திங்கள், 15 நவம்பர், 2010

நிவாரணக்குழு காஸா செல்ல எகிப்து அனுமதிக்க வேண்டும் - ஐரோப்பிய அமைப்பு

காஸா மீதான சட்டவிரோத முற்றுகையை நீக்கும் பொருட்டு 'ஹோப்'- எதிர்பார்ப்பு என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள மனிதாபிமான நிவாரண உதவிக்குழு ஈத் உல் அழ்ஹா பெருநாள் தினத்துக்கு முன்பு காஸாவுக்குள் செல்ல எகிப்திய அதிகாரத் தரப்பு அனுமதியளிக்க வேண்டும் என ஐரோப்பிய மனிதாபிமான உதவிக்கான அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை (14.11.2010) புருஸல்ஸ் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் மேற்படி அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையில்இ மனிதாபிமான நிவாரண உதவிகள் காஸா மக்களிடம் உரிய வேளையில் சென்றடைவதற்குரிய சகல வசதிகளையும் செய்து தருவதற்கு எகிப்துஇ லிபியாஇ கிரீஸ் முதலான நாடுகள் முன்வரவேண்டும் என்றும்இ குறிப்பாக தமது நிவாரணக் கப்பல் லிபிய-எகிப்தியக் கடற்பரப்பில் நிலைகொள்ளும் ஒருமாத காலத்திற்கு உரிய பாதுகாப்பினை உறுதிசெய்யவும் மேற்படி நாடுகள் முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஈதுல் அழ்ஹா பெருநாளை முன்னிட்டு எகிப்திய அதிகாரத் தரப்பு ரஃபா எல்லைக் கடவையை மூடிவிடாமல் மனிதாபிமான நிவாரண உதவிக் குழுவினரை காஸாவுக்குள் செல்ல அனுமதியளிக்க வேண்டும் என்றும்இ முற்றுகைக்குள்ளாகித் தவிக்கும் காஸா மக்கள் மிகுந்த தேவையுடையவர்களாக இருப்பதால்இ இத்தகைய நிவாரண உதவிகள் அவர்களைச் சென்றடைவது இன்றியமையாததாகும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மேலும்இ இத்தகைய நிவாரண உதவிக் குழுக்களின் நோக்கம் அநீதியான முறையில் ஐந்து வருடகாலமாகத் தொடரும் பலஸ்தீன் மக்கள் மீதான மனிதாபிமானமற்ற முற்றுகையை முறியடித்துஇ அம்மக்களுக்கு உதவுவதுதான். இத்தகைய உன்னதமான நோக்கம் நிச்சயம் அனைத்துத் தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில்இ ஈதுல் அழ்ஹா பெருநாளை முன்னிட்டு திங்கட்கிழமை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ரஃபா எல்லைக்கடவை மூடப்படும் என எகிப்திய அதிகாரத் தரப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நாட்களில் காஸாவுக்குள் செல்ல எந்தவொரு நிவாரண உதவிக் குழுவுக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என்பதில் எகிப்திய அதிகாரத் தரப்பு விடாப்பிடியாக உள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகத் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: