கடந்த திங்கட்கிழமை (29.11.2010) காஸாவின் வடக்குப் பிராந்தியம் முழுவதிலும் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்படை தேடுதல் என்ற பெயரில் பெரும் அட்டகாசம் புரிந்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இரண்டு புல்டோஸர்கள், நான்கு இராணுவ வாகனங்கள் சூழ பலஸ்தீன் கிராமங்களுக்குள் நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்படையினர் மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீன் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தேடுதல் வேட்டையைத் தொடர்ந்ததாகவும், நான்கு பலஸ்தீனர்களை சுற்றிவளைத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..
இதற்கிடையில் 'இஸ்ரேலுக்கெதிரான தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலஸ்தீனர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் வானொலி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், கைதுசெய்யப்பட்டவர்களைப் பற்றிய முழுவிபரங்களோ, அவர்கள் கைது செய்யப்பட்ட இடங்களைப் பற்றியோ அச்செய்தியில் குறிப்பிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக