சனி, 26 செப்டம்பர், 2009

ஓரின சேர்க்கை: முஸ்லிம்பெண்கள் மாநாட்டில் எதிர்ப்பு

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் த.மு.மு.க., மகளிர் அணி சார்பில் மாநாடு நடந்தது. இதில் காயல்பட்டணம் பெண்கள் அரபிக்கல்லூரி முதல்வர் ஷபானா ஆலிமா, 'ஸகாபா பெண்கள் கற்றுத்தந்த பாடம்' என்ற தலைப்பிலும், அஜ்ஹரா ஆலிமா 'நமது பெண்களும் நவீன கலாச்சாரமும்' என்ற தலைப்பிலும், பாத்திமா சோபியா 'இறையச்சம்' என்ற தலைப்பிலும் பேசினர்.

பெண்கள் திருமணம் செய்துகொள்வதற்கு வரதட்சணை பெரும் தடையாக உள்ளது. எனவே வரதட்சணைக்கு எதிராக மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனிதகுலத்திற்கு எதிரான ஓரின சேர்க்கைக்கு மத்திய அரசு அங்கீகாரம் தர முயற்சிப்பதற்கு பெண்கள் மாநாடு கண்டனம் தெரிவித்ததோடு ஓரின சேர்க்கைக்கு தடை செய்யும் 377வது சட்டப்பிரிவை நிரந்தரமாக அமல்படுத்த மாநாடு வலியுறுத்தியது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவும், பொருளாதார சீரழிவை தடுக்க வட்டியில்லாத பாங்க் முறையை அமல்படுத்தவும் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை: