கடந்த 24-ம் தேதி வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வந்து புகார் கொடுத்தவர்கள் சார்பில் பேசினார் வழக்கறிஞர் மணிகண்டன். ''லலிதா, மேரி இருவரும் தோழிகள், சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இருவரும் ஃபேஸ்புக்கில் இருக்கின்றனர். ஃபேஸ்புக் மூலமாக லலிதாவுக்கு வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் பழக்கமானார். சதீஷின் நண்பர் ஆனந்தபாபுவும் லலிதாவிடம் அறிமுகமாக, மேரியும் அவர்களின் நட்பு வட்டத்தில் சேர்ந்துள்ளார்.
அவர்களின் நண்பர்களான திலீப், லூயிஸ், ஆனந்த நித்தியானந்தம் ஆகியோரும் இந்தப் பெண் களை மிரட்டவே, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள் ளார்கள். இப்போது ஆனந்த், சதீஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்'' என்றார் கொந்தளிப்பாக.
வேலூர் காவல் துறையினரிடம் விசாரித் தோம். ''சதீஷ் மிகவும் டிப்டாப்பாக இருப்பான். பெண்களை ஏமாற்றுவது சதீஷ§க்கும் அவனது நண்பன் ஆனந்த பாபுவுக்கும் கை வந்த கலை. ஏற்கெனவே சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமியை ஃபேஸ்புக் மூலம் தொடர்புகொண்டு, சதீஷ் ஏமாற்றி உள்ளான். 'உன்னுடைய ஆபாசப் படம் என்னிடம் இருக்கிறது. இரண்டு லட்சம் தர வேண்டும்’ என்று மிரட்டி, 50,000 ரூபாய் வாங்கியுள்ளான். மேலும் மிரட்டவே, விழுப்புரம் மாவட்டத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். இதுபோன்று நிறையப் பெண்களை ஏமாற்றி இருக்கிறார்கள். எங்களின் கணிப்புப்படி 15-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்திருப்பதாகத் தெரிகிறது'' என்று சொன்னார்கள்.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் வேலூர் மாவட்டத்தில் யாஸ்காம் இன்டர்நெட் சென்டர் நடத்திவரும் ஆஸாம் இர்பான், ''பெண்கள் ஃபேஸ்புக்கில் எந்தக் காரணம்கொண்டும் யாருக்கும் தொலைபேசி எண்ணைத் தரக்கூடாது. நன்கு அறிமுகமான நபர்களை மட்டுமே தங்களுடைய நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தனது புகைப்படங்களையோ அல்லது குடும்பத்தாரின் புகைப்படங்களையோ ஃபேஸ்புக்கில் வெளியிடக்கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் சாட் செய்யாதீர்கள்'' என்று ஆலோசனைகள் சொன்னார்.
பெண்களே உஷார்!
- கே.ஏ.சசிகுமார்
ஜூனியர் விகடனில் இருந்து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக