மும்பையைச் சார்ந்த அர்மான் ஜாபர் என்ற சிறுவன் 498 ரன்கள் குவித்து பள்ளி கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். இவர் மும்பை ரஞ்சிக்குழுவின் கேப்டனும் இந்தியாவுக்காக முன்னர் விளையாடியவருமான வாஸிம் ஜாபரின் சொந்தக்காரர் அவர். பாந்த்ராவைச் சார்ந்த ரிஸ்வி ஸ்பிரிங்பீல்ட் மற்றும் தாதரைச் சார்ந்த ராஜா சிவாஜி பள்ளிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் இச்சாதனையை அர்மான் ஜாபர் படைத்துள்ளார். பாந்த்ரா பள்ளிக்கூடத்தைச் சார்ந்த இவர் 490 பந்துகளில் 498 ரன்கள் விளாசியுள்ளார். 500 ரன்களுக்கு 2 ரன்கள் குறைவான நிலையில் ஆட்டமிழந்துவிட்டார். இதற்கு முன்னர் நாக்பூரைச் சார்ந்த அலி சொரைன்கான் எடுத்த 461 ரன்களே சாதனையாக இருந்தது. சாதனை படைத்த அர்மான், சச்சின் டெண்டுல்கர்தான் தனது முன்மாதிரி என தெரிவித்தார். சச்சின் டெண்டுல்கரும் பள்ளி கிரிக்கெட்டில் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து 664 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். அர்மானின் தந்தை தெருக்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வேலை செய்கிறார். இந்தியாவுக்கு மற்றொரு டெண்டுல்கராக அர்மான் உருவாக வாழ்த்துவோம்...
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
வியாழன், 23 டிசம்பர், 2010
சாதனை படைத்த அர்மான் ஜாபர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக