ஞாயிறு, 5 டிசம்பர், 2010

மகாத்மா காந்தி & டாக்டர் அம்பேத்கர் & பெரியார் : ஒரு பார்வை.


காந்தி கொல்லப்பட்டபோது பெரியார், இந்தியாவிற்கு ‘காந்திதேசம்’ என்று பெயர் வைக்கச் சொன்னார். காரணம், காந்தி மேல் கொண்ட அன்பினால் அல்ல. காந்தியை கொன்ற பார்ப்பன இந்து மதவெறியர்கள், காந்தியை தங்களுக்கு எதிராக கருதி கொன்றார்கள் என்பதால். காந்தி கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள்வரை, காந்தியை கடுமையாக எதிர்த்த பெரியார் தான் காந்தி தேசம் என்று பெயர் வைக்கச் சொன்னார்..
காந்தி கொலைக்கு முன்னும் பின்னும் கூட காந்தியை பெரியார் ஆதரிக்கவில்லை என்பது மட்டுல்ல, கடுமையாக எதிர்க்கவும் செய்தார். 1956 ல் ‘காந்தி சிலைகள் இருப்பது இந்தியாவிற்கு அவமானம்’ என்று அறிவித்தார். காங்கிரசின் காமராஜர் ஆட்சியின்போதுதான் ‘காந்திப்பட எரிப்பு’ போராட்டத்தை அறிவித்தார்தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தி செய்த சதிக்கு, காந்தி கொலை செய்யப்பட்டிருந்தாலோ, மாவீரன் பகத்சிங்கிற்கு செய்த துரோகத்திற்கு பகத்சிங்கின் தோழர்கள் காந்தியை கொலை செய்திருந்தாலோ பெரியார் அவர்களை கண்டித்திருக்க மாட்டார். அந்தக் கொலையை ஆதரித்துதான் இருப்பார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, ரெட்டை வாக்குரிமையைகேட்டு அண்ணல் அம்பேத்கர், லண்டனில் வட்டமேசை மாநாட்டில் கடுமையாக காந்தியோடு மோதினார். அம்பேத்கரை வாதத்தால் வெல்லமுடியாத காந்தி, ‘எங்க ஊருக்கு வா உன்ன கவனிச்சிக்குறேன்’ என்று இந்தியாவிற்கு வந்து சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.நாட்டையே, பதட்டமாக மாற்றிவிடுகிறார் காந்தி. ‘அய்யோ காந்தி செத்துவிடுவாரோ’ என்று எல்லாத் தலைவர்களும் கவலை கொள்கிறார்கள்? அவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று பதட்டப்படுகிறார்கள்.ஆனால், ஒரேஒரு தலைவர் மட்டும்தான், அம்பேத்கருக்கு தந்தி கொடுக்கிறார், கோடிகணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையைவிடவும், ஒரு தனிநபரின் உயிர் முக்கியமல்ல. அதனால் உங்கள் நிலையில் இருந்து இறங்கி வராதீர்கள்’ என்று. அப்படி தந்திகொடுத்த ஒரே தலைவர் பெரியார்.

2 கருத்துகள்:

Truthfinder சொன்னது…

பெரியார்=இரட்டை முகம்

PUTHIYATHENRAL சொன்னது…

please go to vist www.sinthikkavum.blogspot.com you have lot of news over there.