வியாழன், 10 மார்ச், 2011

கோத்ரா தீர்ப்பு: பொய் ஆதாரங்கள் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது... உண்மைகள் ஒருநாள் வெளியாகும்...! சுவாமி அக்னிவேஷ்


2002ஆம் ஆண்டு கோத்ராவில் நிகழ்ந்த அசம்பாவிதத்தை சாக்காக வைத்து ஆயிரக் கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்த மோடி அரசு. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையாளர் என்ற அழியாத அவப்பெயரை பெற்றார் நரேந்திர மோடி. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நுழைய மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கோத்ரா ரயில் விபத்தை படுகொலை என அவதூறாக சித்தரித்து தனது கொலைப் படையின் சதிகளை நியாயப்படுத்த கோத்ரா வழக்கை பயன்படுத்திக் கொண்டார். பாதிக் கப்பட்ட மக்களையே சதிகாரர்களாக சித்தரித்து பொய்மையை உண்மைபோல் உருவகப்படுத்திய கோத்ரா நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நாடெங்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

முதலில் தீர்ப்பு வெளிவந்தது. நீதியைப் பரிகாசம் செய்த தீர்ப்பு என கடந்த வாரம் கட்டுரை வெளியானது. மார்ச் ஒன்றாம் தேதி தண்டனை விவரம் வெளி யிடப்பட்டது. இதில் பதினோரு பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. இது நாடெங்கும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர்கள் இந்த தீர்ப்பு குறித்து தங்கள் கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்தனர்.

மோடி அரசினால் அமைக்கப்பட்ட நானா வதி கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ரயில்வே துறையின் அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவால் அமைக்கப்பட்ட யு.சி. பானர்ஜி கமிஷன் வழங்கிய தீர்ப்பின் உண்மையான சாராம்சங்களை சிறிதும் பரிசீலனை செய்யாமல் உண்மைகளைப் புறக்கணித்து வழங்கப்பட்ட தீர்ப்பாகக் கருதப்படும் இந்த தீர்ப்பினை புகழ்பெற்ற சமூக ஆர்வலரும் ஹிந்துசமய ஆன்மீக வாதியுமான சுவாமி அக்னிவேஷ் விமர்சித் துள்ளமை தேசிய அளவில் பெரும் அதிர் வினை ஏற்படுத்தியுள்ளது.

கோத்ராவில் நிகழ்ந்த அசம்பாவிதத்தை ஒரு சதித்திட்டம் போல் சித்தரித்துக் காட் டிய அன்றைய முக்கிய ஊடகங்களைக் கண்டித்த சுவாமி அக்னிவேஷ், இந்தத் தீர்ப்பு பலவீனமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்ட கட்டிடம் போல் தோற்ற மளிக்கிறது. இந்த வழக்கு நிச்சயம் உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டுக்கு வரும் போது உண்மைகள் வெளிவரும், அதனை யாராலும் தடுக்க முடியாது என அக்னிவேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நம்பிக்கை ஏற்படுத்தாத ஆதாரங்களை வைத்து வழங் கப்பட்ட தீர்ப்பு இது எனவும் சுவாமி அக்னி வேஷ் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் அளிக் கப்பட்ட துயரமான தீர்ப்பு என குஜராத் மாநில மக்கள் உரிமை கண்காணிப்பக தலை வர் பந்தூக்வாலா குறிப்பிட்டிருக்கிறார். 2002ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையில் பந்தர் வாடா பகுதியில் 40 முஸ்லிம்களைப் படுகொலை செய்து லூனாவாடா பகுதியில் உள்ள நதிக்கரையில் ரகசியமாக புதைத்த கயவர்கள் 30 பேரை இதே கோத்ரா மாவட்ட நீதிம ன்றம் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தது என்றும் மனம் வெதும்பி குறிப்பிட்டார்.

கோத்ரா ரயில் விபத்து வழக்கும் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தே விசாரிக்கப்பட வேண்டும், அவ் வாறு நிகழ்ந்தால் மட்டுமே குஜராத் இனபடுகொலை குறித்த விவகாரங்களில் நீதியை நிலைநாட்ட முடியும் என்றும் பந்தூக் வாலா தெரிவித்துள்ளார்.

கோத்ரா வழக்கின் முக்கியக் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட மவ்லவி உமர்ஜி விடுவிக்கப்பட்டதில் இருந்தே இந்த வழக்கின் தீர்ப்பில் பலவீனம் வெளிப்பட்டுள்ளதாக சமூகநல ஆர்வலரும் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத்தின் முக்கியப் பிரமுகருமான பாதிரியார் செட்ரிக் பிரகாஷ் தெரிவித்தார். சதித்திட்டம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ள காரணம் முழுக்க முழுக்க ஓட்டைகள் நிரம்பியது என்றும் தெரிவித்தார்.

இனப்படுகொலையாளர்கள் குஜராத் மாநிலம் முழுவதும் சுதந்திரமாக சுற்றித் திரியும்போது, வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்ட 63 பேர் ஒன்பது ஆண்டுகள் சிறையில் வாடியது மிகவும் சோகமானது, மன்னிக்க முடியாதது; அதற்கான இழப்பீட்டை தரப்போவது யார்? என பிரபல் மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் வினா எழுப்பியுள்ளார்.