செவ்வாய், 9 நவம்பர், 2010

கம்போடியாவில் இஸ்லாம் உயிர்த்தெழுகிறது

பாங்காக்,நவ.9:கமரூஷ் கம்யூனிஸ்டுகளின் பயங்கரவாத ஆட்சியில் தகர்ந்துபோன கம்போடியா முஸ்லிம் சமூகம் உயிர்தெழுந்துக் கொண்டிருக்கிறது.
சவூதிஅரேபியா, குவைத் போன்ற நாடுகளின் பொருளாதார உதவிகளின் காரணமாக பல பழைய மஸ்ஜிதுகள் புனர் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் புதிய மஸ்ஜிதுகள் கட்டப்பட்டு வருகின்றன.

கமரூஷ் கம்யூனிஸ்டுகளின் ஆட்சிக் காலத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தனர். சாம் என்ற பழங்குடி இனத்தை சார்ந்த முஸ்லிம்களில் 113 இமாம்களில் வெறும் 21 பேர் மட்டுமே மிஞ்சியிருந்தனர். 85 சதவீத மஸ்ஜிதுகள் தகர்க்கப்பட்டிருந்தன.

இவ்வேளையில், கம்போடியாவில் மீண்டும் இஸ்லாம் சக்திப் பெறுவதைக் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

குவைத் நாட்டின் ஜம்மியத்துல் இஸ்லாஹும், சவூதி அரேபியாவின் ஜம்மியத்துல் இகாஸாவும் தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிப்பதாகவும், அவர்கள்தான் கம்போடியாவில் மஸ்ஜிதுகள் மற்றும் மதரஸாக்கள் நிர்மாணிக்க நிதியுதவி புரிவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் இதனை கம்போடியா அரசு மறுத்துள்ளது.

ஸலஃபி அமைப்புகளும், தப்லீக் ஜமாத்தும்தான் கம்போடியாவில் புதிய சமூக விழிப்புணர்வுக்கு தலைமை வகிக்கி்ன்றனர்.

செய்தி:தேஜஸ் மாதமிருமுறை இதழ் ,

கருத்துகள் இல்லை: