திங்கள், 21 மே, 2012

இஸ்லாமியர் இட ஒதுக்கீடு - உணரப்படாத உண்மைகள்

இஸ்லாமியர் இட ஒதுக் கீடு என்பது பல வகையான பரிமா ணங்களைக கடந்து வந்துள் ளது. 1927 முதல் 1947 வரை இஸ்லாமியர்கள் சென்னை மாகாணத்தில் 16 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை பெற்று வந்தனர்.
1947ம் வருடத்தில் ஓமந்தூர் ராமசாமியால் இந்த சதவிகிதம் 7 ஆக குறைக்கப்பட்டது. இந்த 7 சதவிகித இட ஒதுக்கீடு 1954ம் ஆண்டுவரை முஸ்லிம்களால் பெறப்பட்டது. 1954ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்த போது இந்த 7 சதவிகித இட ஒதுக் கீட்டையும் தேவை இல்லை என நீக்கினார்.



"மத ரீதியான இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது'' என்று காமராஜர் முடிவு செய்து, முஸ்லிம் இட ஒதுக் கீட்டை முழுமையாக ரத்து செய்த பிறகு, முஸ்லிம்கள் அரசியல் ரீதி யாக காங்கிரஸ் கட்சியை வெறுக் கத் தொடங்கினார்கள். அந்த நேரத்தில்தான் "காமராஜர் தள்ளு படி செய்த இட ஒதுக்கீட்டை நாங் கள் பெற்றுத் தருவோம்'' என்று கூறிய தி.மு.க.வை முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்து வெற்றி அடைய வைத்தனர்.
மாநிலக் கட்சியாக முதன் முதலில் உருவெடுத்த தி.மு.க.வால் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உட னடியாக செயல்படுத்த முடியாமல் போனது. பின்னர் 1973ல் கருணா நிதி தலைமையிலான திமுக அரசு! இஸ்லாமியர்களை அப்போது இருந்த 31 சதவிகித பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீட்டில் இடம் பெற வைத்தது.
அதன் பிறகும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து தனி இட ஒதுக்கீட்டிற்காக போராடி வந்தனர்.
"மற்ற இந்து சமுதாயங்களோடு போட்டியிட்டு வாய்ப்புகளைப் பெறுவதில் எங்கள் சமூகம் கஷ் டப்படுவதால் தனி இட ஒதுக் கீடே எங்களுக்கு பயனளிக்கும்" என்ற அவர்களின் வாதம் சரியான முறையில் ஆட்சியாளர்களால் உணரப்படவில்லை.
பின்னர், 2008ஆம் ஆண்டில் தான் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு தனியாக 3.5 சதவிகித இட ஒதுக் கீட்டை அளித்தது!
ஆனாலும், ஒதுக்கப்படும் பணி யிடங்களை நிரப்புவதில் ஏற்படும் குறைகள் பற்றியும், சதவிகித இட ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளது என்பதைப் பற்றியும் முஸ்லிம்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து கோரிக்கைகளைத் தொடர்ந்து எழுப்பியவண்ணம் உள்ளனர்.
நீதிபதி ராஜேந்திர சச்சார், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆகியோர் தெளி வாக உரைத்திட்ட பிறகும் முஸ்லிம்களுக்கு சரியான முறையில் மத்திய, மாநில அரசுகளால் இட ஒதுக் கீடு அளிக்கப்படாமல் இருப்பது சமூக நீதிக்கு முற்றும் எதிரானது.
சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர் சல்மான் குர்ஷித் ஒன்பது சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்க முடிவெடுத்து விட்டதா கக் கூறியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று.
எதிர் கட்சிகளின் எதிர்ப்புகளை வென்று 9 சதவிகித இடஒதுக் கீட்டை இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிட்டால் காங்கிரஸ் கட்சி சமூகநீதி வரலாற்றில் மிகப் பெரிய முக்கியத்துவம் பெரும் என்பது உறுதி!

- தஞ்சை வெங்கட்ராஜ்

source: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19763:2012-05-15-05-50-27&catid=1472:2012&Itemid=715




கருத்துகள் இல்லை: