செவ்வாய், 30 நவம்பர், 2010

எயிட்ஸின் எதிரி பர்தாவே!


புனித தீனுல் இஸ்லாம், நல்லதோர் குடும்பம் சின்னாபின்னப்பட்டுவிடாது அதைப் பாதுகாப்பதின் மீது அக்கறை கொண்டுள்ளது. எனவே, அக்குடும்பத்தில் மனோ இச்சை எனும் வைரஸ் தொற்றி அதன் இயற்கைச் சூழலைக் கேடுபடுத்திடாமல் மக்கள் ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்காக இஸ்லாம் ஒழுக்கங்கள், நற்குனங்களென்ற உதவிவாய்ந்த தூண்களால் சுவர் எழுப்பியுள்ளது. மேலும், புனித இஸ்லாம் மார்க்கம், அனாச்சாரங்களின் பக்கம் இட்டுச் செல்லக் கூடியவற்றைச் தடுப்பதற்காக திரைகளை எற்படுத்துயுள்ளது. ஆணும், பெண்ணும் சந்திக்கும் சமயம் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கட்டளை பிறப்பித்துள்ளது.

நிச்சயமாக அல்லாஹ் பெண்ணைக் கண்ணியப்படுத்துவதற்காகவும் இழிவிலிருந்து அவளின் தன்மானத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் மேலும், குழப்பவாதிகள், தீய எண்ணம கொண்டவர்களின் தீங்குகளை விட்டும் அவளைத் தூரப்படுத்துவதற்காகவும், விஷப் பார்வைகளுக்குக் காரணமான குழப்பத்தின் வாசலை அடைத்திடுவதற்காகவும், பெண்ணின் கண்ணியத்தையும் பத்தினித்தனத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே அல்லாஹ் பெண்களுக்கு பர்தாவை மார்க்கமாக்கியுள்ளான்.

அல் – குர்ஆனில் வல்ல நாயன், “(நபியே!) முஃமினான பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும், தங்களின் மர்மஸ்தானங்களையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும், அவற்றில் வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம், தங்கள் முந்தானைகளால் தங்களின் முன்பகுதியை மறைத்துக் கொள்ளட்டும். மேலும், அவர்கள் தங்களின் கணவரிடத்திலே தவிர தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்!” (24:31)

எனப் பறைசாற்றுகின்றான். குழப்பங்கள் சூழ்ந்து பரவிக்கிடக்கும் இக்காலத்தை விட வேறு எக்காலத்தில் அச்சம் அதிகமாக இருக்க முடியும்! காமுகர் தெருக்களிலும் கடை வீதிகளிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் அவர்கள் நிரம்பியும் நல்லவர்கள் அறிதாகியும் விட்டனர். இஸ்லாம் பெண்களை அந்நிய ஆடவர்களுடன் கலந்துரவாடுவதை தடுத்திருப்பது போன்று மேற் கூறியவை அனைத்தும் பெண்களின் நற்குணங்கள், குடும்ப அமைப்பு, சிறப்புக்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதற்காகும். இஸ்லாம் பாதிகாப்பின் மீதும், குழப்பத்தையும், குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வழிகளை அடைத்துவிடுவதின் மீதும் அக்கறை கொள்கிறது. பெண் வெளியே செல்வதிலும் அந்நிய ஆடவர்களுடன் கலந்துரையாடுவதிலும், அவளின் வதனத்தைத் திறந்து செல்வதிலும், மனோ இச்சைகளைக் கிளறிவிடக்கூடியவைகளும், பாவத்திற்குக் காரணமான செயல்களை இலகுபடுத்துவதும், அவைகளைச் செய்யக் கூடியவர்களுக்கு அவற்றை இலகுவாக்கக்கூடிய வைகளாய் இருக்கின்றன. மேலும், மறைக்கப்பட வேண்டிய ஒளறத் திறக்கப்படுவதாலேயே எதிர்பால் கவர்ச்சி ஏற்படுகின்றது.

அதனால்தான் இறைவன் தனது அருள்மறையாம் குர்ஆனில்: “நபியுடைய மனைவியரே! நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது) வெளிப்படுத்தியதைப் போன்று வெளிப்படுத்தித் திரிந்து கொண்டிருக்காதீர்கள்” (33: 53)
என வெளிச்சம் போட்டுகாடுகின்றான்.

ஒரு பெண் சில சந்தர்ப்பங்களில் தனது அவசியத் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பவரில்லாதபோது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நிர்ப்பந்த தேவைகளுக்காக மார்க்க வரம்புகளைக் பெண் தனது அலங்காரத்தை வெளிப்படுத்தாது இஸ்லாமிய முறைப்படி தன்னை மறைத்துக் கொண்டு வெளியேறி, ஆண்களை விட்டும் நீங்கி அவர்களுடன் கலந்திடாதவாறு சென்று வருவதில் குற்றமில்லை. ஒரு பெண் அந்நியருடன் தனித்திருப்பதை தடுக்கப்பட்டிருப்பது அவளது குடும்பத்தையும் நற்குணங்களையும் பாதுகாப்பதற்கு இஸ்லாம் அமைத்துள்ள சிறந்த வழியாகும். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் ஆன்மாக்களையும் நற்குணங்களையும் பாழாக்குவத்தின் மீது பேராசை உள்ளவனாக இருக்கிறான்.

“ஆண், பெண் இருவரும் தனித்திருக்கையில் மூன்றாவதாய் ஷைத்தான் இருக்கிறான்.” எனும் மணிமொழியை நினைவிற் கொள்க! பர்தா அணிவது அவசியம் தானா? பெண்ணை முக்காடிட்டு வீட்டினுள் மறைத்து வைப்பது தகுமா? வளர்ந்திருக்கும் விஞ்ஞான உலகில் நடமாட தடை விதிக்கலாமா? இது என்ன நியாயம்? திரையிட்டு சிறை வைக்கும் ஆடவர் ஆணவம் அடங்காதா? ஆணுக்கு ஒரு நீதி! பெண்ணுக்கு ஒரு நீதியா? ஆடவர் உள்ளத்தை கவரத்தானே இறைவன் படைத்தான்? என்றெல்லாம் கூறி பர்தா கூடாது என்றே பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால் அப்படியல்ல. நெருப்பும் பஞ்சும் நெருங்கினாலே அபாயம்! என்பது போல் ஓர் ஆணும அந்நிய பெண்ணும் பார்த்தாலே பெரும் ஆபத்து! பெண்ணின் கடைக்கண் பார்வை பட்டாலே போதும். எந்த ஆண்மகனும் நாசமடைவது திண்ணம்! பர்தாவுக்குள் பதுங்கியிருக்க வேண்டிய பாவை பகிரங்கமாக வெளிவந்தால் அதுவும் நறுமணம் பூசி, ஆடை அலங்காரத்துடன் வீதிகளில் வலம் வந்தால் ஆண்களின் சலசலப்புத்திக்கு நல்ல தீனி படைத்தவளாக மாறிவிடுவாள். சீ.... ஒழுக்கக்கேடு சமூகத்தையே செல்லரித்துவிடும்!

பள்ளி முதல் கல்லூரி வரையிலும், அலுவலகங்களிலும் ஆண், பெண் பாகுபாடு இன்றி நெருங்கிப் பழகுவதால், பெண்களிடம் இயற்கையிலேயே இருக்க வேண்டிய நாணமும், நளினமும் சிதைந்து சீரழிந்து விடுகிறது. அத்தகையவர்களின் பெண்மை மரத்து விடுகிறது. இதுபோன்ற காரணங்களால் அவர்களது மணவாழ்வு மணமற்று, மகிழ்வற்று விவாகரத்து வரை போய்விடுகிறது. ஆணும், பெண்ணும் கலந்துரையாடிப் பழகும் தினசரிப் பழக்கமுள்ளவளின் கற்பு அனலிடை மெழுகாய் அழிந்துவிடும் என்பது நிச்சயம். ஏனெனில், ஓர் ஆணும், பெண்ணும் சந்தித்து கண் மூலமாகப் பெரும் இன்பம் காமத்தில் பாதி அல்ல, அதனிலும் பெரிது! என்பது வெள்ளிடைமலை. ஷைத்தானின் அம்பே பார்வையாகும்!

திங்கள், 29 நவம்பர், 2010

நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ உண்மை: சிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்


நடிகை ரஞ்சிதா -நித்யானந்தா வீடியோ வெளியாகி பெரும் பரபரப்புக்குள்ளானது. இதையடுத்து நித்யானந்தா கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.


இவர் மீதான வழக்கு பெங்களூர் ராம்நகர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

இந்நிலையில் நித்யானந்தா மீது பெங்களூர் ராம்நகர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது சிஐடி. குற்றப்பத்திரிக்கையில் நித்யானந்தா மீது பல்வேறு புகார்களை சுமத்தியுள்ளது சிஐடி.

இளம்பெண் ஒருவரின் 27 பக்க பாலியல் குற்றச்சாட்டும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. நித்தியானந்தா-ரஞ்சிதா வீடியோ உண்மை என்றும் குற்றபத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கை தகவலை உயர்நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளது சிஐடி.

மோடி-ராடியா உறவு வெட்ட வெளிச்சம்

புதுடெல்லி,நவ.27: 2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையால் களங்கமான நரேந்திர மோடியின் இமேஜை மேம்படுத்துவதற்காக ரத்தன் டாட்டாவையும், நானோ கார் திட்டத்தையும் குஜராத்திற்கு கொண்டுவரக் காரணமாக இருந்தவர் யார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்திற்கு வருமாறு கோரி தான் அனுப்பிய ஒரு ரூபாய் எஸ்.எம்.எஸ் மூலம்தான் நானோ கார் திட்டம் என்ற இந்த அற்புதத்திற்கு பின்னணி என நரேந்திரமோடி புளங்காகிதம் அடைந்தது வடிகட்டியபொய் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ரத்தன் டாடா கூட மறுப்புத் தெரிவிக்காத நரேந்திர மோடியின் கூற்றை பொய்ப்பிக்கும் விதமாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முன்னாள் அஹ்மதாபாத் எடிசன் ரெசிடண்ட் எடிட்டர் கிங்சூக் நாக் தகவலை வெளியிட்டுள்ளார்.

மோடியைக் குறித்து மிருதுவாக எழுதவேண்டும் என இரண்டு முறை ராடியா தன்னை அணுகியதாக கிங்சூக் நாக் தெரிவிக்கிறார்.

உங்கள் ஆட்கள் நரேந்திர மோடியின் வாழ்க்கையை நரக வாழ்க்கையாக மாற்றிவிட்டார்கள் என ராடியா பரிதவிப்போடு கூறியதாகவும் நாக் தெரிவிக்கிறார்.

இதனைக்கேட்ட நாக், ராடியாவிடம் மோடியின் கட்சியை சார்ந்தவரா நீங்கள்? என கேட்டபொழுது, இல்லை ஒரு குஜராத்தி என்ற அடிப்படையில்தான் இதனைக் கூறுகிறேன் என்றாராம்.

ரத்தன் டாட்டாவிற்கும், மோடிக்கும் இடையே ராடியா தரகு வேலைப் பார்த்ததற்கான ஆதாரம் இவை. இதன் தொடர்ச்சியாகத்தான் நானோ கார் திட்டத்திற்கான பரிசீலனையில் இருந்த மகாராஷ்ட்ரா, ஆந்திரபிரதேசம்,ஹரியானா, பஞ்சாப், ஒரிஸ்ஸா உள்ளிட்ட மாநிலங்களை ஒரேயடியாக புறக்கணித்துவிட்டு டாடா, குஜராத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

முஸ்லிம் இனப்படுகொலை நடைப்பெற்று அடுத்த ஆண்டில் 'வைப்ரண்ட் குஜராத்' என்ற நிகழ்ச்சியில் டாட்டா போதுமான அக்கறை செலுத்தவில்லை. ஆனால், 2007 ஆம் ஆண்டில், 'நீங்கள் குஜராத்தில் இல்லையெனில் நீங்கள் ஒரு முட்டாள்' என மாற்றிக் கூறுமளவுக்கு டாட்டா மாறிப்போனார்.

2008 ஆம் ஆண்டு நானோ கார் திட்டம் மே.வங்காளத்தின் சிங்கூரிலிருந்து குஜராத்திற்கு மாற்றப்பட்டது. முஸ்லிம் இனப்படுகொலையில் இழந்த இமேஜை மீட்க மோடிக்கு ராடியா அளித்த மிகச்சிறந்த வாய்ப்பாக இது அமைந்தது.

செய்தி:மாத்யமம்

மோடி-ராடியா உறவு வெட்ட வெளிச்சம்

புதுடெல்லி,நவ.27: 2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையால் களங்கமான நரேந்திர மோடியின் இமேஜை மேம்படுத்துவதற்காக ரத்தன் டாட்டாவையும், நானோ கார் திட்டத்தையும் குஜராத்திற்கு கொண்டுவரக் காரணமாக இருந்தவர் யார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்திற்கு வருமாறு கோரி தான் அனுப்பிய ஒரு ரூபாய் எஸ்.எம்.எஸ் மூலம்தான் நானோ கார் திட்டம் என்ற இந்த அற்புதத்திற்கு பின்னணி என நரேந்திரமோடி புளங்காகிதம் அடைந்தது வடிகட்டியபொய் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ரத்தன் டாடா கூட மறுப்புத் தெரிவிக்காத நரேந்திர மோடியின் கூற்றை பொய்ப்பிக்கும் விதமாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முன்னாள் அஹ்மதாபாத் எடிசன் ரெசிடண்ட் எடிட்டர் கிங்சூக் நாக் தகவலை வெளியிட்டுள்ளார்.

மோடியைக் குறித்து மிருதுவாக எழுதவேண்டும் என இரண்டு முறை ராடியா தன்னை அணுகியதாக கிங்சூக் நாக் தெரிவிக்கிறார்.

உங்கள் ஆட்கள் நரேந்திர மோடியின் வாழ்க்கையை நரக வாழ்க்கையாக மாற்றிவிட்டார்கள் என ராடியா பரிதவிப்போடு கூறியதாகவும் நாக் தெரிவிக்கிறார்.

இதனைக்கேட்ட நாக், ராடியாவிடம் மோடியின் கட்சியை சார்ந்தவரா நீங்கள்? என கேட்டபொழுது, இல்லை ஒரு குஜராத்தி என்ற அடிப்படையில்தான் இதனைக் கூறுகிறேன் என்றாராம்.

ரத்தன் டாட்டாவிற்கும், மோடிக்கும் இடையே ராடியா தரகு வேலைப் பார்த்ததற்கான ஆதாரம் இவை. இதன் தொடர்ச்சியாகத்தான் நானோ கார் திட்டத்திற்கான பரிசீலனையில் இருந்த மகாராஷ்ட்ரா, ஆந்திரபிரதேசம்,ஹரியானா, பஞ்சாப், ஒரிஸ்ஸா உள்ளிட்ட மாநிலங்களை ஒரேயடியாக புறக்கணித்துவிட்டு டாடா, குஜராத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

முஸ்லிம் இனப்படுகொலை நடைப்பெற்று அடுத்த ஆண்டில் 'வைப்ரண்ட் குஜராத்' என்ற நிகழ்ச்சியில் டாட்டா போதுமான அக்கறை செலுத்தவில்லை. ஆனால், 2007 ஆம் ஆண்டில், 'நீங்கள் குஜராத்தில் இல்லையெனில் நீங்கள் ஒரு முட்டாள்' என மாற்றிக் கூறுமளவுக்கு டாட்டா மாறிப்போனார்.

2008 ஆம் ஆண்டு நானோ கார் திட்டம் மே.வங்காளத்தின் சிங்கூரிலிருந்து குஜராத்திற்கு மாற்றப்பட்டது. முஸ்லிம் இனப்படுகொலையில் இழந்த இமேஜை மீட்க மோடிக்கு ராடியா அளித்த மிகச்சிறந்த வாய்ப்பாக இது அமைந்தது.

செய்தி:மாத்யமம்

ஞாயிறு, 28 நவம்பர், 2010

முகேஷ் அம்பானியின் அரண்மனை வீட்டின் முதல் மாத கரன்ட் பில் ரூ. 70 லட்சம்

மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி சமீபத்தில் பால் காய்ச்சி குடிபுகுந்த அரண்மனை வீட்டின் முதல் மாத கரன்ட் பில்லாக ரூ. 70 லட்சம் வந்துள்ளதாம்.

மும்பையில், 27 மாடிகளுடன் கூடிய ஒரு 'சிறிய வீட்டை' வீட்டைக் கட்டியுள்ளார் முகேஷ் அம்பானி. உலகிலேயே மிகவும் ஆடம்பரமான வீடாக இது வர்ணிக்கப்படுகிறது. பெரும் பணக்காரரான பில் கேட்ஸுக்குக் கூட இப்படி ஒரு வீடு இல்லையாம்.

இந்த மாபெரும் அரண்மனை வீட்டுக்கு சமீபத்தில்தான் குடி புகுந்தார் முகேஷ் அம்பானி. இப்போது இந்த வீட்டின் முதல் மாத மின்சார உபயோகக் கட்டணமாக ரூ. 70 லட்சத்து 69 ஆயிரத்து 488 வந்துள்ளதாம். ஒரு வீட்டுக்கு இவ்வளவு அதிக கட்டணம் வந்திருப்பது மும்பை வரலாற்றில் இதுவே முதல் முறையாம்.

இந்த வீட்டில் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீத்தா மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் முகேஷ். புது வீட்டுக்குப் போய் ஒரு மாதம்தான் ஆகிறது.

இந்த வீட்டில் ஒரு மாதத்தில் மட்டும் 6 லட்சத்து 37 ஆயிரத்து 240 யூனிட் மின்சாரத்தை உபயோகப்படுத்தியுள்ளனர். ஒரு சாதாரண இந்தியக் குடும்பத்தில் அனைத்து மின்சார சாதனப் பொருட்களின் பயன்பாட்டையும் கூட்டிப் பார்த்தால் சராசரியாக 300 யூனிட் வரை பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் என்ன விசேஷம் என்றால், கட்டணத்தை சரியாக கட்டியதால் முகேஷ் அம்பானிக்கு பில்லில், ரூ. 48 ஆயிரத்து 354 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாம். இதைக் கழித்து விட்டுத்தான் இந்த 70 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டியுள்ளாராம் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானி கட்டியுள்ள இந்த ஒரு மாத பில் கட்டணம், 7000 வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்திற்கு சமம் என்கிறார்கள்.

இந்தியாவில் பெரும் பணக்காரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 'கக்கூஸ்' கூட இல்லாத வீடுகள் இந்தியாவில் நிறைய இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவர அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அதேபோல இன்னும் மின்சாரத்தையே பார்க்காத ஏராளமான கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. கழிவு நீர் வசதி இல்லை, சுகாதாரமான குடிநீர் இல்லை, நல்ல சாலைகள் இல்லாத ஊர்கள் நிறைய, போக்குவரத்து வசதிகள் இன்னும் சாத்தியப்படாத ஊர்கள் நிறைய. இப்படி ஒரு பக்கம் இந்தியா இன்னும் நொந்த நிலையில் தான் உள்ளது. ஆனால் முகேஷ் அம்பானிகள் கரன்ட் பில்லுக்கே பல லட்சங்களை செலவிடுகிறார்கள் என்றால், மற்ற செலவுகளையும் கூட்டிப் பார்த்தால் கண்டிப்பாக மயக்கமடித்து விழத்தான் நேரிடும்.

அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும் – கருத்தரங்கம்-புகைப்படங்கள்

தமுமுக தென் சென்னை சார்பில் நவம்பர் 25 அன்று சென்னையில் “அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும் – கருத்தரங்கம்” சென்னை தியாகராயர் நகரில் உள்ள பி.டி.தியாகராயர் அரங்கில் (கண்ணதாசன் சிலை அருகில்) 25.11.2010 வியாழனன்று, மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

தமுமுக தலைவர் பேராசிரியர் எம்..ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமைத் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார். தமுமுக தென் சென்னை மாவட்டத் தலைவர் ஜெ.சீனி முகமது வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கத்தை பேரா.ஜெ.ஹாஜாகனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கோ.முத்துக்கிருஷ்ணன், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தின் நிர்வாகி கென்னடி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.



இறுதியாக தமுமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜனாப் முகமது அபுபக்கர் (எ) கோரி நன்றியுரை கூறினார்.


வியாழன், 25 நவம்பர், 2010

தீண்டாமைச் சுவர் என்ற பெயரில் குடியிருப்பை இடித்ததைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தீண்டாமை சுவர் என்ற பெயரில் திருச்சி மாநகராட்சி 40வது வார்டு எடமலைபட்டி புதூர் பழைய சக்திவேல் காலனியில் உள்ள குடியிருப்பை எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளதை பொருட்படுத்தாமல் அத்துமீறி சர்வாதிகாரமாக இடித்த மாவட்ட ஆட்சி தலைவர், மாநகராட்சி ஆணையர் மாநகர காவல்துறை ஆய்வாளர் ஆகியோரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 22.11.2010 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் (மமக) பைஸ் அஹமது மாவட்ட பொருளாளர் இப்ராஹிம்ஷா மாவட்டசெயலாளர்(தமுமுக) அப்துல் ரஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலாளர் கோவை.செய்யது அவர்களின் கண்டன உரை ஆற்றினார்.


ஆர்ப்பாட்த்தில் மாவட்ட துணை தலைவர் முஹம்மது ரபீக் மாவட்ட துணைச் செயலாளர்(மமக)பெரோஸ் கான் மாவட்ட துணைச்செயலாளர்கள்(தமுமுக) ஹபீபுல்லா, உபைதுல்லாஹ், சாதிக் மற்றும் மமக அணி நிர்வாகிகளான மாவட்ட இளைஞரணிச் செயலாளர் உதுமான் அலி, மாவட்ட வர்க்கறிஞர் அணிச்செயலாளர் கமருதீன், மனிதநேய வர்தக சங்க செயலாளர் ரைஹான், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் அப்துல் சமது, இளைஞரணி துணைச் செயலாளர் லியாகத் அலி, மனிதநேய வர்த்தக சங்க துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, தொண்டரணிச் செயலாளர் இப்ராஹிம், துணைச் செயலாளர் இசாக், மருத்துவ சேவை அணிச் செயலாளர் இம்தியாஸ் அஹமது மற்றும் சுற்றபறச்சூழல் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு அணிச் செயலாளர் தமும் அன்சாரி ஆகியோர்களும் மமக தமுமுக ஒன்றிய நகர வார்டு மற்றும் கிளை நர்வாகிகளும் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


இடஒதுக்கீட்டில் திமுக அரசு துரோகம்-? காவல்துறை பணி நியமனத்தில் முஸ்லிம்களுக்கு வஞ்சகம்!

தமிழக அரசின் காவல்துறையில் தற்போது கூடுதலாக பத்தாயிரம் பணி இடங்கள் நிரப்ப தேர்வுகள் நடைபெற்றன. அதில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் விரைவில் பணியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.




பத்தாயிரத்துஅறுபது பணி இடங்களில் 1095 காவல்துறை உதவி ஆய்வாளர் களும் காவலர்கள் 8944 பேரும் சிறை காவலர்கள் பணிக்கு 486 பேரும் தீயணைப்பு படை வீரர்கள் பணிக்கு 630 பேரும் பணியில் சேரவிருக்கும் நிலையில் வழக்கம் போல் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு முறையில் துரோகம் இழைக் கப்பட்டதாக தகவல்கள் வெளி வந்ததை யடுத்து சமுதாய ஆர்வலர்கள் கொந்தளிக் கின்றனர்.2069 பணியிடம் ஆதி திராவிட சமூகத்தினருக்கும் 3343 பணியிடங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் பெண்கள் 2673 பேரும்தேர்வு செய்யப்பட்டனர்.

அந்தந்த சமூக மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின்படி அவர்களுக்கு பணி இடங்கள் கிட்டத்தட்ட வழங்கப்பட்டு உள்ளன. உதாரணமாக அருந்ததியர் சமூக மக்களுக்கான பணியிடத்துக்கு 293 பேர் தேர்வாகியுள்ளனர்.

முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீதத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணியிடங்கள் எவ்வளவு தெரியுமா 263 தான்.

மூன்றரை சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு 350 பணியிடங்களுக்கு குறையாமல் அல்லவா இருக்கவேண்டும். கவனக்குறைவால் விளைந்த தவறாக இதனைக் கருதிவிட முடியாது. கணக்கில் பிழை செய்திருக்கிறார்கள். நாளை தேர்தலின் போது முஸ்லிம்கள் சரியான கணக்கு எது என நிரூபித்துக் காட்டுவார்கள்.

தவறை உடனடியாக சரி செய்து தமிழக அரசு அவப்பெயரில் இருந்து தப்புமா? நடவடிக்கை இருக்குமா?

-ஹபீபா பாலன்

திருமணமாகாத இளம்பெண்கள் செல்ஃபோன் உபயோகிக்கத் தடை !

முஸஃபர் நகர்: திருமணமாகாத இளம்பெண்கள் காதல் வலையில் சிக்கி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைத் தடுக்கும் முகமாக, அவர்கள் செல்ஃபோன் உபயோகிக்க கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ள சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தின் முஸஃபர் நகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸஃபர் நகர் மாவட்டத்திலுள்ள லன்க் என்ற கிராமத்தில் அனைத்து சாதி மற்றும் மத பஞ்சாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து செல்ஃபோனால் இளம்பெண்களுக்கு ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விவாதித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

திருமணமாகாத இளம்பெண்கள் காதல் வலையில் சிக்கி தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைத் தடுக்கும் முகமாகவே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கிராம பஞ்சாயத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர் கூறினார்.

திருமணமாகாத இளம்பெண்களையும், கணவனை இழந்த விதவைப் பெண்களையும், வெளிநாட்டில் பணிபுரியும் கணவன்மார்களின் மனைவிகளையும் குறி வைத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சமூக விரோத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இது போன்ற பெண்களுக்கு தவறவிட்ட செல்பேசி அழைப்பு (மிஸ்டு கால்) கொடுப்பது, பின்னர் அதன் மூலம் ஏற்படும் தொடர்பை பயன்படுத்தி அவர்களை தங்கள் காம வலையில் சிக்க வைத்து அவர்களது வாழ்வை சீரழிப்பது, அதன் பிறகு அவற்றை வீடியோக்களில், நிழற்படங்களில் பதிவு செய்து அவர்களை மிரட்டி அவர்களது பணம், நகைகளை சூறையாடுவது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன் நண்பர்களுக்கும் அவர்களை இரையாக்குதல், விபச்சார விடுதிகளில் அவர்களை விற்று விடுதல் போன்ற சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுவதை அன்றாடம் செய்திகளில் பார்க்க நேரிடுவது குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவுக்கு நோபல் பரிசை போன்று சிறந்த பாம்பாட்டி விருது கொடுக்கலாம் :- பிடெல் காஸ்ட்ரோ.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஒரு சிறந்த பாம்பாட்டியென கியூப முன்னாள் தலைவர் பிடெல் கஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். போர்த்துக்கலில் இடம்பெற்ற மேற்குலக நட்பு நாடுகளின் உச்சிமாநாடு ஒன்று தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேட்டோவானது இராணுவ குற்றச்செயல்கள் செய்யும் ஒரு குழு என்றே கருத முடியும். ஆப்கான் போரானது ஒரு மனிதப்படுகொலையென்றே கூறலாம். இந்நிலையில் ஆப்கானிலிருந்து அமெரிக்க படையினரை வாபஸ் பெறும் வாக்குறுதி பிற்போடலாம் என ஒபாமா அண்மையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவருக்கு நோபல் பரிசுக்கு அடுத்தபடியாக இதுவரை யாருக்கும் கொடுத்திராத சிறந்த பாம்பாட்டிக்கான பரிசை வழங்கலா என அவர் தெரிவித்துள்ளார்.

2012 இன் அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமாவை வீழ்த்தி சாரா பாலின் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்புக்கள் எழுந்த நிலையில் பிடெல் காஸ்ட்ரோவின் இக்கருத்துக்களும் முக்கியத்துவம் பெறத்தொடங்கியுள்ளன

புதன், 24 நவம்பர், 2010

தீவிரவாத ஹிந்து பாசிசவாதிகளால் உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானம்

புதுடெல்லி: கடும் சமூக மற்றும் மத துவேசமுடைய நாடுகளின் பட்டியலில் இந்தியா,மதங்களுக்கெதிரான அரசுக்கட்டுப்பாடுகள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.வாஷிங்டனில் செயல்படும் Pew research centre நடத்திய சர்வேயில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. "சர்வதேச மத நம்பிக்கைக்கான கட்டுப்பாடுகள்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில்தான் அந்நிய மதத்தவர்களுடனான துவேசம் வலுவடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.உலகிலேயே புத்திஜீவிகளால் நடத்தப்படும் ஆய்வு நிறுவனம் என்ற பெயரைப்பெற்றது பியூ ரிசர்ச் செண்டர்.

இவ்விஷயத்தில் கியூபா, துனீசியா, இஸ்ரேல், சோமாலியா ஆகியநாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த ஆய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டது. உலகின் மக்கள்தொகையில் 99.5 மக்களும் இவ்வாய்வில் உட்படுத்தப்பட்டதாக இந்நிறுவனம் கூறுகிறது.

அரசு, சமூக தளங்களிலுள்ள சில கட்டுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு வினாக்களை தயாரித்து அதற்கு விடையை கண்டறிந்துதான் இந்நிறுவனம் ஆய்வைமேற்க்கொண்டது.


U.S. State department, U.S. Commission on international freedom, The council of europian union, The internaional crisis group, humanrights watch, Amnesty international, Hudson institute, U.N rapporteur on freedom of religion or belief ஆகிய நிறுவனங்களின் அறிக்கைகளும் இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாய்வில் முக்கிய காரணிகளாக மதநம்பிக்கைக்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் தனிமனிதர், சமூகம், அரசு, சட்டம், அமைப்புகள் ஆகியன எடுத்துக்கொள்ளப்பட்டன. அரசு மதக்கட்டுப்பாட்டில் சீனாவும், வியட்நாமும் முன்னணியில் உள்ளது. ஆனால் மததுவேசத்தில் இந்தியா சீனாவை விட முன்னணியில் உள்ளது.

நைஜீரியாவில் மதத்துவேசம் காணப்பட்டாலும் அரசுக்கட்டுப்பாடு குறைவாகவே உள்ளது. பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் அனைத்துவிதமான மதத்துவேசங்களும் காணப்படவில்லையென இவ்வாய்வு கூறுகிறது.

அரசின் மதக்கட்டுப்பாடு குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 40 இடங்களில் கூட இந்தியா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, இலங்கை, எத்தியோப்பியா, ஆகிய நாடுகளில் பெரும்பான்மை சமூகம் ஒன்று ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டுமென்றும் தங்களுடைய மதஸ்தலங்களை பாதுகாப்பதற்கும் கோரிக்கை விடுகின்றனர். இந்தியாவில் ஹிந்துத்துவா வாதிகள் ஒரு ஹிந்து தேசத்தை உருவாக்கவேண்டுமென்பதில் உறுதியாக உள்ளனர்.

இஸ்ரேலில் பாதுகாப்பின் பெயரால் பிற மதத்தவர்களுக்கு அவர்களுடைய வணக்கஸ்தலங்களுக்கூட செல்ல முடியாத நிலை உள்ளது.சமூகத்துவேசம் இல்லாத நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகமும் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா சமூக துவேசமுடைய நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அரசு கட்டுப்பாடு அறவே இல்லாத நாடுகளாக நியூசிலாந்து, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, இத்தாலி, தென் கொரியா, யு.எஸ், ஆஸ்திரேலியா ஆகியன உள்ளன

நீதிமன்ற இந்து பாசிசத்தை அம்பலமாக்கும் அரங்ககூட்டம்!

அயோத்தி தீர்ப்பு…

இந்து மத வெறிக்கு சட்ட அங்கீகாரம்!

பாபர் மசூதியை இடிக்கும் பாசிச வானரங்கள்..

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு எழுப்பும் சில கேள்விகள்!!!

மசூதியை பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் கேட்ட நீதிமன்றம், ராமன் அங்கு தான் பிறந்தான் என்பதற்கு நம்பிக்கையை ஆதாரமாக ஏற்றது ஏன்?

ராமஜென்ம பூமி இந்து நம்பிக்கை என்றால், சூத்திரன் (தேவடியாள் மகன்), தலித்துகள், பார்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆகக் கூடாது, தமிழ் – நீச பாசை, இவற்றையெல்லாம் இந்துமத நம்பிக்கை என ஏற்று நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்குமா?

நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு என்றால், உயர்நீதி மன்றம் இருக்கும் இடத்தை நம்பிக்கை அடிப்படையில் யாராவது உரிமை கோரினால் கரசேவை நடத்தி இடித்துவிடலாமா?

1886 லேயே இரண்டாம் மேல் முறையீட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்ட பாபர் மசூதி இடத்திற்கான வழக்கு, மீண்டும் 1950ல் புதிதாக தொடரப்பட்டதே, ராமனுக்கு மட்டும் முன் தீர்ப்பு தடை (Res judicata) கிடையாதா?

கடவுளர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்களா? அப்பாற்பட்டவர்களா? கடவுளர்களுக்கு சொத்துரிமை, குற்றவியல் நடவடிக்கைகள் பொருந்துமா? பொருந்தாதா? ராமாயணம் வரலாறா? கற்பனை கதையா?

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மதசார்பற்றது என்பது உண்மைதானா?

1957 ல் அரசியல் அமைப்பு சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மையை எதிர்த்து பெரியார் அதன் நகலை எரித்து சிறை சென்றபோது, அம்பேத்கார் அதனை வரவேற்றது ஏன்?

1949 ல் பாபர் மசூதிக்குள் ராமன் சிலை வைக்கப்பட்டதை ஒப்புக்கொள்ளும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அதனை அகற்ற உத்தரவிடாமல் சட்ட அங்கீகாரம் வழ்ழங்கியது ஏன்?

1992 ல் பாபர் மசூதி சங்பரிவார கும்பலால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது குறித்து தீர்ப்பு மவுனம் காக்கும் மர்மம் என்ன?

500 ஆண்டுகளுக்கு ராமன் கோவில் இடிக்கப்பட்டதாக கூறி மசூதியை இடிக்கலாம் என்றால், நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்தை கொள்ளையடித்து தான் திருச்சி திருவரங்க கோவில் (ஸ்ரீரங்கம்) கட்டப்பட்டதாக “கோயியொழுகு” என்ற வைனவ வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளதே, எனில் திருவரங்கம் கோவிலை இடித்து புத்தவிகாரம் கட்டலாமா?

இடித்தவனுக்கு மூன்று பங்கு, இழந்தவனுக்கு ஒரு பங்கு – இது தான் சமூக நீதியா?

அயோத்தி தீர்ப்பு சட்டப்படியான தீர்ப்பா? அல்லது கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பா?

அயோத்தி பிரச்சனை சட்டப்பிரச்சனையா? அரசியல் பிரச்சனையா?

அயோத்தி தீர்ப்பு ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு என்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், முன்னால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சார் போன்றவர்களின் விமர்சனம் சரியானதா? தவறானதா?

ப.ஜ.க ஆட்சியின் போது (2003) தொல்லியல் துறை முன்வைத்த அகழ்வாராய்ச்சி அறிக்கையே தீர்ப்புக்கு முக்கிய
ஆதாரம் என்றால் அதை ரகசியமாக வைத்திருப்பது ஏன்?

அனைத்து கேள்விகளுக்கும் விடை காண வாருங்கள்…

அரங்கக்கூட்டம்

நிகழ்ச்சி நிரல்:

தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர்
செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

கருத்துரை : ”நீதித்துறை பேசும் காவி மொழி”
திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை”
திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்”
திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

விவாத அரங்கம் : வாக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு!
அனைவரும் வாரீர்!

நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி

இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.

தோழமையுடன் அழைக்கும்,
மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை கிளை.

தொடர்புக்கு : க.சுரேஷ், வழக்குரைஞர் – 9884455494.

நன்றி : http://vrinternationalists.wordpress.com

திங்கள், 22 நவம்பர், 2010

தெகல்கா வாக்குமூலங்கள் – டாக்டர்.ருத்ரன்


“”உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்”, என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது. குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி; தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி; யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது ஒரு திட்டமிட்ட வேட்டை.
“எதைச் செய்வது சரி, எப்படிச் செய்வது சரி’ என்பதெல்லாம், மனித மனம் நாளும் கற்றுத் தேர்பவை. மனவியல் கருத்தின்படி, ஊக்குவிக்கப்படுவன (மிட்டாயோ? கைதட்டலோ?) சரியானவை என்றும், தண்டிக்கப்படுவன (அடிக்கப்படுவதோ? ஒதுக்கப்படுவதோ?) தவறானவை என்றும், மனம் கற்றுக் கொள்கிறது. “தண்டிக்கப்பட மாட்டோம், தப்பிப்போம்’ என்று மனதுக்குத் தெரிந்தால் — தவறானதாகத் தெரிந்து வைத்தவற்றைக் கூட முயன்று பார்க்கத் துணியும். தண்டனை கிடைக்காது எனும் தைரியமும், ஓர் ஊக்குவிப்புதான். இப்படி மிருகத்தனமான செயல்கள், நேரடியாகவோ? மறைமுகமாகவோ? ஊக்குவிக்கப்பட்டால், மனம் “இதுவே நியாயம்’ என்றும் நம்பியிருக்கும்.

சரியான காரியங்களைச் செய்தபின் இயல்பாகவே மனதுக்குள் மகிழ்ச்சியும், பெருமையும் நிலவும். “வெட்டினேன், கொளுத்தினேன், கொன்றேன், கொள்ளையடித்தேன், கற்பழித்தேன்’ என்று பெருமையோடு பேசும் குஜராத் இந்து மதவெறியர்களின் மனங்கள், “அந்தக் காரியங்கள் நியாயமானவை, அவசியமானவை, சரியானவை’ என்று தீர்மானித்து விட்டதால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தங்களது வெறிச் செயல்களை “வீர சாகசங்களாகவும், வெற்றிச் சரித்திரங்களாகவும்’ அவர்கள் கொக்கரிக்கிறார்கள். அவர்களின் மனங்களுக்கென்றே ஒரு “கோணலான கல்வி’ தொடர்ந்து பாடமாகப் பதியவைக்கப்பட்டுள்ளது.
“திருடுவது, கொல்வது, கற்பழிப்பது போன்றவை சரி’யென்று, பொதுவாக எந்த மதத்திலும் கூறப்படுவதில்லை. ஆனாலும், அந்தக் கலவரமும், வெறியாட்டமும் மதத்தின் சார்பாகவே நடந்தது. “மிதமானவை, மூர்க்கக் கட்டமைப்பு இல்லாதவை’ என்று சொல்லிக் கொள்ளும் எல்லா மத மார்க்கங்களிலும் தாம் உயர்ந்தவர், கடவுளுக்கு அருகிலுள்ளவர் — தமது வழி வராதவரெல்லாம் தீயவர், தாழ்ந்தவர் என்ற மறைமுக போதனைகளும் உண்டு.

மேலோட்டமாகவேனும் நெறி புகட்டுவதாய் கருதப்படும் மதவரம்புகளை மீறி, அதைச் சார்ந்த ஒரு கூட்டம் வெறியாடுகிறது என்றால் — அந்தக் கும்பல் கயவர்களாலானது அல்லது அந்த மதநெறியே கோணலானது என்றே அர்த்தம். மேல் கீழ் எனும் பேதவெறியை தொடர்போதையாக ஊட்டி விட்டால், “தர்மம்’ என்பதற்கே ஒரு புதிய அர்த்தம் தோன்ற ஆரம்பிக்கும். சமூக சட்ட அங்கீகாரமற்ற கோரச் செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம், உள்ளே வேரூன்றிக் கிடக்கும் “தான் உயர்ந்தவன்’ எனும் ஆணவம். இந்தப் போலி சமூகச் செல்வாக்கு “தன்னைவிடத் தாழ்ந்தவனை மிதிக்கலாம்’ என்பதற்கு ஒரு அனுமதி போன்றே அவர்களது மனத்திற்குள் தோன்றும். இப்படியொரு கோணலான கண்ணோட்டத்தில் செய்த வன்முறை, வெறி, வரம்பு மீறல், கேவலம், கொடூரம் — எல்லாமே தக்க நேரத்தில் செய்த, சரியான காரியமாகவே அவர்களுக்குப் படும்.

அதனால்தான் அவர்களிடம் இது குறித்து வருத்தமும் இல்லை, வெட்கமும் இல்லை; குற்றமும் புரிந்து விட்டு, குறுகுறுப்பும் இல்லாதது மட்டுமல்ல, இவர்களிடம் சாதித்து விட்ட மமதையும் வெளிப்படுகிறது. இது வெறி மட்டுமல்ல, தண்டிக்கப் படாததால் வந்த தைரியம். கொலையும், கற்பழிப்பும், மனிதத்தன்மையே அல்ல என்பதை உணரக்கூட முடியாத அளவுக்கு உள்ளே மதவெறியும், ஆதிக்கத் திமிரும் வளர்ந்திருக்கிறது. இது ஆபத்தானது.
பொதுவாக, ஒரு போரின் முடிவில், வென்றவர்கள் தோற்றவர்களின் உடைமைகளை (பொருள்களை, பெண்களை) கொள்ளையடிப்பது, காலங்காலமாய் இருக்கும் ஒரு கோணலான நியதி. வெற்றிபலம், தோல்விபலவீனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுவதால், “பலவீனமானவர்களைக் கொள்ளையடிப்பதும், கொல்வதும், கற்பழிப்பதும், தவறு’ என்பதற்குப் பதிலாக, “யுத்த தர்மம்’ என்றே இது போற்றப்பட்டு வந்துள்ளது. குஜராத்தில் நடந்தது யுத்தமா?

“எதிரிகள் மனிதர்களேயல்ல’ என்ற மூர்க்க சித்தாந்தம்தான் ஒரு படையைத் தூண்டிவிட முடியும். குஜராத்தில் சேர்ந்தது ஒரு பரிதாபகரமான படை. இதுநாள்வரை, ஒதுக்கித் தாழ்த்தி வைக்கப்பட்ட ஒரு கூட்டம், சண்டைபோட மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. “தாங்கள் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்’, என்பதை மறந்து, “தம்மிலும் தாழ்ந்தவனாக ஒரு எதிரியை அவர்கள் பார்த்தார்கள். இந்தப் போலி தர்மத்திற்கான யுத்த நேரத்தில் “ஆதிக்கம் செலுத்தியவன் தன் தோளோடு தோள் நிற்கிறானே’ என்ற பொய்யான மகிழ்ச்சி, கூட்ட மனப்பான்மையில் “கொலைவெறி’யாகவும் மாறிவிட்டது. போர்ப்படை என்பதும் ஒரு கூட்டம்தான். எல்லாக் கூட்டங்களிலும், எப்போதுமே ஒரு தலைவன் உண்டு. அவனது ஆணைப்படியே அந்தந்த கூட்டம் இயங்கும். யதேச்சையாகத் திரளும் கூட்டங்களைத் தவிர, ஒரு இயக்கமாக, கட்சியாக, மதமாக அமையும் கூட்டங்கள், தலைவனை நேரில் பார்க்காத போதும் ஆணைகளைப் பின்பற்றும். இவ்வகைக் கூட்டங்களுக்கு “தலைவன் சொல்வதே சரி, அவன் ஆணைப்படி நடப்பதே சரி’ எனும் ஒரு மூர்க்கப் பின்பற்றுதல் சிந்தனை அமையும். இவ்வகைத் தலைவன், எதிரியை அடையாளம் காட்டித் தன் கூட்டத்தையே போரிட வைக்க முடியும்.

தான் அடையப் போகும் பெரிய லாபத்திற்காக, இந்தக் கூட்டத்திலுள்ள வேலைக்காரர்கள் அடையும் அற்ப சந்தோஷங்களை அவன் கண்டு கொள்ள மாட்டான். சில எலும்புத் துண்டுகளை, அவனது வெறிநாய்கள் தாங்களாகவே பொறுக்கிக் கொள்வதும், அவனுக்கு வசதியாகவே அமையும். போர் முடிந்து, வெற்றி கிடைத்த பிறகுதான் “கூட்டத்துக்குத் தலைவன்’ கொஞ்சம் தெரிவான். ஒன்றாக வெறியாடி, அவனுக்கு வெற்றி தேடித் தந்தவர்களில் சிலரே உயர்வார்கள். தற்காலிகக் கூலியாக மட்டுமே மற்றவர்கள் ஒதுக்கப்படுவார்கள். சாணக்கிய ரீதியில், இது “ராஜநீதி’ என்றும் கூட ஏற்கப்படும்.
இவ்வளவு யுத்த தந்திரங்களோடு செயல்பட்டு ஒடுக்குமளவு, குஜராத்தில் யார் எதிரி? அடிபட்டவன், என்ன தவறுகள் செய்தான்? இது பழிவாங்குதல் என்றால், பழிதான் என்ன? தொடர் தவறுகளின் ஆரம்பம் எது? மதவெறியே அடிப்படைக் காரணமென்றால், வெறியூட்டும் மதத்திலுள்ள தவறுகள் எவை? நேற்றுவரை தெருவில் சந்திக்கும்போது சிரித்துப் பழகிய பெண்ணை, இன்று துரத்திக் கற்பழிப்பதும், கொல்வதும் சாத்தியம் என்றால் அவ்வெறியை ஊட்டியது யார்? ஊக்குவிப்பது யார்?

தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும், இது குறித்து மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, கொஞ்சமாக முகம் சுளித்து, மிகக் குறைந்த அளவில் வருத்தப்படும் நடுத்தர வர்க்கத்திற்கும், இதிலுள்ள வக்கிரமும் உக்கிரமும் புரியவே செய்கிறது. வழக்கமான கோழைத்தனம் வாயை மூடிவைத்தாலும், தேர்தலில் வரக்கூடிய தைரியம் என்ன ஆனது? வெறிச் செயல்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதும், அச்செயல்களை ஊக்குவிப்பதேயாகும். நடுத்தர வர்க்கத்தின் இந்த மௌனமான மறைமுகமான ஊக்குவிப்பிற்குக் காரணம், சுயநலம் மிகுந்த அச்சம்; “ஜெயிக்கும் குதிரை மேலேயே பணம் கட்டலாமே’ எனும் சூதாட்ட மனப்பான்மை; வெல்பவன் பலசாலி – அவனை எதிர்ப்பதை விட கூட்டு சேர்ந்து கொள்ளலாமே, என்ற கோழைத்தனமான “குயுக்தி’. இந்த நடுத்தர வர்க்கமும் ஒரு கூட்டம்தான்.

மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். “தன்னலக் குறிக்கோள்’ மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், “வெறியாடும் வாய்ப்பி’லேயே விடுதலையின் திருப்தியை அடையும். ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும். இந்தக் கூட்டத்தை, ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம், வெறியலையில் ஒருநாள் சுலபமாக உள்ளிழுக்கப்பட்டுவிடும். தனி மனிதனுக்கு “தன் வீடு, தன் இடம்’ எனும் பாதுகாப்பான எல்லைகள் தேவைப்படுகின்றன. வெளியே ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது, அவனுக்குத் “தன் இடம்’ என்பதில்லாததால், ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு பயமாகவும் மாறுகிறது. இந்தப் பாதுகாப்பின்மையின் பயத்தை, அவன் கூட்டத்தின் எண்ணிக்கையில் சரி செய்ய முயலுகிறான். தன்னைப் போலவே, பல தனிமனிதர்கள் இருக்கும் கூட்டத்தாலேயே தைரியம் பெறுகிறான். கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது தனது தனித்தன்மையை மீறி, கூட்டத்தின் ஒட்டுமொத்தத் தன்மையில் கலக்கிறான். பெரும்பான்மை மக்கள் கூட்டத்தில் செம்மறியாடுகள் போலிருந்தாலும், அதில் ஒரு கும்பல் தலைவனின் கூலிப்பட்டாளமாகச் செயல்படும். இந்தக் கும்பல்தான் கொள்ளையடித்து, “யுத்தம்’ எனக் கூறி மற்றவர்களை இழுத்தும் செல்லும். எதிரியைத் தலைவனும், அவனுடைய கும்பலும் அடையாளம் காட்டும்போதே, கூட்டத்தில் “கொல்லப்படுமுன் கொல்’ எனும் ஆதி மனிதத் தற்காப்பு எண்ணம் ஊட்டப்படும். குஜராத்தில் எதிரிகளாகக் கூறப்பட்டவர்கள் கொல்ல வரவில்லை, பயந்தே ஓடினார்கள். கும்பலோடு கூட்டம் அவர்களை வேட்டையாடியது. சாதாரணக் கோழைகளுக்கு, “கூட்டம்’ ஊக்க மருந்தாக மட்டுமல்ல, பாதுகாப்புக் கவசமாகவும் மாறுகிறது.

கோழைகள் பயந்தவர்கள். “தண்டனையைத் தவிர்ப்பதே!’ அவர்களது அடிப்படை நோக்கம். ஆனால், கோழைகளுக்கு ஆசைகள் அதிகம். தண்டிக்கப்படாத வரை, எப்படியாவது ஆசைகளை அடையத் துடிப்பதே, அவர்களது சிந்தனைக்கோணம். நெறிகளின் பால், சமூகத்தின் மேல் அக்கறை என்பதை விடவும், சமூகத்தின் அனுமதியே அவர்களுக்கு முக்கியம். குஜராத்தில் அவர்களுக்கு சமூக அனுமதி, அரசியல் சலுகை, ஆசைகளுக்குத் தீனி, வெறிக்கு வடிகால், குற்றங்களுக்கு நியாயம் எல்லாமே கிடைக்கும் என்று தெரிந்த உடன், கோழைகளின் கூட்டம் “வீரர்களின் சேனை’யாகத் தன்னை நினைத்துக் கொண்டது. வெறியாட்டத்தைப் “போர்’ என்றும், அரசு பலத்தை “வீரமெ’ன்றும் கருதியவர்கள், பெருமையோடு இன்றும் திரிவது, அந்தச் சமூகம் தந்த அனுமதியோடுதான்.

அறிவும், பண்பும் இல்லாதது வீரமே அல்ல. மௌன கோழைத்தனம், இந்தப் போலி வீரத்தை மீண்டும் தூண்டும். முட்டாள்களும், கோழைகளும் இருக்கும் வரை, ஆதிக்க வெறியும், ஆணவமும் மிகுந்த அயோக்கியன் தலைவனாகவே தொடர்வான். வெறியூட்டினால், தனக்கே இறுதி வெற்றி, என்ற இறுமாப்பில், அவன் மேலும் பல திசைகளில், தன் பார்வையைத் திருப்புவான். போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் “தொற்று நோய்’ போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.

·ருத்ரன்,
மனநல மருத்துவர்.

நன்றி : தமிழரங்கம்

தமிழ் காட்சி ஊடகங்களில் காட்டப்படாத ஹஜ்-2010 காட்சிகள்.




கஃபா






அரஃபா பெருவெளி

(அரஃபாவில் நமீரா மஸ்ஜித்)


அரபாவிலிருந்து முஜ்தலிபா நோக்கி நடை பயணம்...



நவீன ஜமரா (நான்கு மாடி அடுக்குகள் + தரைத்தளம்)





















இருந்தும் சாலை எங்கும் டிராஃபிக் குறைந்த பாடில்லை...


இவ்வருட ஹாஜிகளுக்கு ஸ்பெஷல்-2 : உலகிலேயே மிக உயரமான மற்றும் பெரிய மணிக்கூண்டு.


பின்குறிப்பு:-

கல்மாடியும், சவானும், அ.ராசாவும், எடியுரப்பாவும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் மாட்டி செய்திகளின் நேரத்தை கிட்டத்தட்ட முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டுவிட, உலகச்செய்திகளுக்கு என ஒதுக்கப்பட்ட ஓரிரு நிமிடங்களில்கூட ஆங் சான் சூக்கியும், பங்கிங்ஹாம் அரண்மனை நிச்சயதார்த்தமும், சீன தீ விபத்தும், சிலநூறு மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் அமெரிக்காவில் செய்த வன்முறையும் கடந்த வாரத்தில் தமிழ் செய்தி காட்சி ஊடகங்களில் முக்கியத்துவம் தரப்பட்டுவிட... கிட்டத்தட்ட அனைத்துலக நாடுகளிலிருந்தும் முப்பது லட்சம் மக்களுக்கும் மேலே மக்காவில் ஆறு நாட்களாய் செய்த ஹஜ் என்ற மிகப்பெரும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று மிக மிக எளிதாய் தமிழ் செய்தி ஊடகங்களினால் ஒதுக்கப்பட்டது எனக்கு பெருத்த ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி அளித்தது. (போகிறபோக்கில் ஊடக செய்திநேரங்களில் கூட முஸ்லிம்களுக்கு தனி இட / நேர ஒதுக்கீடு அளிக்கக்கோரி போராடும் சூழ்நிலையும் வரலாமோ..?) அதனால் ஏற்பட்ட ஆதங்கத்தால், வேறுவழியின்றி அச்செய்திகளை தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் அறிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் என் பிளாகில்

நன்றி :
http://pinnoottavaathi.blogspot.com/ )