ஞாயிறு, 22 நவம்பர், 2009

ஐ.எஸ்.ஐக்கு நிதியுதவி அளிக்கும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ


லாஸ் ஏஞ்சல்ஸ்: செப்டம்பர் 11க்கு பிறகு அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ ஒவ்வொருவருடமும் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐக்கு நிதியுதவி அளித்துவருவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

சி.ஐ.ஏவின் வருடாந்திர பட்ஜெட்டில் 3இல் ஒரு பாகம் இதற்காக ஒதுக்கிவைக்கப்படுகிறது. இவ்வாறு அளிக்கும் பணத்தை ஆப்கானிலும், பாகிஸ்தானிலும் போராளிகளை கொல்வதற்கோ அல்லது பிடிக்கப்படுவதற்கோ ஐ.எஸ்.ஐ பயன்படுத்துவதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி அப்பத்திரிகை கூறுகிறது.

தாலிபானுக்கு உதவுதாகவும், அல்காய்தாவிற்கு அடைக்கலம் அளிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட ஐ.எஸ்.ஐக்கு நிதியுதவி அளிப்பது அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மத்தியில் கருத்துவேறு நிலவுகிறது. ஆனால் தாலிபானின் வலுவான பழங்குடி மாகாணங்களில் ஐ.எஸ்.ஐ யின் நெட்வொர்க்கை பயன்படுத்தி தகவல் சேகரிப்பது சி.ஐ.ஏவின் முக்கிய குறிக்கோள்.

புஷ் நிர்வாகம் துவக்கிவைத்த பாகிஸ்தானுக்கு நிதியுதவியளிக்கும் திட்டத்தை ஒபாமா அரசும் மேற்க்கொள்வதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் கூறுகிறது. ஆனால் கிடைக்கும் பணத்தை ஐ.எஸ்.ஐ இஸ்லாமாபாத்தில் தலைமையகம் கட்டுவதற்கு பயன்படுத்துகிறது. அதிகமான ஆபத்து நிறைந்தாக கருதப்படும் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்க்கொள்ளாமல் கட்டிடம் கட்டுவதில் முனைப்புடன் ஐ.எஸ்.ஐ செயல்படுவதைக்குறித்து சி.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கவலையொன்றுமில்லை. மேலும் தாங்கள் வழங்கும் பணம் மூலம் விலைபேசவும் முடியும் என்பது சி.ஐ.ஏவின் திட்டம்.

700க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து சி.ஐ.ஏவுக்கு ஐ.எஸ்.ஐ கைமாறியதாகவும் பாகிஸ்தானில் பணியாற்றும் மூத்த சி.ஐ.ஏ மேற்க்கோள்காட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்திவெளியிட்டுள்ளது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: