இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
செவ்வாய், 29 மார்ச், 2011
திங்கள், 28 மார்ச், 2011
துரோகத்தின் பரிசு தோல்வி...!!!
thanks : நிதர்சனங்கள்
source : http://vengai2020.blogspot.com/2011/03/blog-post_26.html?spref=fb
சனி, 26 மார்ச், 2011
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ம.ம.க வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி போட்டியிடுகின்றார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலில் ஜும்மா தொழுதுவிட்டு தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் சென்னை மாநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர் பாஸ்கரன் அவர்களிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வரவேற்புடன் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி இன்று பகல் 3 மணியளவில் மனு தாக்கல் செய்தார்.
முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகள் : முலாயம் வலியுறுத்தல்
புதுடெல்லி:நாடாளுமன்றத்திலும்,சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து,இன்று மக்களவையில் விவாத நேரத்தின்போது அவர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்;”மக்களவையில் முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. முக்கியமான 14 மாநிலங்கள் சார்பாக மக்களவைக்கு 257 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லீம்.
ஆகவே இந்த நிலை மாற வேண்டுமானால்,மக்களவையிலும்,மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்.” என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும்-ஜெ (Video)
புதன், 23 மார்ச், 2011
முஸ்லிம் சமுதாயம் அப்துல்லாஹ்வைத் தவறாகப் பயன்படுத்துகிறதா?
|
முஸ்லிம் சமுதாயம் அப்துல்லாஹ்வைத் தவறாகப் பயன்படுத்துகிறதா?
"பெரியார்தாசன் அப்துல்லாஹ்வாக மாறி ஓராண்டு ஆகிவிட்டது. அவர் இஸ்லாத்திற்கு வந்ததில் இருந்து இன்றுவரை அவர் முஸ்லிம்கள் மத்தியிலேயே ‘பிசி’யாக இருக்கிறார். இது அப்துல்லாஹ் என்கிற ஆளுமையின் தவறா? அல்லது அப்துல்லாஹ்வைத் தவறாகப் பயன்படுத்தும் முஸ்லிம் சமூகத்தின் தவறா? ஏனெனில் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) ஒரு போர்க்கருவி. அந்தக் கருவியைப் பொதுக்களத்திலும், அறிவுத்தளத்திலும் பயனுள்ள வகையில் பயன்படுத்தாமல் புழக்கடையில் போட்டு வைத்திருக்கிறது முஸ்லிம் சமுதாயம்... '" இப்படி ஓர் அபாண்டமான குற்றச்சாட்டை முஸ்லிம் சமுதாயத்தை நோக்கி வீசியிருக்கிறார் அன்புச் சகோதரர் ஆளூர் ஷாநவாஸ். (சமநிலைச் சமுதாயம் மார்ச், 2011) ‘புழக்கடையில் போர்க்கருவி’ எனும் தலைப்பிட்ட அவருடைய நீ.....ண்ட ஏழு பக்கக் கட்டுரை அப்துல்லாஹ் பற்றிய திறனாய்வு மட்டுமே இருக்கும் என நினைத்து ஆவலுடன் படித்தால் குழப்பமே மிஞ்சியது. 1. பெரியார்தாசனும் முஸ்லிம் சமூகமும்.
2. இஸ்லாமிய அமைப்புகளும் அழைப்புப் பணியும் 3. அழைப்பப் பணியும் முஸ்லிம்களும் 4. களப்பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால் 5. இஸ்லாத்தைத் தழுவி வந்தோரின் சிக்கல்கள் என ஐந்து தலைப்புகளில் நிதானமாகத் தொலைநோக்குடன்; எழுதவேண்டிய ஆக்கங்களை ஒரே கட்டுரையில் அவசர அடியாகப் போட்டு குழப்பியுள்ளார். பெரியார்தாசன் அப்துல்லாஹ்வாக மாறியது கண்டு முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சியடைந்தது உண்மைதான். அதைத்தவறு என்று சொல்ல முடியாது. நாடறிந்த பன்முக ஆளுமை கொண்ட ஒருவர் இறைநெறியை ஏற்றுக்கொண்டபோது அவரை நெஞ்சிலே ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து வரவேற்றதில் என்ன தவறு கண்டுவிட்டார் ஷா நவாஸ்? ‘அப்துல்லாஹ்வாக மாறியதிலிருந்து அவர் முஸ்லிம்கள் மத்தியிலேயே ‘பிசி’யாக இருக்கிறார், இது யாருடைய தவறு?’ என்று வினவுகிறார் ஆளூரார். இது ஒரு குழப்ப வினா. முஸ்லிமான பிறகு முஸ்லிம்கள் மத்தியில் இருக்காமல் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் யூதர்கள் மத்தியிலுமா போய் இருக்க முடியும்? கூட்டங்களில் கலந்துகொள்ளும்படி முஸ்லிம்கள் அன்போடு அழைக்கும்போது அப்துல்லாஹ் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதிலோ, முஸ்லிம்கள் மத்தியில் தம் பட்டறிவைப் பகிர்ந்து கொள்வதிலோ, அதன் மூலம் சமுதாயத்தினருக்கும் களப்பணியாளர்களுக்கும் சில புதிய வெளிச்சங்களைக் காட்டுவதிலோ தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ‘முஸ்லிம் சமுதாயத்தில் இந்துத்துவாவைக் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள ஆளுமைகள் எவரும் இல்லை. அந்தப் போதாமையைப் போக்கும் வகையில் வந்திருக்கும் பெரியார்தாசனுக்கு, இந்துத்துவாவுக்கு எதிரான தளத்தை முஸ்லிம் சமுதாயம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்’ என்கிறார் ஆளூர் ஷாநவாஸ். இதற்குப் பெயர் ஆலோசனையல்ல, அபத்தம். இந்துத்துவாவைக் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள தேசிய அளவிலும் மாநில அளவிலும் முஸ்லிம் அறிஞர் பெருமக்கள் பலர்; உள்ளனர். அந்தப்பட்டியல் நீளமானது. அவ்வளவு ஏன், சமநிலைச் சமுதாயத்தின் பத்தி எழுத்தாளரான மதிப்பிற்குரிய தோழர் அப்துல் அஜீஸ் பாகவியிடம் சொல்லிப் பாருங்கள் இந்துத்துவவை நார் நாராய் கிழித்துத் தோரணம் கட்டிவிடுவார். இன்னொன்று; கண்டு மிரளும் அளவுக்கு இந்துத்துவா ஒன்றும் பெரிய சித்தாந்தமோ தத்துவதோ அல்ல. அந்த கொள்கையை எதிர்ப்பதுதான் நோக்கம் எனில் அதற்கு ‘அப்துல்லாஹ்வாக’ மாறவேண்டிய அவசியமும் இல்லை. பேராசிரியர் அப்துல்லாஹ்வை முஸ்லிம் சமுதாயம் எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தவுமில்லை. தவறாகப் பயன்படுத்தும் அளவுக்கு பேராசிரியர் அப்துல்லாஹ் எடுப்பார் கைப்பிள்ளையும் அல்லர் என்பதை இப்போதைக்கு சொல்லி வைக்கிறோம். - சிராஜுல் ஹஸன் நன்றி: சமரசம், 16-31 மார்ச் 2011
முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு கேள்வி: இன்னும் எவ்வளவு காலத்திற்கு அவரை பெரியார்தாசன் என்றே அழைத்துக் கொண்டிருப்பீர்கள் ?! ''அப்துல்லாஹ்'' என்றே அழையுங்கள் மக்களுக்குப்புரியாமல் இருக்காது. பெயர்களிலேயே மிகவும் சிறப்பிற்குறிய பெயரன அப்துல்லாஹ் - 'அல்லாஹ்வின் அடியார்' எனும் பெயரை பயன்படுத்துவதை விட்டுவிட்டு திரும்பத்திரும்ப அவரை பெரியார்தாசன் என்று அழைப்பது முஸ்லிம்களின் பலவீனம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு அறிமுக அடையாளத்திற்கு ஆரம்பத்தில் பயன்படுத்தியதை இனியும் தொடர்வது சரியல்ல.உதாரணமாக உலகக்குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலீ இஸ்லாத்தைத்தழுவிய ஆரம்ப நாட்களில் அவரை அவரது பழைய பெயரான ''கேஷியஸ் கிளே'' என்று எவெரேனும் அழைத்தால் அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். ''ஒரு அடிமைத்தனமான பெயரில் என்னை அழைக்காதீர்கள், முஹம்மது அலீ (புகழுக்குறிய உயர்ந்தவர்) என்றே அழையுங்கள்'' என்று அவர் ஓங்கி ஒலித்ததை நினைவுபடுத்திக்கொள்வோம். குத்துச்சண்டையின்போது சில வீரர்கள் அவரை பழைய பெயரில் அழைக்கும்போது அவர்களிடம் 'என்னுடைய பெயர் முஹம்மது அலீ' என்று சொல்லியே எதிரிகளை ஓங்கி ஓங்கி குத்துவிட்டார் என்பது அக்காலத்தின் பிரபலமான செய்தி. இன்று அவரை கேஸ்ஷியஸ் கிளே என்று அழைப்பவர் எவரும் இல்லை. ஆகவே, இனி அப்துல்லாஹ்வை அப்துல்லாஹ் என்றே அழைப்போம். -thanks : nidur.info source : www.nidur.info |
திங்கள், 21 மார்ச், 2011
தமிழகத்தில் தொடரும் காவல் துறை ஆரஜகம்!!
கடந்த 2010 டிசம்பர் 6 முதல் 2011 ஜனவரி 30-ஆம் தேதி வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பாப்ரி மஸ்ஜித் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தியது. தமிழகத்திலும், நூற்றுக்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தியாவின் இரு பெரும் பயங்கரவாதச் செயல்கள், ஒன்று தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படுகொலை. இரண்டாவது மாபெரும் வரலாற்றுச் சின்னமும், முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமுமான இறையில்லம் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பட்ட நிகழ்வுமாகும்.
இந்த இருபெரும் பயங்கரவாதச் செயல்களைக் குறித்த தகவல்களை தமிழக மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நிறைவுதினமான ஜனவரி-30-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆனால், இந்த பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டத்திற்கு அன்றைய தினம் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்ததோடு மீறி பேரணி நடத்த முயன்ற பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் அஹ்மது பஹ்ருத்தீன் உட்பட பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோரை கைது செய்தது.
அதனைத் தொடர்ந்து காவல்துறையின் இந்த அராஜகத்தை கண்டிக்கும் விதமாகவும், திண்டுக்கல் காவல்துறையின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்தும் மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான எதிர்ப்பை பதிவுச் செய்யும் விதமாகவும் இன்று(20.03.2011) திண்டுக்கல் பேகம்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுச் செய்திருந்தது.
ஆனால், பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் தடைச் செய்த காவல்துறை பேரணி செல்ல முயன்ற மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல், செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான ஏ.முஹம்மது யூசுஃப், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஏ.கைஸர் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் நூற்றுக்கணக்கானோரை கைதுச் செய்துள்ளது.
காவல்துறையின் இச்செயலை கண்டித்த பாப்புலர் ஃப்ரண்டின் மாநிலத் தலைவர் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும் திண்டுக்கல் காவல்துறையின் இச்செயலை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. நீதிக்கான போராட்டத்திலும், காவி பயங்கரவாதத்தை மக்களிடையே தோலுரித்து காட்டும் முயற்சியிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இக்கைது நடவடிக்கையை கண்டித்து மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் திட்டமிட்டுள்ளது என்பதை உளவுத்துறை மூலம் அறிந்ததையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 1)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, 2)ஆம்பூர் 3) இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இராமநாதபுரத்தில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் எம். தமிமுன் அன்சாரி, ஆம்பூரில் அஸ்லம் பாட்ஷா ஆகியோர் போட்டியிடுவார்கள்.
-ம.ம.க தலைமையகம்
ஞாயிறு, 20 மார்ச், 2011
முஸ்லிம் அமைப்புகளுடன் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு சட்டமன்றத் தேர்தலுக்கு ஆதரவு திரட்டினர்
சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், அதிமுக கூட்டணிக்கும் ஆதரவு கோரி பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் ஆகியோர் சந்தித்து வருகிறார்கள்.
கடந்த 4.3.2011 அன்று பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். 5.3.2011 அன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம் ஆகிய அமைப்புகளின் தலைவர்களை ம.ம.க. தலைமை நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டினர்.
5000 முஸ்லிம்களை கொலைச்செய்ய திட்டமிட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் – சி.பி.ஐ
ஹைதராபாத்:இந்தியாவில் 5000 முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்ய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நம்பள்ளி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 76 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசியத் தலைவர் இந்திரேஷ் குமாரின் தலைமையில் கடந்த 2006-ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி குஜராத் சமாஜம் கெஸ்ட் ஹவுஸில் கூடிய கூட்டத்தில் இதற்கு தேவையான திட்டங்கள் தீட்டப்பட்டதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான சுனில் ஜோஷி, ராம்ஜி கல்சங்கரா, லோகேஷ் சர்மா, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோர் இந்த சதி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
முஸ்லிம்கள் அதிகமாக திரளும் வழிப்பாட்டுத் தலங்களைத்தான் இவர்கள் குறிவைத்துள்ளார்கள். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கான பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆயுதங்களை சேகரிப்பதற்கான பொறுப்பு கல்சங்கரா மற்றும் லோகேஷ் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சுனில் ஜோஷிக்கு நிதியை திரட்டுவதற்கான பொறுப்பு. ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி கலவை வெடிக்குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டதையும் சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.
மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா, மலேகான் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் இத்திட்டத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகிறது.
source : http://www.thoothuonline.com/
உலகின் ஒரே 'கையெழுத்துப்பிரதி தினசரி'... இன்னும் சென்னையில்..!
பின்னாளில், அதே போன்ற அச்சு, அப்புறம் கணிணி 'ஃபான்ட்கள்' என வந்ததனால் நாளடைவில் இதனை தொழில் முறையாக எழுதுபவர்களான 'calligraphers' என்று அழைக்கப்பட்டவர்களும் காணமால் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மற்ற மொழிகளை விட அரபி, உருது மற்றும் சீன எழுத்துக்கள் இந்த calligraphy அடிப்படையில் எழுதுவதற்காகவே அமைந்தது போன்ற எழுத்துக்களானதால் இம்மொழிகளில் மட்டும் இன்னும் இவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். என்னுடன் பணிபுரியும் ஒரு சவூதிக்காரர், ஒரு ' வனப்பெழுத்தர் '. (அதாவது...Colligrapher). அதற்கென்றே உரிய பேனாக்களை வைத்து எல்லார் லாக்கர் கதவுகளிலும், சேஃட்டி ஹெல்மெட்டுகளிலும், கோப்புகளின் அட்டைகளிலும் அவரவர் பெயர்களை ஆர்வத்துடன் தானாகவே அச்சு எடுத்தது போல மிக அழகாக அரபியில் 'வரைந்து' தள்ளுவார்..!
'பத்திரிக்கை உலகில் குறிப்பாக அச்சுத்துறையில் இவ்வளவு தொழில்நுட்பப்புரட்சி ஏற்பட்டபின்னும் ஏன் இப்படி பழங்கால வழக்கத்தில் இன்னும் கையால் தினசரிகளை எழுதுகிறீர்கள்..?' என்று இவர்களை கேட்டால்..." உருது மொழியை கையால் எழுதுவது என்பதே ஒரு சிறந்த கலை; அதை நாங்கள் விரும்பி ஏற்று ரசித்து செய்கிறோம்" என்கிறார்கள்..!
source : http://pinnoottavaathi.blogspot.com/2011/03/blog-post_20.html
சனி, 19 மார்ச், 2011
அனைத்து இயக்கங்களும் திரண்டதால் மேலப்பாளையம் குலுங்கியது!
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் காதியானிகளுக்கு எதிராக அனைத்து இயக்க மற்றும் சமுதாய தலைவர்களும் மற்றும் ஆலிம் உலமாக்களும் ஒரே மேடையில் தோன்றி மாபெரும் இறுதி நபித்துவ பாதுகாப்பு மாநாடு – சரியத் பாடுகாப்பு பேரவை சார்பாக மேலபாளையம் பஜார் திடலில் வைத்து பல தடைகளை மீறி பல இன்னல்களுகிடையே நடைபெற்றது. இதற்கு அனைத்து இயக்க தலைவர்களும் சிறப்புரை ஆற்றினர்.
இந்த மாநாட்டில், காதியானிகளுக்கெதிராக பல தீர்மானங்கள் ஏற்றப்பட்டது. அனைத்து முஸ்லீம் இயக்கங்களும் ஒன்று திரண்டதால் மேலப்பாளையம் குலுங்கியது.
வெள்ளி, 18 மார்ச், 2011
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
அதிமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்
1)சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
2) ஆம்பூர்
3) இராமநாதபுரம்
thanks to : tmmk.in
புதன், 16 மார்ச், 2011
கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு Part-01
1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15, இந்தியா விடுதலை பெற்றதும், பிரிவினையின் மூலம் பாகிஸ்தான் என்கிற நாடு உருவானது.அதனைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பிரிவினைக்கு காரணமான சங்பரிவார பாசிச சக்திகளின் சதி திட்டங்களை மறைத்து, முஸ்லிம்களே காரணம் என்றும் முஸ்லிம்களின் அரசியல் கட்சியான “முஸ்லிம் லீக்” தான் காரணம் என்றும் நாடு முழுவதும் முஸ்லிம் லீக்கை துடைத்தெறிய அப்போதைய பாசிச சிந்தனை ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலால் முஸ்லிம்களின் அரசியல் சக்தி சிதைக்கப்பட்டது. லீக்கின் தலைவர்கள் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தனர். வட மாநிலங்களில் பல முக்கியத் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.
இதுபோன்ற கடுமையான நெருக்கடி மிகுந்த சூழலில் “முஸ்லிம் லீக்” என்ற இயக்கத்திலிருந்து யார் சென்றாலும் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருந்தாலும் தனி நபராக வேனும் கட்சியை நடத்துவேன், என்று கூறி இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து போராடிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை இவ்வேளையில் நினைவு கூர்வதும், நன்றி செலுத்துவதும், அவர்களது மறுமை வாழ்க்கை பெருமகிழ்ச்சி கொண்டதாக அமைந்திட சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
விடுதலை அடைந்த இந்தியாவில் மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன.
1) இந்திய தேசிய காங்கிரஸ்,
2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டக் கட்சிகள் மட்டுமே 1400-ஐ தாண்டியுள்ளது.
இன்று தேர்தல் சின்னங்களாக இரட்டை இலை, உதய சூரியன், கை போன்றவை இருப்பது போன்று அப்போது “நிறங்கள்” சின்னமாக இருந்தன. காங்கிரஸ் சின்னம் ‘மஞ்சள்,’ முஸ்லிம் லீக் சின்னம் ‘பச்சை,’ கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் ‘சிகப்பு’ என்றிருந்தது. மஞ்சள் பெட்டி, பச்சை பெட்டி, சிகப்பு பெட்டிகள் வாக்குபதிவு மையத்தில் வைக்கப்படும். அதில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். அந்தளவுக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இந்திய முஸ்லிம்களின் அரசியல் இருந்தது.
1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் தமிழ்நாடு, “சென்னை மாகாணம்” என்ற பெயரில் கேரளத்தின் மலபார், ஆந்திராவின் திருப்பதி - கடப்பா, கர்நாடகாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் 29 தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கான தனித் தொகுதி யாக இருந்தது. 1946&ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காயிதே மில்லத் தலைமையில் இந்த 29 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் கைப்பற்றியது. மேலும் 7 மேல் சபை (எம்.எல்.சி) உறுப்பினர்கள் இருந்தனர். காயிதே மில்லத் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகக் தேர்வு செய்யப்பட்டார். 1952 வரை இந்நிலை தொடர்ந்தது. பிறகு அரசியல் நிர்ணய சபையில் அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலின் சதியால் முஸ்லிம்களின் அரசியல் அதிகார உரிமை பறிக்கப்பட்ட சோக வரலாறு நடந்தேறியது. இதுவே இன்றைய இந்திய முஸ்லிம்களின் அவல நிலைகள் அனைத்திற்கும் மூலக் காரணம்.
காங்கிரஸின் துரோகத்தையும், பச்சோந்தி தனங்களையும் சகித்துக் கொண்டு மாற்று அரசியல் சக்தியை எதிர்நோக்கியிருந்த காயிதே மில்லத் அவர்கள் தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க முடிவெடுத்தார்.
திமுகவை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி காங்கிரஸின் துரோக ஆட்சியை வீழ்த்திட, ராஜாஜியோடு அண்ணாவை இணைத்து கூட்டணி அமைத்தவர் காயிதே மில்லத் அவர்கள். 1967ல் அமைந்த அந்த கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக். திமுக அமைச்சரவை பதவியேற்றது; அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார். இனி கலைஞரின் துரோக வரலாறு தொடங்குகிறது.
முஸ்லிம் சமுதாயத்தை கலைஞரின் கரங்களில் ஒப்படைத்தாரா காயிதே மில்லத்!
1972, ஏப்ரல்- 5 அன்று இறைவனடி சேர்ந்தார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்கள் காயிதே மில்லத் அவர்களை சந்திக்கச் சென்ற போது கலைஞரின் இரண்டு கரத்தையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக் கிறீர்கள் அதற்கெல்லாம் நன்றியை கூறி இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்றார் என்று 35 ஆண்டுகளாக பொது மேடைகளில் பேசி வருகிறார் கலைஞர். இது எந்த அளவுக்கு உண்மை. கடைசி காலகட்டங்களில் கலைஞரோடு காயிதே மில்லத் அவர்களின் உறவு எப்படி இருந்தது. ஒரு சில வரலாற்று உதாரணங்கள்.
1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதி களில் வெற்றி பெற்றிருந்தது.
1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட் டார். விடுதலைப் பெற்றதிலிருந்து ஓமந்தூர் இராமசாமி ரெட்டியின் ஆட்சி தொடங்கி அறிஞர் அண்ணா ஆட்சி வரை 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக் காதீர்கள்” என்று வேண்டினார். சட்டமன்றத்தில் அப்போதைய முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்த திருப்பூர் மொய்தீன் அவர்கள் தனது கட்சியின் எதிர்ப்பை சட்டமன்றத்தில் வலுவாகப் பதிவு செய்தார். காமராஜர், ராஜாஜி, மா.பொ.சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின், எதிர்ப்புகளை எல்லாம் மீறி சாராயக் கடையைத் திறந்தார் கலைஞர்.
காயிதே மில்லத் கோபமானார். சாராயக் கடையால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் பாதிக் குமே என்று தமிழ் மொழிக்காக அரசியல் நிர்ணய சபையில் குரல் கொடுத்த தலைவன் தமிழ்ச் சமுதாயத்திற்காக குரல் எழுப்பினார். கூட்டணிக் கட்சி என்று பாராமல் கண்டனக் குரல் எழுப்பினார். மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். காயிதே மில்லத் அவர்களும் பல கூட்டங்களில் பங்கு கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
தமிழர்களைப் பற்றி கவலைப்படாத தமிழினத் தலைவர் கலைஞர் “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடியது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிப் பேசியும், முஸ்லிம் நாடுகளை கொச்சைப்படுத்திப் பேசியும் சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அதே காலகட்டத்தில் இன்னொரு சம்பவம் நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தார். பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத்.
ஆனால், கலைஞர் முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.
சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற் காகவும் தனித் தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் துறைமுகம் பகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இதற்கு முஸ்லிம்லீக் ஆதரவு இல்லையென்றால் திமுக தோற்பது உறுதி என்ற நிலையில் ஆளும்கட்சி இடைத்தேர்தலில் தோற்றால் திமுகவுக்கு சரிவு என்பதால் அப்போதைய அமைச்சர் என்.வி. நடராஜனை அனுப்பி சமாதானம் பேசினார் கலைஞர். வாக்குப் பதிவுக்கு ஒருநாள் உள்ள நிலையில் திமுகவுக்கு ஆதரவளித்தார் காயிதே மில்லத்; திமுக வெற்றியும் பெற்றது.
இந்தக் கருணாநிதியிடம் முஸ்லிம் சமுதாயத்தை ஒப்படைத்திருப்பாரா காயிதே மில்லத்? இதுபற்றி அப்துல் ஸமத் அவர்களிடம் விசாரித்து அவருடைய 60 ஆண்டுகால உற்ற நண்பர் துபாஷ் சி.எஸ். தாஜூதீன் அவர்கள் அதனை தனது “சிராஜில் மில்லத் அப்துல் ஸமது” என்ற நூலில் கூறியுள்ளதைப் பாருங்கள்.
“சிராஜுல் மில்லத் (அப்துல்சமது) மரணத்திற்கு முன்னர் பீட்டர்ஸ் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். காயிதே மில்லத் மரணத்துக்கு முன்னர் நானும், விடிய விடிய அவர்களின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். அவர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. மூச்சு மட்டும் சீராக ஓடிக் கொண்டிருந்தது. அருகிலிருந்த டாக்டர் யு. முஹம்மத்தின் துணைவியார் திருமறையில் இருந்து வசனங்களை மெல்லிய குரலில் ஓதிக் கொண்டிருந்தார். காயிதே மில்லத் செவிகள் வேத வரிகளை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. கண்கள் பளிச்சென்று ஒருமுறை திறந்து மூடின. அந்த சமயம் திமுக தலைவர் கலைஞர் டாக்டர். மு. கருணாநிதி தம் பரிவாரங்களோடு, காயிதே மில்லத் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். ஒரு நிமிட நேரம் பரபரப்பு நிலவியது. அப்துல் ஸமது சாஹிப், காயிதே மில்லத் காதருகில் குனிந்து, கலைஞர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்றார். கலைஞர் குனிந்து முகத்தருகே நின்று “அய்யா” என்றார், அல்லாஹ்வின் அழைப்பை எதிர்பார்த்திருந்த அந்த நேரத்தில் அவருடைய உதடுகள் கலிமாவை மொழிந் தன. இந்த சமுதாயத்தைத் தங்கள் கையில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன் என்று தலைவர் அவர்கள் சொன்னதாகவும், சிலர் அவ்வாறு விளக்கம் அளித்ததாகவும் ஒரு செய்தி பரவியது. அது உண்மையா” என்று? கேட்ட போது அப்துல் ஸமது முகத்தில் பொருள் புரியாத புன்னகை ஒன்று தவழ்ந்தது. அதுதான் அவருடைய பதில். அரசியல் வாதியாகவும், ஆத்மீக ஞானியாகவும் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் “சக்கராத்” நேரத்தில் இறைவனிடம்தான் இந்த சமுதாயத்தை ஒப்படைப்பதாக உள்ளத்தில் பிரார்த்திப்பார்களே தவிர, கலைஞரிடமா ஒப்படைப்பதாகச் சொல்லியிருப்பார்கள் என்று யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது ஆச்சரியம் தான்”
என்று எழுதி வைத்துள்ளார் துபாஷ். காயிதே மில்லத் மட்டுமல்ல சிராஜுல் மில்லத், அப்துல் ஸமத் ஸம்ஸிரே மில்லத் அப்துல் லத்தீப் உள்ளிட்ட தலைவர்கள் யாருமே கலைஞர் கருணாநிதி செயல்பாட்டால் அவருக்கு எதிர்நிலை எடுத்தும், கருத்து முரண்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காயிதே மில்லத் அவர்களின் மரண நேரத்தில் உடன் இருந்தவர் களில் வாக்குமூலம் இப்படியிருக்க, ஒரு உன்னத தலைவரின் மரணத்தில் கூட முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது என்பது கலைஞரால் மட்டுமே முடியும்.
மேலும் காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் உரிமைகளுக்காக போராடமல் வலிமையை இழந்தனர். வலிமை யை இழந்தனர். இதனைப் பயன்படுத்திய கலைஞரின் பேனா முனையும், அவருடைய நாவன்மையும், முஸ்லிம் சமுதாயத்தை வசீகரிக்கத் துவங்கியது.
‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” “முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்றார்.
மீலாது மேடைகளில் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஓங்கி முழங்கினார். முஸ்லிம்கள் மெய்மறந்தனர். முஸ்லிம்களின் இயக்கம் திமுகதான் என்றனர். முஸ்லிம்லீக் என்ற தனித்தன்மை வாய்ந்த பேரியக்கம் தனது ஆதரவு தளத்தை தொலைத்தது.
தாயின் மடியில் இருக்கும் குழந்தை கிலுகிலுப்பை ஆட்டும் சத்தத்தின் மீது ஆசைப்பட்டு, கிலுகிலுப்பை ஆட்டுபவரிடம் சென்று விடுமே. அதுபோல் சமுதாயப் பேரியக்கத்தை விட்டு வார்த்தை ஜாலம் எனும் கிலுகிலுப்பை ஆட்டிய கருணாநிதியிடம் சென்றது சமுதாயம்.
திமுகவில் இருந்து வெளியேறி மக்கள் பேராதரவோடு அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அவர் 1977 முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்தபோது கலைஞரோடு முரண்பட்ட முஸ்லிம்லீக் தலைவர் அப்துல் ஸமத் எம்.ஜி.ஆரை ஆதரித்தார்.
இதுபற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பி னார்கள்: முஸ்லிம் லீக் கட்சியினர் சமரசத்துடன் வைத்துக் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்களே?
கருணாநிதி பதில் : “அமைப்பு ரீதியாக உறவு இல்லாவிடினும், முஸ்லிம் சமுதாயத்திற்கும், திமுகழகத்திற்கும் இடையே உள்ள அன்பும், உறவும் என்றும் நிலைத்திருக்கும், அந்த சமுதாயத்துடன் நாங்கள் கொண்டுள்ள தோழமை தேய்பிறை அல்ல! வளர்பிறை!” என்றார். சமுதாயத்திற்கும் - சமுதாய இயக்கத்திற்குமான உறவை விட, திமுகவிற்கும் சமுதாயத்திற்குமான உறவே கெட்டியானது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிபடுத்தின.
1977 சட்டப்பேரவைத் தேர்தல் எம்.ஜி.ஆர் அவர்கள் முஸ்லிம்லீக்கிற்கு, இதுவரை இல்லாத தொகுதிகளை அதிகமான சீட்டுகளை ஒதுக்கினார். 10 தொகுதிகளை வழங்கினார். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். முஸ்லிம்லீக் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
எம்.ஜி.ஆரின் மக்கள் பேராதரவு அலையில் கலைஞர் சிக்கித் திணறி னார். திமுகவில் இருந்த முன்னணி தலைவர்கள் அதிமுகவில் ஐக்கிய மானார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் கலைஞரையே தனது தலை வனாக நினைத்தது.
கருணாநிதி தோல்வி பள்ளத் தாக்கில் விழுந்து கிடந்த போதும் 13 ஆண்டுகால வனவாசம் என்பார்களே அதுபோன்று 1977 தொடங்கி 1988 எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை அவரைத் தாங்கிப் பிடித்தது சமுதாயம்.
எம்.ஜி.ஆரிடம் இருந்த மக்கள் எழுச்சி கண்டு கலைஞர் கருணாநிதி மிரண்டு கிடந்த நிலையில் காயல் பட்டணத்தில் எம்.ஜி.ஆரின் மீது செருப்பு வீசும் அளவுக்கு கலைஞர் பாசம் முஸ்லிம்களிடத்தில் மேலோங்கி இருந்தது. இதுபோன்ற செயல்களால் முஸ்லிம்களுக்கு எதிரானநிலை எடுக்கும் சூழல் எம்.ஜி.ஆருக்கு உருவானது.
இந்தளவிற்கு கண் மண் தெரியாத பற்று என்பார்களே அப்படியிருந்த சமுதாயத்திற்கு கலைஞர் செய்தது என்ன?
-இன்ஷா அல்லாஹ் தொடரும்...
ப.அப்துல் சமது
source : tmmk.in
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் தமீமுல் அன்சாரி அவர்கள் அதிரை நிருபருக்காக அளித்த பிரத்தியேக நேர்காணல்
தமீமுல் அன்சாரி: அவசர அவசரமாக என்ற அந்தக் கேள்வியே தவறானது தேர்தல் தேதி அறிவித்த அந்த நேரத்தில் ஏதாவது ஒரு கூட்டணில் அடைக்கலமாவது என்பது அவசர அவரமாக எடுத்த முடிவாக இருக்கும், ஆனால் மனிதநேய மக்கள் கட்சி ஏழுமாதங்களுக்கு முன்பாகவே அனைத்திந்திய அண்ணா திரவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதாவின் அழைப்பின் பேரிலேயே அதனை ஏற்று முறையான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதனால், நிதானமாக கூட்டணியிலே நாங்கள் இணைந்தோம். எனவே அவசர அவசரமான கூட்டணி என்பது தவறானது, இன்றைய சூழலில் அனைந்திந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியிலே எங்களது அணி இருந்து கொண்டிருக்கிறது. அந்த அணிதான் 200 மேற்பட்ட தொகுதிகளில் இன்ஷா அல்லாஹ் வெற்றியை பெறும்.
தமீமுல் அன்சாரி: நாங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக இருந்தால் அனைந்திந்திய அண்ணா திரவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஒன்பது தொகுதியும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியும் மொத்தம் பத்து தொகுதிகளைக் கூட கொடுத்திருப்பார்கள். தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றிருப்பார்கள் ஆனால் சுயமாகவும் சுதந்திரமாகவும் செயல்படமுடியாது என்ற காரணத்தினால், எம்.எல்.ஏ.க்களாக பத்து பேரும் ஆகக் கூடிய வாய்ப்பு இருந்தும் கூட சமுதாயத்தின் தன்மானம் மீண்டெடுக்கப் படவேண்டும் என்ற சொந்தச் சின்னம், குறைவான தொகுதிகள் கிடைத்தாலும் பரவாயில்லை, தேர்தல் நிதி அவர்கள் தராவிட்டாலும் பரவாயில்லை என்ற நிலையைத்தான் எடுத்திருகின்றோம். எனவே எங்கள் கூட்டணியிரிடம் இருந்து பத்து பைசாவைக் கூட பெறவில்லை என்பதை ஊரறிந்த உண்மையறிந்த அரசியல் அறிவறிந்த அனைவருக்கும் தெரியும்.
திங்கள், 14 மார்ச், 2011
தோல்வி பயம் தொகுதி மாறும் கருணாநிதி!!
அதே போன்று, துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் அன்பழகன், காங்., கைவசம் வைத்துள்ள நாகை மாவட்டம் மயிலாடுதுறை தொகுதியைத் தேர்வு செய்துள்ளாராம். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் உறவினர் ஒருவர் அங்கு சேர்மனாக இருப்பதால், அவரது ஆதரவோடு அந்தத் தொகுதியில் எளிமையாக ஜெயித்து விடலாம் என, பன்னீர்செல்வம் ஆலோசனை கூறி யுள்ளார்.
துணை முதல்வர் ஸ்டாலினும் ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, பாளையங்கோட்டை தொகுதி பக்கம் போய்விடலாம் என திட்டமிட்டுள்ளார்.
ஆற்காடு வீராசாமி சென்னை புறநகர் பகுதியில் இருந்து செங்கல்பட்டு தொகுதியைத் தேர்வு செய்து வைத்துள்ளார்.
இப்படி தி.மு.க., வின் மூத்த தலைகள் சென்னையை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளதற்கு காரணம், சென்னையில் தி.மு.க., கவுன்சிலர்களின் அடாவடி அதிகரித்து, மக்கள் எரிச்சலில் இருப்பதால், பாதகமாகி விடுமோ என்ற அச்சமே காரணம் என கூறப்படுகிறது
சிந்திக்கவும் : ஈழ தமிழர் படுகொலையை வேடிக்கை பார்த்த தமிழர் தலைவர் என்று சொல்லிகொள்ளும் மு.கருனாதியையும் அவரது கூட்டணியையும் தோற்கடிக்க தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு மாபெரும் தோல்வியை கொடுக்கவேண்டும். அப்போதுதான் முள்ளி வாய்காலில் கொல்லப்பட்ட நமது தொப்புள் கொடி உறவுகளின் படுகொலைக்கு இதுதான் முதல் பழிவாங்கும் நடவடிக்கை. அடுத்த நடவடிக்கைகள் இனிமேல் தொடரும் என்பதற்கு இது ஒரு முகவுரையாக இருக்கட்டும். திருவாரூர் இல்லை தமிழகத்தின் ஏந்த மூலையில் இவர் நின்றாலும் தோற்பது நிச்சயம்.
source : http://www.dinamalar.com/ , http://www.sinthikkavum.net/
ஆயுத இறக்குமதியில் இந்தியாவுக்கு முதலிடம்
ஸ்டாக்ஹோம் இண்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஆய்வில் இந்தியாவை ஆயுத இறக்குமதியில் முதலிடத்திலிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
2006-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டுவரை ஒன்பது சதவீதம் அனைத்து சர்வதேச ஆயுதங்களையும் இந்தியா இறக்குமதிச் செய்துள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. அதேவேளையில், சீனா ஆறு சதவீதம் மட்டுமே சர்வதேச அளவில் ஆயுதங்களை இறக்குமதிச் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சீனா
உள்நாட்டில் ஆயுதங்களை தயாரிப்பதாக ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டின் ஃபெலோ ஸீமன் வெஸ்மான் கூறுகிறார்.
அமெரிக்கா ஆயுத ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ளது.
32.5 பில்லியன் டாலர் தொகையை இந்தியா பாதுகாப்பிற்காக பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கியதை விட 40 சதவீதம் அதிகமாகும். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் 70 சதவீதத்தையும் இந்தியா ஆயுத இறக்குமதிக்காக பயன்படுத்துகிறது. இவற்றில் 82 சதவீத ஆயுதங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதிச் செய்யப்படுகின்றன.
ஆயுத இறக்குமதி ஒப்பந்தங்களை மேற்கொள்ள சமீபத்தில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகைப் புரிந்ததாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டு ஜூலையில் இந்தியாவுக்கு வந்த பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் காமரூன் 57 ஹவுக் நவீன ட்ரைனர் ஜெட் இறக்குமதிச் செய்வதற்கான 1.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை உறுதிச்செய்தார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு வருகை தந்த பொழுது 10 சி-17 ட்ரான்ஸ்போர்ட் ஏர்க்ராஃப்ட் இறக்குமதிச் செய்வதற்கான 4.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அறிவித்தார். பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோஸி கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு வருகைத் தந்தபொழுது பிரான்சிலிருந்து மிராஜ் 2000 ஃபைட்டர் ஏர்க்ராஃப்ட் வாங்குவதற்கான 2.1 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை உறுதிச்செய்தார்.
இதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு பிறகு இந்தியாவுக்கு வருகைத் தந்த ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் தனது சுற்றுப்பயண வேளையில் ஐந்தாவது தலைமுறை ஃபைட்டர் ஏர்க்ராஃப்டுகள் உருவாக்குவதற்கான ஒருங்கிணந்த திட்டத்தை துவக்கிவைத்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் , பாலைவனத் தூது