வியாழன், 22 மே, 2014

அக்ஷர்தாம் தாக்குதல் வழக்கு குற்றமற்றவர்கள் என முஸ்லிம்கள் விடுதலை..

அக்ஷர்தாம் தாக்குதல் வழக்கு
குற்றமற்றவர்கள் என முஸ்லிம்கள் விடுதலை..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குஜராத் அக்ஷர்தாம் கோவில் தாக்குதல் சம்பவத்தில்
தொடர்புடைய பயங்கரவாதிகள் என்று
குஜராத் அரசால் கைது செய்யப்பட்டுச்
சிறையில் அடைக்கப்பட்ட முஹம்மது சலீம் உட்பட
ஐந்து முஸ்லிம்களும் குற்றமற்றவர்கள், நிரபராதிகள் என்று
உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது-
11 ஆண்டுகளுக்குப் பின்பு..!

வரலாற்றுச் சிறப்பு மிக்க
தேர்தல் வெற்றியை மோடி பெற்ற அதே
மே 16ஆம் நாள்தான் இந்த ஐந்து அப்பாவி முஸ்லிம்களையும்
உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இதில் என்ன கொடுமை என்னவென்றால்
அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்த
குஜராத் காவல்துறை,

“கோத்ரா ரெயில் எரிப்பு,
ஹரேன் பாண்டியா கொலை வழக்கு,
அக்ஷர்தாம் தாக்குதல் வழக்கு ஆகியவற்றில்
எதில் மாட்ட விரும்புகிறீர்கள் என்று
நீங்களே தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள்” என்று
குரூரமாகச் சிரித்தபடி எங்களிடம் சொன்னார்கள்”
என்கிறார் விடுதலையான முஹம்மத் சலீம்.

டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது
இன்னும் பல தகவல்களையும் வெளிப்படுத்தினர்.

“இவர்களைக் காரணமின்றிச் சிறையில் அடைத்த
அதிகாரிகளும் தண்டிக்கப்படவேண்டும் என்று
நாங்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என
செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த
ஜமீயத்துல் உலமாயே ஹிந்த் அமைப்பினர் கூறினர்.
-சிராஜுல்ஹஸன் (
Siraj Ul Hasan)

கருத்துகள் இல்லை: