புதன், 9 மார்ச், 2011

பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி தவிக்கும் குஜராத்!!!


காந்திநகர், மார்ச் 7- மதம் மாறியவர்களுக்கு அரசின் இடஒதுக்கீடு சலுகை கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.நிமேஷ் ஜாவெரி என்பவர் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார். இதையடுத்து, அவருக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டு சலுகையை அரசு நிறுத்தியது. இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஜே. முகோபாத்யாய மற்றும் நீதிபதி ஜே.பி. பர்திவாலா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், மனுதாரர் மதம் மாறிவிட்டதால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடஒதுக்கீடு சலுகையை இனி வழங்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சிந்திக்கவும்: தீவிரவாதி நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் ஒரு ஹிந்த்துதுவா மாநிலமாகவே மாற்றப்பட்டு விட்டது. முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் கலவரங்களை நடத்தி கொன்று குவித்தார்கள், வேலைவாய்ப்பு மற்றும் எல்லா அடிப்படை உரிமைகளும் மத்த மதத்தினருக்கு மறுக்கப்பட்டு வந்தது.

முஸ்லிம்களின் பெயரில் உள்ள கிராமம், நகரம், முக்கிய வரலாற்று சின்னகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்றினார்கள். இனக்கலவரம் நடத்தியவர்களை தண்டிக்காமல் கோத்ரா என்ற பொய் வழக்கில் முஸ்லிம்களுக்கு தண்டனை வழங்கினார்கள். அங்கு உள்ள காவல்துறை முதல் நீதித்துறை வரை எல்லோரும் பாசிச பயங்கரவாதிகளின் ஆட்களே!! இதில் இருந்து தெரிகிறது குஜராத் பாசிச பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி உள்ளது என்று.
நன்றி : ஆசிரியர் புதியதென்றல்.