திங்கள், 30 நவம்பர், 2009

பாலஸ்தீனம் இறையாண்மை கொண்ட தனி நாடாக வேண்டும்- பான் கி மூன்

Ban Ki-moon

ஐ.நா.: மத்திய கிழக்கு ஆசியாவில் அமைதி நிரந்தரமாக வேண்டும் என்றால் பாலஸ்தீனம் சுயாட்சி கொண்ட சுதந்திர இறையாண்மை உள்ள நாடாக உருவாக வேண்டியது அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பான் கி மூன் பேசுகையில், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாடுகள், உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கேற்ப தனி சுதந்திர பாலஸ்தீனம் உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த 40 ஆண்டுகளாக இரு தரப்பிலும் நிலவி வரும் பேரழிவுகளும், உயிரிழப்புகளும் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு இரு தரப்பும் மீணடும் ஆக்கப்பூர்வமான பேச்சுக்களில் ஈடுபட வேண்டும்.

சுதந்திர பாலஸ்தீன நாடு உருவாக்கப்பட வேண்டியது முக்கியமானது, அவசியமானது. 1967ம் ஆண்டு ஏற்படுத்ப்பட்ட நில மாற்ற உடன்பாடுகளின் கீழ் இது நடைபெற வேண்டும். அதேபோல அகதிகள் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுடன் இஸ்ரேலும், பாலஸ்தீனமும் கை கோர்த்து நடை போட்டால் இப்பிராந்தியத்தில் நிச்சயம் அமைதி நிரந்தரமாகும்.

அதேபோல காஸா முனையில் இஸ்ரேலின் ஆதிக்கம், ஆக்கிரமிப்பு முடிவுக்கு வர வேண்டும். அங்கு உணவு உள்ளிட்ட பொருட்களின் சப்ளை துண்டிக்கப்பட்டிருப்பதாலும், அதில் இஸ்ரேல் தலையிடுவதாலும், அப்பாவி பாலஸ்தீனியர்கள் பெரும் மனிதாபிமான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர் என்றார் மூன்.

ஈரான் 10 யுரேனியம் செறிவூட்டல் உலைகளை நிறுவுகிறது

ஈரான் 10 புதிய யுரேனியம் செறிவூட்டல் உலைகளை நிறுவபோவதாக ஈரான் அணு சக்தி நிறுவன தலைவர் அலி அக்பர் சலேஹி கூறினார். இந்த புதிய யுரேனியம் செறிவூட்டல் உலைகள் அனைத்தும், நாட்டான்ஸ் பகுதியில் ஏற்கனவே உள்ள முதன்மை யுரேனிய செறிவூட்டல் உலையைப் போன்றே, அதே அளவில் நிறுவப்பட உள்ளன.

இதற்கான பணிகள் அனைத்தும் இன்னும் இரண்டு மாத காலங்களுக்குள் தொடங்கப்பட்டுவிடும் என்று ஈரான் அணு சக்தி நிறுவனத் தலைவர் அலி அக்பர் சலேஹி கூறியதாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 250 முதல் 300 டன் வரையிலான அணு எரிபொருளை உற்பத்தி செய்ய ஈரான் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என அதிபர் அகமதுனிஜாத் கூறியுள்ளதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது. ஈரானிடம் அனுசக்தி இருப்பதற்க்காக தற்ப்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது

இளைஞர்கள் மத்தியில் வன்முறைக்கு காரணம் தமிழ் திரைப்படங்கள்: மலேசிய கட்சி!

மலேசியாவில் வாழும் இந்திய சமூகத்திடம் வன்முறை பரவி வருவதற்கு தமிழ்ப் படங்களே காரணம் என்று மலேசியாவின் இஸ்லாமிய பாஸ் கட்சி கூறுகிறது.

இதுபற்றிப் பேசிய பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் நஸ்ருதின் ஹசான் தன்தாவி இத்தகைய படங்கள் திரையிடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

இந்திய இளைஞர்களிடையே காணப்படும் வன்முறை நீண்டகாலமாக வன்முறைச் சம்பவங்களைக் கொண்ட படங்களை தொலைக்காட்சிகளில் காட்டிய தன் விளைவு என்று அவர் கூறியதாக தி நியூபேப்பர் செய்தி தெரிவித்தது.

“இந்திய இளையர்கள் பிரச்சினை களைத் தீர்க்கப் பயன்படுத்தும் ஆயுதங்களைக் கவனித்தாலே அவை தமிழ்ப் படங்களில் வருவதைப் போலவே இருப்பதை உணரலாம். இந்திய இளையர்கள் நமது சகோதரர்கள் போன்றவர்கள், அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொல்வதை நாம் அனுமதிக்கக்கூடாது,” என்றார் அவர்.

டென்மார்க் ஐ.நா. மாநாட்டில் பங்கேற்கும் கம்பம் மாணவர்


கம்பம் : டென்மார்கில் ஐ.நா., சார்பில் வரும் டிச.,7ல் நடக்க உள்ள பருவ நிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி மாநாட்டில் கம்பத்தை சேர்ந்த மாணவர் பங்கேற்க உள்ளார்.
புவி வெப்பமயமாதல்,பேரிடர், சுற்றுப்புறச்சூழல் மாசு, பருவநிலை மாற்றம் ஆகியவை குறித்து ஐ.நா., சார்பில் டென்மார்க், கோபன்கேனில் உலக நாடுகள் பங்கேற்கும் ஆராய்ச்சி மாநாடு நடக்க உள்ளது. வரும் டிசம்பர் 7 முதல் 18 வரை நடக்க உள்ள மாநாட்டில் 140 நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 20 பேர் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நூலகர் அம்சத் இப்ராஹிம்- ஹசீனாபேகம் தம்பதியினர் மகன் சலீம்கான்,சென்னையை சேர்ந்த ஆனந்தகுமார், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர் கூறுகையில்; "சென்னை அண்ணா பல்கலை.,யில் ஆராய்ச்சி மாணவனாக உள்ளேன். கடல் பகுதியில் மாங்குரோவ் மரங்கள் வளர்த்து சுனாமி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாப்பு பெறலாம் என்ற ஆய்வு கட்டுரைக்காக ஐ.நா., விருது பெற்றிருக்கிறேன். கடல் பகுதியில் பவளப் பாறைகள் குறைந்து வருகின்றன. இவற்றை செயற்கையாக உருவாக்கலாம். இதனால் கடல் மாசுபடுவது குறையும். மீன்வளம் அதிகரிக்கும். இயற்கை பேரிடர்களை தடுக்க முடியாது. ஆனால் எப்படி எதிர்கொள்ளலாம் என்பது குறித்து டென்மார்க் மாநாட்டில் ஆராய்ச்சியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன்" என்றார்.
source:dinamalar

ஞாயிறு, 29 நவம்பர், 2009

பாபர் மசூதி - நரசிம்ம ராவ் விடுவிக்கப்பட்டதற்கு முஸ்லீம் சட்ட வாரியம் அதிருப்தி

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் சுத்தமானவர் என்று லிபரான் கமிஷன் தெரிவித்திருப்பது மிகுந்த அதிருப்தி தருகிறது என்று அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், முஸ்லீம் அமைப்புகள் குறித்து லிபரான் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை என்றும் அது கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வாரியத்தின் மூத்த உறுப்பினரான மெளலானா காலித் ரஷீத் பி்ர்னகிமஹால் கூறுகையில், நரசிம்மராவ் சுத்தமானவர், குற்றமற்றவர் என்று லிபரான் கமிஷன் கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.

மேலும், முஸ்லீம் அமைப்புகள் குறித்து சில கருத்துக்களையும் லிபரான் கமிஷன் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது. இதுவும் துரதிர்ஷ்டவசமானது.

பாபர் மசூதி குறித்து முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியமும், பிற அமைப்புகளும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு தரும் பணிகளில் அக்கறை செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார் நீதிபதி லிபரான்.

இப்படி குற்றம் சாட்டுவதற்குப் பதில், முஸ்லீம் சமுதாயத்தினரை தெருவுக்கு வந்து பதிலுக்குப் பதில் போராட்டம், வன்முறை, கலவரத்தில் ஈடுபடாமல் தடுத்ததற்காக எங்களை லிபரான் பாராட்டியிருக்க வேண்டும்.

உண்மையில், முஸ்லீம் சமுதாயத்தினரை கட்டுப்படுத்தி வைத்ததன் மூலம் மிகப் பெரிய வன்முறையை, கலகத்தை நாங்கள் தடுத்துள்ளோம், தவிர்த்துள்ளோம். முஸ்லீம் மக்களை அமைதிப்படுத்துவதற்காகவும், நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் வாரியம் சார்பில் நாடு முழுவதும் ஏராளமான கூட்டங்கள் நடத்தினோம்.

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு நடவடிக்கைகளை செய்து தர வேண்டியது அரசின் கடமையாகும். அதேசமயம், எங்களது பொறுப்புகளையும் நாங்கள் தட்டிக் கழிக்கவில்லை. உண்மையில், பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு மட்டுமல்லாமல், இந்துக்களுக்கும் கூட நாங்கள் உதவிகள் செய்துள்ளோம்.

ஆனால் கிட்டத்தட்ட 2000 பேரின் உயிரை வாங்கிய பாபர் மசூதி இடிப்புக் கலவரத்திற்குக் காரணமானவர்களுக்கான தண்டனை என்ன என்பது குறித்து லிபரபான் கமிஷன் பலத்த மெளனம் சாதித்திருப்பது வினோதமாக உள்ளது என்றார் அவர்.

காலித் ரஷீத், லக்னோ இமாமாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 25 நவம்பர், 2009

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 1000 அக்கவுன்ட்ஸ் ஆபீசர் பணியிடங்கள்


logo

ந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனமும், தொலைத் தொடர்புத் துறையில் பெரும்பங்கு வகிப்பதுமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் 1000 அக்கவுன்ட்ஸ் ஆபிசர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆயிரக் கணக்கில் இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் (ஜே.டி.ஓ.) மற்றும் பிற டெக்னிகல் பணியிடங்களை அவ்வப்போது அறிவித்து வரும் பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ள மிகப் பெரிய வேலை வாய்ப்புகளில் ஒன்று இது.

இப்போது ஜே.ஏ.ஓ. எனப்படும் ஜூனியர் அக்கவுன்ட்ஸ் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது பிஎஸ்என்எல்.

இந்த காலியிடங்கள் அகில இந்திய அளவில் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்படும். இந்தத் தேர்வானது பிப்ரவரி/மார்ச் 2010ல் நடத்தப்படும்.

பணியின் பெயர்: இளநிலை கணக்கு அலுவலர் (JAO)

சம்பளம்: மாதம் ரூ.20500/

தகுதிகள்: சி.ஏ., சி.எஸ்., சி.டபிள்யூ.ஏ., எம்.காம்., இவற்றில் ஒரு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

சலுகைகள்: 1.1.2010 அன்று 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும். உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகள் சலுகை உண்டு.

பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் சலுகை தரப்படும்.

தேர்வு பாடத்திட்டம்: இத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, நிதி மேலாண்மை/காஸ்ட் அக்கவுன்டிங்/டாக்ஸ் கமர்சியல் லா இவற்றில் கேள்விகள் இடம் பெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000 இது டி.டி., அல்லது பே ஆர்டராக செலுத்தப்பட வேண்டும்.

எஸ்ஸி/எஸ்டி/ஊனமுற்றோர்/முன்னாள் ராணுவத்தினருக்கு முழு கட்டண விலக்கு உண்டு.

எஸ்ஸி/எஸ்டி பிரிவினர் தேர்வுக்கு வந்து போகும் பயணப் படியும் வழங்கப்படும்.

விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, டி.டி., 27க்கு 12 செ.மீ., அளவுள்ள 2 சுய முகவரியிட்ட உறைகள் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The DGM (Admn.), O/o CGM(Mtce.), BSNL, Northern Telecom Region, Room No. 257, 2nd Floor, Kidwai Bhawan, Janpath, New Delhi 110001.

முழு விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தை டவுண்லோட் செய்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணைய தள முகவரி: www.bsnl.co.in

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் டிசம்பர் 15, 2009.

செவ்வாய், 24 நவம்பர், 2009

பாபர் மசூதி இடிப்பு-லிபரான் கமிஷன் குற்றம் சாட்டும் 68 பேர் விவரம்

டெல்லி: பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் 68 பேருக்கு தொடர்புள்ளதாக லிபரான் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.

இதில் முன்னாள் பிரதமர் [^] வாஜ்பாய் [^], பாஜக மூத்த தலைவர் அத்வானி [^], சிவசேனா தலைவர் பால் தாக்கரே, 11 அதிகாரிகளும் அடக்கம். இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 3 பேர் இப்போது உயிருடன் இல்லை.

900 கொண்ட இந்த கமிஷனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் விவரம்:

1. ஆச்சார்ய தர்மேந்திர தேவ் (தரம் சன்சத், உறுப்பினர்)
2. ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் (விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்)
3. ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு, ஐ.ஜி)
4. அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசியாபாத் கூடுதல் எஸ்பி)
5.அசோக் சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
6. அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்)
7. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (பாஜக)
8. பத்ரி பிரசாத் தோஸ்னிவால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
9. பைகுந்த் லால் சர்மா (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
10. பால் தாக்கரே (சிவசேனா)
11. பி.பி.சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)
12. பரம் தத் திவிவேதி (உ.பி. வருவாய்த்துறை அமைச்சர்)
13. சம்பத் ராய் (அயோத்தி கட்டுமானப் பிரிவு மேலாளர்)
14. தாவு தயால் கன்னா (பாஜக)
15. டி.பி.ராய் (பைசியாபாத் மூத்த எஸ்பி)
16. தேவ்ரஹா பாபா (சந்த் சமாஜ் தலைவர்)
17. குர்ஜான் சிங் (விஎச்பி, ஆர்எஸ்எஸ்)
18. ஜி.எம்.லோதா (பாஜக)
19. கோவிந்தாச்சார்யா (ஆர்எஸ்எஸ்)
20. எச்.வி.சேஷாத்ரி (ஆர்எஸஎஸ்)
21. ஜெய் பகவான் கோயல் (சிவசேனா)
22. ஜெய் பன் சிங் பவாரியா (பஜ்ரங் தள்)
23. சுதர்ஷன் (ஆர்எஸ்எஸ் தலைவர்)
24. கல்ராஜ் மிஸ்ரா (பாஜக உ.பி. மாநில தலைவர்)
25. கல்யாண் சிங் (உ.பி. முதல்வர்)
26. குஷபாவ் தாக்கரே (ஆர்எஸ்எஸ்)
27. லால்ஜி தண்டன் (உ.பி. மின்துறை அமைச்சர்)
28. லல்லு சிங் செளஹான் (பாஜக அயோத்தி எம்எல்ஏ)
29. முன்னாள் துணை பிரதமர் அத்வானி (பாஜக)
30. மகந்த் அவைத்யநாத் (இந்து மகாசபா)
31. மகந்த் நித்யகோபால் தாஸ் (ராம் ஜென்ம பூமி நியாஸ் தலைவர்)
32. மகந்த் பரமஹம்ஸ் ராம் சந்தர் தாஸ் (விஸ்வ ஹிந்து பரிஷத்)
33. மோரேஸ்வர் தினாநாத் சவே (சிவசேனா)
34.மோர்பந்த் பிங்கலே (சிவசேனா)
35. முரளி மனோகர் ஜோஷி (பாஜக)
36. ஓம் பிரதாப் சிங்
37. ஓங்கார் பாவே (விஸ்வ ஹிந்து பரிஷத்)
38. பிரமோத் மகாஜன் (பாஜக, காலமாகிவிட்டார்)
39. பிரவீன் தொகாடியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)
40. பிரபாத் குமார் (உ.பி. உள்துறை முதன்மை செயலாளர்)
41. புருஷோத்தம் நாராயண் சிங் (விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளர்)
42. ராஜேந்திர குப்தா (உ.பி. அமைச்சர்)
43. ராஜேந்கிர சிங் என்ற பேராசிரியர் என்ற ராஜு பையா (ஆர்எஸ்எஸ் தலைவர்)
44. ராம் சங்கர் அக்னிஹோத்ரி (பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத்)
45. ராம் விலாஸ் வேதாந்தி (சந்த் சமாஜ் தலைவர்)
46. ஆர்.கே.குப்தா (உ.பி. நிதியமைச்சர்)
47. ஸ்ரீவஸ்வதா (பைசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்)
48. சாத்வி ரிதாம்பரா (சந்த் சமாஜ் தலைவர்)
49. சங்கர் சிங் வகேலா (குஜராத் மாநில பாஜக தலைவர். இப்போது காங். மத்திய அமைச்சர்)
50. சதீஷ் பிரதான் (சிவசேனா)
51. ஸ்ரீ சந்தர் தீட்சித் (பாஜக)
52. சிதா ராம் அகர்வால்
53. கெளர் (மாவட்ட ஆணையர்)
54. சுரேந்தர் சிங் பண்டாரி (பாஜக)
55. சூர்ய பிரதாப் சாகி (உ.பி. அமைச்சர்)
56. சுவாமி சின்மயானந்த் (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)
57. சுவாமி சச்சிதானந்த சாக்ஷி (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)
58. திரிபாதி (உபி போலீஸ் டிஜிபி)
59. சுவாமி சத்மிட் ராம் ஜி (சந்த் சமாஜ்)
60. சுவாமி சத்யானந்த் ஜி (சந்த் சமாஜ்)
61. சுவாமி வாம் தேவ்ஜி (சந்த் சமாஜ்)
62. உமா பாரதி (விஸ்வ ஹிந்து பரிஷத்)
63. பாஜ்பாய் (பைசியாபாத் போலீஸ் டிஐஜி)
64. விஜயராஜே சிந்தியா (பாஜக)
65. சக்சேனா (உபி தலைமைச் செயலாளர்)
66. வினய் கத்யார் (பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ்)
67. விஷ்ணு ஹரி டால்மியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)
68. யோத் நாத் பாண்டே (சிவசேனா)

மதுவிலக்கே மந்திரமாகட்டும்

காலம் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தினாலும் மனித குலத்துக்கு நன்மையை உடனடியாக அது செய்யாத போது நீண்ட காலத்துக்கான அடிப்படையிலும் அது நன்மை தருவதில்லை.

நன்மையைத் தராவிடினும் தீமையைத் தராமலாவது இருக்கலாம். குறிப்பாக பொழுது போகுக்கான பழக்கங்கள் ஒரு தலைமுறையை அழிப்பதோடு நான்கைந்து தலைமுறையையும் பாழ்படுத்தாமல் இருப்பதில்லை. பரம்பரையாய் உயிர்க் கொல்லி நோயாய் இருப்பது மதுப்பழக்கம்.

மது என்பது எந்த வகையாக இருந்தாலும் அது ஏதோ ஒரு வகையில் தீமை பயப்பதுதான். இன்றைக்குக் 'கள்' இறக்குவதைச் சட்டப்படி குற்றமற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் 'கள்'ளை மதுபான பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்கிற குரலும் எழுந்திருக்கிறது.

அதற்கு ஆதரவாகப் பல அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை எந்த லட்சியமும் அற்ற கொள்ளைக் கூட்டணியாகச் செயல்படுவதால் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். ஒரு காலத்தில் மாப்பிள்ளைக்குக் குடிக்கிற பழக்கம் இருக்கிறதா? என்றுதான் பார்ப்பார்கள்.

இப்போது படித்த மாப்பிள்ளைகள் 'பாரில்' அமர்ந்து குடிப்பதை நாகரிகமாகவும் 'பார்ட்டி' என்கிற பெயரில் குடித்துக் கும்மாளமிடுவதை உயர்வென்றும் கருதுவதும் குடியின் ஆதிக்கமாகக் கருதலாம்.

குடித்து விட்டுத் தெருவில் வீழ்ந்து கிடப்பதும் தகராறு செய்வதும் பண்பற்ற செயல்களாக இருந்த நிலைகூட மாறி, இதுவெல்லாம் இனித் தடுக்க இயலாது என்கிற பொதுப்புத்தி நிலைக்கு இந்த நாடு தள்ளப்பட்டு விட்டது.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் என்று சகல துறையினரும் குடிப்பதைப் பற்றிக் குற்றவுணர்வு ஏதும் இல்லாமல் இயல்பாக அதுபற்றி, இது தனிமனித சுதந்திரம் என்று கருத்துரைப்பதும் இதற்கு ஆதாரம் தேடி சங்க இலக்கிய உதாரணங்கள் என்று பிதற்றுவதும் வெட்கக் கேடான விஷயம் என்பது மட்டுமன்றி, ஒரு தலைமுறைக்கே தவறான வழிகாட்டும் கைகாட்டி மரங்களாகவும் இவர்கள் வலம் வருகிறார்கள்.

குடியால் உயர்ந்தவர்களைப் பற்றி இவர்களால் யாரேனும் ஒருவரை அடையாளம் காட்ட முடியுமா...?

அரசுக்கு வருமானம் மதுக்கடைகள் என்று அரசுகள் பிதற்றுகின்றனவே, இது வரை வறுமை ஒழிந்திருக்கிறதா...?

வேலை வாய்ப்புகள் தான் பெருகியுள்ளதா...?

படித்த பண்புள்ள இளைஞர்கள் பலரும் 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் வேலைக்குச் சேர்ந்தபின் புதிய குடிகாரர்களாய் மாறிப்போனதை யாராலும் மறுக்க இயலுமா...?

மேலதிகாரிகளைச் சரிகட்ட, எப்படியாவது சம்பாதிக்கிற உத்திகளைப் பழகவில்லையென்றாவது கூற முடியுமா...?

கல்லூரி மாணவர்களில் சிலர் மேலைநாட்டுத் தாக்கத்தின் விளைவாகக் குடிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

குடிக்கிற ஆண்களைக் கண்டிக்க வேண்டிய மாதர்கள்கூட குடிக்கத் தொடங்கிய வரலாறுகளும் நம்மிடம் உண்டு.

தாயே தன் மகனுக்கு ஊற்றிக் கொடுக்கிறாராம். வெளியே சென்று அதிகமாகக் குடித்துப் பழகி விடுவானாம். வீட்டிலேயே ஒரு 'பெக்கோ' இரண்டு 'பெக்கோ' கொடுத்து விட்டால் வெளியே சென்று சீரழிய மாட்டானாம். குடிக்கு வக்காலத்து வாங்குகிற வணிக ஊடகத்தில் பிதற்றுகிற பேட்டியின் குரல் இது.

குடியின் தீமைகளைப் பற்றிப் பல நூற்றாண்டுகளாக பலரும் குரல் கொடுத்து வரும்போது இந்த நூற்றாண்டிலும் தேவைதானா....? என்கிற ஒரு பழமைக் கேள்வி புதுமையாய் எழுந்து வரும்!

எந்த நூற்றாண்டானால் என்ன? நெருப்பு சுடத்தானே செய்யும்! குடி, குடியை எப்போதும் கெடுக்கத்தான் செய்யும். மிகப் பெரிய சாதனையாளர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பகுதியில் குடித்தே அழிந்து போயிருக்கிறார்கள்.

சில கருத்துகளை ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டது என்று ஒதுக்கி விட முடியாது. திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும். புதிய தலைமுறைக்கு இந்தக் கருத்துகள் மிகவும் அவசியம் தான்.

ஒரு தவறை தவறே இல்லையென்று சமாதானப்படுகிற ஒரு தலைமுறை உருவாகி வருகிறபோது இத்தலைமுறையை யார் எப்படிக் காப்பாற்றுவது?

குடி, ஒருவகையில் தனிமனிதப் பிரச்னைதான். அவர்களின் பணம், செல்வம் குடியில் அழிந்து விடுகிறபோது மீறிப்போனால் அக்குடும்பம் பாழ்படும். இது மேலோட்டமானதுதான். குடிக்கிற ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் நோய்க்கூறு ஏற்படும். குறைந்த விலை மருந்து, உழைக்கும் திறன் குறைவதால் நாட்டுக்கு இழப்பு என்று தொடர் சங்கிலிபோல் குடிகாரர்கள் பிரச்னைகள் தொற்று நோயாகி விடுகின்றன.

குடியை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த இடைவிடாத பிரசாரமும் கருத்துப் பரிமாற்றமும் இன்றைக்குத் தேவை. இதற்கான வாய்ப்புகள் உருவாக்குகிற எந்தக் கட்சியையும் அமைப்பையும் ஆதரிக்கத்தான் வேண்டும்.

பூரண மதுவிலக்கே நம் நாட்டின் அறிவுச் செல்வத்தை தக்க வைக்கும். உழைக்கும் திறனை மேம்படுத்தும்! தனி நபர் சேமிப்பைப் பெருக்கும்! வாழ்க்கை வளமும் நலப்படும்! பூரண மதுவிலக்குக்கு யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களை அமைப்பு ரீதியாக ஆதரித்துச் செயல்படுவது காலத்தின் கட்டாயம்!--நன்றி : - க. அம்சப்ரியா - தினமணி
http://www.satyamargam.com/1356

'லீக்' ஆனது லிபரான் அறிக்கை மட்டுமல்ல; இந்துத்துவாவின் கோர முகமும்தான்!!


அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்....

நானூற்றி ஐம்பது ஆண்டுகால வரலாற்று சின்னமாக கம்பீரமாக காட்சிதந்த இறையில்லமாம் பாபர் மஸ்ஜித், சட்டத்தை பாதுகாக்கும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, சட்டமன்றத்தின் முதல்வரான கல்யான் சிங் எனும் இந்துத்துவா அரசின் ஒத்துழைப்போடு, மத்திய அரசின் கண்டுகொல்லாமை உதவியோடு உலகம் சாட்சியாக பட்டப்பகலில் அத்வானி-முரளிமனோகர் ஜோஷி-உமாபாரதி போன்றவர்களின் உத்தரவின் பேரில் இந்துத்துவா பயங்கரவாதிகள் பாபர் மஸ்ஜிதை தரைமட்டமாக்கினர். பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள் யார் என்று கேட்டால் பச்சிளம் குழந்தையும் பட்டென்று அடையாளம்காட்டும் இந்த பயங்கரவாதிகளை! ஆனாலும் மத்தியில் அன்று இருந்த பொம்மை பிரதமர் ராவ், முஸ்லிமகளின் சிந்தனையை திசைதிருப்பும் வகையில், இடிக்கப்பட்ட அதே இடத்தில் மஸ்ஜித் கட்டித்தரப்படும் என்று கூறியதோடு, பியார்ச்சினையை ஆரப்போடுவதற்கு வழக்கமாக ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்படும் ஆணையம் ஒன்றை போட்டார்.
அந்த லிபரான் கமிஷன் 'மெகா சீரியலாக' 48 தடவை நீட்டிக்கப்பட்டு, 11 ஆண்டுகள் கழித்து 8 கோடியை காலிசெய்தபின் அறிக்கையை சமர்ப்பித்தது. லிபரான் அவர்கள் தனது அறிக்கையை சமர்ப்பித்த அந்த வேளையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நடந்துகொண்டுதான் இருந்தன. காங்கிரஸ் அரசுக்கு உண்மையில் முஸ்லிம்கள் மீது அக்கறை இருந்திருக்குமானால், அந்த கூட்டத்தொடரிலேயே அறிக்கையை வைத்து விவாதித்து இருக்கும். ஏற்கனவே சச்சார் அறிக்கையை கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டதுபோல், இதையும் கிடப்பில் போட்டது. ஆனாலும் அனைத்திற்கும் ஆற்றலுடைய அல்லாஹ், பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம் நெருங்கிவரும் வேளையில் லிபரான் அறிக்கையை 'லீக்' ஆக செய்துவிட்டான். அந்த அறிக்கையும் அத்வானி-வாஜ்பேயி உள்ளிட்ட இந்துத்துவாக்களை குற்றவாளியாக அடையாளம் காட்டுகிறது.
  • பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு வாஜ்பேயி-அத்வானி- முரளிமனோகர் ஜோஷி மற்றும் இந்து அமைப்புகளே காரணம். இதற்கான நேரடி சாட்சிகள் அடங்கிய ஆதாரங்கள் உள்ளன.
  • பாபர் மஸ்ஜிதை எப்படி இடிக்கவேண்டும் . அந்த சமயத்தில் யார் என்ன என்ன செய்யவேண்டும் என்று மிக மிக திட்டமிட்டு நடத்தப்பட்டது.
  • வாஜ்பேயி-அத்வானியை குற்றமற்றவர்கள்- நிரபராதி என்று கூறிவிடமுடியாது.
  • பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள் சங்பரிவார் ஏற்பாடு செய்த கரசேவகர்கள் என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒருங்கிணைத்து அழைத்துவரப்பட்டுள்ளனர். மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பு இவர்களுக்கு பண பட்டுவாடா நடந்துள்ளது. ராம ஜென்ம பூமி திட்டத்திற்காக அதன் தலைவர்கள் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து வங்கியில் சேமித்து வைத்திருந்தனர். மஸ்ஜித் இடிப்பில் ஈடுபட்டவர்களுக்கு இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மஸ்ஜிதுக்குள் எவ்வாறு நுழையவேண்டும் என்றும் வழிகாட்டப்பட்டுள்ளது.
  • மஸ்ஜிதை இடித்தவர்களின் முகம் மூடப்பட்டிருந்தது.
  • பாபர் மஸ்ஜிதை இடிக்கவேண்டும் என்று வினய்கத்தியார்-உமாபாரதி ஆகியோர் பலமுறை பேசி கரசேவகர்களிடம் ஆவேசத்தை தூண்டிவிட்டனர். அசோக் சிங்கால், சிரிராஜ் கிஷோர் ஆகியோரும் கரசேவகர்களை பாபர் மஸ்ஜித் இடிப்புக்காக வழிநடத்தினார்கள். எனவே மஸ்ஜித் இடிப்பில் பாஜக மற்றும் சங் பரிவார மூத்த தலைவர்களுக்கு அதிக பங்குண்டு.

இவ்வாறாக மஸ்ஜித் இடிப்பில் இந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்களிப்பை அடையாளம் காட்டும்அறிக்கை, நரசிம்மராவிற்கு நற்சான்று வழங்குவது நெருடலை தருகிறது. மாநில அரசு மத்திய அரசிடம் எவ்வித உதவியும் கோரவில்லை. மாநில கவர்னர் பரிந்துரை செய்யாமல் மத்திய அரசால் மாநில அரசின் விவகாரத்தில் தலையிட முடியாது என்கிறார் லிபரான். சட்ட அடிப்படையில் இது சரி என்றாலும், மாநில அரசு சங்க்பரிவார அரசாக இருக்கும் நிலையில் மஸ்ஜிதை இடிக்கும்பணியை முன்வந்தது செய்து கொண்டிருக்கும் நிலையில், கூப்பிடு தொலைவில் இருந்த மத்திய அரசின் இராணுவம் கண்டுகொள்ளாமல் இருந்தது நியாயமானதா..? இது எப்படி இருக்கிறதென்றால், உடலில் தீப்பிடித்து எரியும் ஒருவனை காப்பாற்ற அவன் அழைத்தால்தான் வருவேன் என்று சொல்வதுபோல் உள்ளது. மாநில அரசு செயலிழந்தால் அங்கு சட்டம் ஒழுங்கை நலைநாட்டுவது மத்திய அரசின் கடமையல்லவா..? மாநில அரசின் காவலர்கள் மஸ்ஜித் இடிப்பின்போது கண்மூடிக்கொண்டபோது, நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அங்கு மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது தாமாகவே முன்வந்தது மஸ்ஜிதை காக்கவேண்டியது மத்திய அரசல்லவா..?

சரி! இது ஒருபுறமிருக்க, மஸ்ஜிதை அதே இடத்தில் கட்டித்தருவேன் என்று வாக்குறுதி அளித்தார் நரசிம்மராவ். அதை நிறைவேற்ற தனது ஆயுளில் சிறு துரும்பையும் அசைக்காத ராவ் குற்றவாளி இல்லையா..? மேலும் பாபர் மஸ்ஜித் சம்மந்தமான முஸ்லிம் அமைப்புகள், கோர்ட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் இந்த வழக்கு விஷயத்தில் பிரச்சினையை தீர்க்க போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. சுயநலத்துடன் நடந்துகொண்டனர். அவர்கள் மீதும் தவறு உள்ளது என்றும் கூறியுள்ளார் லிபரான். இது உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்ட முஸ்லிம் தலைவர்கள் கண்டனத்திற்குரியவர்கள். அதே நேரத்தில் லிபரான் ஆணையம் முன்பாக அத்வானி போன்றோர் ஆஜராகாமல் இழுத்தடித்ததையும், பலமுறை சம்மன் அனுப்பப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆக, அறிக்கை வெளியாகியுள்ளநிலையில், அறிக்கையில்தான் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தப்பட்ட வில்லையே என்று மத்திய காங்கிரஸ் அரசு கண்டுகொல்லாமையை கடை பிடிக்காமல் உடனடியாக அதிகார பூர்வமாக அறிக்கையை அவையில் தாக்கல் செய்யவேண்டும். விவாதம் நடத்தப்படவேண்டும். சம்மந்தப்பட்ட பயங்கரவாதிகள் தண்டிக்கப்படவேண்டும். மஸ்ஜித் மீண்டும் கட்டப்பட்டு முஸ்லிம்களிடம் வழங்கப்படவேண்டும்.இதுதான் காங்கிரஸ் பாபர் மஸ்ஜித் விசயத்தில் முஸ்லிம்களுக்கு இழைத்த துரோகத்திற்கு பரிகாரமாகும்.

ஞாயிறு, 22 நவம்பர், 2009

அரசு வேலைகள்… அரிய வாய்ப்பு; மிஸ் பண்ணிடாதீங்க!!

நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1100 பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்ஸி தேர்வு!

tnpsc_txt

கராட்சி ஆணையர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கு 1100 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் 5.11.2009 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது மிக முக்கியமான ஒரு வாய்ப்பு. பட்டப்படிப்புதான் அடிப்படைத் தகுதி. கூடுதல் கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பணி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை தபால் அலுவலகங்களில் பெறலாம். இந்த நல்ல வாய்ப்பை இளைஞர்கள் மற்றும் இன்னும் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அறிவிக்கை பற்றிய விவரம்:

நகராட்சி ஆணையர்: மொத்த பணியிடங்கள் -3

சம்பளம் – ரூ 9300-34800 + ரூ 4600

2. அஸிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீஸர் (சட்டம்) – 13

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4600

3. அஸிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீஸர் (டிஎன்பிஎஸ்ஸி அலுவலகம்) – 4

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4600

4. புரபேஷன் ஆபீஸர் (டிபன்ஸ் சர்வீஸ்)-10

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500

5. புரபேஷன் ஆபீஸர் (ஜெயில் சர்வீஸ்)-4

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500

6. ஜூனியர் எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸர் -9

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500

7. அஸிஸ்டன்ட் லேபர் இன்ஸ்பெக்டர் -20

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4400

8. சார் பதிவாளர் -29

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4300

9. மகளிர் நல அலுவலர் (சோஷியல் டிபென்ஸ்) -1

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4300

10. தொழில் கூட்டுறவு கண்காணிப்பாளர் -7

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4200

11. தணிக்கை ஆய்வாளர் (இந்து அறநிலையத் துறை) – 27

சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500

12. வருவாய் துறை உதவியாளர் (அனைத்து மாவட்டங்கள்) – 875

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

13. செயல் அலுவலர் – 5

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

மேலே உள்ள 13 பதவிகளுக்கும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

பின்வரும் 8 பதவிகளுக்கும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றால் போதும்!

14. வணிக வரித்துறையில் உதவியாளர் (அமைச்சுப் பணி)-3

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

15. தொழில் மற்றும் வர்த்தக துறை உதவியாளர் – 63

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

16. வருவாய் ஆணையர் அலுலவக உதவியாளர் – 6

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

17. நில நிர்வாகத் துறை அலுவலக உதவியாளர் -2

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

18. திட்டக் குழுவில் திட்ட உதவியாளர் – 1

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

19. கீழ் நிலை எழுத்தர் – சட்ட மன்றம், தலைமைச் செயலகம் – 3

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

20. டிஎன்பிஎஸ்ஸி அலுவலக உதவியாளர் -4

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

21. சட்டத் துறையில் உதவியாளர் -2

சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400

விண்ணப்பங்களை தபால் அலுவலகங்களில் ரூ 30 செலுத்திப் பெற்றுக் கொள்ளுங்கள்.

தேர்வுக் கட்டணம்: ரூ.100. இதையும் தபால் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

ஆதி திராவிடர் / பழங்குடியினர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ பிற்படுத்தப்பட்டோர் / முன்னாள் ராணுவத்தினர் / கைம்பெண்கள் / ஊனமுற்றோருக்கு முழுமையான கட்டண விலக்குண்டு.

மிக முக்கியமானது:

A Date of Notification 15.11.2009 -

B Last date for receipt of applications 30-12-2009 5.45 P.M.

C Date of Written Examination 11-04-2010 10.00 A.M. to 1.00 P.M.

மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in பார்க்கவும். முழு விவரங்களையும் இங்கு பிடிஎப் கோப்பாகவும் தந்துள்ளோம்.

டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு ஆங்கிலத்தில் – not_eng_css2009

விண்ணப்பம், தேர்வு முறை, மையம், சலுகை குறித்த விவரங்கள்- தமிழில்.. instns_tam_new

மிக அரிய வாய்ப்பு… தவற விடாதீங்க!

ஹிஸ்புல்லாஹ் பொதுச்செயலளாரக ஹஸன் நஸ்ரல்லாஹ் மீண்டும் தேர்வு



6-வது முறையாக ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கத்தின் பொது செயலாளராக செய்யத் ஹஸன் நஸ்ரல்லாஹ் தேர்வு செய்யப்பட்டார் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் மாநாட்டைத்தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள இம்முடிவில் மேலும் புதிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. பல்வேறு இயக்கரீதியான திருத்தங்கள் சமீபத்திய வருடங்களில் இயக்கம் கடந்து வந்த பாதைகளில் சந்தித்த பிரச்சனைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஷேஹ் நாஸிம் கஸ்ஸாம் என்பவர் மீண்டும் துணை பொதுச்செயலாளராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த அறிக்கை எப்பொழுது ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் உயர்மட்டக்குழுவினரால் நஸ்ருல்லாஹ் பொதுச்செயலாளராக தேர்வுச்செய்யப்பட்டார் என்பதை தெரிவிக்கவில்லை. ஹிஸ்புல்லாஹ்வின் தலைமைக்கான தேர்தல்கள் 3 வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும். கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பின் 2 ஆண்டுகள் தாமதாகவே இத்தேர்தல் நடைபெற்றுள்ளது. காரணம் லெபனானின் உள்நாட்டு பிரச்சனைகள் மற்றும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிஸ்புல்லாஹ்விற்கும் இஸ்ரேலுக்குமிடையே நடைபெற்ற போர் ஆகியனவாகும். வருகிற தினங்களில் ஹிஸ்புல்லாஹ் பொதுச்செயலாளர் நஸ்ரல்லாஹ்வின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இயக்கத்தின் புதிய அரசியல் அறிக்கையை வெளியிடுவார் என்றும் கருதப்படுகிறது.நஸ்ரல்லாஹ் ஹிஸ்புல்லாஹ்வின் முந்தைய தலைவர் அப்பாஸ் மொஸ்ஸாவி இஸ்ரேலிய ஹெலிகாப்டர் தாக்குதலில் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லாஹ்வின் தலைமை பதவியை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி: நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

ஐ.எஸ்.ஐக்கு நிதியுதவி அளிக்கும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ


லாஸ் ஏஞ்சல்ஸ்: செப்டம்பர் 11க்கு பிறகு அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ ஒவ்வொருவருடமும் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐக்கு நிதியுதவி அளித்துவருவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

சி.ஐ.ஏவின் வருடாந்திர பட்ஜெட்டில் 3இல் ஒரு பாகம் இதற்காக ஒதுக்கிவைக்கப்படுகிறது. இவ்வாறு அளிக்கும் பணத்தை ஆப்கானிலும், பாகிஸ்தானிலும் போராளிகளை கொல்வதற்கோ அல்லது பிடிக்கப்படுவதற்கோ ஐ.எஸ்.ஐ பயன்படுத்துவதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி அப்பத்திரிகை கூறுகிறது.

தாலிபானுக்கு உதவுதாகவும், அல்காய்தாவிற்கு அடைக்கலம் அளிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட ஐ.எஸ்.ஐக்கு நிதியுதவி அளிப்பது அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மத்தியில் கருத்துவேறு நிலவுகிறது. ஆனால் தாலிபானின் வலுவான பழங்குடி மாகாணங்களில் ஐ.எஸ்.ஐ யின் நெட்வொர்க்கை பயன்படுத்தி தகவல் சேகரிப்பது சி.ஐ.ஏவின் முக்கிய குறிக்கோள்.

புஷ் நிர்வாகம் துவக்கிவைத்த பாகிஸ்தானுக்கு நிதியுதவியளிக்கும் திட்டத்தை ஒபாமா அரசும் மேற்க்கொள்வதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் கூறுகிறது. ஆனால் கிடைக்கும் பணத்தை ஐ.எஸ்.ஐ இஸ்லாமாபாத்தில் தலைமையகம் கட்டுவதற்கு பயன்படுத்துகிறது. அதிகமான ஆபத்து நிறைந்தாக கருதப்படும் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்க்கொள்ளாமல் கட்டிடம் கட்டுவதில் முனைப்புடன் ஐ.எஸ்.ஐ செயல்படுவதைக்குறித்து சி.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கவலையொன்றுமில்லை. மேலும் தாங்கள் வழங்கும் பணம் மூலம் விலைபேசவும் முடியும் என்பது சி.ஐ.ஏவின் திட்டம்.

700க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து சி.ஐ.ஏவுக்கு ஐ.எஸ்.ஐ கைமாறியதாகவும் பாகிஸ்தானில் பணியாற்றும் மூத்த சி.ஐ.ஏ மேற்க்கோள்காட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்திவெளியிட்டுள்ளது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

பாசிச ஹிந்து தீவிரவாதிகள் கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில் கலவரம் பள்ளிவாசல் மீது கல்வீச்சு.


கோழிக்கோடு: லவ் ஜிஹாத் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தர்பியத்துல் இஸ்லாம் சபை என்ற நிறுவனத்தை நோக்கி ஹிந்து ஐக்கியவேதி மற்றும் விசுவ ஹிந்த் பரிசத் ஆகிய தீவிரவாத சங்க்பரிவார பாசிஸ்டுகள் நடத்தவிருந்த பேரணிக்கு மாவட்ட கலெக்டர் தடை விதித்ததைத்தொடர்ந்து கோழிக்கோடு பாளையம் ரோட்டில் நடுவே பொதுக்கூட்டம் நடத்தியது சங்க்பரிவாரம். பின்னர் கூட்டம் முடிந்து பிரிந்து செல்லும்போது தீவிரவாதிகள் அருகிலிலுள்ள பட்டாளம் பள்ளிவாசலில் கல்வீச்சில் ஈடுபட்டனர். கல்வீச்சில் இரண்டு மாடிக்கொண்ட பள்ளிவாசலின் கண்ணாடிகளும் மின்சார விளக்குகளும் உடைந்தன. நடுரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்கெதிராக மிகவும் மோசமான வார்த்தைகளை உபயோகித்து கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் உரையாற்றினர். காவல்துறை கண்ணீர்குண்டுகள், கிரேனேட்டுகள், ஆயுதம்தாங்கிய போலீசார் என கடுமையான பாதுகாப்பையும் மீறி பள்ளிவாசல் மீது கல்லெறியப்பட்டது. போலீசார் இதனை கண்டு பேசாமல் இருந்துள்ளனர். மேலும் கூட்ட்த்தில் உரையாற்றியவர்கள் மிக மோசமான வார்த்தைகளால் முஸ்லிம் சமூகத்தை திட்டி தீர்த்தையும் போலிசார் கண்டு கொள்ளவில்லை . பள்ளிவாசல் மீது கல்லெறிந்தவர்கள் மீது சாதாரண பிரிவிலிலுள்ள வழக்குகளே பதிவுச்செய்யப்பட்டன.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

தமுமுகவின் 15 ஆம் ஆண்டு பொதுக் கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 15ஆம் ஆண்டு சாதனைகளை விளக்கும் வண்ணமாக சென்னை மணிக்கூண்டு தங்கசாலையில் 20/11/09 அன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்திற்கு வட சென்னை மாவட்ட தலைவர் உஸ்மான் தலைமை தாங்கினார்.




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, மாநிலச் செயலளார் பி.எஸ். ஹமீது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

முதல்வரின் வேதனையும்! முஸ்லிம்களின் சோதனையும்!!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக மற்றும் கேரளாவுக்கு இடையே நடந்துவரும் பிரச்சினை திடீரென விசுவ ரூபம் எடுத்துள்ளது. கேரளா உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவதாகக் கூறி வேதனையோடு தமிழக முதல்வர் பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 'முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக 11 ஆண்டுகள் ஆகி தமிழகத்திற்கு நீதி கிடைக்குமென எதிர்பார்த்திருந்தவேளையில் அதற்கு மாறாக மீண்டும் ஒரு விசாரணை, அதை ஐந்து நீதிபதிகள் விசாரிப்பர் என்ற முடிவு இன்னும் எத்தனை ஆண்டுகளோ என்று வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்ற பழமொழி பலித்துவிடாமல் இருக்க யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்று கண்ணீர் வடிக்கும் கலைஞர், 11 ஆண்டுகளாக முஸ்லிம் விசாரணை சிறைவாசிகள் வடித்துக் கொண்டிருக்கும் கண்ணீரை கவனிக்கத் தவறிவிட்டார். கடந்த 11 ஆண்டுகளாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் குணங்குடி ஹனிபா, அப்துல் ரஹீம் போன்றவர்கள் விசாரணை சிறைவாசிகளாகவே சிறையில் வாடி வருகிறார்களே, இது அநீதி என்று நீதிமன்றம் சென் றால், அங்கும் பிணை வழங்க தாமதிக்கப்பட்டு வருகிறதே, இது எந்தவகையான நீதி? சிறையாளிகளுக்கு பிணை வழங்க அரசுத் தரப் பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறதே, இது எந்தவகை நீதி? பதில் சொல்ல முடியுமா முதல்வர் அவர்களே...!

ஏழு வருடங்கள் முடித்த ஆயுள் சிறைத் தண்டனை பெற்ற கைதி கள் கடந்த சில வருடங்களாக அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யப்பட்டு வந்தபோது, அதே போன்று 10 வருடங்கள் சிறைத் தண்டனையை முடித்துவிட்ட முஸ்லிம் ஆயுள் சிறைத் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் முஸ்லிம் சமுதாய அமைப்புகளாலும், மனித உரிமை ஆர்வலர்களாலும் எழுப்பப்பட்ட போது இந்த வருடம் (2009) விடுதலையாக ஒருசில வாரங்களே எஞ்சியிருந்த தண்டனையை முழுவதுமாக அனுபவித்து முடித்துவிட்ட முஸ்லிம் சிறைக் கைதிகள் ஒருசில பேரை மட்டும் விடுவித்தீர்களே... இது எந்த வகை நீதி முதல்வர் அவர்களே...? இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக எங்கு சென்று முறையிடுவது (இறைவனைத் தவிர) என்று தெரியாமல் உள்ளே அடைபட்டுக்கிடக்கும் சிறைவாசிகளும், அவர்களின் குடும் பங்களும், முஸ்லிம் சமுதாயமும் தவித்துக் கொண்டிருக்கிறார் கள். முல்லைப் பெரியாறுக்கு வேதனைப்படும் முதல்வர் முஸ்லிம்களின் வேதனையையும் கவனத்தில் கொள்வாரா?

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதை உணராதவரல்ல தமிழக முதல்வர். எனவே அந்த முதுமொழி பலித்துவிடாமல் இருக்க முதல்வர் உடனே முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கு ஆவண செய்ய வேண்டும்.

வியாழன், 19 நவம்பர், 2009

இஸ்ரேல் குடியிருப்புகள்: ஐநா கண்டனம்!


இஸ்ரேல் ஜெருஸலத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் தொடர்ந்து தனது குடியிருப்புகளை நிர்மாணித்து வருகிறது. இந்த செயலை அமெரிக்கா கண்டித்திருந்த போதும், இஸ்ரேல் அதனைக் குறித்துக் கண்டுகொள்ளாமல் தனது குடியேற்றத்தைத் தொடர்ந்து வரும் நிலையில் மத்தியகிழக்கின் அமைதிக்கு இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் குடியிருப்புகளை நிறுத்துவது அவசியம் என ஐநா பொதுச் செயலாளர் பான்கிமூன் வற்புறுத்தியுள்ளார்.

அதேவேளையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேல் தனது ஜெருசலக் குடியிருப்புகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் மத்திய கிழக்கு அமைதிக்கு ஒத்துழைப்பு வழங்க இக்குடியிருப்புகளை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐநா கண்டனம் குறித்தோ, அமெரிக்க அரசின் வேண்டுகோள் குறித்தோ தாம் கவலைப்படப் போவதில்லை என இஸ்ரேலியப் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகெவ் அறிவித்துள்ளார். ஜெருசலக் குடியிருப்புகள் முன்னர் அறிவித்தபடி எவ்விதத் தடங்கலும் இன்றித் தொடரும் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
source:inneram

நவம்பர் 26 அரஃபா தினம், 27 ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜுப்பெருநாள்)

ரியாத்: வருகிற நவம்பர் 26 ஆம் தேதி அரஃபா தினம் என்றும் 27 ஆம் தேதி ஹஜ்ஜூப்பெருநாள் என்றும் சவூதி அரேபியா அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனைப்பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகத்திலும் இதே தினங்களில் அரஃபா தினமும், ஹஜ்ஜுப்பெருநாளும் கடைபிடிக்கப்படும்.

செவ்வாய், 17 நவம்பர், 2009

வந்தே மாதாரம் பாடலை தமிழக அரசின் பாடப்புத்தகங்களி­ருந்து நீக்குக தமுமுக மாணவரணி கோரிக்கை

இந்திய நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக ஜன கன மன என்ற வங்க மொழிப் பாடலும், அல்லாமா இக்பால் இயற்றிய சாரே ஜஹான்úஸ அச்சா என்ற உருது மொழிப்பாடலும் பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில் முஸ்­லிம்களுக்கு எதிராக எழுதப்பட்ட ஆனந்த மடம் என்ற நாவ­ல் வரும் 'வந்தே மாதரம்' என்ற பாடல் காங்கிரஸில் அன்றைக்கு இருந்த இந்து மகா சபா போன்ற சங்பரிவார அமைப்புகளின் ஆதரவாளர்களால் நயவஞ்சகமாக விடுதலை போரில் திணிக்கப்பட்டது.

1937ல் காங்கிரஸால் அமைக்கப்பட்ட முதல் இடைக்கால அரசின் போது தமிழகத்தில் (சென்னை மாகாணம்) அமைந்த ராஜாஜி தலைமையிலான முதல் அரசின் சட்டசபை கூட்டத் தொடரில் வந்தே மாதரம் பாடலை பாடி சபை நடவடிக்கைகளை துவங்கியதை அன்றைய முஸ்­லிம் லீக் உட்பட முஸ்­லிம் அமைப்புகளும், பெரியார் தலைமையிலான நீதிக்கட்சியும் கடுமையாக எதிர்த்ததின் விளைவாக சட்ட சபையில் அப்பாடல் பாடுவது நிறுத்தப்பட்டது.

விடுதலைப் போராட்ட காலத்தி­ருந்தே முஸ்­லிம்களால் தொடர்ச்சியாக எதிர்க்கப்பட்டு வரும் தாய் நாட்டை ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமாக உருவகப்படுத்தும் வந்தே மாதரம் பாடலை முஸ்­லிம்கள் பாட மறுப்பது அரசியல் சாசன சட்டம் அளித்துள்ள உரிமை. உச்ச நீதிமன்றமும் வந்தே மாதரம் பாடலை பாடுவது கட்டாயமல்ல என தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மத வழிப்பாட்டு பாடலை சிறுபான்மை மதத்தினர் மீது திணிக்க நினைப்பது அப்பட்டமான மதவெறி சூழ்ச்சியாகும். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடலை தமிழுணர்வாளர்கள் மிகுந்த தமிழ்நாட்டில் தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தமிழ்ப்பாட புத்தகங்களில் அச்சிட்டு வருவது வேதனைக்குரியது.

தமிழக அரசின் பாட புத்தகங்களில் தேச பக்தி பாடல் என்று தலைப்பிட்டு வெளியிடப்படும் வந்தே மாதரம் பாடலை உடனடியாக நீக்க வேண்டும் என்று தமுமுக மாணவரணி கோருகிறது. வரக்கூடிய கல்வி ஆண்டில் இப்பாடல் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டால் மாணவர்களை திரட்டி போராட்டங்கள் நடத்த மாணவரணி தயங்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறது.

திங்கள், 16 நவம்பர், 2009

கணவன் அமைவதெல்லாம்..!

ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது என்பது, இனி உங்களது முழு உலகமும் அவள் தான் என்றாகி விடுகின்றது. நீங்கள் மரணமடையும் காலம் வரைக்கும் அவள் தான் உங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய பங்காளியாகவும், உங்களது தோழமைக்கு உரியவளாகவும், இன்னும் சிறந்த நண்பியாகவும் அவள் உங்களுடன் வலம் வரப் போகின்றாள்.

அவள் உங்களது ஒவ்வொரு நிமிடத்தையும், மணி நேரத்தையும், நாளையும், மாதத்தையும், ஏன் முழு வாழ்நாளையும் பகிர்ந்து கொள்ள வருகின்றாள். உங்களது இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்ள வருகின்றாள், உங்களது வெற்றியிலும் தோல்வியிலும் அவள் பங்கெடுத்துக் கொள்கின்றாள், நீங்கள் கனவு காணும் பொழுது அதனை நனவாக்கவும், நீங்கள் அச்சப்படும் பொழுதும் ஆறுதல் கூறவும் அவள் விரைகின்றவளாக இருப்பாள்.

நீங்கள் நோய்வாய்படுகின்றீர்கள் என்று சொன்னால், உங்களது வலியும் வேதனையும் அவளையும் நோவினைக்கு உள்ளாக்குகின்றது. ஒரு தாதியைப் போல ஏன் அவளை விடவும் அதிக உரிமை எடுத்து உங்களுக்குச் சேவகம் செய்ய விரைகின்றவள் அவள் தானே..!

உங்களுக்கு ஒரு உதவி தேவைப்படுகின்றதென்றால், உதவுவதற்காக விரைகின்ற முதல் நபர் அவளாகத் தானே இருப்பாள். அவளால் எந்த அளவு முடியுமோ அதுவரைக்கும் உதவக் கூடியவளாகவும், அதில் தன்னலம் கருததாதவளாகவும் இருக்கின்றவள் அவள்தானே..!

உங்களைப் பற்றி ரகசியம் ஒன்று உண்டென்றால், அவளைத் தவிர வேறு யாரால் அதனைப் பாதுகாக்க முடியும். இன்னும் உங்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை தேவைப்படுகின்றதெனில், அவளது ஆலோசனைகள் உங்களது வருங்காலத்தைக் கணக்கில் கொண்டு மிகச் சிறப்பான ஆலோசனையை அவளால் தானே வழங்க முடியும்.

அவள் எப்பொழுதும் உங்களைத் தொடரக் கூடியவள், உங்களுடனேயே இருக்கக் கூடியவள். நீங்கள் கண் விழிக்கும் பொழுது, காலையில் நீங்கள் பார்க்கும் முதல் நபர் அவளாகத் தானே இருப்பாள், இரவிலும் பகலிலும் உங்களது உணர்வுகளுடன் உறவாடி வரக் கூடியவளும், நீங்கள் அவளைப் பிரிந்திருந்தாலும், அவளது உடல் தான் பிரிந்திருக்குமே ஒழிய உள்ளம் உங்களுடன் தானே ஒட்டிக் கொண்டிருக்கும்.

அவள் எப்பொழுதும் உங்களைப் பற்றிச் சிந்திக்கக் கூடியவளாக, உங்களுக்காக உடலாலும் மனதாலுமு;, ஆன்மாவாலும் பிரார்த்திக்கக் கூடியவளாகவும், இன்னும் நீங்கள் படுக்கைக்குச் செல்லும் முன் இறுதியாக உங்களது கண்கள் பார்க்கக் கூடியதும், அவளாகத் தானே இருக்கும். இன்னும் நீங்கள் உறங்கினாலும் உங்கள் கனவுகளில் கூட உங்களைத் தொடரக் கூடியவளும் அவள் தானே.

சுருங்கச் சொன்னால், அவள் தான் உங்களது முழு உலகமுமே.., நீங்கள் தான் அவளது முழு உலகமும்..!

இறைவனது திருமறையாம் குர்ஆனைப் போல கணவன் மனைவியினுடைய உறவை வர்ணிக்கக் கூடியதொரு வார்த்தையை நான் கண்டதில்லை. இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; (2:187)

நிச்சயமாக, தம்பதிகள் இருவரும் ஒருவர் மற்றவருக்கு ஆடை தானே, ஆடையானது ஒருவரை எவ்வாறு பாதுகாக்கின்றதோ அதனைப் போலவே..! ஏனெனில் ஆடையானது பாதுகாப்பு வழங்குகின்றது, அவனுக்கு இதத்தைத் தருகின்றது, அவனைப் போர்த்திக் கொள்கின்றது, அவனுக்கு உதவிகரமாக இருக்கின்றது, அவனுக்கு அழகையும் கொடுக்கின்றது, மனிதன் என்ற உயர்ந்த அந்தஸ்தையும் கொடுக்கின்றது.

சிந்தித்துப் பாருங்கள்!

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள், பனிபடர்ந்த அந்த அலாஸ்கா பெருவெளியில் நீங்கள் ஆடையின்றி உலாவ முடியுமா? அந்த அலாஸ்காவில் உலா வருகின்ற ஒருவனுக்கு ஆடையானது எந்தளவு பாதுகாப்பையும், இதத்தையும் வழங்கி, அவனுக்கு உதவிகரமாக இருப்பது போலவே ஒரு கணவனுக்கு அமைகின்ற மனைவியும் அத்தகைய தன்மைகளை வழங்கக் கூடியவளாக இருக்கின்றாள்.

ஒரு கணவனுக்கும் இன்னும் மனைவிக்கும் இடையே உள்ள உறவானது மனித நாகரீகத்தில் உள்ள மற்ற உறவுகளை விட மிக்க மேலானது. அன்பும், பாசமும், நெருக்கமும், கருணையும், இன்னும் உங்களுடன் இருக்கும் பொழுது அவள் அடைகின்ற பரவசமிக்க உணர்வுகளை வார்த்தைகளால் வடித்து விட முடியாது. மனிதனால் ஓரளவே அந்த உணர்வுகளை வகைப்படுத்த முடியும். ஆனால் நம்மைப்படைத்த இறைவன் அதனை இவ்வாறு நமக்கு விளக்கிக் காண்பிக்கின்றான் :

அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; (16:72)

படைத்த வல்லோனாம் அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலாவினால் மட்டுமே தம்பதிகளிடையே இத்தகைய நெருக்கத்தையும், உணர்வுப்பூர்வமான அதிசயக்கத்தக்க அன்பையும் வழங்கி, தனது கருணையை அவர்கள் மீது பொழிய முடியும்.

இன்னும் இறைவன் தனது திருமறையில் கூறுகின்றான், வானங்களிலும், பூமியிலும் இறைவன் இருக்கின்றானா என்ற அத்தாட்சியை நீங்கள் தேடக் கூடியவர்களாக நீங்கள் இருந்தால், உங்கள் மனைவியர்களின் இதயத்தில் நான் விதைத்து வைத்திருக்கின்ற உணர்வுகளை ஆராய்ந்து பாருங்கள், அங்கும் உங்களுக்கு அத்தாட்சிகள் விரவிக் கிடக்கின்றன என்று கூறுகின்றான் :

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

மனிதர்களது மனது என்பது நிலையானதல்ல என்பதை இறைவன் அறிந்தவன், மனிதர்களது மனமானது அடிக்கடி மாறக் கூடியது, அது வாழும் நாளில் பல நேரங்களில் பலவீனங்களைச் சந்திக்கக் கூடியது. அதில் உலா வரக் கூடிய உணர்வுகள் நேரத்திற்கு நேரம் மாற்றமடையக் கூடியது. இருவருக்குமிடையே இருக்கின்ற பரஸ்பர அன்பானது சில நேரங்களில் மிகுதியாகவும், சில நேரங்களில் வெறுமையாகவும் காணப்படும். உறவுகளைச் சரிவரப் பேணவில்லை என்றால், ஊடல்கள் மழிந்து திருமண உறவில் விரிசல் ஏற்படக் கூடும். எனவே, அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

திருமணம் செய்து விட்டவுடன் தம்பதிகளின் வாழ்வில் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கி விடும் என்று உறுதியாகக் கூற முடியாது, இறுதி வரை மகிழ்ச்சி உங்களது இல்லத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்றால், தம்பதிகள் இருவருடைய பரஸ்பர ஒத்துழைப்பினால் மட்டுமே அது சாத்தியமாகும். ஒரு மரமானது செழிப்பாக வளர வேண்டுமெனில், அது ஊண்றப்பட்டிருக்கின்ற மண் செழிப்பாக இருக்க வேண்டும், முறையான பராமரிப்புடன், தண்ணீர் மற்றும் உரங்களையும் சரியான விகிதத்தில் வழங்கினால் அந்த மரம் செழிப்பாக வளர்வதோடு, எதிர்பார்க்கின்ற பலனையும் கொடுக்கும். அது போலத் தான் குடும்ப அமைப்பும்..!

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய மனைவிமார்களுடன் எத்தகைய வாழ்வை வாழ்;ந்திருக்கின்றார்கள் என்பதை அறிவீர்களா?! இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரியத்திற்குரிய மனைவியான அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் ஓட்டப்பந்தயம் நடத்தியுள்ளார்கள்.

ஒருமுறை பாலைவனப் பகுதிக்கு தன்னுடைய குடும்பத்தினர்களுடன் சென்ற இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள, அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வெற்றி பெற்றார்கள். இன்னுமொரு முறை இருவருக்கிமிடையே நடந்த ஓட்டப்பந்தயத்தில், அன்னையவர்கள் அதிக எடை போட்டதன் காரணமாக, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த முறை வெற்றி பெற்றார்கள்.

அறிந்து கொள்ளுங்கள்..!

ஒருமுறை எத்தியோப்பிய நாட்டு வீரர்கள் வீர விளையாட்டு விளையாடிய பொழுது, அதனைக் காண தனது மனைவியர்களுடன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் சென்றுள்ளார்கள்.அவர்கள் மீது கணவன் காட்டுகின்ற அன்பு, இன்னும் நான் உன் மீது அன்பு வைத்திருக்கின்றேன் என்று அவர்களுக்கு உணர்த்தும் பொழுது, இருவருக்குமிடையே உள்ள உறவில் விரிசல் விழுவது தவிர்க்கப்படுகின்றது. கணவனாகிய நீங்கள் அவள் மீது காட்டுகின்ற பாசத்திற்கும், நேசத்திற்கும் கூட இறைவன் உங்களுக்கு நற்கூலி வழங்குகின்றான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள் :

அல்லாஹ்வினுடைய திருப் பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி ஒருவர், தனது மனைவிக்கு ஒரு கவளம் உணவு ஊட்டினாலும், அதற்காக அவர் வெகுமதி அளிக்கப்படுவார்.

மனைவியின் வாயில் ஒரு கவள உணவை ஊட்டுவது கூட நன்மையைப் பெற்றுத் தருமா என நீங்கள் மிகவும் மலிவாகக் கருதி விடாதீர்கள். அவளுக்காக அவள் பயணம் செய்யக் கூடிய கார்க் கதவைத் திறந்து விட்டு அவளை உட்கார வைப்பது கூட உங்களுக்கு நன்மையைப் பெற்றுத் தரக் கூடியதே..!

ஒட்டகத்தில் ஏறுவதற்காக தனது மனைவிமார்களுக்கு தனது பாதத்தை ஒட்டகத்திலிருந்து இறக்கிக் கொடுத்து, அவர்கள் ஒட்டகத்தில் மீது ஏறிக் கொள்வதற்கு உதவி இருக்கின்றார்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள்.

தொழுகையில்..! நீங்கள் வீட்டில் அமர்ந்து தொழக் கூடிய சந்தர்ப்பங்களில் இருவரும் ஒரே நேரத்தில் தொழ முயற்சி செய்யுங்கள். இறைவன் முன்னிலையில் நீங்கள் இணைந்து நிற்பது உங்களது உறவுக்கு சாட்சியாக இருப்பதோடு, உங்களது நெருக்கத்தையும் அது இறுக்கமாக்கி வைக்கும். அல்லாஹ்வின் அருட்கொடைகளின் காரணமாக, உங்களது இல்லத்தில் அருட்கொடைகளும் அமைதியும் பூத்துக் குலுங்கும்.

அறிந்து கொள்ளுங்கள்..! தம்பதிகளில் யார் இரவுத் தொழுகைக்கு எழுந்து தொழுகின்றார்களோ, அவர்களுக்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் நற்செயதி வழங்கியிருக்கின்றார்கள். இன்னும் தம்பதிகள் இருவரில் யாராவது ஒருவர் முதலில் எழுந்து, மற்றவரை எழுப்ப வேண்டும் என்றும், இயலவில்லை எனில் அவள் அல்லது அவர், ஒருவர் மற்றவரின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாவது எழுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

கணவன்மார்களே..!

உங்களது மனைவியுடன் எப்பொழுது சொல்லாலும், செயலாலும் நல்ல மனிதராகத் திகழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

அவளுடன் இதமாகப் பேசுங்கள், சிரித்து மகிழுங்கள், அவளுடைய ஆலோசனையைக் கேட்டுப் பெறுங்கள், அவளது கருத்தையும் செவி தாழ்த்திக் கேளுங்கள், முடியுமானவரை உங்களது நேரங்களில் ஒரு பகுதியை அவளுக்காகவே ஒதுக்கி அவளுடன் தனித்திருங்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ''உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களின் மனைவியரிடத்தில் சிறந்தவர் தான்"", என்று கூறியுள்ளார்கள்.

இறுதியாக, பொதுவாக ஒருவர் மற்றவரிடம் நான் இறுதிவரை உன் மீது அன்பு செலுத்துவேன், மரணம் தான் நம்மைப் பிரிக்கவல்லது என உறுதிப் பிரகடனம் செய்து கொள்வது நல்லது. இந்த உறுதிப்பிரகடனத்தைச் செய்து கொள்வது நல்லது என்பதை விட அது மிகச் சிறந்தது, இது கூட நீங்கள் ஒருவர் மற்றவர்மீது அன்பு செலுத்தவதற்குப் போதாது என்று கூடச் சொல்லுவேன். அதனை நீங்கள் முழுமைப்படுத்த வேண்டுமென்றால், அவள் எதன் மீது அன்பு வைத்திருக்கின்றாளோ அதன் மீது நீங்களும் அன்பு செலுத்தாத வரை, உங்களது பிரகடனம் முழுமை பெறாது.

அவள் அன்பு செலுத்துகின்ற அவளது குடும்பத்தின் மீது நீங்கள் அன்புடையவராக இருக்க வேண்டும். இன்னும் உங்களது வீட்டிற்கு விருந்தாளியாக வருகை தரக் கூடிய அவளுடைய குடும்பத்தவர்களை புறக்கணிக்கக் கூடிய, உதாசினமாக நினைக்கக் கூடிய அநேகமானவர்களைப் போல நீங்களும் ஆகி விடாதீர்கள். உனது குடும்பத்தவர்களையும் எனக்குப் பிடிக்கவில்லை, ஏன் உன்னையும் பிடிக்கவில்லை என்று கூறக் கூடிய மோசமான நபர்களைப் போல நீங்களும் ஆகி விடாதீர்கள்.

ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள நேசத்தைப் பிரிக்கவல்லது மரணமே..! என்று நினைப்பது கூட தவறானது, ஏனெனில் நாம் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையின் மீது இறைவிசுவாசம் கொண்டுள்ளவர்கள். மரணம் என்பது இந்த உலக வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளியாக இருக்கலாம், ஆனால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள நேசத்திற்கு முடிவு என்பதே கிடையாது என்பதை இறைவசனம் இவ்வாறு மெய்ப்பிக்கின்றது :

நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). (43:70)

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும்

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குமிடையே நிலவிய அன்பும் பாசமும் 25 வருடங்களாக அறுந்து விடாத நூலைப் போலத் தொடர்ந்தன. அவர்கள் விரும்பியதையே, அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் விரும்பியவர்களாகவும், இன்னும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பியதையே அன்னையும் விரும்பியவர்களாகவும் அவர்களது வாழ்க்கைப் பயணம் இனிமையாகவும், அன்பாகவும், இதமாகவும் சென்றது.

இந்த உறவுப் பயணம் அன்னையவர்களின் மரணத்திற்குப் பின்பும் தொடர்ந்தது. எப்பொழுதெல்லாம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆடு அறுக்கின்றார்களோ, அப்பொழுதெல்லாம் அதில் ஒரு பகுதியை எடுத்து, அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது குடும்பத்தினர்களுக்கு கொடுத்து விடக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இன்னும் எப்பொழுதெல்லாம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் வீட்டுக் கதவருகே, விருந்தினர் வந்திருக்கக் கூடியதை அறிவார்களோ அப்பொழுதெல்லாம் வந்திருக்கக் கூடியவர், அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சகோதரி ஹாலா ரளியல்லாஹு அன்ஹா அவர்களாக இருக்கக் கூடாதா? என்று நினைத்து, இறைவா! வந்திருக்கக் கூடிய விருந்தினர் ஹாலாவாக இருக்கட்டும் என்று பிரார்த்தனை புரியக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

எனவே, சகோதரர்களே..!

இல்லம் என்னும் நல்லறம் தழைக்க பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, குடும்பம் என்னும் பூங்காவில் எப்பொழுதும் இனிமை எனும் பூக்கள் பூத்துக் குலுங்க, இருவரும் ஒத்துழைப்போமாக!

அதற்கு வழித்துணையாக இஸ்லாம் எனும் கயிற்றைப் பற்றிப் பிடிப்போமாக..!

''Jazaakallaahu khairan'' ரீட் இஸ்லாம்

அமெரிக்காவில் நான்கு மசூதிகள், 500 மில்லியன் டாலர் சொத்துகள் பறிமுதல்

அமெரிக்காவில் உள்ள ஒரு முஸ்லிம் நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு மசூதிகளையும், நியூயார்க் நகரில் உள்ள மிக உயரமான பல அடுக்கு கட்டடம் ஒன்றையும், அமெரிக்க அரசாங்கம் கையகப்படுத்த உள்ளது. இந்நிறுவனம் ஈரான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதாக, சந்தேகத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அமெரிக்க சரித்திரத்திலேயே தீவிரவாதத்திற்கு எதிரான மிகப்பெரும் கையகப்படுத்தும் செயலாக அமையும்.

அலாவி ஃபவுன்டேஷன் (Alavi Foundation) என்னும் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான (சுமார் 235 கோடி ரூபாய்) சொத்துகளை முடக்க அரசு வழக்கறிஞர்கள், வியாழனன்று மத்திய அரசின் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சமர்ப்பித்துள்ளனர். அலாவி ஃபவுன்டேஷன் நிறுவனத்திற்கு நியூயார்க், மேரிலேன்ட், கலிபோர்னியா மற்றும் ஹுஸ்டனில் இஸ்லாமிய மையங்களும் மசூதிகளும் உள்ளன. தவிர விர்ஜினீயா மாநிலத்தில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் மற்றும் நியூயார்க்கின் மன்ஹாட்டன் நகரில் 36 அடுக்கு கட்டடம் ஆகியனவும் உள்ளன. இவை அனைத்தையும் மற்றும் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் பறிமுதல் செய்ய ஏற்பாடு நிகழ்ந்து வருகிறது. இது ஈரானுக்கு மிகப் பெரிய அடியாக அமையும்.

ஈரான் தீவிரவாத செயல்களுக்கு பண உதவி செய்து வருவதாகவும் அணு ஆயுதம் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. அதற்கான கடுமையான எதிர்நடவடிக்கையாக இதனை நிகழ்த்துகிறது.

அந்நிறுவனம் இந்த நடவடிக்கையை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள உள்ளது. அதன் வழக்கறிஞர் ஜான் டி. வி்ன்டர் (John D. Winter) ”இந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம். அரசாங்கத்தின் புலன் விசாரனைக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக நல்ல ஒத்துழைப்பை அளித்தே வந்திருக்கிறோம். இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று பேட்டியளித்துள்ளார்.

கேரளா: போலீஸ் துப்பாக்கிச்சூட்டிலும் சங்க்பரிவாரின் கத்திக்குத்திலும் இரண்டு முஸ்லிம்கள் பலி


காஸர்கோடு: முஸ்லீம் லீக் மாவட்ட கமிட்டியின் தலைமையில் காஸர்கோடு புதிய பேருந்து நிலையத்தின் அருகில் நடைபெற்ற தேசிய மாநில தலைவர்களுக்கான வரவேற்பு அளிக்கும் பொதுக்கூட்டத்திற்கிடையே ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவரும், பாரதீயஜனதாவைச்சார்ந்த குண்டர்களின் கத்திக்குத்தில் இன்னொருவரும் மரணமடைந்தனர்.

நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் உள்ளிட்ட 20 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்களுக்கும், வியாபார ஸ்தாபனங்களும் கல் வீச்சுக்கு இரையாயின.
ஷஃபீக்(வயது 22) என்பவர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள வந்த முஹம்மது அஸ்ஹர்(வயது 21) பா.ஜ.க குண்டர்களின் கத்திக்குத்தில் பலியானார். பா.ஜ.க வினர்தான் அஸ்ஹரை கொன்றதாக காவல்துறை கூறியுள்ளது. முனீர்(வயது 23), அஷ்ரஃப்(வயது 28), ஸைனுத்தீன்(வயது 26), முனீர்(வயது 35) ஆகியோரும் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். கடுமையான காயம் ஏற்பட்டுள்ள முனீர் மங்களூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பா.ஜ.க வினர்தான் இவர்களை கத்தியால் குத்தியுள்ளனர்.

அமய் ரோட்டிலிலுள்ள ஸலஃபி சென்டர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கல்வீச்சில் பள்ளிவாசலின் கதவுகளும், ஜன்னல்களும் தகர்ந்தது. போலீசாரால் சுடப்பட்ட ஷஃபீக்கிற்கு நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளது. 3 மாதத்திற்கு முன்புதான் இவர் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஸர்கோடு பழைய ப்ரஸ்கிளப் ஜங்சனில் போலீசிற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளவந்த தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. வன்முறையைத்தொடர்ந்து போலீசார்மீது கல்வீச்சு நடைபெற்றது. முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போலீஸ் தொண்டர்களுக்கு நேராக துப்பாக்கிச்சூடு நடத்தியது. வன்முறையத்தொடர்ந்து காஸர் கோடு நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் 2 நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஞாயிறு, 15 நவம்பர், 2009

தொடர் கதையாகும் யு.எஸ். வங்கி வீழ்ச்சி - மேலும் 3 வங்கிகள் திவால்

Orion
நியூயார்க்: அமெரிக்காவில் வங்கிகள் சரிவுக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. நேற்று முன்தினமும் கூட 3 வங்கிகள் திவாலாகின.

இவற்றின் மூலம் இந்த மாதம் மட்டும் மூடப்பட்ட வங்கிகள் எண்ணிக்கை 24. இது கடந்த மாதத்தை விட அதிகம் (20 வங்கிகள்).

இந்த நிதியாண்டில் மட்டும் இதுவரை 123 வங்கிகள் மூடப்பட்டுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை நேப்பிள்ஸிலுள்ள ஓரியன் வங்கி, சான் கிளமெண்ட்டில் உள்ள பசிபிக் கோஸ்ட் நேஷனல் வங்க மற்றும் சாரசோடாவில் உள்ள செஞ்சுரி வங்கி எப்எஸ்பி ஆகியவை மூடப்பட்டன.

ஓரியன் வங்கி 2.7 பில்லியன் சொத்துக்களையும் 2.1 பில்லியன் டெபாசிட்டுகளையும் கொண்டிருந்தது. செஞ்சுரி வங்கி 728 மில்லியன் சொத்துக்கள் மற்றும் 631 டெபாஸிட்டுகளையும் கொண்டுள்ளது.

பசிபிக் கோஸ்ட் நேஷனல் வங்கி 134.4 மில்லியன் சொத்துக்கள் மற்றும் 130.9 மில்லியன் டெபாஸிட்டுகளும் உள்ளன.

இந்த மூன்று வங்கிகளையும் அமெரிக்க காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக் கொண்டது.

கோவில் கருவறையில் செக்ஸ்லீலை

கோவில் கருவறையில் செக்ஸ்லீலையில் ஈடுபட்ட காஞ்சீபுரம் அர்ச்சகர் தேவநாதன் சென்னையில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை பிடிக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்தவர் தேவநாதன் (வயது 35). வாலாஜாபாத்தை அடுத்துள்ள பழைய சீவரம் கிராமத்தை சேர்ந்த இவர் தான் பூஜை செய்து வந்த கோவிலை காமக்கூடாரமாக மாற்றி பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு வந்தது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நெற்றி நிறைய விபூதி பட்டை, வாரி முடித்து கட்டிய கொண்டை, மடித்து கட்டிய வேட்டி...என பக்தி பழமாக காட்சி அளித்த அர்ச்சகர் தேவநாதன் இவ்வளவு மோசமான பேர் வழியா என்று.. காஞ்சீபுரம் நகரமே கதிகலங்கி போய் கிடக்கிறது. ஒன்றல்ல...இரண்டல்ல... மொத்தம் 6 பெண்களுடன் தேவநாதன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு கள்ளக்காதல் மன்னனாக வலம் வந்தகதை பற்றித்தான் ஊர் முழுக்க பேச்சாக உள்ளது.

தேவநாதனின் துணிகர செக்ஸ்லீலைகள் வெளிச்சத்துக்கு வந்ததும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. துரைராஜ் உத்தரவிட்டார்.

இதையடுத்து சிவகாஞ்சி போலீசார் தேவநாதன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தேவநாதன் தப்பி ஓடி தலைமறைவானார். அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால் தொடர்ந்து தேவநாதன் போலீசுக்கு தண்ணி காட்டி கொண்டிருக்கிறார்.

சென்னை நங்கநல்லூரில் தேவநாதனின் உறவினர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இவர்களின் தயவில் சென்னையில் தேவநாதன் பதுங்கி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதையடுத்து அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது அர்ச்சகர் தேவநாதனுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுத்து விட்டது. எனவே எங்களது பிடியில் இருந்து அவர் எங்கும் தப்பிச்சென்று விட முடியாது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றனர்.

கோவில் என்று கூடபாராமல் தேவநாதனுடன் ஒன்றாக இருந்த பெண்கள் அனைவருமே குடும்ப பாங்கான பெண்கள் போல தோற்றம் அளிப்பதாக போலீசார் கூறினார்கள். இவர்களில் ஒரு பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் ஒரு வித மிரட்சியுடனே காணப்படுகிறார்.

உள்ளூர பயத்துடன் காட்சி அளிக்கும் அவர் அர்ச்சகரின் ஆபாசவலையில் சிக்கிய பின்னர் மெய்மறந்து விடுகிறார். இவரைப்போல கோவிலுக்கு வந்த பல பெண்களுடன் நைசாக பேச்சு கொடுத்து அவர்களை தன் வழிக்கு கொண்டு வந் துள்ளார் தேவநாதன். இப்படி தேவநாதனின் காமப்பசிக்கு இரையான பெண்களின் பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே ஆபாச அர்ச்சகரின் செக்ஸ் படங்கள் காஞ்சீபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அமோகமாக விற்பனை யாகிறது. திருட்டுத்தனமாக ஆபாச படங்களை சி.டி.யில் பதிவு செய்து விற்பனை செய்யும் வக்கிர கும்பல் ஒன்று தேவநாதன் பெண்களுடன் செக்ஸ்லீலையில் ஈடுபடும் சி.டி.க்களை 100 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சி.டி. விற்பனை கும்பலை பிடிக்க போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

10 வயது பொடியன் 2 கம்பெனிக்கு C.E.O, 1 மணி நேர லெக்சருக்கு ரூ.82,000

world1 கோலாலம்பூர் : மலேசியாவை சேர்ந்த 10 வயது பொடியன், 2 கம்பெனிகளுக்கு தலைமை செயல் அதிகாரியாக கலக்குகிறான். படிப்பை பாதியில் விட்ட அவனுக்கு, கல்லூரிகளில் 1 மணி நேரம் விரிவுரையாற்ற ரூ.82,000 தரப்படுகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் செரியனா அலியாஸ். இவரது மகன் ஆதி புத்ர அப்துல் கனி. வயது 10. செரியானா 2 நிறுவனங்களைத் தொடங்கி ஆதி என்ற பெயரில் விட்டமின் மாத்திரைகளை விற்பனை செய்து வருகிறார். அப்துல் கனி, 3ம் வகுப்பு வரை படித்தான். ஆனால், தனது பாடத் திட்டத்துக்கு மீறி, இயற்பியல், வேதியியல், கணிதம், புவியியல், உயிரியல் ஆகிய பிரிவுகளில் அடுக்கடுக்கான அறிவை வெளிப்படுத்தினான். இன்டர்நெட்டில் புகுந்து எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தான்.

அறிவுத் தேடலுக்கு இடையே, அன்னையின் பிசினசையும் கவனித்துக் கொள்ளத் தொடங்கினான். இப்போது 2 நிறுவனங்களின் செயல்பாட்டையும் ஏறக்குறைய தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளான் அப்துல் கனி. அதனால், அந்த கம்பெனிகளின் தலைமைச் செயல் அதிகாரி என அவனை அழைக்கின்றனர்.வயதுக்கு மீறிய அறிவாளித்தனம் காரணமாக, மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய அப்துல் கனி, பாடப் புத்தகங்களைப் படிப்பதை விட இன்டர்நெட்டில் அதிகம் அறிய முடிகிறது என்கிறான்.

இதற்கிடையே, பல பாடப் பிரிவுகளில் அவனுக்கு உள்ள அபார ஞானத்தை அறிந்த மலேசிய கல்லூரிகள், அவனை பகுதி நேர விரிவுரையாளராக அழைக்கின்றன.அம்மாவின் கம்பெனி நிர்வாகத்தைக் கவனிப்பதுடன், கல்லூரிகளில் விரிவுரை ஆற்றுவது, இன்டர்நெட்டில் மூழ்குவது என இருக்கிறான் அப்துல் கனி. ஒரு மணி நேர விரிவுரைக்கு ரூ.82,300 ஊதியம் பெறுகிறான். இஸ்லாமிய ஆய்வுக் கல்வியில் விரிவுரையாளராக விரும்புவதாக கூறும் சிறுவனை, கனடா, சிங்கப்பூர், அமெரிக்காவில் படிக்க வைக்க அவனது தாய் திட்டமிட்டுள்ளார்

வியாழன், 12 நவம்பர், 2009

புரியாத புதிர்- கர்கரேயின் குண்டு துளைக்காத உடை எங்கே???

இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பல குண்டுவெடிப்புகளுக்கு இந்துத்துவ பயங்கரவாத அமைப்பே காரணம் என்ற உண்மையை ஆதாரத்துடன் கண்டுபிடித்த மும்பை பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவரான ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதின் முடிச்சு இன்னும் அவிழ்க்கப்படாமலே இருக்கிறது. எத்தனை எத்தனையோ நீதியை நாடும் அமைப்புகள் தனி விசாரணை கோரியும் அதனை ஏற்க அரசுகள் ஏனோ மறுத்துவருகின்றன. அவரின் மனைவியின் கோரிக்கையும் கூட மறுக்கப்பட்டது. அவரின் மரணம் குறித்து மற்றுமொரு சந்தேகத்தினை அவரின் மனைவி கவிதா கர்கரே மீண்டும் எழுப்பியிருக்கிறார்.

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் "எனது கணவர் பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்படும் போது அவர் குண்டு துளைக்காத உடையை அணிந்திருந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேனில் ஏற்றிய போதும் அவர் குண்டு துளைக்காத உடை அணிந்திருந்ததை மும்பை தாக்குதல் சம்பவத் தொலைக்காட்சி காட்சிகளில் காண முடிந்தது.
ஆனால் நான் அவரை மருத்துவமனையில் பார்க்கும்போது குண்டு துளைக்காத உடை இல்லை. எங்கே போனது அந்த உடை என்பது தெரியவில்லை.
அவர் இறந்து சில மாதங்கள் ஆன நிலையில் இந்தக் குண்டு துளைக்காத உடை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கோரியிருந்தேன். அதற்கு எனக்கு, "உடை தொலைந்துவிட்டது' என்ற ஒரே வரியில் பதில் கிடைத்துள்ளது. அந்த உடை எப்படி தொலைந்தது என்பது உள்ளிட்ட எவ்வித விளக்கமும் இல்லை" என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "பயங்கரவாதிகளை ஒடுக்க தனது கணவர் வேண்டுகோளுக்கு இணங்க வீரர்கள் அனுப்பிவைக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் தாக்குதலை அறிந்ததுமே அவர்களை உயிருடன் பிடித்துவிட எனது கணவர் முயற்சித்துள்ளார். அதற்காக கூடுதல் போலீஸை கோரியுள்ளார். 40 நிமிடங்கள் வரை அவர் காத்திருந்தும் வீரர்கள் அனுப்பி வைக்கப்படவில்லை.
அவர் கேட்டத் தருணத்தில் போலீஸை அனுப்பி வைத்திருந்தால் அஜ்மல் கசாப் மட்டுமன்றி தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளையும் உயிருடன் பிடித்திருக்க முடியும். அவர்களின் தாக்குதலை முறியடித்திருக்க முடியும் என்று கூறியுள்ளார். எதற்குமே பதில் அளிக்காத அரசுகள் இவற்றிற்காவது பதில் அளிக்குமா???

தகவல்,
PTI.

வாசர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்!

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தலைவரும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கினைப்பாளருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் www.muthupet.org இணையத்தளத்தில் வாசகர்களின் வினாக்களுக்கு விடைத்தர இசைந்துள்ளார்கள்!! எனவே, தமிழ் கூறும் நல்லுக வாசகர்களே, ஆயத்தமாகுங்கள் உங்கள் கேள்வியை தொடுக்க!
அரசியல்
சமுதாயம்
மனித உரிமை
தேர்தல் களம்
இஸ்லாம்
இஸ்லாமிய வங்கி
இன்னும் இத்தனைக்காலம் உங்கள் மனக்கிடங்கில் போட்டுவைத்த கேள்விகளை ask@muthupet.org க்கு அனுப்பித்தாருங்கள்.
அனுப்ப வேண்டிய கடைசித்தேதி- டிசம்பர் 05/09.
சகோதரர்களே! இணையத்தொடர்பு இல்லாத சகோதர சகோதரிகளிடமும் தகவல் கொடுத்து நீங்களே அவர்களின் கேள்வியைப்பெற்று அனுப்பித்தரலாம்!
இப்படிக்கு.
முத்துப்பேட்டை இணையதளம்
www.muthupet.org

6 இந்திய முஸ்லீம் மாணவர்கள் மீது தாக்குதல்

லண்டன்: வடக்கு லண்டனில் உள்ள இஸ்லாமிய கழக பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 6 இந்திய மாணவர்கள், ஒரு கும்பலால் கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலின் இந்தத் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க லண்டன் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுதவிர மேலும் 3 பேருக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது. பல்கலைக்கழக வளாகம் அருகே சம்பந்தப்பட்ட இந்திய மாணவர்கள் வந்து கொண்டிருந்தபோது அங்கு 30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் வந்து அவர்களை தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்களை இரும்புக் கம்பி, செங்கல், கம்புகளால் சரமாரியாகத் தாக்கினர். இனவெறியுடன் கோஷமும் போட்டபடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அவர்களைத் தடுக்க 2 மாணவர்களும், இன்னொருவரும் முயன்றபோது அவர்களுக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது.
கடந்த வாரம் இப்பல்கலைக்கழக மாணவர் ஒருவரைப் பார்த்து ஒரு கும்பல், இஸ்லாமை கேலி செய்து கிண்டலடித்து வம்புக்கு இழுத்துள்ளது. அவரைத் தொழுகைகக்குப் போக விடாமல் ரகளையும் செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த மாணவரைத் தாக்கியுள்ளனர். இருப்பினும் சக மாணவர்கள் குறுக்கிட்டு அந்தக் கும்பலைத் தடுத்து பிரித்து விட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது பெரும் கும்பலாக வந்து இந்திய முஸ்லீம் மாணவர்களைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து இஸ்லாமிய மாணவர் கழகங்களின் சம்மேளன நிர்வாகிகள் கூறுகையில், முஸ்லீம்களே ஓடி விடுங்கள், பாக்கிஸ் என்று கூறி அவர்கள் தாக்கியுள்ளனர்.
இங்கு படிக்கும் ஆசிய மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது.
அமைப்பின் செய்தித் தொடர்பாளர் காசிம் ரபீக் கூறுகையில், கடந்த ஒரு வருடமாகவே பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற இனவெறித் தாக்குதல்கள் நடந்தபடிதான் உள்ளன. இதுகுறித்து போலீஸ் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுகிறோம் என்றார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 17 முதல் 19 வயதுக்குள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

கடந்த 07.11.2009 தேனி மாவட்டம் கம்பத்தில் முல்லை பெரியர் அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். இதில் ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளர் கே. முஹம்மது கௌஸ், கொள்கை விளக்க பேச்சாளர் மதுரை மைதீன், தேனீ மாவட்டச் செயலாளர் சாதிக், தமுமுக மாவட்டத் தலைவர் அஜ்மீர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் மாணவர்களை அலைக்கழிக்கும் மருத்துவ தேர்வுக்குழு!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தாசில்தார் முஹம்மது சதக்கத்துல்லாஹ். இவரின் மகன் ஷேக் அப்துல்லா (18). இவர் +2வில் 1200க்கு 1135 மதிப்பெண் பெற்றார். இவருக்கு மருத்துவக் கல்லூரியில் கவுன்சிலிங் மூலம் சேர வாய்ப்பு வந்ததையடுத்து மருத்துவக் கவுன்சிலிங்கிற்காக 29.9.2009 அன்று சென்னை கீழ்ப்பாக்கத்திற்குச் சென்றார்.
அன்று கவுசிலிங்கில் தேர்ந்தெடுக்கப் பட்ட இவருக்கு கன்னியாகுமரி மாவட் டம் குலசேகரம் என்ற ஊரில் உள்ள மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் சேர இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் சேர்க்கைக்கான உத்தரவை அன்று வழங் காமல், மறுநாள் வழங்குகிறோம் என்று மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர். ஆனால் மறுதினம் அவர் குறிப்பிட்ட கல்லூரியில் சேரவேண்டும் என்பதால் 'இன்றே உத்தரவை கொடுங் கள் என்று மாணவர் தரப் பில் கெஞ்சிக் கேட்டும் தேர்வுக் குழுவி னர் மறுத்து விட்டு 'நாளை வாருங்கள். நாங்களே இன்று பேக்ஸ் அனுப்பி விடுகிறோம்'' என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து 30.9.09 அன்று மதியம் 1.45 மணியளவில் மாணவருக்கான அனுமதி ஆணையை கொடுத்துள்ளனர். உடனடியாக அந்த ஆணையை பேக்ஸில் மாணவரே கல்லூரிக்கு அனுப்பிவிட்டு, விமானத்தில் போக முடியாததால் காரில் புறப்பட்டு கன்னியாகுமரி சென்றனர். நள்ளிரவு நேரமாகி விட்டதால் அடுத்த நாள் (31.9.09) காலையில் சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர். ஆயினும், 30.9.09 அன்று மாலையே மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதால் மாணவரை தங்கள் கல்லூரியில் சேர்க்க இயலாது என்று கல்லூரி நிர்வாகம் திட்டவட்டமாக கூறிவிட்டது. 29.9.09 அன்று மாலையே பேக்ஸ் அனுப்பி விடுவதாக சொன்ன தேர்வுக் குழுவினர், சொன்னபடி கல் லூரிக்கு பேக்ஸ் அனுப்பவில்லை. மறுநாள் மாணவர் அனுப்பி பேக்ஸும் கல்லூரி நிர்வாகத்தால் ஏற்கப்படவில்லை.

இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மாணவர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மாணவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு உடனடியாக மாற்று ஏற் பாடுகளை செய்ய உத்தரவிட்டது. எனினும் இதுவரை மாணவருக்கான சீட் ஒதுக்கப்படவில்லை. மருத்துவ தேர்வுக் குழுவினர் முஸ்லிம் மாணவரின் மருத்து வக் கல்வியை நாசமாக்க, திட்டமிட்டே செயல்பட்டுள்ளனர். 29.9.09 அன்றே மாணவருக்கு அதுவும் கன்னியாகுமரி கல்லூரியில் அடுத்த நாளே சேரவேண்டிய மாணவருக்கு கடைசி தினத்தன்று ஆணை வழங்கியது உள்நோக்கம் கொண்டது. ஏற்கனவே தேர்வுக் குழு வினால் சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவரும் அலைக்கழிக்கப்பட்டு கடைசி யாக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றார்.

தமிழக அரசின் சிறுபான்மையினர் ஒதுக்கீட்டில் இடம்பெறுவதற்கே மாணவர்கள் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியுள்ளது. முஸ்லிம் மாணவர்களின் கல்வியை திட்டமிட்டே சீர்குலைக்க நினைக்கும் மருத்துவத் தேர்வுக்குழுவின் மீது நடவடிக்கை எடுத்து அம்மாணவருக்கு கன்னியாகுமரியில் இல்லாவிட்டாலும் வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க அரசு நடவடிக்கை எடுத்து முஸ்லிம் மாணவரின் கனவை நனவாக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்குமா?

செவ்வாய், 10 நவம்பர், 2009

விருதே! உன் விலை என்ன?

ஒபாமாஅமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் படுகிறது.
இந்த ஆண்டுக்கான மிகச் சிறந்த ஜோக் இதுவாகத்தான் இருக்கும். இந்த நூற்றாண்டில் அரங்கேற்றப் படும் தலைசிறந்த கேலிக்கூத்து ஒபாமாவுக்கு விருது வழங்கும் விழாவாக அமையும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கமலஹாசனிடம் ஒரு பத்திரி்கையாளர், "உங்களின் அடுத்த இலக்கு ஆஸ்கர் விருதுதானே?" என்று கேட்டார். அதற்குக் கமல், "ஆஸ்கர் விருது என்பது உலகத்தரம் வாய்ந்ததல்ல. அது அமெரிக்கத் தரம் வாய்ந்தது. அமெரிக்காவின் தரத்தைத்தான் நாம் இராக்கிலே பார்க்கிறோமே!" என்று பதிலளித்தார். உண்மையும் அதுதான். அதுபோலவே மேற்கத்தியர்களால் வழங்கபெறும் விருதுகள் அவர்களின் சிந்தனைகளையும் கருத்துகளையும் ஏற்பவர்களுக்கே வழங்கப் படுவது மீண்டுமொரு நிரூபிக்கப் பட்டுள்ளது. தகுதியில்லாத அமெரிக்க அதிபர் ஒருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்கியதன் மூலம் அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா போன்றவர்களை நோபல் கமிட்டி அவமானப் படுத்தியிருக்கிறது!

ஒபாமா எந்த விதத்தில் இவ்விருதிற்குப் பொருத்தமானவர் என்பது நோபல் குழுவிற்கே வெளிச்சம். பெண்களையும் குழந்தைகளையும் -குறிப்பாக இஸ்லாமியர்களைக்- கொல்வதையேக் கொள்கையாக கடைப்பிடித்து வரும் அமெரிக்க அதிபர்கள் வரிசையில் ஒபாமாவும் ஒருவர். அமெரிக்காவின் பாரம்பர்யமிக்க இக்கொள்கையினைச் சற்றும் பிசகாமல் கடைப்பிடித்து வரும் ஒபாமாவிற்கு இவ்விருதினை வழங்கியதன் மூலம் இவ்விருதின் தராதரத்தினை உலகம் அறிந்துக்கொள்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பை நோபல் கமிட்டி வழங்கியுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு, ஒபாமா கடந்த பத்து மாதங்களில் சாதித்தவை யாவை?

  • மற்ற அமெரிக்க அதிபர்களைவிட, "அமைதி, அமைதி வேண்டும்" எனப் பத்திரிகையாளர்களிடம் பேட்டி என்ற பெயரில் கூடுதலாக பம்மாத்துச் செய்வதாலா?

  • ஆப்கானிய அப்பாவிகளைக் கொல்வதற்கு மேலும் ஆயிரக்கணக்கான கொடுங்கோல் இராணுவத்தினை அனுப்ப முயலுவதாலா?

  • தீவிரவாதிகள் என்ற பெயரில் தினம் தினம் குழந்தைகள் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி பாகிஸ்தானியர்களை ஆளில்லா விமானத்தின் மூலம் கொன்றொழிப்பதாலா?

  • பொருளாதாரத் தடை என்ற பெயரில் லட்சக்கணக்கான இரானியர்களை இன்னும் துன்பப் படுத்தத் துடிப்பதாலா?

  • தவறான பொருளாதாரக் கொள்கையால் உருவாக்கப்பட்டப் பொருளாதார வீழ்ச்சியினால் உலகில் பீதியை ஏற்படுத்தி, தமது ஆயுத விற்பனையைப் படுஜோராக விரிவு படுத்துவதாலா?

  • அமெரிக்காவின் கள்ளப் பிள்ளை இஸ்ரேலின் பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்து ஆசிர்வதிப்பதாலா?

  • "பாலஸ்தீனில் வரலாறு காணாத பெரும் போர்க் குற்றத்தினை அப்பாவிகள் மீது இஸ்ரேல் அரங்கேற்றியது" என்ற உண்மையை யூதராக இருந்தும் உலகிற்கு ஆதாரத்துடன் நிரூபித்த கோல்டுஸ்டோனின் அறிக்கையை வழக்கம்போல் தமது வீட்டோ என்ற அதிகாரத்தைப் பயன்படுத்திக் கிடப்பில் போட்டதாலா?

  • தமக்கு ஒத்து ஊதாத ஆட்சியாளர்களை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு உள்நாட்டுக் குழப்பத்தையும் கிளர்ச்சியையும் உருவாக்குவதற்குத் தமது உளவுத்துறையைப் பயன்படுத்துவதாலா?

  • மனித இனம் பார்த்திராத சித்ரவதைகளை அபூகுரைப் மற்றும் குவாண்டனமோ சிறைக் கூடங்களில் அரங்கேற்றுவதாலா?

  • அரபு நாடுகளை அச்சுறுத்துவதற்காகத் தன் கள்ளப் பிள்ளை இஸ்ரேலுக்கு மேலும் மேலும் ஆயுதங்களை வாரி வழங்குவதாலா?

  • கோடிக்கணக்கான குழந்தைகள் பசியாலும் பட்டினியாலும் ஆப்ரிக்காவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது வட்டி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் தமது கட்டுபாட்டில் இயங்கும் உலக வங்கியினை மென்மேலும் கொள்ளையடிக்க ஊக்கப்படுத்துவதனாலா?

  • அமைதி, பேச்சுவார்த்தை என்று பாகிஸ்தானும் இந்தியாவும் நெருங்கி வரும்போது இந்தியாவைப்பற்றி பாகிஸ்தானிடமும், பாகிஸ்தான் பற்றி இந்தியாவிடமும் போட்டுக் கொடுப்பதனாலா?

இவற்றில் எந்தக் காரணத்திற்காக ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப் பட்டிருக்கிறது?

வாங்கிய பிறகாவது நோபல் விருதிற்குத் தன்னைத் தகுதியானவராக மாற்றிக் கொள்ள வேண்டுமேயானால் அமெரிக்க அதிபர் ஒபாமா மிக நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளவேண்டியிருக்கும். அதற்காக,

  1. மனித இனத்திற்கு எதிராகத் தமக்கு முன்னாள் இருந்த அமெரிக்க அதிபர்கள் செய்த அநியாயங்களுக்காகவும் அக்கிரமங்களுக்காகவும் அப்பாவி மக்களிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடப் போகிறாரா?

  2. தம்மிடமுள்ள ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்களில் ஒன்றையாவது அழிக்கப் போகிறாரா?

  3. அமெரிக்காவின் கள்ளப் பிள்ளை இஸ்ரேலின் போர்க் குற்றங்களையும் கொடுஞ் செயல்களையும் கண்டிக்கவாவது போகிறாரா?

  4. பாலஸ்தீன மக்களை ஏமாற்றுவதை நிறுத்தத்தான் போகிறாரா?

  5. இராக்கிலும் ஆப்கனிலும் தங்கள் இராணுவத்தினர் புரியும் அடாவடிகளை நிறுத்துவதற்கு உத்தரவிடப் போகிறாரா?

  6. தனது நாட்டு இராணுவத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு பில்லியன் பில்லியன் டாலர்களை நஷ்டயீடாக வாரி இறைக்கப் போகிறாரா?

  7. அமெரிக்கா என்பது உலகச் சட்டாம்பிள்ளை என்று காட்டுவதற்காக உலகில் பல பகுதிகளில் நிறுத்தி வைத்திருக்கும் தமது இராணுவத்தினரை திரும்ப அழைக்கத்தான் போகிறாரா?

இவற்றுள் எதையுமே செய்யாதவரை அமைதிக்கான நோபல் விருதுக்கு ஒபாமா எவ்வகையிலும் பொருத்தமானவருமில்லை; தகுதியானவருமில்லை!

ஆக்கம்: சகோ. ஃபைஸுர் ஹாதி

ராஜ் போன்றவர்களால் நாடு பிளவுபடும்- லாலு

டெல்லி: இந்த நாடு இன்னொரு முறை பிளவுபட்டால் அதற்கு ராஜ் தாக்கரே போன்ற சக்திகள் தான் காரணமாக இருப்பார்கள் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் காட்டமாகக் கூறினார்.

இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்காக மகாராஷ்டிர சட்டசபையில் சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ அபு ஆஸ்மி ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டது குறித்து லாலு கூறுகையில்,

ராஜ் தாக்கரேவின் எம்எல்ஏக்கள் நாட்டின் தேசிய மொழிக்கும் அரசியல் சட்டத்துக்கும் விரோதமாக செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இதற்கு மேல் எந்த காரணமும் வேண்டாம். அந்த நடவடிக்கை உடனே எடுக்கப்பட வேண்டும்.

இல்லாவிட்டால், இந்த நாடு இன்னொரு முறை பிளவுபட்டால் அதற்கு ராஜ் தாக்கரே போன்ற சக்திகள் தான் காரணமாக இருப்பார்கள் என்றார்.

தேச துரோகிகள்-பாஸ்வான்:

லோக் ஜன் சக்தி தலைவரான ராம்விலாஸ் பாஸ்வான் கூறுகையில், ராஜ் தாக்கரே கட்சியினர் தேச துரோகிகள். இது இந்திக்கு மாத்திரமல்ல, இந்த நாட்டின் ஒற்றுமை உணர்வுக்கு நேர்ந்துள்ள அவமானம் என்றார்.

பெருமை தேடி தந்த அபு-முலாயம் பாராட்டு:

இந் நிலையில் சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவர் கூறுகையில்,

ராஜ் தாக்கரே ஆட்களின் மிரட்டலையும் மீறி இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்த என் கட்சியின் எம்எல்ஏவான அபு ஆஸ்மியை முதலில் பாட்டுகிறேன். அவரது தைரியம் மெச்சக்கதக்கது.

தனது செயல் மூலம் நாட்டுக்கும் தேசிய மொழிக்கும் அவர் பெருமை தேடித் தந்துவிட்டார். சில கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும்போது தாக்குதல்கள் நடக்கத்தான் செய்யும். அதைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள் என்றார்.

'வேடிக்கை பார்க்கும் காங்-பவார் கட்சி':

சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சி்ங் கூறுகையில், அபு ஆஸ்மிக்கு ராஜின் ஆட்கள் ஒரு வாரமாக மிரட்டல் விடுத்து வந்த நிலையில் சட்டசபையில் போதிய காவலர்களை ஏன் நிறுத்தவில்லை?. தாக்குதல் நடக்கட்டும் என்று தானே.. ராஜ் மனம் கோணாமல் நடந்து கொள்வதற்குத் தானே.

சட்டசபையில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசு தான் காரணம். ராஜை விட அவர்கள் மீது தான் நான் அதிக குற்றம் சாட்டுவேன் என்றார்.

4 ஆண்டு சஸ்பெண்ட்:

இந் நிலையில் அபு ஆஸ்மியை தாக்கிய மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா எம்எல்ஏக்கள் சிஷிர் ஷிண்டே, ரமேஷ் வஞ்சலா, ராம் காதம், வசந்த் கீதே ஆகிய 4 பேரும் 4 ஆண்டுகளுக்கு சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை விலக்கக் கோரி நீதிமன்றத்தை நாடப் போவதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிஷிர் ஷிண்டே இன்னும் எம்எல்ஏவாகக் கூட பதவியேற்கவில்லை. பதவி ஏற்கும் முன்பு அவரை சஸ்பெண்ட் செய்தது செல்லாது என்று ராஜ் தாக்கரேவின் ஆட்கள் 'லா பாயிண்ட்' பேசி வருகின்றனர்.

ஆஸ்மியை கெரோ செய்த சிவசேனா:

இந் நிலையில் இன்று பால் தாக்கரேவின் சிவசேனா கட்சியினர் சட்டதபைக்கு வந்த அபு ஆஸ்மியை கெரோ செய்தனர்.

பால் தாக்கரேவுக்கு வயதாகிவிட்டாலும் சின்னப் பையன் மாதிரி பேசுவதாக அபு ஆஸ்மி கூறியதற்கு கண்டனம் தெரிவித்த சிவ சேனா எம்எல்ஏக்கள், ஒழுங்காகப் பேசினால் தான் இனி மகாராஷ்டிரத்துக்குள் நீ நடமாட முடியும் என எச்சரித்தனர்.

முன்னதாக தனது சாம்னா இதழில் பால் தாக்கரே எழுதியுள்ள கடிதத்தில், அபு ஆஸ்மி சிவசேனா கட்சியினரிடம் சிக்கினால் 'தந்தூரி' ஆகிவிடுவார் என்று கூறியிருந்தார்.

ஈரானில் அமெரிக்க உளவுத் துறையினர் கைது

ஈராக் எல்லையில் அமெரிக்க உளவுத் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈராக் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட மூன்று அமெரிக்க குடிமகன்களின் நோக்கம் உளவு வேலைப்பார்ப்பதுதான் என்று ஈரான் அதிகாரிகள் கூறினர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஷைன் போவர், ஸாரா சுர்த், ஜோஷ் பட்டல் ஆகியோர் ஈரான் போலீசிடம் சிக்கினர். கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று விட்டுத்தான் இம்மூவரும் ஈரான் வந்துள்ளனர். உளவு பார்ப்பதற்காகத்தான் இவர்கள் ஈரான் வந்துள்ளதாக ஈரானின் அரசு தரப்பு வழக்கறிஞர் அப்பாஸ் ஜஃபரி தவுலத்தாபாதி கூறினார். விசாரணை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார் .

மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்.


இரவு 11-1 மணி உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா.அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன்ரிங் ஆக இருக்கலாம். இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள்.

ஆர்வத்தில் மிஸ்டு கால் எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டால் முதல் நாளில் எதிர்முனை மவுனமாகி இருக்கும்.

2-வது நாளில் அதே... நேரத்திற்கு மீண்டும் அந்த ஒரு நொடி ரிங் வரும். மீண்டும் ஆர்வத்தில் நீங்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மீண்டும் எதிர்முனை மவுனமாக இருக்கும்.

3-வது நாளும் நீங்கள் அந்த மிஸ்டு கால் எண்ணை தொடர்பு கொண்டால் வலையில் மீன் விழுந்து விட்டது என அந்த செக்ஸ் கொக்கு துள்ளி குதித்து விடும். ஆற்றில் மீனுக்காக கொக்கு தண்ணீருக்குள் தலையை ஆழ்த்தி வைத்து காத்திருந்து மீன் வந்ததும் லபக்கென்று பிடிக்கும் என்பதால் இந்த ஆசாமிகளை செக்ஸ் கொக்குகள் என்று அழைக்கிறார்கள்.

பெயரை மாற்றி ஊரை மாற்றி தொழிலை மாற்றி பேச்சை தொடங்கும் செக்ஸ் கொக்குகள் மெது மெதுவாக அந்தரங்க பேச்சை தொடங்கும். செக்ஸ் கொக்குவின் வலையில் திருமணமாகாத பெண் என்றால்... காதல் வலைவரிக்கும். திருமணமான பெண் என்றால் கள்ளக்காதலை தொடங்கும்.

சில செக்ஸ் கொக்குகள் வெறும் போனிலேயே ஆபாசமாக பேசி இன்பம் அடைந்து கொள்வார்கள். சில செக்ஸ் கொக்குகள் பெண்களை தங்கள் இருப்பிடம் தேடி வரவழைத்து நாசப்படுத்தி விடுவார்கள்.

இப்படி செக்ஸ் கொக்குகளிடம் ஏமாந்து கற்பையும், உயிரையும் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திருச்சி போலீசார் கூறுகின்றனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ஸ்டெல்லாமேரி(வயது30). என்பவரின் கணவர், இறந்து விட்டார். ஒரு மகன், மாமியாருடன் ஸ்டெல்லா மேரி தனியாக வசித்து வந்தார்.

ஒரு நாள் ஸ்டெல்லா மேரியின் செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்டு ஸ்டெல்லாமேரி ஹலோ என்றார் பதில் ஏதும் இல்லை.

2-வது நாள் 3-வது நாள் இதே போன்று மிஸ்டு கால் வருவதும் ஸ்டெல்லாமேரி தொடர்பு கொண்டால் எதிர்முனை அமைதியாக இருப்பதும் தொடர்ந்தது. அது மீனுக்காக செக்ஸ் வெறியில் காத்திருக்கும் கொக்குவின் வலை என்று தெரியாமல் ஸ்டெல்லா மேரி ஒரு முறை போன் செய்து பேசினார். அப்போதுதான் செக்ஸ் கொக்கு தன்னை செல்வராஜ், நாகை என அறிமுகம் செய்து கொண்டது தான் ஒரு பாதிரியார் என
கூறிக்கொண்டது.

இந்த நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் பாதிரியார் செல்வராஜ் தலையில் அடிபட்ட நிலையில் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசார் அவரது செல்போனில் பதிவாகியிருந்த ஒரு நம்பருடன் பாதிரியார் இரவில் அதிக நேரம் பேசியிருப்பதை கண்டுபிடித்தனர். அதை விசாரித்த போது திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டெல்லா மேரியின் நெம்பர் என தெரிய வந்தது.

ஸ்டெல்லா மேரியை பிடித்து விசாரித்தனர். அவர் பாதிரியாரை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

மிஸ்டு கால் மூலம் அறிமுகமான பாதிரியார் செல்வராஜ், ஸ்டெல்லா மேரியை அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து ஜாலியாக இருந்து உள்ளார்.

கணவனை இழந்த ஸ்டெல்லா மேரி தன்னை பாதிரியார் திருமணம் செய்வார் என நம்பி உடலை ஒப்படைத்து உள்ளார்.

ஆனால் செக்ஸ் கொக்கான பாதிரியார் செல்வராஜுக்கு ஸ்டெல்லா-மேரியின் உடல் மேல் மட்டும் ஆசை. சம்பவத்தன்று போதையில் ஸ்டெல்லா மேரியை மீண்டும் மீண்டும் உறவுக்கு அழைத்து சித்ரவதை செய்தார். ஆத்திரத்தில் செல்வராஜை ஸ்டெல்லா மேரி தள்ளிவிட.. போதையில் கீழே விழுந்த செல்வராஜ் இறந்து விட்டார். இப்போது செக்ஸ் கொக்குவிடம் மாட்டிய ஸ்டெல்லா மேரி... இப்போது சிறைக்கும்-
கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.

பீம நகரை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் அவர். அவருக்கும் இரவில் ஒரு செக்ஸ் கொக்குவிடம் இருந்து அடிக்கடி மிஸ்டு கால் வந்தது. அவரும் பேசினார்.

நாளடைவில் அந்த பெண்ணை செக்ஸ் கொக்கு உறவுக்கு அழைத்து டார்ச்சர் செய்ய கணவரிடம் தைரியமாக அவள் கூறி விட்டாள். பீமநகரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த செக்ஸ் கொக்குவை கண்டுபிடித்து நாலு சாத்து சாத்தினார் கணவர்.

ஒரு முறை அந்த கணவர் ஈ.சி.ரீ சார்ஜ் முறையில் பீமநகர் கடையில் தனது மனைவியின் செல்போனுக்கு சார்ஜ் செய்து உள்ளார். அப்போது அந்த நம்பரை குறித்து வைத்துக் கொண்டு செக்ஸ் கொக்கு இரவில் அடிக்கடி மனைவியிடம் பேசி வலையில் வீழ்த்த துடித்தது தெரிய வந்தது.

நல்ல வேளையாக அந்த முஸ்லீம் பெண் செக்ஸ் கொக்குவிடம் இருந்து தப்பி விட்டார்.

இதுபோன்ற செக்ஸ் கொக்குவிடம் சமீபத்தில் சிக்கி பிணமானவர் அன்பரசி. 21 வயதான லால்குடி அன்பரசி, திருமணமான 3 மாதத்தில் தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு காலை தொடர்பு கொண்டு உள்ளார்.

எதிர்முனையில் முத்தரசநல்லூரில் இருந்து அங்கமுத்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டது அந்த செக்ஸ் கொக்கு. ஏற்கனவே நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்த செக்ஸ் கொக்கு அங்கமுத்து நண்பர்கள் மூலம் கிடைத்த அன்பரசியின் செல்போனுக்கு பேசி அவளை வலையில் வீழ்த்தியது. கடைசியில் புதுக்கணவரை விட செக்ஸ் கொக்கு அங்கமுத்து கொடுத்த சுகம் பிடித்து விட... கணவரை உதறிவிட்டு
அங்கமுத்து வீட்டிற்கே வந்தாள் அன்பரசி.

காதலி நந்தினியை உதறி விட்டு என்னை திருமணம் செய் என்று அங்கமுத்துவை அன்பரசி வற்புறுத்தினாள். எரிச்சலில் அன்பரசியை கொன்று புதைத்தான் அங்கமுத்து.

இப்படி மிஸ்டு காலால் செக்ஸ் கொக்குகளிடம் சிக்கி சில பெண்கள் உயிரை இழந்து உள்ளனர். பல பெண்கள் கற்பை இழந்து உள்ளனர். சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியம் பிடித்தவர் போல உள்ளனர்.

ஸ்டெல்லமேரி, அன்பரசி வாழ்க்கையை பாடமாக கொண்டு செக்ஸ் கொக்குகளிடம் சிக்காமல் திருச்சி பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றனர் போலீசார்..

எனவே மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்.

திங்கள், 9 நவம்பர், 2009

முஸ்லிம் எம்எல்ஏவை அறைந்த ராஜ் தாக்கரே கட்சி எம்.எல்.ஏ (பயங்கரவாதி) க்கள்


மும்பை: மகாராஷ்டிர சட்டசபையில் இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட, சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸிம் ஆஸ்மியை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சி எம்.எல்.ஏ (பயங்கரவாதி) க்கள்
ஆவேசத்துடன் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிர சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மராத்தியில்தான் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ராஜ் தாக்கரே கட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது.

ஆனால் தான் இந்தியில்தான் பதவியேற்பேன் என்று அபு ஆஸிம் ஆஸ்மி கூறியிருந்தார். அப்படியானால் ஆஸ்மி உ.பிக்குப் போக வேண்டும், இங்கு இருக்கக் கூடாது. இந்தியில் பதவியேற்றால் தடுத்து நிறுத்துவோம் என ராஜ் தாக்கரே கட்சி மிரட்டியிருந்தது.

இதனால் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று சட்டசபையில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது, ஆஸ்மி பதவியேற்க வந்தபோது ஏற்கனவே அறிவித்தபடி இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்தார்.

இதையடுத்து மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்களும் திரண்டு அவரிடம் விரைந்தனர். அவர் முன்பு இருந்த மைக்கைப் பறித்தனர்.

ஆஸ்மிக்கு எதிராக கோஷமிட்டனர். மராத்தியில் பதவியேற்குமாறு கோபத்துடன் கூறினர். அப்போது ராஜ் தாக்கரே கட்சி எம்.எல்.ஏ ராம் கதம் ஆஸ்மியை அறைந்து விட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அரை மணி நேரத்திற்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.

சபையில் அமைதியை ஏற்படுத்த முதல்வர் அசோக் சவானும், மின்துறை அமைச்சர் அஜீத் பவாரும் கடுமையாக முயன்றனர்.

முஸ்லிம் உலகில் கவனத்தை பெறாத சிங்கியாங் முஸ்லிம் தேசம்

-M.ஷாமில் முஹம்மட்

-M.ஷாமில் முஹம்மட் அவர்களால் லங்காமுஸ்லிம் இனையதளத்தில் வெளியிட்டப்பட்டது.

இந்த முஸ்லிம் தேசம் இலங்கை போன்று 27 மடங்கு பெரியது, காஷ்மீர் இந்தியாவின் ஆக்கிறமிப்பு பிரச்னையைப் போலவே சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆக்கிறமிப்பு அரச ஒடுக்குமுறை பிரச்சனைகள் உண்டு என்பதும் நம்மில் பலருக்குத் தெரியாத விஷயம். ஏன் வெளியுலகம் அதிகமாக அறியாத விஷயம் என்றுகூடச் சொல்லலாம்.

சீனாவில் சிங்கியாங் என்கிற முஸ்லிம்களின் பிரதேசம்தான் சீனாவின் அதிகமாக அறியபடாத முஸ்லிம் தேசம் ஆகும். சிங்கியாங் இந்தியாவின் லடாக் பகுதியை ஒட்டிய எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. 18 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுள்ள அப்பகுதி சீனாவில் (1/6) ஆறில் ஒரு பங்கு. இந்தியாவில் பாதி நிலப்பரப்புக்கு சமமான பகுதி இது இலங்கை போன்று 27 மடங்கு பெரியது இலங்கை 665,610 சதுர கி.மீ. பரப்பளவுள்ளது ஆனால் சிங்கியாங் 18 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது அங்கு முஸ்லிம்கள் பேச முடியாதவாறு முஸ்லிம்களின் குரல்வளை நெறிக்கபட்டுள்ளது.

இதை இன்னொரு முறையில் விளங்குவது என்றால் 665,610 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இலங்கையின் அதிலும் 15000 சதுர கி.மீ. பரப்பளவுள்ள வடக்கு கிழக்கு அதில் தமிழர் பிரச்சனை பெற்ற உலக கவனத்தை கூட இலங்கை போன்று 27 மடங்கு பாரிய சிங்கியாங் பெறவில்லை என்பதுதான்.

காஷ்மீர் 2,65,000 ச.கி.மீ. பரப்பாகும். அதிலும் 86,000 ச.கி.மீ. பாகிஸ்தான் பக்கம் உள்ளது. 37,500 ச.கி.மீ. சீனாவின் ஆக்கிறமிப்பில் உள்ளது 1,41,000 ச.கி.மீ. இந்தியாவின் ஆக்கிறமிப்பில் உள்ளது.

இன்று சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் இந்தியா ஆக்கிறமிப்பு காஷ்மீர் (சுமார் 1,45,000 ச.கி.மீ.) சிங்கியாங்கில் நூறில் ஒரு பங்குதான். எனவே, சீனாவின் காஷ்மீர் இந்தியாவின் காஷ்மீரைப்போல நூறு மடங்கு பெரிது என்பதால் அதனால் வரும் பிரச்னையும் பெரிது. ஆனாலும்கூட பலருக்கும் இதுகுறித்து அதிகம் தெரிவதில்லை காரணம் சீனா அரசு திட்டமிட்டு முஸ்லிம்களின் குரல்வளை நசுக்கியிருப்பதுதான்.

காஷ்மீர் உலகின் அரைகுறை கவனத்தை பெருவத்தை போன்று கூட சீனா சிங்கியாங் பிரச்னையை உலகம் அறியமுடியாதவாறு முஸ்லிம்களின் குரல்வளை நசுக்கியிருப்பதுடன் முஸ்லிம் அமைப்புக்களும் இயக்கங்களும் இது பற்றிய போதுமான தகவல் இன்றி இருப்பதும் ஒரு முக்கியகாரணமாகும்.

1949-ல் துருக்கிய முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிங்கியாங்கின் மீது படையெடுத்து அதனை சீனா ஆக்கிறமித்து தன் எல்லைகளை அகட்டி கொண்டது. , 1948-ல் இந்தியா, பாகிஸ்தான் வசமிருந்த பெரும்பான்மையான காஷ்மீர் பகுதியை இந்தியா ஆக்கிறமித்து எல்லைகளை அகட்டி கொண்டது இரண்டு ஆக்கிறமிப்புகும் வயது கிட்ட தட்ட ஒன்றுதான் ஆனால் சீனா சிங்கியாங் ஆக்கிறமிப்பின் அழு குரல் வெலியே கேட்காதபடி முஸ்லிம்களை மிக மோசமாக அடக்கி வைத்திருக்கிறது.

சீனா எவ்வாறு சிங்கியாங் தன்னுடன் ஒருங்கிணைத்தது என்பதை கவனித்தால், சிங்கியாங் பிரதேசம் 94 சதவீதம் முஸ்லிம்களை கொண்டதாக காணப்பட்டது பின்னர் சீனா சீனர்களை திட்டமிட்டு பல நுறு குடியேற்றங்களை உருவாகி முஸ்லிம்களை தங்களின் சொந்த மண்னில் அதிகாரமற்ற பொம்மைகளாக்கியது இப்போது 2 கோடி மக்கள்தொகை கொண்ட சிங்கியாங்கில் 57 சதவீதம் தான் முஸ்லிம்கள், 41 சதவீதம் ஹன் எனும் சீனர்கள் 1949-ல் ஹன் சீனர்கள் தொகை வெறும் 6 சதவீதம்தான். அறுபது ஆண்டுகளில் 7 மடங்கு அதிகரித்திருக்கிறது. இது எப்படி நடந்தது? சீனா தனது ராணுவத்தை இயந்திரத்தை மாத்திரமே சிங்கியாங்கை நிர்வகிப்பதற்கு அனுப்பவில்லை . மாறாக, சீனா திட்டமிட்டு சீனர்களை குடியேற்றியது. ஹன் சீனர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அப்பகுதியில் அதிகரிக்கும்படி திட்டமிட்டு சீனர்களை குடியேற்றியது இப்போதைய 41 சதவீதம் சீனர்களின் தொகையானது அங்குள்ள ஆக்கிரமிப்பு ராணுவ வீரர்களோ, அவர்களது குடும்பத்தினரையோ, இடம்பெயர்ந்து அங்கு வசிக்கும் தொழிலாளர்களையோ உள்ளடக்கியது அல்ல.

சிங்கியாங் ஒருகாலத்தில் விவசாயத்தில் பெயர்போன பகுதியாக விளங்கியது. இப்போது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2008-ல் 60 பில்லியன் டாலராக காணப்படுகிறது . அதனுடைய சராசரி தனிநபர் உற்பத்தி 2864 டாலர்கள். சிங்கியாங் நிறைய தாதுக்களும் எண்ணெய் வளமும் நிறைந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அப்பகுதியில் பூதாகரமாக வளர்ந்து வருகிறது. ஷாங்காய் நகருடன் இப்பகுதி எண்ணெய்க் குழாய் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய இயற்கை வளங்களாலும் பெரிய நிலப்பரப்பினாலும் சிங்கியாங் சீனாவுக்கு நிறைய அனுகூலங்களைச் செய்து வருகிறது.

உய்கர் முஸ்லிம்கள் கம்யூனிஸ்ட் சீன அரசின் மீது வெருப்புடன் நாட்களை கழிக்கின்றனர் . ஜெர்மனியைச் சார்ந்த ரெபியா காதிர் என்ற பெண் தொழிலதிபர் உலக உய்கர் காங்கிரஸ் என்ற அமைப்பை தலைமை தாங்கி நடத்தி உய்கர்களின் விடுதலைக்காகப் போராடி வருகிறார்.

சிங்கியாங் பகுதியில் முஸ்லிம்கள் தொடராக எழுச்சி பெருகின்றனர் ஆனாலும் உய்கர்கள் வேரு நாடுகளில் இருந்து எந்த ஆதரவையும் பெற முடியவில்லை. ஆனாலும், இஸ்லாமிய எழுச்சி வளர்ந்து வருகிறது.

ஜூலை 6-ம் தேதி உய்கர் முஸ்லிம்களுக்கும் ஹன் சீன மக்களுக்குமிடையே பெரிய கலவரம் நடந்தது. சிங்கியாங்கின் தலைநகர் உரும்கியில் நடைபெற்ற கலவரத்தில் 184 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 1000 பேர் காயமுற்றனர். சிங்கியாங்கின் தலைநகர் உரும்கியிலும் முஸ்லிம்கள் 90 சதவீதம் இருந்தனர் பின்னர் சீனா திட்டமிட்டு சீனர்களை குடியேற்றியது இந்த திட்டமிட்ட குடியேற்றதின் பின்னர் உரும்கியின் நான்கில் மூன்று பங்கு ஹன் சீனர்கள் மயமாக்கப்பட்டது . இக்கலவரத்தை சீனா தனது இரும்பு கரம் கொண்டு கட்டு முறான்டி தனமாக ஒடுக்கியது . இதன் போது ஒரு இரவில் மட்டும் (10000 ) பத்தாயிரம் முஸ்லிமகள் காணாமல் போயுள்ளனர்.

சீன அதிபர் ஹூஜிண்டாவோ ஜி-8 மாநாட்டுக்குச் சென்றவர் உடனடியாகப் பறந்து வந்தார். அவருடைய அரசு பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் இந்த மூன்று சக்திகளையும் எதிர்த்து யுத்தம் தொடுப்பதாகப் பிரகடனம் செய்தது. சீன அரசு வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் தொழுகையைத் தடைசெய்து ஹிஜாப் அணிய தடை விதித்தது முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்துமாறு அறிவித்தது. வேறு எந்த ஒரு நாடும் இப்படிச் செய்யத் துணியாது. அப்டி இருந்தும் முஸ்லிம் உலகில் கவனத்தை பெறாத விடையமாகவே இருக்கிறது.

சீனா முஸ்லிம்கள் அல்லாத ஹன் சீனர்களை 41 சதவீதம் அளவுக்கு வர வைத்து முஸ்லிம்களின் பெரும்பான்மையை சிறுபான்மையாக மாற்றியமைத்தது. சிங்கியாங்கில் பாதிக்கு மேல் ஹன் சினர்கள் மூலம் நிரப்பப்பட்டது . மக்கள்தொகையின் மதத்தொகுப்புச் சமன்நிலை என்ற முறைக்கு உட்படுத்தி முஸ்லிம்கள் தொடர்ந்தும் சிறுபான்மையாக்கப்பட்டு அடக்கி ஒடுக்குகின்றனர் ஆனால் அன்மையில் ஜெர்மனியில் ஹிஜாப் அணிந்ததற்காக கொடுரமான முறையில் கொல்லபட்ட ஒரு முஸ்லிம் பெண்ணின் வீர பிரதாபம் பெற்ற முஸ்லிம் உலகின் கவனத்தை, மிக பிரமாண்டமான விடையம் பெறாமல் இருப்பது உறக்கத்தை கலைக்கிறது.

குறிப்பு:
சீனாவின் எல்லை நாடுகள்: ஆஃப்கானிஸ்தான் 76 கி.மீ., பூடான் 470 கி.மீ., பர்மா 2,185 கி.மீ., ஹாங்காங் 30 கி.மீ., இந்தியா 3,380 கி.மீ., கஸகஸ்தான் 1,533 கி.மீ., வடகொரியா 1,416 கி.மீ., லாஸ் 423 கி.மீ., மங்கோலியா 4,676 கி.மீ., நேபாள் 1,236 கி.மீ., பாகிஸ்தான் 523 கி.மீ., ரஷ்யா (வடகிழக்கு) 3,605 கி.மீ., ரஷ்யா (வடமேற்கு) 40 கி.மீ., தாஜிகிஸ்தான் 414 கி.மீ., வியட்நாம் 1,281 கி.மீ. இதில் 4 முஸ்லிம் நாடுகள் அமைந்திருக்கின்றன என்பது குறிபிட்ட தக்கது.