நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இன்று வினாயகர் ஊரவலம் நடத்தியவர்கள் காந்தல் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் முதல் தொடங்கி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். ஊட்டி லோவர் பஜார் பள்ளிவாசல் அருகில் வரும் போது சிலைகளை பள்ளிவாசல் முன்பு வைத்து விட்டு ஊர்வலத்தில் வந்தவர்கள் ரகளை யில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது காவல்துறையினர் அவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்துள்ளார்கள். சிதறி ஒடிய ஊர்வலத்தினர் அருகில் உள்ள மார்கெட் பகுதி மீது கல்லெறிந்து விட்டுச் சென்றுள்ளார்கள். இவ்வாறு ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத ஊட்டி காவல்துறையினர் மார்க்கெட் பகுதிக்குள் புகுந்து அங்கிருந் தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஒரு 70 வயது முதியவரும் தாக்கப்படுவதை கண்டு அந்த இடத்திற்கு வந்த தமுமுக மாவட்டத் தலைவர் அப்துல் ஸமது காவல் துணை கண்காணிப்பாளரிடம் அப்பாவிகளை தாக்கும் உங்கள் நடவடிக்கை நியாயமா என்று கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அவரும் காவல்துறையினரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். அவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதே போல் அங்கு வந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஷேக்கும் பலமாக தாக்கப் பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வினாயகர் ஊர்வலத்தில் சென்றவர்கள் ரகளையில் ஈடுபட அதற்கு எவ்வகையிலும் தொடர் பில்லாதவர்கள் மீது காரணமின்றி ஊட்டி காவல்துறையினர் அராஜகத்தை கட்ட விழ்த்து விட்டுள்ளனர். இந்த அராஜகத் திற்கு காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை உடனடி யாக எடுக்கவும், காயமடைந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கு மாறு தமிழக அரசை கோருகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக