
மகாவீரர் ஜெயந்தி அன்று இறச்சிக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெயின் சமூகத்தினரின் பர்வா பண்டிகைக்காக 8 தினங்கள் இறச்சிக் கடைகளை மூட அரசுக்கு அந்த சமூகத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் இதுத்தொடர்பாக தமிழ்நாடு ஜெயின் மகா மண்டல் சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்துதான் அன்வர் பாஷா எதிர் மனுவை தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகளான எலிபே தர்மாராவ், அரி பரந்தாமன் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச், ஜெயின் சமூகத்தினரின் பண்டிகைக்காக இறச்சிக் கடைகளை 8 தினங்கள் மூடும்படி உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக