திருவாரூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவாரூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 மார்ச், 2011

தோல்வி பயம் தொகுதி மாறும் கருணாநிதி!!

சென்னை: பிப் 13, பல முறை எம்.எல்.ஏ., வாகவும் 5 முறை முதல்வராகவும் இருந்து வரும் கருணாநிதி இந்த முறை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட மாட்டார் என கூறப்படுகிறது. சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதற்கான தேர்தல் பணிகளை துவக்க கட்சி தொண்டர்களுக்கு தலைமை கழகம் சிக்னல் கொடுக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. ஏன் இவர் சேப்பாக்கம் தொகுதியைவிட்டு மாறுகிறார் என்றால் அங்கு முஸ்லிம்கள் வாக்கு அதிகம் அது இந்த முறை நிச்சயம் கருணாநிதிக்கு கிடைக்காது என்பாதால்தான்.

அதே போன்று, துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் அன்பழகன், காங்., கைவசம் வைத்துள்ள நாகை மாவட்டம் மயிலாடுதுறை தொகுதியைத் தேர்வு செய்துள்ளாராம். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் உறவினர் ஒருவர் அங்கு சேர்மனாக இருப்பதால், அவரது ஆதரவோடு அந்தத் தொகுதியில் எளிமையாக ஜெயித்து விடலாம் என, பன்னீர்செல்வம் ஆலோசனை கூறி யுள்ளார்.


துணை முதல்வர் ஸ்டாலினும் ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, பாளையங்கோட்டை தொகுதி பக்கம் போய்விடலாம் என திட்டமிட்டுள்ளார்.


ஆற்காடு வீராசாமி சென்னை புறநகர் பகுதியில் இருந்து செங்கல்பட்டு தொகுதியைத் தேர்வு செய்து வைத்துள்ளார்.


இப்படி தி.மு.க., வின் மூத்த தலைகள் சென்னையை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளதற்கு காரணம், சென்னையில் தி.மு.க., கவுன்சிலர்களின் அடாவடி அதிகரித்து, மக்கள் எரிச்சலில் இருப்பதால், பாதகமாகி விடுமோ என்ற அச்சமே காரணம் என கூறப்படுகிறது

சிந்திக்கவும் : ஈழ தமிழர் படுகொலையை வேடிக்கை பார்த்த தமிழர் தலைவர் என்று சொல்லிகொள்ளும் மு.கருனாதியையும் அவரது கூட்டணியையும் தோற்கடிக்க தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு மாபெரும் தோல்வியை கொடுக்கவேண்டும். அப்போதுதான் முள்ளி வாய்காலில் கொல்லப்பட்ட நமது தொப்புள் கொடி உறவுகளின் படுகொலைக்கு இதுதான் முதல் பழிவாங்கும் நடவடிக்கை. அடுத்த நடவடிக்கைகள் இனிமேல் தொடரும் என்பதற்கு இது ஒரு முகவுரையாக இருக்கட்டும். திருவாரூர் இல்லை தமிழகத்தின் ஏந்த மூலையில் இவர் நின்றாலும் தோற்பது நிச்சயம்.

source : http://www.dinamalar.com/ , http://www.sinthikkavum.net/

திங்கள், 20 செப்டம்பர், 2010

முத்துப்பேட்டையில் கலவரத்தைத் தூண்ட முயன்ற ஹிந்துமுன்னணி

முத்துப்பேட்டை,செப்.19:திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஒரு இளைஞரால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் போலீஸாரின் சமயோஜிதத்தால், பெரும் கலவரம் மூளாமல் தவிர்க்கப்பட்டு விட்டது.

ஆண்டுதோறும் முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இதன் காரணமாக முஸ்லீம் குடியிருப்புகள் வழியாக ஊர்வலம் போக கோர்ட் தடை விதித்தது.

இருப்பினும் ஊர்வலம் இந்தப் பாதைகள் வழியாக செல்வது தொடர் கதையாக நீடிக்கிறது. கடந்த ஆண்டு முதல் மாற்றுப் பாதை வகுக்கப்பட்டு அந்த வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த முறையும் பிரச்சினை வந்து விடாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது.

நேற்று மதியம் மூன்று மணிக்கு ஜாம்பவான் ஓடை கிராமத்தில் உள்ள சிவன் கோயில்களில் இருந்து புறப்பட்டு, சுமார் ஐந்து கிலோமிட்டார் வரை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் இறுதியில் கிழக்குக்கடற்கரை சாலியில் உள்ள பாமணி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

விநாயகர் ஊர்வலம் இஸ்லாமியர் பகுதிக்குள் வந்துகொடிருந்த ஒபோது, வேலூர் எம்.பி. அப்துல்ரகுமான் வீட்டில் கல் எறிய முயற்சித்த ஒரு இளைஞரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் வேனுக்குள் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்.

அந்த இளைஞர் தடுத்து பிடிக்கப்பட்டதால் பிரச்சினை ஏதும் இல்லாமல் போய் விட்டது. இல்லாவிட்டால் பெரும் அமளியாகியிருக்கும். இந்த சிறு சம்பவத்தால் லேசான பதட்டம் ஏற்பட்டு பின்னர் தணிந்தது.

தட்ஸ் தமிழ்

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

திருவாரூர் கொலை விவகாரம்: TNTJ வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தி

திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி என்ற கிராமத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹாஜி முஹம்மது என்பவர் துப்பாக்கியால் சுட்டு இருவர் இறந்து விட்டதாகவும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு முரணானதாகும்.

துப்பாக்கியால் சுட்டவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகியோ, உறுப்பினரோ, அனுதாபியோ அல்ல. அவர் எங்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை நடத்தக்கூடியவரும் அல்ல. தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகளை ஆதரிப்பவரும் அல்ல.

அவரது உறவினர் குத்புதீன் என்பவரை சிலர் தாக்கிவிட்டனர் என்பதால், உறவினருக்காக நியாயம் கேட்க அவர் வந்தபோது ஊர் ஜமாஅத்தார்களுக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது தான் அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சுடப்பட்டவர்களில் முஸ்லிமல்லாதவர் மூன்று பேர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தச் சம்பவத்திற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எந்தக் காலத்திலும் இது போன்ற வன்முறையை தவ்ஹீத் ஜமாஅத் கையில் எடுத்ததில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

திங்கள், 6 செப்டம்பர், 2010

திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை: போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்பு




திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதங்களாக இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் சிறப்புத்தொழுகை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் செய்துவருகின்றனர்.

இந்த தொழுகையின் போது கிராம ஜமாத்தாருக்கும், தவிஹித் ஜமாத்தாருக்கும் இடையே தொழுகை முறையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.


இதனால் பொது இடத்தில் தனியாக தொழுகை நடத்துவதற்கு தவிஹித் ஜமாத்தார் ஏற்பாடு செய்துவந்தனர்.

இது அப்பகுதியில்
உள்ள பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கிராம ஜமாத்தார்கள், தவிஹித் ஜமாத்தார் நிர்வாகிகளிடம் கேட்டபோது மீண்டும் மோதல் வரும் சூழல் ஏற்பட்டது.


இதனால் நேற்று தவிஹித் ஜமாத் பிரமுகர்கள்,கிராம ஜமாத்தாரை நேரில் சந்தித்து விவாதித்தபோது விவாதம் முற்றி கைகளப்பு
ஏற்பட்டுள்ளது.


இந்த கைகளப்பு இரவு வரை நீடித்துள்ளது. தொடர்ந்து தவிஹித் ஜமாத்தாருக்கு ஆதரவாக வந்த திருமங்களக்குடி ஹச்முகமது,
பிரச்சனை பெரிதானதும் தனது இரு கைத்துப்பாக்கியை எடுத்து எதிரில் நின்ற கிராம ஜமாத்தார் மீது 12 முறை சுட்டிருக்கிறார்.


இந்த துப்பாக்கிச்சூட்டில் கிராம ஜமாத் தலைவர் முகமது இஸ்மாயில், கமிட்டி உறுப்பினர் ஹச்முகமது ஆகிய இருவர்
பலியானார்கள்.

5 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த ஐந்து பேரில் 3 பேர் சமாதானத்திற்கு சென்ற இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவத்தால் இருதரப்பினருக்கும் இடையே மேலும் மோதல் முற்றியுள்ளது. இந்த மோதலால் 10க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.


கலவரத்தை கட்டுப்படுத்த எஸ்.பி.மூர்த்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய், 26 ஜனவரி, 2010