போரில் முதன்முதலில் ஏவுகணையை பயன்படுத்தியது இந்தியாவின் திப்பு சுல்தான்தான்
திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை முன்னேற்றம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில், பிரம்மாஸ் ஏவுகணை திட்ட நிர்வாக இயக்குனர் சிவதாணுப்பிள்ளை பேசியது:
"போரில் முதன்முதலில் ஏவுகணையை பயன்படுத்தியது இந்தியாவின் திப்பு சுல்தான்தான். மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த போரில் அவர் ஏவுகணையை பயன்படுத்தினார். உலக ஏவுகணை தொழில்நுட்பத்தின் முன்னோடியும் அவர்தான். அதிநவீன சூப்பர் சானிக் ஏவுகணையான பிரம்மாஸ் இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. நிலம் மற்றும் கடலில் இருந்தும் ஏவும் பிரம்மாஸ் ஏவுகணை தயாரிப்பு நிறைவு பெற்றுள்ளது. 2012ம் ஆண்டுக்குள் பிரம்மாஸ் ஏவுகணை தயாரிப்பு பணி நிறைவு பெறும்". இவ்வாறு சிவதாணுப்பிள்ளை கூறினார்.
பின்னர் மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், ‘‘சந்திரயான் செயற்கைகோள் பழுதடைந்து விட்டது என்று கவலைப்படத் தேவையில்லை. இவ்வளவு நாள் வந்ததே பெரிய வெற்றிதான். சந்திரனை ஆய்வு செய்யும் நமது முயற்சிக்கு உரிய பலன் கிடைத்துள்ளது. அதை ஏவியதன் நோக்கம் நிறைவேறிவிட்டது. எனவே சந்திரயான் திட்டம் தோல்வியில்லை. நானோ தொழில் நுட்பம் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களை தீர்க்கும் வாய்ப்பும் உள்ளது’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக