காஷ்மீர், ஷோபியான்:
ராணுவத்தினரால் கற்பழித்து கொல்லப்பட்ட நிலோஃபர் மற்றும் ஆயிஷாவின் உடல்கள் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டன.
சோதனைக்காக புதிய மாதிரிகள் எடுக்கப்பட்டன. டெல்லியின் All India Institute of Medical Sciences மற்றும் Central Forensic Lab ஐ சேர்ந்த மருத்துவக் குழுக்கள் ஷோபியானில் இந்த சோதனைக்காக வரவழைக்கப் பட்டுள்ளனர். ஷோபியான் பகுதியில் உள்ள மருத்துவர்கள் யாரும் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்படவில்லை.
இவர்கள் முந்தைய சோதனையின் போது போலியான மாதிரிகளை சமர்பித்தமையால் அப்பகுதியின் மருத்துவர்களை இந்த முறை தவிர்த்துள்ளது C.B.I.
C.B.I. இந்த வழக்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து ஏறத்தாழ ஒரு வாரம் ஆகிறது.
ஆயிஷா மற்றும் நிலோஃபரின் உடல்களை அவர்கள் கொலை செய்யப்பட்டு நான்கு மாதங்கள் ஆனதற்கு பின்பு C.B.I விசாரணைக்காக தோண்டி எடுத்திருக்கின்றது.
கொல்லப்பட்டவர்களின் சோதனை மாதிரிகளை தயார் செய்த மருத்துவரை C.B.I. விசாரித்தபோது அவர் இதற்கு முன்பு புல்வாமா மாநிலத்தை சேர்ந்த Gynaecology பிரிவில் பயன் படுத்தப்பட்ட கை உறைகளிலிருந்து மாதிரிகளை சேகரித்ததாக ஒப்புக்கொண்டார்.
C.B.I. இந்த வழக்கை தன் கையில் எடுத்துக்கொண்டதை அடுத்து உண்மை வெளிவரும் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நம்புகின்றனர்.
பாதிக்கப்பட்டவரின் கணவரான ஷகீல் அஹ்மத் கூறுகையில், "நான் இது வரை விசாரணைக்காக வந்த எல்லோருக்கும் என்னுடைய முழு ஒத்துழைப்பை கொடுத்துள்ளேன். நான், C.B.I. இடம் நானும் என்னுடைய குடும்பத்தாரும் இந்த வழக்கு விசாரணையில் முழு ஒத்துழைப்பு தருவோம் என்றும் கூறியிருக்கின்றேன்" என்று கூறினார்.
சோதனைக்காக தற்பொழுது உடல்களை தோண்டி எடுப்பதின் மூலம் பல உண்மைகள் வெளி வரும் என்று நம்பப்படுகின்றது.
நன்றி
NDTV
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக