செவ்வாய், 20 மே, 2014

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யலாம்: மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வுக்குழு தகவல்

இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முடிவு களை மாற்றும் வகையிலான தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளதாகவும், எனவே, அந்த இயந்திரங்கள் பாதுகாப் பானவை என்று கூறுவது தவறு என்றும் அமெரிக்கப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆய்வுப் பணி களை மேற்கொண்ட பேராசிரியர் ஜே.அலெக்ஸ் ஹால்டர்மேன் தலைமை யிலான மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், முடிவுகளை மாற்ற உதவும் சிறிய கருவி ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.
இந்த கருவியை, வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தி, செல் போன் மூலம் தகவல்களை அனுப்பி, ஏற்கெனவே பதிவாகியுள்ள தகவல் களில் மாற்றம் செய்ய முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
“வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளதைப் போன்ற டிஸ்ப்ளே போர்டை உருவாக்கியுள்ளதாகவும், அதன்மூலம், பதிவாகியுள்ள வாக்கு களின் விவரத்தை அறிந்து நாம் விரும்பும் மாற்றத்தைச் செய்ய முடியும். இதற்காக பிரத்யேகமாக மைக்ரோபிராசஸர்களை தயாரித்து அக்கருவியில் பொருத்தியுள்ளோம்” என்று அலெக்ஸ் ஹால்டர்மேன் கூறியுள்ளார்.
இதன்படி வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே இயந்திரத்தில் பதிவான தகவல்களில் தேவையான மாற்றங்களை செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பான செயல்விளக்கத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக ‘பிபிசி நியூஸ்’ ்கூறியுள்ளது.
இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அலோக் சுக்லா கூறுகையில், “வாக்குப்பதிவு இயந்திரத் தில் மாற்றம் எதையும் செய்ய முடியாது. அது வெறும் இயந்திரம் மாத்திரமல்ல. நிர்வாக ரீதியாகவும் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். அதை யாராலும் அவ்வளவு எளிதாக திறக்க முடியாது.
வாக்குப்பதிவு நடைபெற்ற பின்பு, சீலிடப்படுகிறது. இந்த சீலை சேதப்படுத்தாமல் இயந்திரத்தில் கைவைக்க முடியாது. எனவே, முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை” என்றார்

கருத்துகள் இல்லை: