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி, SDPIன் மாநில பொருளாளர் ஏ. அம்ஜத் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

SDPIன் அகில இந்திய பொதுச்செயலாளர் முஹம்மது உமர் கான் அவர்கள் அங்கு குழுமியிருந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்தினை வரவேற்று உரை நிகழ்த்தினார். பின்னர் தலைமையுரையாற்றிய SDPIன் அகில இந்திய தலைவர் இ. அபுபக்கர் அவர்கள் தனது உரையில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா இந்த சென்னை மாநகரத்திலிருந்து அடுத்த ஒரு மாதத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரத்தை துவங்குகிறது. அழிந்து போகும் நிலையிலிருக்கும் நம் நாட்டினை அழிவிலிருந்து காப்பாற்றி மீண்டும் அதன் உண்மையான பொதுவுடைமை மற்றும் ஜனநாயகத்தின் பக்கம் கொண்டுவருவதற்கான ஒரு சீரிய முயற்சியே இப்பிரச்சாரமாகும் நம் நாட்டினை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கும் ஊழல் மற்றும் வகுப்புவாதம் குறித்த மாபெரும் விழிப்புணர்வு பிரச்சாரம் நம் நாட்டு மக்களிடையே இன்றிலிருந்து இந்தியா முழுவதும் SDPI ன் சார்பாக நடத்தப்படும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற பெயரில் 1,76,379 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊழலை தொலைதொடர்பு துறையும், S-Band என்ற பெயரில் 2 லட்சம் கோடிரூபாய் மதிப்புள்ள ஊழலை Space Research Department என்ற அரசுத்துறையும் நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து கொள்ளையடித்தது. அரசும் பல தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதே தொலைத்தொடர்பு துறையõகும். ஆனால் Space Research Department என்பது பெரும்பான்மையாக உயர்ஜாதி இந்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பகிரங்கபடுத்தப்பட்ட அளவிற்கு S-Band ஊழல் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஊழல் என்றால் ஊழல் தான். அது திராவிட அரசியல்வாதிகள், அமைச்சர்கள் செய்தாலும் சரி அல்லது பார்ப்பன விஞ்ஞானிகள், அதிகாரிகள் செய்தாலும் சரி. ஆக பிரதான ஊடகங்களில் நிலவும் இரட்டை நிலையையே இது நமக்கு உணர்த்துகிறது.

அதுமட்டுமின்றி உயர்ஜாதி வகுப்பினர் நிறைந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். அதன் துணை அமைப்புகளும் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளை முஸ்லிம்களின் பெயரில் நிகழ்த்தி விட்டு அதன் மூலம் வெகுஜன இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பு உணர்வை தூண்டிவிடுக்கின்றனர். எனவே வெகுஜன இந்துக்கள் உயர் ஜாதியினரின் இந்த சுழ்ச்சிகளை உணர்ந்து ஊழல் மற்றும் பாசிச இந்துத்துவத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. உடன் ஒன்றினைந்து போராட வேண்டும் என்று குறிப்பிட்டார்.


பின்னர் சிறப்புரையாற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தனது உரையில் பாசிஸ சங்பாரிவாரங்களும் அதனோடு ஒட்டி உறவாடும் சில ஊடகங்களும் அரங்கேற்றிய பயங்கரவாதத்தால் நாட்டில் ஒரு நிலை ஏற்பட்டது. அதாவது "கொல்லப்படுவது முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்படுவதும் முஸ்லிம்கள் சித்ரவதை கைது செய்யப்படுவதும் முஸ்லிம்கள்" என்ற நிலையே அது. ஆனால் இன்று அந்த பொய்கள் தவிடு பொடி ஆக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதல்களை நடத்தியவர்களிலிருந்து குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள் வரை அனைவருமே சங்பரிவார பாசிஸவாதிகளே என்பது தெளிவானது.

இன்னும் சொல்லப் போனால் ஒரு முஸ்லிம் இளைஞன் அனுபவித்த சித்ரவதையினை காதால் கேட்டதனால் மட்டும் இந்துத்துவவாதியான அசீமானந்தா புனிதராக மாறியிருக்கிறார். ஆனால் அசீமானந்தா மட்டும் மாறி பயனில்லை. இந்த நாட்டினுடைய ஆன்மா மாற வேண்டும். மேலும் நான் ஒன்றை மட்டும் உறுதியான கூறுகிறேன். அதாவது இந்து மதம் வேறு, இந்துத்துவா என்பது வேறு. இந்து மதம் என்பது ஒரு ஆன்மீக வழிபாட்டு முறை. இந்துமதத்திற்கு நாம் ஒரு போதும் எதிரியல்ல. இந்து மத நண்பர்கள் என்றென்றும் நம் சகோதரர்களே. ஆனால் இந்துத்துவ என்பது அழிக்கப்பட வேண்டிய வெறிபிடித்த பாசிச மிருகம். எனவே, ஆர்.எஸ்.எஸ். ஸின் இந்துத்துவ குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்பாவி முஸ்லிம்கள் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும். சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு தக்க நஷ்டஈடு வழங்க வேண்டும்.

எனவே நாம் ஒன்று படுவோம்! பாசித்தை தோற்கடிப்போம்! தேசத்தை பாதுகாப்போம் என்று குறிப்பிட்டார்.

இறுதியாக SDPI-ன் அகில இந்திய செயலாளர் சி. ஆர். இம்தியாஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

இவண்
ஊடக தொடர்பாளர்
SDPI தமிழ்நாடு

மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன்? - தமுமுக

அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட்சி

அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட்சி

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக முஸ்லிம் அரங்கில் எழுச்சி!மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சொந்த சின்னத்தில் போட்டியிட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராட்டுகள், வாழ்த்துகள் வரும் வேளையில் ஒரு சிலர் விமர்சனங்களையும் முன் வைக்கின்றனர். பலர் எங்களிடம் அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்ட கேள்விகளைத் தொகுத்து, அதற்கான விளக்கங்களை அளிக்கின்றோம்.



கேள்வி: மாற்று அரசியலுக்கான முன்முயற்சி என்ற பெயரில் மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்குகிறீர்கள். கூடுதல் தொகுதிகளை பெறுவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளீர்கள். ஏன்?


பதில்: சமுதாயத்தின் அரசியல் தலை நிமிர்வுக்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம். அதில் நாங்கள் சமரசம் செய்துகொள்வதில்லை. இப்போது 3 தொகுதிகள் குறித்து ஒரு சிலர் விமர்சிக்கிறார்கள். அதேசமயம் 90 சதவீதம் பேர் பாராட்டுகிறார்கள் என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். எனினும் விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் என்று சிறு கூட்டமாக இருந்தாலும் அவர்களுக்கும் விளக்கமளிப்பது எமக்கு கடமையாகிறது.

“ஏதோ கொடுத்ததை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள்” என்பதுபோல அந்த சிலர் விமர்சிக்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து அதிமுக குழுவுடன் மமக குழு 5 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்துவிட்டு, அதில் 12 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் 12&ல் இருந்து ஏழு தொகுதிகள் என்ற நிலைக்கு வந்தோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் 5 தொகுதிகள் என்ற நிலையில் இதற்கு மேல் எங்களால் இறங்கி வரமுடியாது என கூறிவிட்டோம். பிப்ரவரி 18&ம் தேதி அதிமுக குழுவிடம் எங்களின் நிலைபாட்டை உறுதிபட தெரிவித்துவிட்டோம். அதனாலேயே ஒப்பந்தம் போடுவது ஒத்திப்போய்க் கொண்டிருந்தது. அதிமுக குழு பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறி மூன்று தொகுதிகள் தான் என்ற எண்ணிக்கையை ஏற்கக் கூறி வேண்டிக் கொண்டிருந்தது. ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தார்.

நாம் கடைசியாக 4 தொகுதிகளும், புதுச்சேரி மாநிலத்தில் 1 தொகுதியும் ஒதுக்க வேண்டும் என்று உறுதி காட்டினோம். இதனிடையே மமக மல்லுக்கட்டுவது குறித்து நக்கீரன் உள்ளிட்ட ஏடுகள் செய்தி வெளியிட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே ஜமாஅத்துகள், உலமாக்கள், சமுதாய ஆர்வலர்கள், சமுதாய அறிவுஜீவிகள் என பலதரப்பும் நமக்கு அன்பான வேண்டுகோளை விடுத்தனர். போனமுறை திமுகவிடம் மல்லுகட்டியது போல் வேண்டாம். இம்முறை நமது பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்ற அளவில் சிந்தியுங்கள். கூடுதல் தொகுதிகளை அடுத்தடுத்த தேர்தல்களில் வற்புறுத்துங்கள் என கருத்து தெரிவித்தனர்.

இதே கருத்தை பிப்ரவரி 19 அன்று பல மாவட்ட நிர்வாகிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் நம்மிடம் வலியுறுத்தினர். சமுதாயத்திற்காகத்தான், நாம் கட்சி ஆரம்பித்தோம். சமுதாயத்தின் கூடுதல் பிரதிநிதித்துவத்திற்காகத்தான் போராடுகிறோம். எந்த சமுதாயத்திற்காகப் போராடுகிறோமோ அந்த சமுதாயத்தின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் ஏற்றுக்கொள்வது கட்டாயமாகிறது.

அந்த அடிப்படையில் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைகளுடன் அதிமுக தர முன் வந்த மூன்று தொகுதிகளை இப்போதைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்வது என்றும், மூன்று தொகுதிகளில் வெற்றி வாகை சூடிய பிறகு கூடுதல் தொகுதிகள் என்ற லட்சியத்தை அடுத்தடுத்த தேர்தல்களில் முன்வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கேள்வி: நீங்கள் அதிமுக குழுவுடன் பெரும் போராட்டம் நடத்தியது, விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். உங்களை விமர்சிப்பவர்கள் அதை ஏற்க மாட்டார்களே..?


பதில்: நாங்கள் கூடுதல் தொகுதிகளுக்காகப் போராடியது வேறு யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, இறைவனுக்குத் தெரியும். கடைசியாக நான்கு தொகுதிகளையாவது பெற்றுவிட வேண்டும் என்று உறுதிகாட்டினோம். ஆனால் இறைவன் நாடவில்லை. சமுதாயத்தின் தலை நிமிர்வுக்காக நாங்கள் போராடியதற்கான கூலி இறைவனிடத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளோம். எங்களை விமர்சிப்பவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

கேள்வி: அதிக தொகுதிகள் எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ளீர்கள். அதை ஈடுகட்டும் வகையில் சமுதாயத்தின் நலன் காக்கும் வேறு கோரிக்கைகளை வைத்திருக்கீறீர்களா?

பதில்: செல்வி ஜெயலலிதாவை சந்தித்தபோது பொதுக்குழுவின் தீர்மானப்படி இடஒதுக்கீடு குறித்தும் விரிவாகப் பேசியுள்ளோம். கல்வி முறையில் உருது, அரபி உட்பட சிறுபான்மை மொழிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாராபட்ச போக்கு குறித்தும், திருமண பதிவுச்சட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்தும், பல்வேறு சமுதாய கோரிக்கைகள் குறித்தும் அவரிடம் பேசியுள்ளோம். எல்லாம் நல்லபடியாக நடைபெற அனைவரும் துவா செய்வோம்.

கேள்வி: இந்த மூன்று தொகுதிகளும், புதுச்சேரியில் ஒன்றும் தருவதாக கூறியிருக்கும் ஒரு தொகுதியும் ஒரு வகையில் சாதனைதான் என சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களே..

பதில்: உண்மைதான்! 1991&க்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம்கள் நடத்தும் அரசியல் கட்சிக்கு சொந்த சின்னத்தில் மூன்று தொகுதிகளை திராவிடக் கட்சிகள் ஒதுக்கியது இப்போதுதான்! இக்காலக்கட்டத்தில் அப்துல் லத்தீப் அவர்கள் ஒருமுறை 5 தொகுதிகளை திமுகவிடம் பெற்றார். ஆனால் உதயசூரியனில் தான் அனைவரும் போட்டியிட்டார்கள்.

அப்துல்சமது அவர்கள் முஸ்லிம் லீக்கிற்கு அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களைப் பெற்றார். ஆனால் அவர்களும் இரட்டை இலையில்தான் போட்டியிட்டார்கள்.

ஆனால், அப்துல் சமது, அப்துல் லத்தீப், ஆகியோர் செல்வாக்கோடு இருந்த 1991லிருந்து இப்போதைய 2011 வரை உள்ள இருபது வருடத்தில் தமிழகத்தில்¢மூன்று தொகுதிகளை சொந்தச் சின்னத்தில் பெற்று, மனிதநேய மக்கள¢கட்சி முதல்கட்டமாக நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

கேள்வி: நீங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக, சொல்லி இருந்தால் நிச்சயம் 12 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும், முழு தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் பலரும் வருத்தப்படுகிறார்களே..

பதில்: உண்மைதான். ஆனால் சமுதாயத்தின் தனித்தன்மையும், அரசியல் உரிமைகளும், சுதந்திரப் பேச்சுகளும் முடக்கப்பட்டிருக்கும்.

எந்த பெரிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டோமோ அக்கட்சியின் கொறடா அனுமதியில்லாமல், நமது எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் சுதந்திரமாகப் பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். கடந்த காலத்தில் காயிதே மில்லத்திற்கு பிறகு பல முஸ்லிம் அமைப்புகள் செய்த தவறுகளை நாமும் செய்ய விரும்பவில்லை.

கூடுதல் தொகுதிகளுக்காகவும், தேர்தல் செலவுகளுக்காகவும் நமது உரிமைகளை முடக்க நாங்கள் விரும்பவில்லை. குறைவான தொகுதிகளாக இருந்தாலும், அவை தனித்தன்மையோடும் தன்மானத்தோடும் இருக்க வேண்டும் என்பதால்தான் மூன்று தொகுதிகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: அதிமுக கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளை ஒப்பிடும்போது மமகவுக்கு 3 தொகுதிகள் கிடைத்திருப்பது பரவாயில்லை என பல பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்களே...

பதில்: விபரம் அறிந்தவர்களுக்கு அந்த உண்மை புரியும், போனமுறை அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகளைப் பெற்ற வைகோ அவர்களுக்கு இம்முறை 15 தொகுதிகள் பேசப்படுவதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றது. 80 தொகுதிகள் கேட்ட விஜயகாந்துக்கு 41 தொகுதிகள் பேசப்படுவதாக மீடியாக்கள் தெரிவிக்கின்றன.

முன்பு 2001ல் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட வலுவான கட்சியான புதிய தமிழகத்துக்கு இப்போது அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தேவர் சமுதாயக் கட்சியான: மக்கள் அறிமுகம் கொண்ட, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கும், நாடார் சமுதாயப் பின்னணி கொண்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கும் புதிய தமிழகத்தின் எண்ணிக்கைகள் தான் பேசப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு லட்சத்துக்கும் அதிகமாக ஓட்டு வாங்கிய கொங்கு முன்னேற்றக் கழகத்துக்கு இரண்டு கூட்டணியிலுமே நான்கு தொகுதிகள்தான் பேசப்படுவதாக செய்திகள் வருகின்றன. அது மட்டுமல்ல, மேற்கண்ட அனைவருக்கும் சொந்தச் சின்னங்களில் போட்டியிட அனுமதி கிடைக்குமா? தெரியவில்லை.

இதையெல்லாம் ஒப்பிடும்போது மமகவுக்கு தமிழகத்தில் மூன்று தொகுதிகள் சொந்தச் சின்னத்தில் அளிக்கப்பட்டிருப்பதும், புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதி தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருப்பதும் நல்ல மரியாதையான தொடக்கம் என்பதை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கேள்வி: இப்போது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு காய் நகர்த்தும் நீங்கள், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டிருக்கலாமே...


பதில்: அன்றைய அரசியல் சூழலில், எடுக்கப்பட்ட முடிவு அது. 2004&ல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் 2009&ல் திமுக கூட்டணியில் இல்லை. அவர்கள் விட்டுச் சென்ற 14 தொகுதிகள் உபரியாக இருந்தது.

வட மாவட்டங்களில் மட்டுமே உறுதியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அப்போது இரண்டு தொகுதிகளை கொடுத்து, தமிழகம் முழுக்க செயல்படும் நமக்கு ஒரு தொகுதியை மட்டுமே தருவோம் என்று அரசியல் பாரபட்சத்தை திமுக தலைமை வெளிக்காட்டியது.

அவர்கள் தர முன்வந்த ஒரு தொகுதியை கூட, எங்களுடன் கலந்து பேசி தரவில்லை. நாம் விரும்பிய வேலூரை கவனத்தில் கொள்ளாமல், அவர்களாகவே ராமநாதபுரத்தை முடிவு செய்தார்கள். இரண்டும் நமக்கு பலமானவைதான் என்றாலும், ராமநாதபுரம் அழகிரியின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய தொகுதி.

அந்த நேரத்தில் வக்பு வாரியக் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக நமக்கும், அழகிரிக்கும் கடும் கருத்து வேறுபாடு இருந்தது. இது திமுக தலைமைக்கு நன்றாகத் தெரியும்.
ஒருவேளை ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டு ராமநாதபுரத்தில் போட்டியிட்டு இருந்தால், அழகிரியின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆட்சியில் பங்கு கேட்டதற்காக கூட்டணியில் வைத்தே தங்கபாலுவும், இ.வி.கே.எஸ். இளங்கோவனும் தோற்கடிக்கப்பட்டது போல ‘உள்குத்து’ வேலைதான் நடந்திருக்கும். எது எப்படியோ, கடந்து போன அந்த அரசியல் நிகழ்வுகளை நாம் பெரிதாக்க விரும்பவில்லை. அவற்றை அரசியல் அனுபவங்களில் ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறோம்.

இத்தருணத்தில் ஒரு ஹதீஸை இங்கே நினைவூட்டுகிறோம்.

பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விட சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவரும் ஆவார். இறை நம்பிக்கையாளர் அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்கு பயன்தரும் காரியங்களை அடைய ஆர்வம் கொள். முடியாது என்று எண்ணிவிடாதே. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை. இப்படிச் செய்திருந்தால் அப்படி நடந்திருக்குமே என்று கூறாதே. காரணம் “இப்படிச் செய்திருந்தால்” என்ற வாசகம் ஷைத்தானின் செயலுக்கு வழிவகுக்கும். அல்லாஹ் விதித்தான். அவன் நாடியதை செய்கின்றான் என்று கூறு. (நபிமொழி)

அறிவிப்பாளர்: அபுஹூரைரா ரலி நூல் : முஸ்லிம் (6945)


கேள்வி: என்னதான் நீங்கள் தெளிவாக விளக்கினாலும், ஒரு சிலர் உங்களை விமர்சித்துக் கொண்டே இருப்பார்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?

பதில்: அவர்களெல்லாம் யார் என்று சமுதாயத்திற்கும், பொதுமக்களுக்கும் தெரியும். சமுதாயத்தில் பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி சுயநலத்திற்காக செயல்படுபவர்கள்: இயக்கம் ஒன்றை உருவாக்கி தலைமையேற்க தகுதியில்லாதவர்கள் தற்போது செயல்படும் இயக்கங்களை வலுவூட்டி, சமுதாயத்திற்கு நலன்களைப் பெற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்டாதவர்கள்: தங்கள் இயக்கத்தின் சார்பாக அரசியல் கட்சியை உருவாக்க முடியவில்லையே என பொறாமைப்படுபவர்கள்: சொந்தச் சின்னத்தில் ஒரு தொகுதியைக் கூட பெற வழியில்லாதவர்கள்: அடுத்தவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் எதையாவது பரபரப்புக்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள்: & இப்படி இவர்களின் பட்டியல் நீளும்.

அவர்களைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை. காரணம், முன்பு நாம் தனித்து நின்றபோது இவர்களெல்லாம் நம்மை ஏன் ஆதரிக்கவில்லை. அப்போது எங்கே தொலைந்தார்கள்?

ஒருவேளை மூன்று தொகுதிகளை வாங்காமல், நாம் வெளியே வந்திருந்தால், கொடுத்ததை ஏன் மறுத்தீர்கள் என விமர்சிப்பார்கள். வாங்கிய பிறகு, மூன்று தொகுதிகளை வாங்கியது ஏன் என விமர்சிப்பார்கள்.

ஒரு நிலைப்பாடு எடுத்து அதில் வெற்றி பெற்றால் ஒரு மாதிரி பேசுவார்கள். தோல்வியடைந்தால் உடனே மாற்றி பேசுவார்கள்.

ஒரு வேளை கூடுதலாக மூன்று தொகுதிகளை பெற்றிருந்தால், அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வது போல பேசும் இவர்களெல்லாம்: நாம் சந்தியில் நிற்க வேண்டும் என விரும்பும் நரிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய “விமர்சகர்களின்” முகமும், முதுகும் எப்படிப்பட்டது என்று நமக்கு தெரியும். இவர்களால் எந்த நன்மையும் நமக்கு இல்லை.

நமக்கு சமுதாய மக்களும், இயக்கவாதிகளும்தான் முக்கியம். அவர்களது புரிதல்களும், ஆதரவும், அல்லாஹ்வின் அருளும் இருக்கும்போது நாம் எதைப்பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து பிரிவினைவாத தலைவர்களை நீக்க வேண்டும். ஒரு சமுதாய ஊழியரின் குமுறல்


சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து பிரிவினைவாத தலைவர்களை நீக்க வேண்டும். அதுவரை முஸ்லிம் சமுதாயத்துக்கு விமோசனம் கிடைக்காது.இன்று தமிழகத்தில் 9 கோடி மக்களில் கிட்டத்தட்ட 2 கோடி முஸ்லிம்கள் இருந்தும்.>>> 50 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உறுப்பினராக இருக்க வேண்டிய இடத்தில் 4 சீட்டுக்கூட கிடைக்காத நிலைக்கு காரணம் என்ன?
பிரிவினையில் இன்பம் காணும் இயக்கவாதிகள்தான்.
நமது சமுதாயத்தை பல கூறுகளாக பிரித்துவிட்டு > ஒரு இயக்கத்தின் ஆதரவாளர் மற்றொரு இயக்கத்தின் செயல்களை விமர்சித்துக்கொண்டும்.
காபிர்களை விட அதிகமாக முஸ்லிம் சகோதரர்களை வெறுத்துக்கொண்டும்.
ஏதோ இவர்கள் மட்டும் நல்லவர்கள் இவர்களுக்கு மட்டும்தான் இஸ்லாமிய சமுதாயத்தின் மீது ஆதிக்கமும்? அக்கறையும் !!! இருப்பதுபோல். நினைத்துக்கொண்டு மற்ற இயக்கவாதிகளை. தாக்கிப்பேசுவதும் எழுதுவதும். பார்த்தாயா எனது பதிவிற்கு பதிலையே காணோம். என்று தமக்கு தாமே பெருமைப்பட்டுக்கொள்வதும். ஒருவர் காலை ஒருவர் வாறி விட்டு அதிலே இன்பம் காணுவதும், (குறிப்பாக) தமிழக இயக்கவெறியர்கள். சமுதாயத்தை கூறு போட்டதால்தான்>> இந்த நிலைமை ஏற்பட்டது.

தமிழகத்தில் எங்களைவிட பெரிய இயக்கம் இல்லை என்று தட்டிக்காட்டுபவர்கள். எங்களைவிட பெரிய கூட்டம் இல்லை என்று கூட்டிக்காட்டுபவர்கள். தங்கள் சக்தியை நிரூபிக்க தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்யும் தி.மு.க அல்லது அ.தி.மு.க கட்சியிடம் தங்களது பெரும்பான்மையை காட்டி தங்களின் சார்பில்
குறைந்தது 10 சீட்டுகளையாவது முஸ்லிம் சமுதாயத்துக்கு வாங்கித்தரலாமே? உங்க இயக்கத்துக்கு வேண்டாமய்யா > எந்த கட்சியில் 10 க்கும் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்களுக்கு சீட்டு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு எங்கள் ஆதரவு என்று பேசி பாருங்களேன்.
அதை விட்டு விட்டு வெட்டிப்பேச்சி வீரர்களாக > மைக்குப்பேச்சி வீரர்களாக > அழுக்கு நுரைபோல் கூட்டம் கூடி என்ன பயன்?. கட்சிகள் கொடுக்கும் காசுக்காக > முஸ்லிம்கள் போட்டியிடும் தொகுதியில் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும். காபிர்களின் கட்சிக்கொடியை பிடித்துக்கொண்டு முஸ்லிம்களை எதிர்த்து முஸ்லிம்களே போரடுவது போன்ற (ஜமாத்து )இயக்கத்துக்கு பின்னால் ஒரு முஸ்லிம் கூட்டம்.
தாங்களும் அரசியலில் இறங்கி போட்டி போடமாட்டர்களாம். அடுத்த இயக்கத்தை சார்ந்த முஸ்லிம் போட்டி போட்டாலும் ஜெயிக்க விட மாட்டாங்களாம். இது இவர்களின் இயக்க கொள்கையாம். இப்படி அறிக்கைவிட வெட்கமாக இல்லையா ? இவர்கள்தான் முஸ்லிம் சமுதாயத்துக்கு பாதுகாவலர்களா?
. முஸ்லிம் சமுதாயம் இத்தகைய இயக்கங்களால் சந்திக்கும் சமூக இழப்பைப்பற்றி சிந்திக்க வேண்டும். இயக்கவெறியர்கள் இருக்கும்வரை இயக்கங்கள் அழியாது,
இயக்கங்கள் அழியாதவரை சமுதாய ஒற்றுமை ஏற்படாது.
சமுதாய ஒற்றுமை ஏற்படாதவரை முஸ்லிம் சமுதாயத்திற்கு எந்த கட்சியும் மதிப்பளிக்காது.
கட்சிகளின் பிரித்தாலும் சூழ்ச்சிக்கு நம் சமுதாயம் பழியாகிவிட்டது.
இயக்கத்தலைவர்கள் (தங்கள் பெருமை புகழ் பதவி பணம் போன்ற ) சுயநலத்துக்காக நம் சமூகத்தை பழி கிடாவாக்கி விட்டர்கள்.
இயக்கவெறி பிடித்தால் சமுதாய சிந்தனை இல்லாமல் போய்விடும். என்பதை கண் கூடாக பார்த்தும் திருந்தாதவர்களுக்கு அல்லாஹ்தான் நேர்வழி காட்டவேண்டும்.
உலகம் முழுவதும் சூழ்ச்சியும் ஆட்சியும் மாறி வருகிறது. தலைவர்கள் விரட்டப்படுகிறார்கள். நாட்டை விட்டு ஓடுகிறார்கள். நம் நாட்டு தலைவர்களுக்கும். நம் சமுதாய தலைவர்களுக்கும் இப்படி ஒரு நிலைமை சீக்கிரம் வர வேண்டும். சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து பிரிவினைவாத தலைவர்களை நீக்க வேண்டும். அதுவரை முஸ்லிம் சமுதாயத்துக்கு விமோசனம் கிடைக்காது.

சிந்திப்போம் செயல்படுவோம்.

S.N.ABDUL ALEEM
RIYADH - K.S.

source :


ம ம க வுக்கு மூணு சீட்டு? ஒரு சமுதாய ஊழியனின் குமுறல்

ம ம க வுக்கு மூணு சீட்டு? ஒரு சமுதாய ஊழியனின் குமுறல்
மனித நேய மக்கள்கட்சியாவது மூன்று தொகுதியை தனி சின்னத்தில்வாங்கியுள்ளது..இதுவரை
எந்த முஸ்லிம் கட்சியாவது இதை யாவது சாதித்ததா ? கருணாநிதி முஸ்லிம் களின் அரசியல் எழுச்சியை அடக்க நினைத்து ஒரு சீட் மட்டுமே நாடாளுமன்றத்தில் கொடுப்போம் என் கொக்கரித்தார்.திமுக வை பொறுத்தவரை முஸ்லிம்கள் தான் அக்கட்சியின் பிரதான வாக்கு வங்கி முதல்வர் , துணை முதல்வர் நிதியமைச்சர் என எல்லோரும் முஸ்லிம் பெரும்பான்மையான தொகிதிகளில் தான் வென்றுள்ளனர். எம் ஜி ஆர் என்ற சக்தியை திமுக 13 ஆண்டுகள் சமாளித்து கட்சியை நடத்தியதே முஸ்லிம்கள் ஆதரவை வைத்து தான் முஸ்லிம்களின் ஒருங்கிணைந்த ஆதரவு இல்லைஎன்றால் திமுக 77 ,84 89 91 ஆகிய தேர்தல்களில் டெபாசிட்டினைகூட பல தொகுதிகளில் இழக்கும் நிலை ஏற்பட்டிருக்ககூடும் .திமுக் ஒரு சமுதாயத்திற்கு நன்றி கடன் பட்டிருக்கிறது என்றால் அது முஸ்லம் சமுதாயத்திற்கு மட்டுமே ஆனால் நன்றி மறந்த திமுக முஸ்லிம் அரசியல் எழுச்சியை முன்னிறுத்தும் கட்சியான மமகவைஉதாசீனம் செய்தது.
ம ம க தன்மான அரசியலை முன்னிறுத்தியது. இந்த சமுதாயம் தன்னை சேயைக்கண்ட தாயை போல் வாரிஅணைக்கும் என அந்த கட்சித்தலைமை தப்புக்கணக்கு போட்டது. . சமுதாயத்தின் தன்மானம் காக்க புறப்பட்ட அந்த கட்சிக்கு சமுதாயம் எதை பரிசாக கொடுத்தது. ?ஏமாற்றத்தை பரிகாசத்தை அவதூறை கடைசியாக படுதோல்வியை அன்பளிப்பாக கொடுத்தது. அவர்கள் தனிப்பட்ட லாபத்தை நோக்கத்தை கணக்கில் கொண்டு நடந்திருந்தால் அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.நம்மை சமுதாயத்தை நம்பியதால் அவர்களுக்கு அந்த அவல நிலை ஏற்பட்டது எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் ஒரு கட்சியின் கடந்த கால அரசியல் தேர்தல் வெற்றி தோல்வி நிலவரங்களை வைத்து தான் அவர்கள், உடன்பாடு பேசுவார்கள் . மமக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்ன ரிசல்ட்டை வைத்துள்ளது என்பது தான் நமக்கு தெரியுமே ?
இதில் தமிழக் சட்டமன்றத்திற்கு 3 புதுவையில் ஒன்று மற்றும் தமிழ் நாட்டில் இரண்டு வாரியங்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.என தெரிய வந்துள்ளது. இது வே ஓவர் ம ம க வின் கட்டமைப்பிற்கு அதன் தொண்டர் பலத்தை வைத்து தான் இதுவாவது கிடைத்தது என அரசியல் பார்வையாளர்கள் சொகிறார்கள்
இதற்கு முன்பு
அதிக தொகுதிகள் போட்டியிட்ட திமுக அதிமுக மதிமுக போன்ற கட்சிகள் தங்களுக்கான தொகுதிகளை குறைக்கும் நிலையம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ம ம க வை கிண்டல் செய்வது நிச்சயம் சமுதாய துரோகமாகும் இதை ஊக்குவிப்பவர்கள் ஒன்று விவரம் புரியாதவர்கள் அல்லது சமுதாய துரோகிகள் என்றே சமுதாயம் தூற்றும் .

லிபியாவில் பெரும் வன்முறை: 140 பேர் பலி



ட்ரிபோலி: லிபியாவில் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் பொதுமக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இறந்தவர்களையும் சேர்த்து கடந்த 4 நாட்களில் பலியானோர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.

அரபு நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார் மொம்மர் கடாபி. இந்த நூற்றாண்டில் அதிக ஆண்டுகள் ஆட்சியிலிருந்த சர்வாதிகளுள் இவரும் ஒருவர்.

டுனீஷியா மற்றும் எகிப்தில் நடந்த மக்கள் போராட்டங்கள் மற்றும் ஆட்சி மாற்றங்களின் விளைவாக இப்போது லிபியாவிலும் ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.

போராட்டத்தை அடக்க அதிபர் கடாபி ராணுவத்தை ஏவியுள்ளார். அவர்கள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். நேற்று லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள பெங்காஷி நகரில் போராட்டத்தில் இறந்தவர்களின் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது அதில் ஈடுபட்ட மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியது ராணுவம்.

இதில் நூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கடந்த 4 தினங்களில் இறந்தவர் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை 140 என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள்.

இருந்தும் அங்கு போராட்டம் ஓய்ந்தபாடில்லை. தீவிரம் அடைந்துள்ளது. மேலும் அங்கு நேற்று மாலை 2 மணியிலிருந்து இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டது. வெளியுலகத் தொடர்புகளை முற்றாக நிறுத்தவும் ராணுவம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, வீடு விடாக புகுந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்க கடாபியின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் பதட்டத்தில் உள்ளன.

இந்தியர்கள் பத்திரம்...

இந்தப் போராட்டம் காரணமாக, லிபியாவில் உள்ள தங்கள் நாட்டு மக்களை அந்தந்த நாடுகள் திருப்பி அழைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளன. பல நாடுகள் லிபியாவில் உள்ள தங்கள் மக்கள் பத்திரமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளன.

லிபியாவில் இந்தியர்கள் நிறையப் பேர் வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார்.

குவைத்தில் போராட்டக்காரர்கள் மீது காவல் துறை கண்ணீர் குண்டு வீச்சு

குவைத் : எந்நாட்டு குடியுரிமையும் இல்லாத பெடோன்ஸ் என்று சொல்லப்படும் பாலைவன அரபிகள் தங்களுக்கு அடிப்படை உரிமைகள் மற்றும் குடியுரிமை கோரி நடத்திய போராட்டத்தை கலைக்க காவல்துறை கண்ணீர் குண்டு வீசியது. மேலும் குழுமியிருந்த 300 போராட்டக்காரர்களில் சுமார் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.


துனிஷிய புரட்சியின் அதிர்வுகள் ஓயாத நிலையில் அமைதியாக உள்ள குவைத்தில் நடந்த இப்போராடம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜஹ்ராவில் நடை பெற்ற போராட்டத்தை போன்று சுலைபியாவிலும் தங்களுக்கு குடியுரிமை தர கோரி போராட்டம் நடத்தினர். சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இவ்வாறு குடியுரிமை இல்லாமல் வாழ்கின்றனர். குவைத் அரசாங்கமோ இவர்கள் ஈராக் போன்று பிற நாட்டிலிருந்து இங்கு குடியேறியவர்கள் என்று சொல்ல இவர்களோ தாங்கள் குவைத்தின் மண்ணின் மைந்தர்கள் என்றும் நாடு சுதந்திரம் அடைந்த போது தங்கள் முன்னோர்கள் கல்வியறிவு இல்லாமல் குடியுரிமைக்கு பதிவு செய்யவில்லை என்றும் தங்களுக்கு இப்போதாவது குடியுரிமை வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

குவைத்தில் உள்ள பெடோயின்கள் குவைத் குடிமக்களை போல் வசதியாக இல்லாமல் ஏழ்மையில் தான் வாழ்கின்றனர். குவைத்தில் வாடகை டாக்ஸி போன்ற தொழில்கள் மூலமே சொற்ப வருமானத்தை கொண்டு வாழ்கின்றனர். இதற்கிடையில் குவைத் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு உடனே இப்பிரச்னையில் தலையிட்டு சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அரசோ குடியுரிமை வழங்கப்படவில்லையே தவிர தேவையான வசதிகள் செய்து தரப்படுவதாக கூறியுள்ளது.

3484 கிராம நிர்வாகப் பதவிகளுக்கு 10 இலட்சம் பேர் போட்டி: இன்று தேர்வு


சென்னை: வருவாய்த் துறையில் காலியாக உள்ள 3484 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு 9.59 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

தமிழக அரசின் வருவாய்துறையில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவியில் 3484 காலி இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வு நடத் தப்படுகிறது.

10-ம் வகுப்பை அடிப்படை கல்வித் தகுதியாக கொண்டு நடைபெறும் இந்த தேர்வு எழுத கடும் போட்டி நிலவியது. 10 லட்சத்து 43 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியில்லாத 85 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

9 லட்சத்து 59 ஆயிரம் பேர் இன்று தேர்வு எழுதினார்கள். தமிழ்நாடு முழுவதும் 104 நகரங்களில் 3,465 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு எழுதுவதற்காக காலை 8 மணிக்கே தேர்வு மையங்களுக்கு ஏராளமானோர் வந்தனர். தேர்வு மைய வாசலிலேயே தேர்வு எழுத வருபவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பரிசோதித்து வழி காட்ட 2 அரசு ஊழியர்கள் நின்றனர்.

இளைஞர்கள் மட்டுமின்றி திருமணமானவர்களும் ஏராளமானோர் தேர்வு எழுதினார்கள். காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். இதற்காக 298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த பறக்கும் படையினர் தேர்வு மையங்களை தீவிரமாக கண்காணித்தனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தெந்த மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டன.

வி.ஏ.ஓ. பதவிக்கு நேர்முக தேர்வு கிடையாது. எழுத்து தேர்வு மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து தான் பணி நியமனம் செய்யப்படும். எனவே வேலையில்லா பட்டதாரிகள் 6 மாதத்துக்கும் மேலாக இந்த தேர்வுக்காக பயிற்சி பெற்றனர்.

ஃபாஸ்ட் புட்வும் அதிவேக வியாதிகளும்!


ஃபாஸ்ட் புட் எனப்படும் வேக உணவுக் கலாச்சாரம் நகரப்பகுதிகளில் கிட்டத்தட்ட 70 சதவீதம் ஆக்கிரமித்துவிட்டது.

தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் சின்னச் சின்ன நகரங்களிலும் இன்றைக்கு ஃபாஸ்ட் புட் கடைகளில் சுறுசுறுப்பாக வியாபாரம் நடக்கிறது.

சாப்பிட ருசியாக இருந்தாலும், இந்த வேக உணவுகள் பல்வேறு வியாதிகளை இழுத்துவிடும் சாத்தியம் ஏராளமாக உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலைமுறையினர் தொடர்ந்து ஃபாஸ்புட் உணவு வகை சாப்பிட்டு வருவதால் 50 வயது வரும்போது கேன்சர் உள்ளிட்ட நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கும் இரண்டாம் தர ரீதியிலான நீரிழிவு நோய் வரவும் இந்த வேக உணவுகள் வித்திடுகின்றன. பெண்களுக்கு எலும்புருக்கி நோய், இரத்த சோகை என பல தொல்லைகள் ஃபாஸ்ட் புட்டால் வருகின்றன.

2007 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த சர்வேயில் பாஸ்புட் கலாச்சாரத்தால் அங்கு மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 75 சதவீதம். இதே போன்றதொரு கணக்கெடுப்பை பெங்களூர் மற்றும் மும்பையில் மேற்கொண்டபோது, 50 சதவீத நோயாளிகள் ஃபாஸ்ட் புட் உணவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் பல்வேறு நாடுகளில் குந்தைகளிடம் நடத்தப்பட்ட 60க்கும் மேற்பட்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளிலும் இதய நோய் மற்றும் கேன்சர் இளம் வயதிலேயே தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக உணவியில் மற்றும் உணவு அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள்


சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.



இன்று மதியம் அதிமுகவின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலளார் எஸ்.ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யு. ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, அதிமுக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என இரு கட்சிகளுக்கு இடையே கையெழுத்தானது.



மேலும் புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் அளிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா உறுதி அளித்தார்.

Last Updated ( Sunday, 20 February 2011 18:25 )

பேஸ்புக் நண்பர்கள் சமூக அக்கறை உள்ளவர்களா?


“பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் உலவுவோர் உண்மையில் சமூக அக்கறை இல்லாதவர்கள்; இதுபோன்ற “ஆன்லைன்’ நண்பர்களை நம்பாமல் இருப்பதே நல்லது’ என, மனநல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில், பிரிட்டனை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் தனது 1,048 “பேஸ்புக்’ நண்பர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், எவருமே அவருக்கு நன்றி அல்லது வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை.

இதனால், மனமுடைந்த அவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுள்ளார். அதுபற்றியும் தனது “பேஸ்புக்’ பக்கத்தில் எழுதியுள்ளார். அவரது நண்பர்கள் பலர் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும், ஒருசிலர் மட்டும் கடமைக்காக அவரது முகவரியைக் கேட்டுள்ளனர். இருந்தாலும் யாரும் குறிப்பிட்ட நபரை நேரில் சென்று பார்க்கவில்லை. மறுநாள் அப்பெண்ணை பார்க்க வந்த அவரது தாய், தனது மகளின் தற்கொலையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த தற்கொலை சம்பவம் “பேஸ்புக்’ இணைய நண்பர்கள் பற்றி வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மனநல நிபுணர்கள் சிலர் இதுகுறித்து கூறியதாவது: உண்மையான ரத்தமும், சதையுமான நண்பர்களை யாரும் நம்புவதில்லை. மாறாக, இதுபோன்ற சமூக வலைதளங்களில் உள்ள நண்பர்களையே மிகவும் நம்புகின்றனர். சமூக வலை தளங்களில் முகம் தெரியாத, சமூக அக்கறை இல்லாத பலர் நண்பர்களாக வலம் வருகின்றனர். இன்னும் சிலர் குளிப்பது முதல் தூங்குவது வரை பல விஷயங்களை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்; நண்பர்களும் தங்களைப் போல் உண்மையாக இருப்பதாக நினைத்து ஏமாறுகின்றனர்.

தற்போதைய உலகில் உண்மையான நட்பு என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. இந்த நிலையில், “பேஸ்புக்’ போன்ற சமூக வலை தளங்களில் முன்பின் பார்க்காத, முகம் தெரியாத நண்பர்கள் அவசியம் தானா என்பதை நாம் யோசிக்க வேண்டும். சமூக வலை தளங்களில் உலவும் பலருக்கு “நண்பர்கள்’ என்பதன் உண்மை அர்த்தம் தெரிவதில்லை. நேரம் கடத்தவும், பொழுதுபோக்கவும் பயன்படும் சமூக வலை தளங்களில் உண்மையை எதிர்பார்ப்பது அவசியமற்ற ஒன்று.

“தனக்கு எது நடந்தாலும் “பேஸ்புக்’ நண்பர்கள் காப்பாற்றுவர்’ என நினைப்பது அடிமுட்டாள்தனம். உங்களுக்கு சம்பந்தமில்லாத ஒருவர் எதையாவது கூறும்போது, நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருந்து விடலாம். இவ்வாறு மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

“பேஸ்புக்’ செய்தித் தொடர்பாளர் மரியா ஹீத் இதுகுறித்து கூறுகையில்,”தற்கொலைகளை தடுக்க எங்களால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எனினும், பிரச்னை உள்ளவர்கள் “பேஸ்புக்’ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள உதவி மையத்தை தொடர்புகொண்டால், உரிய தீர்வு காண நாங்கள் முயற்சிப்போம். இதற்காக, முழுநேர பணியாளர்களையும் நியமித்துள்ளோம். கடந்த ஆண்டில், இதுபோன்று 129 பேரின் பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளோம்,” என்றார்.

10 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை!


விவசாய தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மழை வெள்ளம், வறட்சி போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் கொடுத்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 70 லட்சம் பேர் விவசாய தொழிலை விட்டு, வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டதாகவும், கடன் தொல்லையால் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களையே நம்பி உள்ளனர். இதனாலேயே, சுதந்திரம் அடைந்ததில் இருந்து, விவசாய தொழிலை முன்னேற்ற ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களிலும், மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது.மாநில அரசுகளும், விவசாயிகளுக்கு பயிர் செய்யவும், உழவு கருவிகள் வாங்கவும் கடன் உதவிகளை வழங்கி வருகின்றன.

உரம், பூச்சி மருந்து பொருட்கள் மானிய விலையில் கொடுக்கின்றன. வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் கடன் ரத்து செய்யப்படுகின்றன.கடன் உதவிகள், மானியம் போன்றவை கிடைத்தாலும் விவசாயம் செய்வது எளிதான செயலாக இல்லை. எதிர்பாராமல் திடீரென பெய்யும் பெரும் மழை, பயிர் செய்ய முடியாத அளவிற்கு கடும் வறட்சி, பனி போன்றவை விவசாயிகளை அவ்வப்போது பதம்பார்த்து வருகின்றன. இதனால், இந்த ஆண்டு சிறப்பான மகசூல் கிடைக்கும் என்று, எந்த விவசாயியும் எதிர்பார்ப்புடன் இருக்க முடியாத நிலை உள்ளது.

இதனால், வாங்கிய கடனையும் சரியான தவணைகளில் கட்ட முடிவதில்லை. விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கினாலும், அதை பெறுவதற்கு சிபாரிசு, கடன் வழங்கும் அதிகாரிக்கு லஞ்சம் என்று கொடுக்க வேண்டியுள்ளதால், கடன் தொகை முழுவதும் விவசாயிக்கு கிடைக்க முடியாத நிலை உள்ளது.இதனால், தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டியுள்ளது.

கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், கடன் சுமை அதிகரித்து ஏராளமான விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கடனை கட்ட முடியாமல் தன்மானம், கவுரவம் கருதி தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் அதிகம்.விவசாய தொழிலில் கூலி குறைவாக இருப்பதால், கடந்த 10 ஆண்டுகளில் 70 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டு, வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர்.

இது குறித்து விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களை கேட்டபோது, “விவசாய பட்டப்படிப்பு படித்து வேலை இல்லாத விவசாய பட்டதாரிகளை கிராமங்களுக்கு அனுப்பி, விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன விவசாய தொழில் முன்னேற்றங்கள் குறித்து, விவசாயிகளிடம் எடுத்துக்கூறி விவசாயத்தை வளர்க்க அரசு உதவ வேண்டும்.

அடுத்து வரும் ஆண்டுகளில், உலகில் விவசாய உற்பத்தி குறையும் என்று வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர்.கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணாக வெங்காயம், தக்காளி போன்ற பொருட்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து விட்டன. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

“கடன் தள்ளுபடி’ திட்டம் கண்துடைப்பு :
மத்திய, மாநில அரசுகள் விவசாய கடனை தள்ளுபடி செய்து வந்தாலும் அதன் பலன், ஏராளமான ஏழை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. கடன் தள்ளுபடியை விட, பயிர் காப்பீடு திட்டத்தை அதிகரித்தால் பலன் கிடைக்கும். இந்த திட்டம் வெகுவாக நடைமுறையில் இல்லாததால், அதிக மழை, வறட்சி, பனிப்பொழிவு, புயல், பூச்சி தாக்குதல், நோய் போன்ற காரணங்களால் நஷ்டம் ஏற்பட்டு, விவசாய தொழில் முடங்கிப் போய் விடுகிறது.

இதனால், விவசாயிகளுக்கு மட்டும் இல்லாமல் நாட்டிற்கும் நஷ்டம் ஏற்படுகிறது.பயிர் காப்பீட்டு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு எளிதாக நிவாரணம் கிடைக்கும். இதனால், விவசாயி தொடர்ந்து நம்பிக்கையுடன் விவசாயத்தை மேற்கொள்ள வழி ஏற்படும்.

சனி, 19 பிப்ரவரி, 2011

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரா? ஆர்.எஸ்.எஸ் ரவிசங்கரா?


ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குள் போனால் “வன்முறை இல்லாத, மனஇறுக்கம் இல்லாத உலகே எனது லட்சியம்” எனும் வார்த்தைகள் பளிச்சிடுகின்றன. மகாத்மா காந்தி ஆசிரமத்திற்குப் போய் ரவிசங்கர் ராட்டை நூற்கிற படம் இருக்கிறது. பெங்களூரிலிருந்து 36 கி.மீ தூரத்தில் இவரது ஆசிரமம் இருக்கிறது. தமிழகத்தின் பாபநாசத்தில் பிறந்தவராம். அங்கு போய் செட்டில் ஆகியிருக்கிறார். தனது பெயரான ரவிசங்க ரோடு ஸ்ரீஸ்ரீயைச் சேர்த்திருக்கிறார்.

“வாழுங் கலை சர்வதேச மையம்”, “வேத விஞ்ஞான மகாவித்யா பீடம்” இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் இந்தியாவில் மட்டு மல்லாது, பல நாடுகளிலும் விரவிக் கிடப்பதை இணைய தளம் விவரித்துக் கொண்டே போகிறது. இணைய தளத்தைப் பார்க்க பார்க்க, படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது. தென்னிந்தியா விலிருந்து ஒரு “ மகாகுரு” கிளம்பி சர்வதேசப் புகழ் பெற்றிருக்கிறார். இது அதிகாரப்பூர்வ பிம்பம். நெருங்கிப் பார்த்தால் தெரியும் உண்மை முகம் என்ன?

“ஃபைனான்சியல் டைம்ஸ்” எனும் உலக அளவில் பிரபலமான பத்திரிகையின் தெற்காசியப் பிரிவின் தலைவராக 2001-2005 ல் தில்லியிலிருந்து பணியாற்றியவர் எட்வர்ட் லூசே. இந்தியாவில் தனக்கேற்பட்ட அனுபவத்தை “கடவுளர்கள் இருந்தாலும்” என்று ஒரு நூலாக எழுதியிருக்கிறார். இது 2006 ல் லண்டனில் வெளியானது. இதன் மலிவுப் பதிப்பு 2007ல் வெளியானது. இதில், தான் ரவிசங்கரை சந்தித்தது பற்றியும், அதன் பிறகு நடந்த சில விஷயங்கள் பற்றியும் சொல்லியிருக்கிறார் லூசே. அவை சுவாரசியமானவை மட்டுமல்ல, இந்த நாட்டின் முற்போக்காளர்களால் கவலையோடு கவனத்தில் கொள்ளத் தக்கவை.

ரவிசங்கரின் ஆசிரமம் எப்படி இருக்கிறது தெரியுமா? ஆசிரமம் என்றால் நம் மனதில் ராமாயண காலத்து குடில், அல்லது காந்தி காலத்து எளிய ஓட்டு வீடு எழும். இது அப்படி அல்ல. லூசே கூறுகிறார் “இந்த ஐந்து மாடிக் கட்டடம் முழுக்க முழுக்க மார்பிள் கல்லால் கட்டப்பட்டது, ஒரு தாமரை வடிவில் உள்ளது.” பி.ஜே.பி.யின் தேர்தல் சின்னத்தை இவர் எடுத்துக் கொண்டது யதேச்சையானதாக இருக்க முடியாது என்பதைப் பிந்தைய நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் பற்றிய ஒரு வலைத்தளச் செய்தியில் பெங்களூரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் அதிகாரிகள் மத்தியில் இது தீவிரமாக இயங்குவதாகவும், வாரம் ஒரு முறை கூடி இந்த அமைப்பின் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி உற்சாகமாக விவாதித்துக் கொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தகையவர்களின் நிதி உதவி ரவிசங்கருக்கு கிடைத்துள்ளது.

நூலாசிரியர் லூசேவுடனான பேட்டி துவங்கியது: அப்போது காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைதாகியிருந்தார். இது பற்றிய ரவிசங்கரின் கருத்தைக் நூலாசிரியர் கேட்டார். அதற்கு அவரின் பதில் அதிர்ச்சியாக இருந்தது. இந்துக்கள் பெரிதும் அசமந்தமானவர்கள். நாங்கள் அஹிம்சாவாதிகள் இதனாலேதான் இப்படி நடக்கிறது என்று பதில் சொன்னார். ஓர் இந்து மடாதிபதி கைதானால் இந்து வெகுமக்கள் பொங்கி எழ வேண்டும், கலவரத்தில் ஈடுபட வேண்டும் எனும் உள்ளார்ந்த எதிர்பார்ப்பு இந்த “ஆன்மிகக்” குருவுக்கு இருப்பதைத் தெளிவாக இவரது பதிலில் இருந்து உணரலாம். பாகல்பூர் முதல் பீவாண்டி, மீரட், குஜராத், மும்பை வரை நடத்திய கலவரங்கள் போதாது. இந்துக்கள் அஹிம்சாவாதிகளாக இருக்கிறார்களே என்று ஏகமாயக் கவலை!

இங்குள்ள சாதிப்பிரச்சனையும் இதற்குக் காரணமோ என்று இவர்களுக்குள் குடைகிறது. காஞ்சி மடம் நடைமுறையில் ஓர் உயர்சாதியினரின் மடமாக இருக்க, பிற பகுதி மக்கள் அதன்பால் அக்கறை காட்டாததில் ஆச்சரியம் இல்லை என்றும் படுகிறது. இதை மனதில் கொண்டுதான் ரவிசங்கர் போன்றவர்கள் தியானம், யோகா என்று பல தரப்பாரையும் ஈர்க்கிற புதுவித மடத்தை உருவாக்குகிறார்கள் என்பதும் இதில் நிச்சயமாகிறது. உத்தியை மாற்றிப் பார்க்கிறார்கள்.

இதெல்லாம்கூட பிரச்சனை இல்லை. இந்த நவீன சாமியாரின் சமூக-அரசியல் சிந்தனை மற்றும் புறவுலகத் தொடர்புதான் சிக்கலானது. பாபர் மசூதி-ராமர்கோவில் பற்றி நூலாசிரியர் லூசே கேள்வி கேட்க ரவிசங்கர் சொன்ன பதிலை நோக்குங்கள்- “இயேசு அல்லது முகம்மது பிறந்த இடம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? அந்த இடத்தின் மீது இன்னொரு கட்டுமானம் இருப்பதை நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா? ராமருக்கு ஒரு கோவில் கட்டுவோம். ஒரு நல்லெண்ணச் செய்கையாக முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கட்டும். அப்போது அந்தக் கோவில் அல்லாவுக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் கூடச் சொந்தமாக இருக்கும்.”

இந்தப் பதிலைக் கேட்டு அசந்து போனார் லூசே. அவர் மட்டுமா நாமும்தான். விஷயத்தையே தலைகீழாக்கி விட்டார். ஆன்மிகக் குரு அல்லவா சித்துவேலை காட்டிவிட்டார். அயோத்தியில் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்கிறார்கள் சரித்திரஞானிகள். 450 ஆண்டுகளாக இருந்த மசூதிக்குள் 1949 ல் கள்ளத்தனமாக ராமர் சிலையை வைத்துவிட்டு, அது ராமருக்கே சொந்தம் எனச் சொன்னார்கள் இந்துத்துவாவாதிகள். இந்த அடாவடித்தனத்தைக் கண்டிக்காமல் முஸ்லிம்களை விட்டுத்தரச் சொல்கிறார். விட்டுத் தந்தால் ராமர் கோவில் முஸ்லிம் களுக்கும் சொந்தமாக இருக்குமாம்! விக்கிரக ஆராதனை செய்யாத முஸ்லிம்களை இது கேலி செய்கிற வேலை.

நூலாசிரியர் லூசே எழுதுகிறார்- “இது நிறைய ‘இந்து முஸ்லிம்களும் இந்து கிறிஸ்தவர்களும்’ உருவாக வேண்டும் என்கிற அத்வானியின் ஆசையை குருஜியின் வார்த்தைகள் நினைவு படுத்தின. குஜராத்தின் நரேந்திர மோடியோடு நான்கண்ட பேட்டியையும் அவை நினைவுபடுத்தின.” அஹா! ஆன்மிகக் குருவின் வார்த்தைகள் இந்துத்துவா அரசியல் தலைவர்களை நினைவு படுத்தின என்றால் என்ன பொருத்தம் இப் பொருத்தம்!.

எனினும் இது உச்சம் அல்ல. அது அடுத்து வருகிறது. நூலாசிரியர் லூசே முத்தாய்ப்பாக நடந்த அந்த நிகழ்வைக் கூறுகிறார். “சில வாரங்களுக்குப் பிறகு நூலாசிரியர் லூசேக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தேசியச் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவிடமிருந்து வந்தது. மாதவ் கூறினார் - ‘ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பற்றிப் பேசவே கூப்பிட்டேன். அவரோடு பேசிக் கொண்டிருந்த போது ஃபைனான்சியல் டைம்சில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரை திருப்தியாக இல்லை என்று அவர் என்னிடம் கூறினார். அரசியல் மற்றும் சங்கராச்சாரியார் பற்றி அவர் கூறிய கருத்துக்களை மட்டுமே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். சகிப்புத் தன்மை மற்றும் ஆன்மிகம் பற்றிய அவரது கருத்துக்களை நீங்கள் குறிப்பிடு வீர்கள் என்று அவர் நம்பியிருந்ததாக அவர் கூறினார்’. உண்மைதான், இந்த விஷயங்கள் பற்றிய குருஜியின் கருத்துக்களைக் குறிப்பிட எனது கட்டுரையில் இடம் இல்லாமல் போயிருந்தது. ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்தப் புகாரைச் சொல்ல அவர் இதர அமைப்புகளை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ்.சைத் தேர்ந்தெடுத்தது!”

தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி சொல்லித் தருகிற ஓர் ஆன்மிகக் குரு என்று ரவி சங்கரை நம்பிக் கொண்டிருக்கிறோம். அவரோ ஆர்.எஸ்.எஸ்.சின் கோட்பாடுகளை எதிரொலிக்கிறார். அயோத்தி விவகாரத்தில் என்பது மட்டு மல்லாது, அந்த அமைப்பின் தலைவர்களோடு நெருங்கிய உறவு கொண்டிருக்கிறார். எந்த அளவுக்கு என்றால் இவருக்காக அவர்கள் பத்திரிகையாளர்களோடு பேசுகிற அளவுக்கு அல்லது மறைமுகமாக மிரட்டுகிற அளவுக்கு! “ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு யோகி தாராள சித்தம் கொண்டவர் எனும் பிம்பம் இருக்கிறது. ஆனால் அதிகம் அறியப்படாத விஷயம் என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ்.சோடு குருஜிக்கு உள்ள நெருங்கிய தொடர்பு மற்றும் பொது மேடைகளில் வி.எச்.பி தலைவர்களோடு அவர் இடம் பெறுவது.”

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரா? ஆர்.எஸ்.எஸ் ரவிசங்கரா?- என்பதுதான் இவற்றிலிருந்து எழுப்பப்பட வேண்டிய கேள்வி. யோகா-மூச்சுப் பயிற்சி என்பது இந்தியர்கள் வளர்த்த ஒரு நல்ல உடல்கலை. ஆனால், அதைச் சொல்லிக் கொண்டு சில குருமார் களை ஆர்.எஸ்..எஸ் உருவாக்கி உலாவவிடக் கூடும். அவர்களை அடையாளங்கண்டு மக்களுக்குச் சொல்லுகிற வேலையும் முற்போக்காளர்களுக்கு உண்டு.

நன்றி : அருணன். நன்றி: கீற்று.