திங்கள், 30 நவம்பர், 2009

இளைஞர்கள் மத்தியில் வன்முறைக்கு காரணம் தமிழ் திரைப்படங்கள்: மலேசிய கட்சி!

மலேசியாவில் வாழும் இந்திய சமூகத்திடம் வன்முறை பரவி வருவதற்கு தமிழ்ப் படங்களே காரணம் என்று மலேசியாவின் இஸ்லாமிய பாஸ் கட்சி கூறுகிறது.

இதுபற்றிப் பேசிய பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் நஸ்ருதின் ஹசான் தன்தாவி இத்தகைய படங்கள் திரையிடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

இந்திய இளைஞர்களிடையே காணப்படும் வன்முறை நீண்டகாலமாக வன்முறைச் சம்பவங்களைக் கொண்ட படங்களை தொலைக்காட்சிகளில் காட்டிய தன் விளைவு என்று அவர் கூறியதாக தி நியூபேப்பர் செய்தி தெரிவித்தது.

“இந்திய இளையர்கள் பிரச்சினை களைத் தீர்க்கப் பயன்படுத்தும் ஆயுதங்களைக் கவனித்தாலே அவை தமிழ்ப் படங்களில் வருவதைப் போலவே இருப்பதை உணரலாம். இந்திய இளையர்கள் நமது சகோதரர்கள் போன்றவர்கள், அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொல்வதை நாம் அனுமதிக்கக்கூடாது,” என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: