ஐயம்ஹலால் என்னும் பெயரில் அந்த தேடியந்திரம் அறிமுகமாகியுள்ளது.
இண்டெர்நெட்டில் நல்ல தகவல்களோடு ஆபாடசமான சங்கதிகளும் உள்ளன. உண்மையான இஸ்லாமியர்கள் இதனை விரும்பமாட்டார்கள்.அதற்காக இண்டெர்நெட்டை பயன்படுத்தமலும் இருக்க முடியது.என்ன கவனத்தோடு பயன்படுத்த வேண்டும்.
எத்தனை தான் கவனமாக இருந்தாலும் சமயங்களில் வேண்டாத தகவல்களும் ஆபாசமான படங்களும் எட்டிப்பார்த்து சங்கடத்தை தருவதுண்டு.
இந்த சங்கடத்தை தவிர்த்து நல்லவிதமான தகவல்களை மட்டுமே தருவது தான் ஐயம்ஹலால் தேடியந்திரத்தின் நோக்கம்.இஸ்லாமியர்கள் தவறு என்று கருதக்கூடிய பதங்களை தவிர்த்து விட்டு தேடல் முடிவுகளை இது படியலிட்டு தருவதாக கூறுகிறது.
எனவே இஸ்லாமியர்கள் இதில் சங்கடமில்லாமல் தேடலாம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக