வாக்குப்பதிவு இயந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாக்குப்பதிவு இயந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 மே, 2014

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யலாம்: மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வுக்குழு தகவல்

இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முடிவு களை மாற்றும் வகையிலான தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளதாகவும், எனவே, அந்த இயந்திரங்கள் பாதுகாப் பானவை என்று கூறுவது தவறு என்றும் அமெரிக்கப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆய்வுப் பணி களை மேற்கொண்ட பேராசிரியர் ஜே.அலெக்ஸ் ஹால்டர்மேன் தலைமை யிலான மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், முடிவுகளை மாற்ற உதவும் சிறிய கருவி ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.
இந்த கருவியை, வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தி, செல் போன் மூலம் தகவல்களை அனுப்பி, ஏற்கெனவே பதிவாகியுள்ள தகவல் களில் மாற்றம் செய்ய முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
“வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளதைப் போன்ற டிஸ்ப்ளே போர்டை உருவாக்கியுள்ளதாகவும், அதன்மூலம், பதிவாகியுள்ள வாக்கு களின் விவரத்தை அறிந்து நாம் விரும்பும் மாற்றத்தைச் செய்ய முடியும். இதற்காக பிரத்யேகமாக மைக்ரோபிராசஸர்களை தயாரித்து அக்கருவியில் பொருத்தியுள்ளோம்” என்று அலெக்ஸ் ஹால்டர்மேன் கூறியுள்ளார்.
இதன்படி வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே இயந்திரத்தில் பதிவான தகவல்களில் தேவையான மாற்றங்களை செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பான செயல்விளக்கத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக ‘பிபிசி நியூஸ்’ ்கூறியுள்ளது.
இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அலோக் சுக்லா கூறுகையில், “வாக்குப்பதிவு இயந்திரத் தில் மாற்றம் எதையும் செய்ய முடியாது. அது வெறும் இயந்திரம் மாத்திரமல்ல. நிர்வாக ரீதியாகவும் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். அதை யாராலும் அவ்வளவு எளிதாக திறக்க முடியாது.
வாக்குப்பதிவு நடைபெற்ற பின்பு, சீலிடப்படுகிறது. இந்த சீலை சேதப்படுத்தாமல் இயந்திரத்தில் கைவைக்க முடியாது. எனவே, முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை” என்றார்

புதன், 20 மே, 2009

அரசு அதிகாரிகளா? திமுக பணியாளர்களா?

வாக்குச் சாவடியில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் பெரும்பாலும் ஆளும் கட்சிக்கே சாதகமாக நடந்து கொள்கின்றனர். குறிப்பாக திமுகவுக்கு சாதகமாகவே அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். அதனாலேயே திமுக ஆட்சிக்கு வரும்போதெல் லாம் அரசு ஊழியர்களின் சம்பளமும் மற்ற படிகளும் உயர்த்தப்படுகின்றன. அதற்கு விசுவாசமாகவே இவர்கள் தேர்தல் நேரத்தில் நடந்து கொள்கின்றனர்.

மதுரையில் ஓட்டு போடு வதற்காக சுந்தரராஜபுரம் வாக்குச் சாவடிக்கு மு.க.அழகிரி வந்தபோது அங்கு பணியில் இருந்த அரசு அதிகாரிகள் அனைவரும் எழுந்து நின்று கைக்கூப்பி வணக்கம் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் வாக்களித்துவிட்டு வெளியே செல்லும்வரை யாரும் உட் காரவே இல்லையாம். இதைவிட வேறு என்ன சொல்ல முடியும் இவர்களின் நடுநிலை(!)த் தன்மைக்கு?
மேலும் திருமங்கலம் இடைத் தேர்தலில் இவர்கள் ஆற்றிய சேவையும் அனை வரும் அறிந்ததே!

மாநிலத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா போன்றவர்கள் நடுநிலையாக இருந்தாலும் இதுபோன்ற அலுவலர் களை வைத்துக் கொண்டு எப்படி தேர்தலை நியாயமாக நடத்த முடியும். அதிலும் இதற்கு முன் இருந்த கோபால் சாமி பி.ஜே.பி.க்கு நெருக்கமானவர் என்றும் கூறப்பட்டது. இப்போது வந்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையாளர் நவீன் சாவ்லா காங்கிரசுக்கு நெருக்க மானவர் என்று கூறப்படுகிறது.

இதனால்தான் சிவகங்கை தொகுதி வேட்பாளர் சிதம்பரம் பல சந்தேகங் களுக்கு இடையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வைகோவின் தோல்வியும் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக் கையின் போது நம்மை தண்ணீர் பாக்கெட் உட்பட எதையும் எடுத்துச் செல்ல தேர்தல் அதிகாரிகளான அரசு ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் திமுக வினர் பிரியாணி உட்பட உணவுகளை சாப்பிட்டுக் கொண்டு தேர்தல் நிலவரங் களை செல்போனில் வேறு விவரித்துக் கொண்டிருந்தனர்.
ம.ம.க. உறுப்பினர்கள் எண்ணிக்கை அளவுக்கு கூட பல ஓட்டுச் சாவடிகளில் நமக்கு வாக்குகள் பதிவாக வில்லை என்பது பலத்த சந்தேகங்களை எழுப்பி உள்ளது. உதாரணத்திற்கு மத்திய சென்னை துறை முகம் தொகுதியில் ஏழு கிணறு பகுதி பிஷப் கேரியர் பள்ளி வாக்குச் சாவடி எண் 25ல் ம.ம.க. உறுப்பினர் ஒருவர் தமது குடும்பத்தினர் வாக்கு களையும் சேர்த்து சுமார் 30 வாக்குகளை அளித்துள் ளார். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது இங்கு எந்த வாக்கும் பதிவாக வில்லை என கூறப்பட்டது.

அப்படி யானால் ரயில் என்ஜினுக்கு பதிவு செய்யப் பட்ட வாக்கு கள் எங்கே போயிற்று? ஒன்று, ரயில் என்ஜினுக்கு பதிவு செய்யப்பட்ட வாக்கு கள் வேறு சின்னத்தின் எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது இந்த வாக்குகள் பதிவாகாதது போல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

பத்து நபர்கள் ஓட்டு போட்டாலும் ஒரே ஓட்டு மட்டும் பதிவானதாகக் காட்டும் சாப்ட்வேர்கள் எல்லாம் தாராள மாக உண்டு என சாப்ட்வேர் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்களுக்கு விசுவாசமான ஊழியர் களைக் கொண்டு எதை வேண்டுமானா லும் ஆளும் கட்சியினர் செய்திருக்கலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

எனவே வாக்குப் பதிவும், எண்ணிக் கையும் நியாயமாக நடக்க, முறை கேடுகள் புரிய வாய்ப்புள்ள மின்னணு இயந்திரத்தை தவிர்த்துவிட்டு வாக்குப் பெட்டியில் ஓட்டு போடும் நடைமுறை யையே கொண்டுவர வேண்டும். மேலும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அரசு ஊழியர்கள் மீது பாரபட்சமில்லாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.