அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஒரு சிறந்த பாம்பாட்டியென கியூப முன்னாள் தலைவர் பிடெல் கஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். போர்த்துக்கலில் இடம்பெற்ற மேற்குலக நட்பு நாடுகளின் உச்சிமாநாடு ஒன்று தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். |
நேட்டோவானது இராணுவ குற்றச்செயல்கள் செய்யும் ஒரு குழு என்றே கருத முடியும். ஆப்கான் போரானது ஒரு மனிதப்படுகொலையென்றே கூறலாம். இந்நிலையில் ஆப்கானிலிருந்து அமெரிக்க படையினரை வாபஸ் பெறும் வாக்குறுதி பிற்போடலாம் என ஒபாமா அண்மையில் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு நோபல் பரிசுக்கு அடுத்தபடியாக இதுவரை யாருக்கும் கொடுத்திராத சிறந்த பாம்பாட்டிக்கான பரிசை வழங்கலா என அவர் தெரிவித்துள்ளார். 2012 இன் அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரக் ஒபாமாவை வீழ்த்தி சாரா பாலின் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்புக்கள் எழுந்த நிலையில் பிடெல் காஸ்ட்ரோவின் இக்கருத்துக்களும் முக்கியத்துவம் பெறத்தொடங்கியுள்ளன |
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
வியாழன், 25 நவம்பர், 2010
ஒபாமாவுக்கு நோபல் பரிசை போன்று சிறந்த பாம்பாட்டி விருது கொடுக்கலாம் :- பிடெல் காஸ்ட்ரோ.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக