நெல்லிக்குப்பத்தில் 24-05-2012 வியாழன் அன்று காலை 9 மணியளவில்
நெல்லிக்குப்பம் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் திறப்பு விழா மெளலானா அப்துல்
கறீம் வீதி ஜூம்மா பள்ளிவாசல் வளாகத்தில் சகோதரர் V.M.ஷேக்தாவுத் (தமுமுக
மாவட்ட செயலாளர், தலைவர் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ்) அவர்கள் தலைமையில்
நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் சகோதரர் M .தமிமுன் அன்சாரி MBA அவர்களும், மாநில ஜமாதுல் உலமா சபை தலைவரும், லால்பேட்டை JMA அரபிக்கல்லூரி பேராசிரியர் A.E.M அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
மமக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் தனது சிறப்புரையில் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் துவங்கியதற்கு தனது உளமார வாழ்த்துக்களை தெரிவித்து ஷஹீத் பழனிபாபா அவர்கள் கன்னியாகுமரியில் ஆரம்பித்த ஐக்கிய மஜ்லிஸை நினைவு கூர்ந்தார். பின்பு இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் பணிகள் அதன் செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என உரை நிகழ்த்தினார்.
இந்தோனிசியாவிற்க்கு அடுத்து இந்தியாவில்தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரில் நாம்தான் பெரும்பான்மையினர். இந்திய முஸ்லிம்களாக வாழ நாம் பெருமைப்பட வேண்டும். காரணம் ஒரு இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியனாக வாழ்வதை விட ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் நாம் வாழும் போது நமது மார்க்கம் அடுத்தவர்களும் அறிந்துகொள்ள வாய்ப்பு உள்ளன எனவும் ஒரு சில மதவாத சக்திகள்தான் இங்கு குழப்பம் விளைவிக்கின்றன, எல்லா இந்து சகோதரர்களும் அல்ல ஆகையால்தான் தேர்தல்களத்தில் மதவாத சக்திகள் இங்கு வெற்றி பெறுவது இல்லை, அதே சமயத்தில் நமக்குள் இருக்கும் பிரிவினை மிக முக்கிய காரணம்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு ஸஹாபி பள்ளியில் இருந்து வெளியில் செல்லும் போது அவர் முதுகில் ஒரு அம்பு இருந்தது அதை கண்ட நபி(ஸல்) அவர்கள் அந்த ஸஹாபியை அழைத்து கூர்மை உள்ள அந்த அம்பு யார் மீதாவது காயம் ஏற்ப்படுத்திவிடப் போகின்றது அதை முழுமையாக மூடி எடுத்து செல்லுங்கள் என்று கூறினார்கள். ஒரு சகோதரனின் உடலில் காயம் ஏற்படுத்துவதை அவர்கள் விரும்பவில்லை, திருக்குரானில் உள்ள ஒற்றுமை எனும் கயிற்றை பற்றி பிடியுங்கள் என்ற வாசகத்தினை அனைத்து தலைவர்களும் சொல்லி இன்று நாம் பல பிரிவுகளாக பிரிந்து ஒற்றுமை இல்லா சமுகமாக உள்ளோம், இப்படிப்பட்ட சூழலில் இங்கு இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் ஆரம்பித்துள்ளது வரவேற்க்கத்தக்கது, எனக்கு முன் பேசிய மாநில ஜமாதுல் உலமா சபை தலைவர் ஹஜ்ரத் அவர்கள் இன்று நமது சமுகத்தில் சில படிக்கும் பெண்கள் நிலை குறித்தும் அவர்கள் மார்க்கத்தை விட்டு வெளியே செல்வது பற்றியும் தனது கவலையையும், ஆதங்கத்தையும் தெரிவித்தார்கள்,
இது நாம் சிந்திக்க வேண்டிய முக்கிய செய்தி முன்பு எங்களது கடற்கரை பகுதியில் சுபுஹீ தொழுகைக்கு பின்பு நமது சிறுவர், சிறுமியர் பெருமளவில் மதரஸாவுக்கு செல்லும் அழகான காட்சி இப்போது அதிகமாக இல்லை. இதே நிலைதான் இன்று தமிழகம் முழுவதும் ஆகையினால் உங்கள் பிள்ளைகளை மதரஸாவுக்கு அனுப்புங்கள், திருக்குரான், ஹதிஸ்களை மனம் செய்து வளரும் தலைமுறைக்கு மார்க்கத்தை முழுமையாக எத்திவையுங்கள், மார்க்க கல்வியுடன் கூடிய உலகக்கல்வி அவசியம். இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் மூலமாக பெண்களுக்கு வாரம் தோரும் மார்க்க பயான் நடத்துங்கள், இந்த ஊரில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் இருக்கின்றீர்கள் (அல்ஹம்துலில்லாஹ்). பெண்களுக்காக ஒரு கல்லூரி நிறுவ முயற்சி எடுங்கள். என் ஊர் தோப்புத்துறை அங்கு சுன்னத் ஜமாத் பள்ளியிலும் பெண்கள் ஜும்மாவிற்க்கு பள்ளிக்கு தொழ வருகின்றார்கள், இங்கு பெண்களை பள்ளியினுள் தொழ அனுமதி செய்யுங்கள் (குறிப்பு: இந்த நிகழ்ச்சி சுன்னத் ஜமாத் பள்ளிவாளகத்தில் நடைப்பெற்றது, நெல்லிக்குப்பத்தில் உள்ள ஏழு (7) சுன்னத் ஜமாத் ஜும்மா பள்ளியில் பெண்கள் தொழ அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
இன்று தமுமுக போன்ற சமுதாய அமைப்புகளிடம் 1100க்கு அதிகமான மதிப்பெண் பெற்ற ஏராளமான மாணவ,மாணவியர் உதவி கோரி வருகின்றனர் பொருளாதார நெருக்கடியினால் அனைவருக்கும் முழுமையாக உதவமுடிவதில்லை என்பதுதான் எதார்த்த உண்மை, நாடார் சமூகத்தில் தலைவர் காமராஜர் வகுத்த முறை பின்பற்றி அந்த சமூகத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவியர் உதவி கோரினால் அவர்களால் அதை முழுமைப்படுத்த முடிகின்றது. இது பாராட்டுதலுக்குறியது,
இங்கே எத்தனை பேர் ஜகாத்தினை சரியாக கொடுக்கின்றீர்கள், நாம் ஆயிரம் அல்லது இரண்டாயிரத்தை சில்லரையாக மாற்றி அதை பிச்சைகாரர்களுக்கு போட்டுவிட்டால் அது ஜகாத் என்று பெரும்பான்மையானவர்கள் நினைக்கின்றார்கள். அது ஜகாத் அல்ல, ஜகாத்தினை மார்க்கம் காட்டிய வழியில் முழுமையாக கொடுங்கள்.
மேலும் வெளிநாடுகளில் தன் கணவன் அல்லது சகோதரன் பாலைவன வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து அனுப்பும் பனத்தினை எத்தனை பேர் சரிவர ஒழுங்காக பராமரிக்கின்றீர்கள், முன்பு பக்கத்து வீட்டிற்கு ஒரு புடவை வந்தால் அதன் ஓரத்தை வெட்டி கடிதம் மூலம் வெளிநாட்டிற்க்கு அனுப்புவார்கள், தன் கணவர் அல்லது சகோதரன் வாங்கும் சம்பளம் என்ன அவரால் இயலுமா என சில பெண்கள் சிந்திப்பது இல்லை, வெளிநாடுகளிள் பெரும்பாலும் நம் சமூகம் கஷ்டப்படுகின்றது, பெற்றொர் மவுத்தாகிவிட்டால் அவர்களின் ஜனாஸாவை கூட காண முடியாத அவலம், ஒருவேலை வெளிநாடுகளுக்கு செல்லவேண்டும் என்றால் நன்றாக படித்து குடும்பத்துடன் செல்லுங்கள்,
நாம் அனைவரும் நபிவழியில் நடந்து நேர்வழி பெற வல்ல இறைவன் அருள்புரிவானாக ஆமின். இவ்வாறு மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புறையாற்றினார்கள்.
இந்த நிகழ்சிக்கு அனைத்து ஜமாத்தார்களும், இஸ்லாமிய நகரமன்ற உறுப்பினர்களும், திரளான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டனர், இணையதளம் வழியாக நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது.
மாநில ஜமாத்துல் உலமா சபை தலைவர் மெளலானா மெளலவி AME அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் மமக மாநில பொதுச்செயலாளர் அவர்களின் வெற்றிக்காக தான் தூவா செய்ததாக தனது உரையில் குறிப்பிட்டதும்,சுன்னத் ஜமாத்தார்கள், தவ்ஹீத் சிந்தனையாளர்கள் சார்பில் மமக பொதுச்செயலாளர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதும், தமுமுகவில் தான் செய்த சேவைகளை பார்த்துதான் தனக்கு இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் தலைவர் பொறுப்பு வழங்கியதாகவும், அனைத்து சகோதர சகோதரிகளாலும் தமுமுக அங்கிகரிக்கபட்டுவிட்டதாக தமுமுக கடலூர் மாவட்ட செயலாளரும், நெல்லிக்குப்பம் இஸ்லாமிய ஐக்கிய மஜ்லிஸ் தலைவருமாகிய VM ஷேக்தாவுத் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதும் இன்ஷா அல்லாஹ் சமுதாயம் ஒரு சிறந்த தலைமையின் கீழ் எதிர்கலாத்தை நோக்கி ஒற்றுமையுடன் வீறு நடைபோடுவதின் வெளிப்பாடாகவே நிகழ்ச்சி அமைந்திருந்தது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக