புதுடெல்லி,நவ.27: 2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையால் களங்கமான நரேந்திர மோடியின் இமேஜை மேம்படுத்துவதற்காக ரத்தன் டாட்டாவையும், நானோ கார் திட்டத்தையும் குஜராத்திற்கு கொண்டுவரக் காரணமாக இருந்தவர் யார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்திற்கு வருமாறு கோரி தான் அனுப்பிய ஒரு ரூபாய் எஸ்.எம்.எஸ் மூலம்தான் நானோ கார் திட்டம் என்ற இந்த அற்புதத்திற்கு பின்னணி என நரேந்திரமோடி புளங்காகிதம் அடைந்தது வடிகட்டியபொய் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ரத்தன் டாடா கூட மறுப்புத் தெரிவிக்காத நரேந்திர மோடியின் கூற்றை பொய்ப்பிக்கும் விதமாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முன்னாள் அஹ்மதாபாத் எடிசன் ரெசிடண்ட் எடிட்டர் கிங்சூக் நாக் தகவலை வெளியிட்டுள்ளார்.
மோடியைக் குறித்து மிருதுவாக எழுதவேண்டும் என இரண்டு முறை ராடியா தன்னை அணுகியதாக கிங்சூக் நாக் தெரிவிக்கிறார்.
உங்கள் ஆட்கள் நரேந்திர மோடியின் வாழ்க்கையை நரக வாழ்க்கையாக மாற்றிவிட்டார்கள் என ராடியா பரிதவிப்போடு கூறியதாகவும் நாக் தெரிவிக்கிறார்.
இதனைக்கேட்ட நாக், ராடியாவிடம் மோடியின் கட்சியை சார்ந்தவரா நீங்கள்? என கேட்டபொழுது, இல்லை ஒரு குஜராத்தி என்ற அடிப்படையில்தான் இதனைக் கூறுகிறேன் என்றாராம்.
ரத்தன் டாட்டாவிற்கும், மோடிக்கும் இடையே ராடியா தரகு வேலைப் பார்த்ததற்கான ஆதாரம் இவை. இதன் தொடர்ச்சியாகத்தான் நானோ கார் திட்டத்திற்கான பரிசீலனையில் இருந்த மகாராஷ்ட்ரா, ஆந்திரபிரதேசம்,ஹரியானா, பஞ்சாப், ஒரிஸ்ஸா உள்ளிட்ட மாநிலங்களை ஒரேயடியாக புறக்கணித்துவிட்டு டாடா, குஜராத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.
முஸ்லிம் இனப்படுகொலை நடைப்பெற்று அடுத்த ஆண்டில் 'வைப்ரண்ட் குஜராத்' என்ற நிகழ்ச்சியில் டாட்டா போதுமான அக்கறை செலுத்தவில்லை. ஆனால், 2007 ஆம் ஆண்டில், 'நீங்கள் குஜராத்தில் இல்லையெனில் நீங்கள் ஒரு முட்டாள்' என மாற்றிக் கூறுமளவுக்கு டாட்டா மாறிப்போனார்.
2008 ஆம் ஆண்டு நானோ கார் திட்டம் மே.வங்காளத்தின் சிங்கூரிலிருந்து குஜராத்திற்கு மாற்றப்பட்டது. முஸ்லிம் இனப்படுகொலையில் இழந்த இமேஜை மீட்க மோடிக்கு ராடியா அளித்த மிகச்சிறந்த வாய்ப்பாக இது அமைந்தது.
செய்தி:மாத்யமம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக