வியாழன், 27 ஜனவரி, 2011

நாய்களை விட கேவலமா நாம்?


நாடாண்ட முஸ்லிம் சமுதாயம் , தன்னுடைய அதிகாரத்தை இழந்து,
தன்னுடைய சமுதாய வக்பு சொத்துக்களை இழந்து, இன்றைக்கு ஒவ்வொன்றுக்கும் போராடிப்பெற வேண்டிய நிலையில் உள்ளோம்!

அந்த அடிப்படையில் சென்னையில் வேளச்சேரி , மடுவின் கரை ,
தரமணி போன்ற பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்
வாழ்ந்து வருகின்றனர். வாழும் போது எந்த இடமுமின்றி வாடகை வீடுகளில் இருக்கும் இவர்கள் இறந்த பின் தங்களை புதைப்பதற்கு ஒரு இடம் கோரி சுமார் முப்பதாண்டுகளாக போராடியும் , மாநகராட்சியோ , தமிழக அரசோ , எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,

இதற்கிடையில் சமிபத்தில் சென்னையில் நடந்த நாய் கண்காட்சியில்
தன் மகனுடன் கலந்து கொண்ட தி.மு.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அந்நிகழ்ச்சியில் பேசும் போது ' வளர்ப்பு பிராணிகளை மக்கள் தங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளைப்போல் கருதுகிறார்கள் ! ஆகையால் அவற்றை புதைப்பதற்கு இடம் ஒதுக்கி தருமாறு என்னிடம் இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன் கோரிக்கை வைத்தனர். மாநகராட்சி மேயரிடம் பேசி அண்ணா நகர் மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் இடம் ஏற்பாடு செய்துள்ளோம்.என உடனடியாக அறிவித்தார் .
முஸ்லிம்களின் முப்பதாண்டு கபர்ஸ்தான் கோரிக்கையை ஏற்க மனமில்லாத மாநகராட்சிக்கு முப்பது நிமிடத்தில் நகரின் மத்தியில் இடம் ஒதுக்கி கொடுக்க முடிகிறது என்றால் நாம் நாய்களை விட கேவலமா?

இந்த நாட்டிலேயே ராணுவம் ரயில்வேக்கு அடுத்தபடியாக
அதிக சொத்துக்களைக் கொண்ட சமுதாயம்! அம்பானிகளின் மாளிகையும் , அறிவாலய இடங்களும் நம்முடைய இடங்கள்.தமிழகத்தில் மட்டும் அரசியல்வாதிகளும் ,அரசு இயந்திரமும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு , இறந்த பின் அடக்க இடம் கேட்டால் நம்மை இழுத்தடிக்கும் இந்த அநியாயக்கார அதிகார வர்க்கத்தை எதிர்த்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வரும் வெள்ளியன்று மாலை நான்கு மணியளவில் வேளச்சேரி மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி
சந்தூக்கு ஏந்தி போராட்டம் அறிவித்துள்ளது!

கருத்துகள் இல்லை: