சவுதி அரேபியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சவுதி அரேபியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 நவம்பர், 2010

தமிழ் காட்சி ஊடகங்களில் காட்டப்படாத ஹஜ்-2010 காட்சிகள்.




கஃபா






அரஃபா பெருவெளி

(அரஃபாவில் நமீரா மஸ்ஜித்)


அரபாவிலிருந்து முஜ்தலிபா நோக்கி நடை பயணம்...



நவீன ஜமரா (நான்கு மாடி அடுக்குகள் + தரைத்தளம்)





















இருந்தும் சாலை எங்கும் டிராஃபிக் குறைந்த பாடில்லை...


இவ்வருட ஹாஜிகளுக்கு ஸ்பெஷல்-2 : உலகிலேயே மிக உயரமான மற்றும் பெரிய மணிக்கூண்டு.


பின்குறிப்பு:-

கல்மாடியும், சவானும், அ.ராசாவும், எடியுரப்பாவும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் மாட்டி செய்திகளின் நேரத்தை கிட்டத்தட்ட முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டுவிட, உலகச்செய்திகளுக்கு என ஒதுக்கப்பட்ட ஓரிரு நிமிடங்களில்கூட ஆங் சான் சூக்கியும், பங்கிங்ஹாம் அரண்மனை நிச்சயதார்த்தமும், சீன தீ விபத்தும், சிலநூறு மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் அமெரிக்காவில் செய்த வன்முறையும் கடந்த வாரத்தில் தமிழ் செய்தி காட்சி ஊடகங்களில் முக்கியத்துவம் தரப்பட்டுவிட... கிட்டத்தட்ட அனைத்துலக நாடுகளிலிருந்தும் முப்பது லட்சம் மக்களுக்கும் மேலே மக்காவில் ஆறு நாட்களாய் செய்த ஹஜ் என்ற மிகப்பெரும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று மிக மிக எளிதாய் தமிழ் செய்தி ஊடகங்களினால் ஒதுக்கப்பட்டது எனக்கு பெருத்த ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி அளித்தது. (போகிறபோக்கில் ஊடக செய்திநேரங்களில் கூட முஸ்லிம்களுக்கு தனி இட / நேர ஒதுக்கீடு அளிக்கக்கோரி போராடும் சூழ்நிலையும் வரலாமோ..?) அதனால் ஏற்பட்ட ஆதங்கத்தால், வேறுவழியின்றி அச்செய்திகளை தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் அறிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் என் பிளாகில்

நன்றி :
http://pinnoottavaathi.blogspot.com/ )

புதன், 15 செப்டம்பர், 2010

சவூதியுடன் அமெரிக்கா 600 கோடி டாலர் ஆயுத ஒப்பந்தம்

வாஷிங்டன்,செப்.14:சவூதி அரேபியாவுடன் 600 கோடி டாலர் ஆயுத ஒப்பந்த திட்டத்திற்கு தயாராகிறது அமெரிக்கா.

ஏறத்தாழ 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் இத்திட்டத்தால் தளர்ந்து போயிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு புத்துணர்வு அளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அமெரிக்க அரசு.

நவீன தொழில்நுட்பம் கொண்ட போர் விமானங்களும், ஏவுகணை எதிர்ப்பு கருவிகளையும் அமெரிக்கா சவூதிக்கு விற்கும். இந்த ஒப்பந்தைத் தொடர்ந்து ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் ஏற்படும் என்ற பெயரில் சவூதியின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பை முன்னேற்றம் அடையச் செய்வதும் இத்திட்டத்தில் உள்ளது.

வால்ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஆயுத ஒப்பந்தத்தின் மூலம் ஈரானுக்கெதிரான அரபு சமூகத்தின் ஆதரவை அதிகரிப்பது அமெரிக்காவின் லட்சியமாகும் என அச்செய்திக் கூறுகிறது. இவ்விவகாரத்தில் அமெரிக்க காங்கிரஸ் சில வாரங்களுக்குள் அனுமதி அளிக்கும் எனவும் அப்பத்திரிகைச் செய்திக் கூறுகிறது.

அதேவேளையில், இவ்வொப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஆதரவு எம்.பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்த பொழுதிலும் போர் விமானங்களில் நீண்டதூர தாக்குதல்களுக்குரிய வசதிகள் இல்லாததால் எதிர்ப்புகள் அடங்கிப்போயின.

84-எஃப் 15 போர் விமானங்கள், இதன் அப்க்ரேட் செய்யப்பட்ட விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளை அமெரிக்கா சவூதிக்கு விற்கும். ஏற்கனவே, இஸ்ரேல் நவீன தொழில்நுட்பங்கொண்ட எஃப்-35 என்ற விமானங்களுக்காக அமெரிக்காவுடன் இஸ்ரேல் ஒப்பந்தம் செய்துள்ளது.

ரேடார்களின் கண்ணில் படாமல் தாக்குதல் நடத்தும் தன்மைக் கொண்ட எஃப்-35 போர் விமானம், பெரும்பாலும் ஈரானின் அணு சக்தி செயல்பாடுகளை கண்காணிக்கவேண்டிதான் இஸ்ரேல் வாங்குகிறது.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

மெக்காவில் உலகின் மிகப்பெரிய கடிகாரம்

மெக்கா,ஆக12:முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவில் உள்ள பிரமாண்டமான கட்டிடத்தில் உலகின் பெரிய கடிகாரம் பொருத்தப்பட்டு உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

புனித மாதமான இந்த ரமலான் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து இது முறைப்படி இயக்கி வைக்கப்படும் எனத் தெரிகிறது.

நான்கு பக்கமும் கடிகாரம் இயங்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. 601 மீட்டர் உயரம் உள்ள கடிகார டவரில் பொருத்தப்பட்டுள்ள இந்த கடிகாரத்தின் உயரம் மட்டும் 251 மீட்டர் ஆகும். இஸ்லாமிய பாரம்பரிய கலையை வெளிப்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சனி, 3 ஜூலை, 2010

சவுதி அல்ஹஸா மாநகர தமுமுக பொதுக்குழு



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சவுதி அரேபியா அல்ஹஸா மாநகர பொதுக்குழு கூட்டம் மாநகர தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை முதல் மாலை வரை மார்க்க அரங்கம், சமுதாய அரங்கம் - அரசியல் அரங்கம் என பிரிவுகளாக நடைப்பெற்றது தலைமையுரையாற்றி பேசிய தமுமுக மாநகர தலைவர் சகோ.அஹமது சுகர்னோ, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக விளங்கும் தமுமுக பணிகள் இன்னும் சிறப்பாக நடைப்பெற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து வரவேற்புரையாற்றிய சகோ. லால்பேட்டை அமானுல்லாஹ் தனது உரையில், வெளிநாட்டு வாழ்க்கையில் பொருள் ஈட்டுவது மட்டுமே ஒரே குறிக்கோள் என்றில்லாமல், சமுதாயத்திற்கான தேவைகளில் ஒவ்வொருவர்களின் பங்களிப்பினையும் தனது உதவும் கரங்களை கொண்டு அழுத்தமாக நல்கி வரும் இயக்கம் தமுமுக தான் என்று குறிப்பிட்டார்.

மார்க்க அரங்கத்தில் முதல் நிகழ்ச்சியாக, “தியாகம் – ஓர் இஸ்லாமிய பார்வை” என்ற தலைப்பில் உரையாற்றிய மவ்லவி. அப்துல் ஹக் ஜமாலி, மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான், தியாகம் என்பதே இங்கே சுயநலன் சார்ந்து தான் இருக்கிறது, இந்த உலகில் செய்யப்படும் தியாகங்கள் என்ற பெயரில் செய்யப்படும் தியாகங்கள் எல்லாமே தியாகம் அல்ல. தியாகம் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகவே வாழ்ந்தவர்கள் ஸஹாபாக்கள் தான் என்றார்.

தொடர்ந்து, இஸ்லாம் வலியுறுத்தும் சமத்துவம் – சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றிய தமுமுக அப்கேக் நகர பொருளாளர் சகோ. அப்கேக் அப்துல் மூமின், “இஸ்லாமியர்களிடையே தொழுகையில் இருக்கும் சமத்துவம், மற்ற விஷயங்களில் இல்லாமல் போனது ஏன்?” என்று வினா எழுப்பி அனைவர்களின் சிந்தனையும் தூண்டினார். மேலும் இஸ்லாம் வலியுறுத்தும் கொள்கைகள் எல்லாம் பின்பற்றுவதற்காக தான், புறக்கணிப்பதற்காக அல்ல என்றும் வலியுறுத்தினார்.

மார்க்க அரங்கின் நிறைவுப் பகுதியாக ஒளுச் செய்வது எப்படி என்று செயல் விளக்கப் பயிற்சியினை தமுமுக அல்ஹஸா மாநகர தலைவர் சகோ.அஹமது சுகர்னோ செய்து காட்டினார். தொடர்ந்து உறுப்பினர்களும் ஒளுச் செய்வது குறித்து சிறப்பாக செய்து காட்டினர்.

ஜும்ஆ பேருரை நிகழ்த்திய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி, மறுமையில் சுவனத்தில் நுழைவது மட்டுமே வெற்றி, சுவனத்தில் நுழைபவர்களே வெற்றியாளர்கள் என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவுச் செய்தார்.

உணவு இடைவேளைக்கு பிறகு கூடிய இரண்டாம் அமர்வில் சிறப்புரையாற்றிய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் சகோ.அப்கேக் அப்துல் அலீம், தனது உரையில், “ இந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு அடிப்படையே குர்ஆன் – ஹதீஸ் தான். இன்று தமிழகத்தில் சமுதாய மக்களிடையே இருக்கும், பாதுகாப்பு உணர்வு, தமுமுக துவங்கப்படுவதற்கு முன் இல்லை என்றார்.

நமக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளுக்காக ஆட்சியாளர்களின் கவனத்தினை ஈர்ப்பதற்காக போராட்டம், மறியல், தர்ணா போன்ற அறவழி போராட்டங்கள் எல்லாம் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை, ஒருவர் தவறாக கைது செய்யப்பட்டால் நீதிமன்றங்களை அணுகுவது எப்படி, காவல்துறை - அரசு அதிகாரிகளை அணுகுவது எப்படி போன்ற அடிப்படை விஷயங்களை கூட மக்கள் தெரிந்திராமல் இருந்தனர். அல்ஹம்துலில்லாஹ், தமுமுக-வின் வருகைக்கு பிறகே மக்கள் இதுப்போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டனர்.

வாழ்வில் தன்னுடைய வறுமையை எதிர்த்து போராடும் அதேவேளையில் சமுதாயத்திற்காக தமிழ்நாட்டில் களத்தில் நின்று போராடி இரத்தம் சிந்தவும் தயாராக இருக்கும் போராளிகளின் உழைப்பினை வெளிநாடு வாழ் தமிழர்களாகிய நாம் பெரிதும் மதித்து அவர்களுக்கு உதவ வேண்டும்.

நம் சமுதாய அக்கறை இல்லாமல் சுயநலவாதிகளால் கொல்லப்பட்டு உயிரிழந்தவர்கள் எல்லாம் நம் சொந்தம் தான். அவர்களுக்கு உதவுவது நமது கடமை என்றார். வருங்கால தலைமுறை நிம்மதியாக இருக்க தமுமுக-வின் செயல்பாடுகளே காரணம் என்று குறிப்பிட்டு , அனைவர்களின் சிந்தனையையும் தூண்டி உரையினை நிறைவுச் செய்தார்.

“அரசியல் அரங்கில் நிறைவுரையாற்றிய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி,. ம.ம.க-வின் ஒவ்வொரு அசைவும் மற்ற கட்சிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.

கல்வி கற்பதற்கு இஸ்லாமியர்கள் லாயக்கு இல்லை என்று ஆதிக்க சக்திகளால் செய்யப்பட்டிருந்த தப்பான கற்பிதம் நெல்லை மாணவியின் ஜாஸ்மின் செய்த சாதனை மூலம் நொறுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி, அதிகாரம் எல்லாம் நம்மிடையே வருவதற்கு நிறைய ஆட்சிப் பணி அதிகாரிகள் உருவாக வேண்டும், அதற்காக தமுமுக கடுமையாக உழைக்கிறது.

தமுமுக-வின் செய்தித்தாளான மக்கள் உரிமை விற்பனையில் தொய்வு ஏற்பட அனுமதிக்க கூடாது, விற்பனையை அதிகரிக்கும் பொறுப்பு ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் உண்டு.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கான இயக்கம் என்று இல்லாமல் சமூகம் தாண்டிய சேவைகளை புரிவதில் ம.ம.க. முன்ணணியில் இருக்கிறது என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவு செய்தார்.

இறுதியாக சுபஹான் நன்றியுரையாற்றினார். பொதுக்குழு கூட்ட அரங்க ஏற்பாடுகளை குன்னம் ராஜ் முஹம்மது, ஆயங்குடி அப்துஸ் ஸலாம் ஆகியோரும், உணவு ஏற்பாடுகளை கொள்ளிடம் அப்துல் ரஹ்மான், கந்தகுமாரன் அமானுல்லாஹ், இராஜகெம்பீரம் சிக்கந்தர், பாட்சா பின்னத்துர் முஹம்மது ரஃபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஞாயிறு, 27 ஜூன், 2010

நர்ஸிங் படித்த பெண்களுக்கு சவுதியில வேலைவாய்ப்பு

சவுதி அரேபிய சுகாதார அமைச்சக அரசு மருத்துவமனையில் பணிபுரிய 40 வயதுக்குட்பட்ட பி.எஸ்ஸி. நர்ஸிங் தேர்ச்சி பெற்ற பெண்கள் தேவைப்படுவதாக வெளிநாடு வேலைவாய்ப்பு நிறுவன முதன்மை செயலர் குத்சியாகாந்தி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: சவுதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில்,இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன், 40 வயதுக்குட்பட்ட பி.எஸ்ஸி., நர்ஸிங் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்களுக்கான நேர்முக தேர்வு சவூதி அமைச்சக தேர்வுக்கு ழுவினரால் ஜூலை மூன்றாவது வாரத்தில் டில்லி மற்றும் கொச்சியில் நடக்கிறது.

தகுதியுடைய மனுதாரர்கள் விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்கள்,வெள்ளை பின்னணியில் எடுக்கப்பட்ட பத்து புகைப்படங்களை இணைத்து, 48,முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை என்ற, முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். 044-24464268, 24467562 ஆகிய ஃபோன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

புதன், 16 ஜூன், 2010

யு.எஸ்,இஸ்ரேல் ஆகிய நாடுகள் சவூதிக்கும் எதிரி!

ஈரானை தாக்குவதற்காக இஸ்ரேலிற்கு சவூதி இடம் அளிக்கவுள்ளதாக கடந்த வாரம் ‘டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, ஈரான் அதிபர் அஹ்மத்நிஜாத் டெஹ்ரானிற்கான சவூதி அரபிய தூதரை சந்தித்து பேசினார்.

இச்சந்திப் பிறகு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஹ்மத் நிஜாத், 'சவுதியுடனான ஈரானிய உறவுகளில் பிளவு ஏற்படுத்துவதற்காகவே இது போன்ற முயற்சிகளில் யு.எஸ். மற்றும் இஸ்ரேல் நாடுகள் இறங்கியுள்ளன என்றார்.

இந்த பொய்யான கூற்றின் மூலம் ரியாத்துடனான டெஹ்ரானிய தொடர்புகளை துண்டிப்பதற்கு அவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் தீங்கு விளைவிப்பதே யு.எஸ். மற்றும் இஸ்ரேலின் நோக்கம். சவூதியும் ஈரானும் நல்ல உறவுகளை மேற்கொண்டு இந்நல்லுறவின் மூலம் எதிகளின் முஸ்லீம்களுக்கெதிரான போக்கை முறியடிக்க வேண்டும் என்று ஈரான் அதிபர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக ‘டைம்ஸ்’ நாளிதழில் இச்செய்தி வெளியான உடனேயே சவூதி வெளியுறவுத்துறை இச்செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தது.

ஈரானிய அணுஆயுதத் தளங்களை இஸ்ரேல் தாக்கியேத் தீரும் என்று இஸ்ரேல் கூறிவரும் நிலையில், ஈரானிற்கெதிராக தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு தக்க பதிலடிக் கொடுப்போம் என்று ஈரானும் பதிலத்துள்ளது.
Press TV

திங்கள், 14 ஜூன், 2010

ஈரானுக்கு எதிரான வான் வழித் தாகுதல்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் செய்திக்கு சவுதி அரேபியா மறுப்பு

ரியாத்:ஈரானை தாக்குவதற்கு தனது வான் பகுதியை இஸ்ரேல் பயன்படுத்த சவுதி அரேபியா அனுமதி அளிக்கும் என்பது அவதூறான செய்தி என சவுதி தெரிவித்துள்ளது.

ஈரானின் அணு சக்தி திட்டத்தின் மீதான துவேசத்தின் காரணமாக ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு வளைகுடா நாடுகள் ஆதரவளிக்காது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் .

"சவுதி அரேபியா ஈரானுக்கு எதிரான இராணுவ் நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலுடனோ அல்லது வேறு எந்த நாட்டுடனவோ ஒத்துழைப்பு தராது. ஈரானின் நெருக்கடியான நிலைக்கு நாங்கள் முன்பே அமைதியான தீர்வை பரிந்துரைத்தோம்". என கிங் சவுதி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் ஹமத் கல்ப் நியூஸிற்க்கு அளித்த செய்தியில் தெரிவித்தார்.

"ரியாத் இஸ்ரேலின் ஜெட் போர் விமானங்களை சவுதியின் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்கும். டேல் அவிவ் ஈரானின் அணுசக்தி உலைகள் மீது தாக்குதல் நடத்த முடிவெடுத்தால் சவுதியின் வான்வெளியை இஸ்ரேலின் போர் விமானங்கள் பயன்படுத்த அனுமதி அளித்து விட்டது மேலும் வேறு வழிகளும் ஆராயப்படும்." என சவுதி மற்றும் அமெரிக்க பதுகாப்பு அதிகாரிகள் கூறியதாக டைம்ஸ் நாளிதழ் அறிக்கை ஒன்றில் மேற்கோள்காட்டி உள்ளது.

ஆதரவு இல்லை: இஸ்ரேலின் போர் விமானகள் ஈரான் வரை தொடர்ந்து பறக்க முடியும் அப்போது எதீனுக் போர் விமானத்தை சுட்டு வீழ்த்த வாய்ப்பு உள்ளதா என முன்பே பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அமெரிக்கா உடனான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இது செய்து முடிக்கப்பட்டது. என பெயர் வெளியிடாத ஒரு சவுதி அதிகாரி தெரிவித்தார்.

எது எப்படியானாலும் வளைகுடா நாடுகள் ஈரான் மீதும் அதன் திட்டங்கள் மீதும் அக்கறை கொண்டு தொடர்ந்து செயல்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ரைத் கவாஜி என்ற துபையைச் சார்ந்த நியர் ஈஸ்ட் அண்ட் கல்ப் மில்லிடரி அனலைஸின் தலைவர், 'ஈரான்- அமெரிக்கா இடையேயான போராட்டம் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஈரானை தாக்குவதற்கு சவுதி -இஸ்ரேல் இடையேயான ஓத்துழைப்பு தேவை இல்லாதது.

மேலும் ஈரானின் நான்கு அணு உலைகளை தாக்குவதற்கு இஸ்ரேலால் முடியும். அதற்க்கான ஆற்றலை அது பெற்றுள்ளது. இஸ்ரேலின் ஏவுகணை தாங்கிய டால்பின் நீர்மூழ்கி போர் கப்பல்கள் ஈரானின் அணு உலைகளை தாக்கும் சக்தி படைத்தவை .

எதிர் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இஸ்ரேலின் மூன்று நீர்மூழ்கி போர்கப்பல்கள் வளைகுடா நீர் பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதோடு ரேடார் கண்காணிக்கும் கருவியில் இருந்து தப்பிக்கும் திறனும். செங்கடல் முழுவதும் பறக்கும் அளவுக்கு எரிபொருளால் நிரப்பி கொள்ளும் வசதியையும் இஸ்ரேல் கொண்டுள்ளது'என்று ரைத் கவாஜி கூறினார்.

வளைகுடா பேச்சுவார்த்தை மைய அபுதாபியின் தலைவர். 'வளைகுடா பகுதியில் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் ஒரு அபாயகரமான சூழல் நிலவுகிறது இதன் பயன்பாட்டை இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்ப்பு உள்ளது. ஆனால் வளைகுடா நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் என்று அர்த்தம் இல்லை' என அவர் தெரிவித்தார்.