திங்கள், 15 நவம்பர், 2010

காரைக்ககால் நகராட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

காரைக்கால் நகராச்சியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளால் நகராச்சி நிர்வாகம் சீரழிந்து மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் காரைக்கால் நகர பகுதி சாலைகள் செப்பனிடப்படாமலும், சாக்கடைகள் உடைந்து கழிவு நீர் தேங்கி நிற்பதும், குப்பைகள் சுத்தம் செய்யபடாமலும், கொசுக்கள் அதிகரித்து வியாதிகள் அதிகமாகவும் உள்ளன, மேலும் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பதிவேடுகள் பராமரிக்கப்படாமலும் உள்ளன. ஆகவே, பிரச்சனைகளை தீர்க்க வழி வகுக்காமல் நிர்வாகம் செய்து வரும் நகராச்சி நிர்வாகத்தையும், அதனை உரிய முறையில் வழி நடத்தாமல், நகராச்சியில் இருந்து அனுப்பும் கோப்புகளுக்கு சரியான பதில் அளிக்காமலும் உள்ள புதுச்சேரி உள்ளாட்சித்துறை நிர்வாகத்தை கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் நகர சார்பாக காரைக்கால் நகராச்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் A.அக்பர் ஷா தலைமை வகித்தார், த.மு.மு.க மாவட்ட துணை தலைவர் B.ஷாஜஹான், மாவட்ட பொருளாளர் S.யூசுப் கான், மாவட்ட துணை செயலாளர் A .அப்துல் நாசர், மாவட்ட இளைஞரணி செயலாளர் M.நெய்னா முகமது, மாவட்ட மனித நேய தொழிற்சங்க செயலாளர் H.M.இக்பால், காரை நகர துணை செயலாளர் M.முகமது சர்புதீன், த.மு.மு.க நகர செயலாளர் M.முகமது நஜிமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர் A.லியாகத் அலி,மாவட்ட செயலாளர் S.T.ஆரிபு மரைக்கார், த.மு.மு.க மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம், மாவட்ட துணை செயலாளர் M.A. ஹாஜா நஜிமுதீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். கண்டன ஆர்ப்பாட்டதில் த.மு.மு.க மாவட்ட துணை செயலாளர் A.முகமது தாரிக், மாவட்ட மாணவரணி செயலாளர் S.நியாஜ் அகமது, மாவட்ட மருத்துவசேவை அணி செயலாளர் M.முகமது ஜியாவுதீன், மாவட்ட மனித உரிமை மற்றும் சுற்றுப்புற சூழல் அணி செயலாளர் E.M.சபுருதீன், நகர மனிதநேய தொழிற்சங்க செயலாளர் S.ஜெஹபர் சாதிக், நகர மனிதநேய வர்த்தகர் சங்க செயலாளர் S.முகமது இஸ்மாயில், நகர வார்டு தலைவர் A.ஜாகிர் ஹுசைன், M.ஹாஜா பாருக், A.பைசர் ரஹ்மான், S.அப்துல்காதர், நகர வார்டு செயலாளர் M.காதர் சாஹிப் , M.சுல்தான் அப்துல்காதர், J.முகமது அசனுதீன், S.முகமது இப்ராகிம், P.ஹாஜா மொய்தீன் முன்னால் மாவட்ட மனித உரிமை அணி செயலாளர். உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் காரைக்கால் நகர பொருளாளர் H .ஹசனுதீன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை: