திங்கள், 31 ஜனவரி, 2011

ராஷித் கன்னோஷி துனீசியாவுக்கு திரும்பினார்

துனீஸ்,ஜன.30:வெளிநாட்டில் வாழ்ந்துவந்த துனீசியாவின் இஸ்லாமிய கட்சியான அல்நஹ்தாவின் தலைவர் ராஷித் அல் கன்னோஷி துனீசியாவுக்கு வருகைத்தந்தார்.

மக்கள் புரட்சியைத் தொடர்ந்து அரசியல் நெருக்கடி நீடித்துவரும் துனீசியாவுக்கு விரைவில் வருவேன் என கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தெரிவித்திருந்தார்.

21 ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்துவரும் கன்னோஷி பிரிட்டனிலிருந்து விமானம் மூலம் துனீஸுக்கு வருகைபுரிந்தார். துனீஸ் சர்வதேச விமானநிலையத்தில் அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்தனர்.

துனீசியாவில் நேர்மையான முறையில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுமானால் அல்நஹ்தா அதில் பங்கேற்கும் என கன்னோஷி தெரிவித்தார். ஆனால், அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை என அவர் தெரிவித்தார்.

துனீசியாவின் முன்னாள் அதிபர் பின் அலி அல்நஹ்தாவை தடைச் செய்திருந்தார். 1989 ஆம் ஆண்டு பின் அலி அல்நஹ்தாவிற்கு எதிரான அடக்கு முறைகளை கட்டவிழ்த்துவிடும் வரை இக்கட்சி துனீசியாவின் பிரதான எதிர்கட்சியாக திகழ்ந்தது.

துனீசியாவில் இடைக்கால அரசு அல்நஹ்தாவின் மீதான தடையை நீக்கியதைத் தொடர்ந்து மிதவாத(moderate) இஸ்லாமிய தலைவர் என அழைக்கப்படும் ராஷித் அல் கன்னோஷி சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

நான் எவ்வித அதிகாரப்பூர்வ பதவியையும் பொறுப்பேற்றுக் கொள்ளமாட்டேன் என கன்னோஷி தெரிவித்துள்ளார். சொந்த நாட்டிற்கு திரும்பிய கன்னோஷி தான் தற்பொழுது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

மாத்யமம்

கருத்துகள் இல்லை: