வியாழன், 12 நவம்பர், 2009

புரியாத புதிர்- கர்கரேயின் குண்டு துளைக்காத உடை எங்கே???

இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பல குண்டுவெடிப்புகளுக்கு இந்துத்துவ பயங்கரவாத அமைப்பே காரணம் என்ற உண்மையை ஆதாரத்துடன் கண்டுபிடித்த மும்பை பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவரான ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதின் முடிச்சு இன்னும் அவிழ்க்கப்படாமலே இருக்கிறது. எத்தனை எத்தனையோ நீதியை நாடும் அமைப்புகள் தனி விசாரணை கோரியும் அதனை ஏற்க அரசுகள் ஏனோ மறுத்துவருகின்றன. அவரின் மனைவியின் கோரிக்கையும் கூட மறுக்கப்பட்டது. அவரின் மரணம் குறித்து மற்றுமொரு சந்தேகத்தினை அவரின் மனைவி கவிதா கர்கரே மீண்டும் எழுப்பியிருக்கிறார்.

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் "எனது கணவர் பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்படும் போது அவர் குண்டு துளைக்காத உடையை அணிந்திருந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேனில் ஏற்றிய போதும் அவர் குண்டு துளைக்காத உடை அணிந்திருந்ததை மும்பை தாக்குதல் சம்பவத் தொலைக்காட்சி காட்சிகளில் காண முடிந்தது.
ஆனால் நான் அவரை மருத்துவமனையில் பார்க்கும்போது குண்டு துளைக்காத உடை இல்லை. எங்கே போனது அந்த உடை என்பது தெரியவில்லை.
அவர் இறந்து சில மாதங்கள் ஆன நிலையில் இந்தக் குண்டு துளைக்காத உடை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கோரியிருந்தேன். அதற்கு எனக்கு, "உடை தொலைந்துவிட்டது' என்ற ஒரே வரியில் பதில் கிடைத்துள்ளது. அந்த உடை எப்படி தொலைந்தது என்பது உள்ளிட்ட எவ்வித விளக்கமும் இல்லை" என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "பயங்கரவாதிகளை ஒடுக்க தனது கணவர் வேண்டுகோளுக்கு இணங்க வீரர்கள் அனுப்பிவைக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் தாக்குதலை அறிந்ததுமே அவர்களை உயிருடன் பிடித்துவிட எனது கணவர் முயற்சித்துள்ளார். அதற்காக கூடுதல் போலீஸை கோரியுள்ளார். 40 நிமிடங்கள் வரை அவர் காத்திருந்தும் வீரர்கள் அனுப்பி வைக்கப்படவில்லை.
அவர் கேட்டத் தருணத்தில் போலீஸை அனுப்பி வைத்திருந்தால் அஜ்மல் கசாப் மட்டுமன்றி தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பயங்கரவாதிகளையும் உயிருடன் பிடித்திருக்க முடியும். அவர்களின் தாக்குதலை முறியடித்திருக்க முடியும் என்று கூறியுள்ளார். எதற்குமே பதில் அளிக்காத அரசுகள் இவற்றிற்காவது பதில் அளிக்குமா???

தகவல்,
PTI.

கருத்துகள் இல்லை: