(நேரம் for கருத்துப் பரிமாற்றம், கருத்து ஒன்றுக்கு நாம் எடுத்திருந்த தலைப்பு)
இன்றைய மீடியாக்களை ஒரு வரியில் சொல்லுதென்றால், ’கருப்பை வெள்ளையாகவும் வெள்ளையை கருப்பாகவும் சித்தரிக்கும் ஒரு ஊடகம்’
கால் பந்து வீரர்களுக்கிடையில் சிக்குண்டு அங்கும் இங்கும் அடித்து உதைக்கப்படும் பந்துக்குச் சமமானவர்களாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
ஒரு முஸ்லிம் அல்லது முஸ்லிம் பெயர் தாங்கி உண்மையை வாய் திறந்து பேசினால் அவனுக்கு உலக மீடியாக்கள் சூட்டும் பெயர் தீவிரவாதி.
உலக மீடியாக்களுக்கு இருக்கும் முக்கிய பணிகளில் ஒன்று உலக முஸ்லிம்களை தீவிர வாதிகளாக, சமூக விரோதிகளாக, பிரச்சினைகளின் ஆணி வேருகளாக சித்திரிப்பதாகும்.
அதே போல் மீடியாக்களை கையில் வைத்திருக்கும் சில முஸ்லிம் அமைப்புக்களுக்கு இருக்கும் முக்கிய பணி, தனது சமூகத்தைச் சார்ந்த பிற இயக்கங்களின் குறைகளை தூற்றி அல்லது அவர்களை குற்றவாளிகளாக வசைபாடி உலக மேடையில் நிறந்தீட்டி விடுவதேயாகும்.
இதுவே உலக மீடியாக்களுக்கும் முஸ்லிம் மீடியாக்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசமாகும்.
முன்னால் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் தனது நாட்டையும் மக்களையும் பாதுகாக்க ஆயும் ஏந்திய போது அவருக்குப் பெயர் முஸ்லிம் தீவிரவாதி,
சும்மா கிடந்த சதாம் ஹுசைனை உசுப்பிவிட்டு சொத்துக்களை பறித்து, உயிர்களை சூரயாடிய அமெரிக்காவுக்கு பெயர் சமாதான நீதிபதி.
முஸ்லிம்கள் அமைதியாக வாழும் பலஸ்தீன் பூமி துண்டாக்கப்படும் போது அதை தட்டிக்கேட்டு சிறு கற்களை ஆயுதமாக எடுத்த போது அவர்களுக்கு உலக மீடியாக்கள் சூட்டிய பெயர் முஸ்லிம் தீவிரவாதிகள்.
அதே பலஸ்தீன பூமியில் சண்டித்தனத்துடன் புகுந்து, நரி நாட்டியம் போட்டுக்கொண்டு நவீன ஆயுதம் ஏந்தி, இறத்த ஆற்றை ஓட்டும் யூதர்களுக்குப் பெயர் சுதந்திர போராளிகள்.
இவர்களைத்தான் அல் குர்ஆன் இப்படி சொல்லுகிறது;
’நீங்கள் பூமியில் குழப்பம் விளைவிக்க வேண்டாம்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் ’நாம் தாம் சீர்திருத்தம் செய்பவர்கள்’ என்று அவர்கள் கூறுவார்கள். (அல் குர்ஆன் 02 : 11)
உலகில் முஸ்லிம்கள் ஆயுத முனையில் பாதிக்கப்படுவதை விட மீடியாக்களினால் பாதிக்கப்படும் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனை பல இஸ்லாமிய நாடுகள், முஸ்லிம் அமைப்புக்கள் தெளீவாகப் புரிந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.
மாற்றங்கள் தேவை சார்பாக உலக முஸ்லிம்களுக்குச் சொல்வது.......
ஆடம்பர வாழ்க்கை, அதிக வீண்விரயம் என்று நாட்களை கடத்தும் தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் தனது சமூகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
இன்று பாடசாலை மாணவர்கள் முதல் FAfaffபல் விழுந்த கிழவன் வரை பயன்படுத்தும் Facebook, gmail, yahoo, hotmail, tweeter, skype போன்ற அனைத்தும் நமக்குக் கிடைத்த இலவச ஊடகமே என்பதை கவனத்தில் கொண்டு அவைகளை பயன்படுத்தி எமது சமூகத்திற்குக் தேவையான செய்திகளை வழங்க முன்வர வேண்டும்.
ஆனால் (Facebook, gmail, yahoo, hotmail, tweeter, Skype) இவைகள் மூலம் சினிமாத்துறையை இலவசமாக விளம்பரப்படுத்துவதற்கும் தேவையற்ற ஆபாசங்களை அறிமுகப்படுத்துவதற்காகவும் பயன்படுத்துவதை பரவலாக பார்க்க முடிகிறது.
இந்த நிலை மாற்றப்படுவது எமது சமூகம் மீடியாவுக்கு செய்கின்ற மிக முக்கிய பணியாகும்.
வெள்ளி மேடைகள் முழுதும் இதை தலைப்பாகப் பேசி மக்கள் கருத்துக்களை பெற்று அதிதீவிர நடவடிக்கைகளை எடுக்க கூட்டாக முன்வர வேண்டும்.
ஆங்காங்கே போராட்டங்கள் என்ற பெயரில் பல லட்ச மக்களை ஒருகிணைக்கும் அமைப்புக்கள் அதே பொதுமக்களிடமிருந்து பல லட்சம் ரூபாக்களை சேகரித்து ஒரே இரவில் எமக்குத் தேவையான மீடியாக்களை உருவாக்க வேண்டும்.
இஸ்லாமிய பிரச்சார நோக்கங்களை முன்னெடுக்கும் அமைப்புக்கள், குழுக்கள் நவீன மீடியாக்களை சிறந்த முறையில் கையாளும் பயன்படுத்தும் நிலைக்கு பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
சமூக சேவை நிருவனங்கள் தங்கள் செயற்திட்டங்களில் மீடியக்களின் பங்களிப்பை செலுத்துவதுடன் அதற்காக செலவிடுவதற்கும் ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும்.
கல்லூரிகள், பாடசாலைகளில் மீடியாக்களின் நிலை, இஸ்லாத்த்ற்கும் முஸ்லீம்களுக்கும் மீடியாவின் அவசியம், இன்றைய மீடியாக்களின் போக்கு குறித்து கருத்தறங்குகள், வகுப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.
மேற்கத்திய நாடுகளில் உள்ள பல்கலைக்கலகங்களில் ஒவ்வொரு பீடங்களிலும் ஒவ்வொரு வருடங்களிலும் சமூக பிரச்சினைகளை தலைப்பாகக் கொண்டு பல ஆயுவுகள் கருத்துக் கணிப்பீடுகள் நடாத்தப்படுகின்றன,
அதனால் பல விஞ்ஞான, சமூகவியல் கருத்துக்களை மக்கள் மன்றங்களில் முன்வைக்கிறார்கள், ஆனால் இஸ்லாமிய அல்லது முஸ்லிம் பல்கலைக் கலகங்களில் இவ்வாறன செயற்பாடுகள் மிகவும் குறைவாகவே பின்பற்றப்படுகின்றன.
அண்மையில் ஒரு பல்கலைக்கலகம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு; ’ஒரு மனைவி எந்த வகையான முத்தத்தை தனது கனவரிடத்தில் எதிர்பார்க்கிறால்.?’
இதற்கான பல புதிய ஜோடுகளை சந்தித்து கள ஆய்வுகளை மேற்கொண்டு தங்கள் ஆய்வை சமர்பித்தார்கள்.
ஆனால் எமது பல்கலைக்கலக மாணவர்கள் கடைசி வகுப்பில் சமர்பிக்க வேண்டிய ஆய்வுக்கு முன்னைய வருட மாணவன் செய்த ஆய்வை பார்த்து எப்படியாவது கொப்பியடித்து சமர்பிப்பது, வெளிவருவது என்று தொடர்கிறது ஆய்வு தொடர்பான கதை.
இந்த நிலை மாறி சமூகத்திற்குத் தேவையான அன்றாடம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டு ஆய்வுப் பொருளாக நினைத்து சமூகத்திற்கு பயனளிக்கும் நடவடிக்கைகளை கொடுக்க முன்வர வேண்டும். அநத ஆய்வுகளில் முஸ்லிம் மீடியாக்கள் பற்றிய தலைப்புக்கள் முதன்மையானதாக கவனத்தில் கொள்ள பட வேண்டும்.
முஸ்லிம் நாடுகளில் இருக்கும், இயங்கும் மீடியாக்கள் சர்வதேச மொழிகளில் சமூகத்திற்குத் தேவையான செய்திகளை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உலக நாடுகளில் முஸ்லிம்களின் சொத்துக்கள், உடமைகள், உரிமைகள் சேதப்படுத்தப்படும் போது அதன் யதார்த்த நிலையை உலக மக்கள் பார்வைக்குக் கொண்டுவருவதில் பாகுபாடு காட்டாது இருக்க வேண்டும்.
ஏகாதிபத்திய சார்பு கொள்கையை பின்பற்ற நினைக்கும் முஸ்லிம் நாடுகள் தம் மக்களையே காட்டிக்கொடுக்கும் நிலைக்கு வந்துவிடக் கூடாது.
கடைசியாக....
இதெல்லாம் புதிதல்ல, நாங்கள் இதெல்லாம் செய்கிறோம் என்று சொல்லுகிறவர்கள் தங்கள் முயற்சியின் விளைவு, பயன் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
அப்போது தான் நாம் உலகில் தலை நிமிர்ந்து வாழும் சிறந்த சமூகமாக உருவெடுக்க முடியும்.
’நேரம் for கருத்துப் பரிமாற்றம் ’ என்ற நிகழ்ச்சியில் மீடியாக்களும் முஸ்லிம் உலகமும் என்ற தலைப்புக்கு எம்முடன் இணைந்து கொண்டு பல சகோதர சகோதரிகள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்திருந்தனர்.
அவைகளில் நாம் பார்த்த சில முக்கிய கருத்துக்களை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.
Azeez Ahmed M said...
//ஊடகங்களில் முஸ்லிம் சமுதாயமும், இஸ்லாமும் குறிவைத்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது...............//
Tariq said...
//we need Muslim medias, //
மதுரை ராஜா said...
//முஸ்லிம்களுக்கு தனி ஊடகங்கள் தேவைதான்.//
அன்ஸார்(இலங்கை) தோஹா said...
//இன்றைய மீடியாக்களின் தாக்கம், அணு ஆயுதங்களினால் ஏற்படும் தாக்கங்களை விட பேராபத்தாகவுள்ளது.//
//சமூக வளர்ச்சியில் இதன் பங்கு கால் வாசி என்றால், சமூக வீழ்ச்சிக்கு இதன் பங்கு முக்கால் வாசி எனலாம். //
//வசைகளுக்கு (விலங்கிடுவது அல்லது) ஒரு முடிவு கட்டுவது மலையை உடைப்பதைப் போன்று ஒன்றும் பெறிய காரியமல்ல. முஸ்லீம்களிடம் சர்வதேச அளவில் இல்லாவிட்டாலும் ஒரு குறுகிய மட்டத்திலாவது மீடியாக்கள் அமையப் பெறுவது இன்றைய காலத்தின் கட்டாயமாவுள்ளது.//
// எந்த மீடியாவும் முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படுவதில் விதிவிலக்கில்லாமல் இருக்கின்ற இந்தத் தருனத்தில் முஸ்லீம்களாகிய நாம் எமது கடப்பாடு என்ன? இதர்க்கு எந்த மாதிரியான தீர்வை முன்வைக்கலாம்? சமகாலத்திலுள்ள தனவந்த முஸ்லீம்கள் இதற்காக களம் அமைத்துக் கொடுப்பதில் அவாகளின் பங்கு எத்தகையது? இருக்கின்ற விரல் விட்டு எண்ணக் கூடிய மீடியாக்களையாவது தக்க வைத்துக் கொள்ள எந்த மாதிரியான திட்டங்களை-நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? இதனால் முஸ்லீமகளுக்கு என்ன (சாதக-பாதக) விளைவுகள் இருக்கிறது? என்பது போன்ற தெளிவுகளை, உலமா சபைகளும், முஸ்லீம் இயக்கங்களும், பாடசாலை ஆசிரியர்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும், மக்கள் மன்றத்தில் (பொதுக் கூட்டங்களில் அல்லது அவரவர் சார்ந்த துரைகளிலிருப்பவர்களுக்கு) விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, இன்றைய இதர பணிகளை விட, இது மிக மிக மிக இன்றியமையாத ஒன்றாகும் என்பது எனது கருத்து மற்றுமல்லாது அவாவும் கூட,
அல்லாஹ் திருக் குர்ஆனில் கூறுகிறான்:
அல்லாஹ் திருக் குர்ஆனில் கூறுகிறான்:
“அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது“ (அல் அன்பால்-60) //
abdrahuman said...
//சமுதாயத்துக்கு உபயோகமான ஒரு தலைப்பில் கருத்துப்பரிமாற்றத்தைத் துவக்கியுள்ளார் //
லறீனா அப்துல் ஹக் said...
//காலத்துக்கு மிகத் தேவையானதும்கூட. //
Anonymous said...
//ஊடகங்களில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள், இஸ்லாம் எவ்வாறெல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றது என்பதைச் சொல்லிமாளாது.
பிறைநதிபுரத்தான் said...
//இந்த தலைப்பு நம்முடைய புரிதலைத்தாண்டி - மிக விரிவானதாக (உலக மீடியாக்களை) இருக்கிறது ஏனென்றால், முஸ்லிம்கள் பற்றிய தமிழக - இந்திய மீடியாக்களின் பார்வைகளே இன்னும் முறையாக-முழுமையாக அலசப்படவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.//
Anonymous said...
//இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்களை உடனுக்குடன் கேள்வி கேற்க முற்பட வேண்டும்//
Anonymous said...
//we should create muslim medias.We have to provide exectly correct news,islamic lactures.also,//
காதர் மீரான்-(இந்தியா) தோஹா கத்தார் said...
//பொய்யர்களெல்லாம் பொய்களை உண்மையாக்கும்போது உண்மையாளர்கள் (இஸ்லாமியர்கள்) உறங்குவது ஏனோ? படம், பாடல், சீரியல் என அழுதுகொண்டிருக்கும் இஸ்லாமிய கண்களை மறுமைக்கு சொந்தமாக்க முன் வராதது ஏனோ?
எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லகூடிய மார்க்கத்தை, தீவிரவாத மார்க்கமாகவும், தன் உரிமைக்காக போராடும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் மற்றவர்கள் போராடினால் தியாகிகளாகவும்-போராளிகளாகவும் நம் கண் முன்னே பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், முஸ்லிம் மீடியா இல்லாமல் போனது குறித்து, இப்படித்தான் என் மனம் கேட்கிறது. நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் எதிரிகள் படை திரண்டு வருவது போல் சப்தம் கேட்கிறது. எல்லா மக்களும் வெளியில் வந்து விட்டார்கள். ஆனால் நபியவர்களைக் காணவில்லை. எல்லோரும் சப்தம் வரும் திசையை நோக்கி பார்க்கும் போது, அந்த திசையில் இருந்து நபியவர்கள் வருகிறார்கள்.“பயப்படும் படி ஒன்றுமில்லை“ என்று மக்களுக்கு தகவல் சொல்கிறார்கள். இந்த வீரரை தலைவராக ஏற்று வாழகூடிய நமக்கு ஏன் இந்த வீரம் வரவில்லை?//
எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லகூடிய மார்க்கத்தை, தீவிரவாத மார்க்கமாகவும், தன் உரிமைக்காக போராடும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் மற்றவர்கள் போராடினால் தியாகிகளாகவும்-போராளிகளாகவும் நம் கண் முன்னே பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், முஸ்லிம் மீடியா இல்லாமல் போனது குறித்து, இப்படித்தான் என் மனம் கேட்கிறது. நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் எதிரிகள் படை திரண்டு வருவது போல் சப்தம் கேட்கிறது. எல்லா மக்களும் வெளியில் வந்து விட்டார்கள். ஆனால் நபியவர்களைக் காணவில்லை. எல்லோரும் சப்தம் வரும் திசையை நோக்கி பார்க்கும் போது, அந்த திசையில் இருந்து நபியவர்கள் வருகிறார்கள்.“பயப்படும் படி ஒன்றுமில்லை“ என்று மக்களுக்கு தகவல் சொல்கிறார்கள். இந்த வீரரை தலைவராக ஏற்று வாழகூடிய நமக்கு ஏன் இந்த வீரம் வரவில்லை?//
//மீடியாவை பயன்படுத்தி மக்களை உலகத்திலும், மறுமையிலும் நாசமாக்கக் கூடிய தருணத்தில், இஸ்லாமிய மீடியா கட்டாயம் இருக்க வேண்டிய தருணம் இது. இஸ்லாத்தை மக்களுக்கு எளிதாக எத்திவைக்கவும், இஸ்லாமியர்கள் பாதிக்கபடுவதை உலகறியச் செய்து பாதுகாப்பு பெறவும் இஸ்லாமிய மீடியா இருந்தால் மட்டுமே சாத்தியம். //
//எனவே, இஸ்லாமியர்கள் மத்தியில் தரமான ஊடகங்கள் (தொலைக் காட்சி,வானொலி,மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் எதுவானாலும்)உண்மையை உலகரியச் செய்வதில் யாருக்கும் விலை போகாமல் செயல் படுவதில் தீவிரமாக செயல்படக் கூடிய ஊடகங்கள் அமையப் பெறுவது இன்றைய காலத்தின் கட்டாயத்தை உணர்த்தி நிற்கிறது.//
மாற்றங்கள் வேண்டி எம்மையே நல்லதின் பால் மாற்றுவோம் வாருங்கள்.......!!
நான் விட்டுவிட்டுச் சென்றவைகளையும் தொட்டுவிட்டு சென்ரவைகளையும் நீங்கள் தொடரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக