சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பிய டொரோண்டோ திரைப்பட விழா தற்பொழுது இஸ்ரேல் பாலஸ்தீனிய பிரச்னையை மறுபடியும் முன்னுக்கு வைக்கின்றது.
கடந்த செப்டம்பர் 26 ல் தொடங்கிய டொரோண்டோ திரைப்பட விழா, "குழந்தைப் பருவத்திலிருந்து அகதிகளாக வாழும் அவலம்" உட்பட பாலஸ்தீனின் அடையாளங்களை கேமரா ஊடே பல கோணங்களில் ஆராயும் என்று நம்பப்படுகின்றது.
இந்த திரைப்பட விழா ஏழு நாட்களில் 34 திரைப்படங்களை டோரோண்டோவின் பல பகுதிகளில் திரையிட உள்ளது.
இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கும் பல படங்கள் பாலஸ்தீனிற்கு எதிராக இஸ்ரேலின் கொள்கைகளை குறித்து விமர்சிப்பதாக இருக்கும் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த திரைப்பட விழாவின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான டானியா மஜித் கூறுகையில், "இந்த திரைப்பட விழாவை டொரோண்டோ பார்வையாளர்களை பாலஸ்தீன் மற்றும் பாலஸ்தீனின் நிதர்சனங்களுடன் இணைக்கும் வழி" என்று கூறினார்.
"இந்த திரைப்பட விழா, தங்களுடைய கருத்துகளை படமாக்க தடைபோடப்பட்டு சிரமப்படும் பாலஸ்தீனிய திரைப்பட தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி, அவர்களது படைப்புகளை உலக்கு வெளிக்கொணரும் அமைப்பு" என்றும் கூறினார்.
இந்த விழா அமரீகா என்ற கனடிய திரைப்படத்துடன் ஆரம்பமாக உள்ளது. இந்த திரைப்படம், மேற்குக் கரையிலிருந்து இல்லிநோயிசிர்க்கு இடம்பெயர்ந்த கணவனை இழந்த ஒரு பெண் மற்று அவளின் மகனை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.
பாலஸ்தீனிய அமெரிக்க தயாரிப்பாளரான Cherien Dabis கூறுகையில், "இந்த திரைப்பட விழாவில் என்னுடைய ஈடுபாடு, ஹாலிவுட் மற்றும் அமெரிக்க பத்திரிகைகள் அரபியர்களை குறித்து மக்களிடம் காலம் காலமாக பிரச்சாரம் செய்துவரும் கருத்துக்களுக்கு பதில் கொடுப்பதற்காகவே" என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "பாலஸ்தீனிய படங்களை ஆதரிக்கும் விழாக்கள் மிகவும் அற்புதமாக உள்ளன. மேலும் அவை அரபியர்கள் மற்றும் உலக மக்களிடம் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தும்" என்று கூறினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மேலும் கூறுகையில், "கனடாவில், பாலஸ்தீன கலாச்சார கல்வி நிறுவனம் ஒன்று அமைப்பதற்காக முயற்சி எடுத்து வருவதாக கூறினார்.
மேலும் அந்த திரைப்பட விழாவில் பாலஸ்தீனிய கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதமாக பாலஸ்தீனிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. பெத்தேலேகேமிலிருந்து டொரோண்டோ இஸாம் அல் கைசி அராபிய உணவு விடுதி வைத்திருப்பவர், இவர் உணவு விடுதி அராபிய உணவு வகைகளை இந்த விழாவில் தயாரித்து வழங்கியது.
ரீனா கட்ஸ் என்ற கனடிய திரைப்பட கலைஞர் Jewels in the Machine: New Media Works என்ற தலைப்பில் பாலஸ்தீன் உட்பட உலகளாவிய அளவிலுள்ள வேலைப்பாடுகளை குறித்து படமாக்கியுள்ளார். இவர் கூறுகையில், "யூத மற்றும் பாலஸ்தீனிய மக்களிடையே ஏற்ற இறக்கங்கள் வெகுவாக இருக்கிறது, பாலஸ்தீனியர்களை விட யூத மக்களின் குரல்களே ஓங்கி ஒலிக்கின்றன" என்று கூறினார்.
Elle Flanders இயக்கிய Road Movie, என்ற திரைப்படம் இன ஒதுக்கீடு செய்யப்பட்ட சாலைகள் என்ற கருத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் பாலஸ்தீனில் சில சாலைகளில் யூதர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளன.
டொரோண்டோ திரைப்பட விழாவை தொடர்ந்து London, Sydney மற்றும் Houston நகரங்களில் நடக்க இருக்கும் திரைப்பட விழாவில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்கப்படுகின்றது.
இது போன்ற திரைப்பட விழாக்கள் பாலஸ்தீனியர்களை தீவிரவாதிகளாக மட்டும் சித்தரிக்கும் செயலுக்கு ஒரு முடிவு ஏற்படும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியின் இயக்குனர் ரபேப் ஜியாதாஹ் கூறுகையில் "பாலஸ்தீனிய வரலாற்றை பாதுகாத்து வளரும் இளைய சமுதாயத்திற்கு தெரியப்படுத்துவது மிக அவசியமானது" என்று கூறினார்.
இந்த திரைப்பட விழா செப்டம்பர் 26 ல் இருந்து அக்டோபர் 2 வரை நடக்க இருக்கிறது. இந்த திரைப்பட விழா குறித்து தகவலறிய www.tpff.ca பார்க்கவும்.
நன்றி
அல் ஜசீரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக